மன
அழுத்த்த்தை நிர்வகிப்பது, அதை ஏற்படுத்தும் காரணிகளை அறிவதில்
தொடங்குகிறது. சொல்வது போல் இது எளிதான காரியமல்ல. உண்மையான காரணிகளை அறிய,
உங்கள் குணம், நடைமுறைகள் மற்றும் அடிக்கடி கூறும் சாக்குபோக்குகளை
ஆராயுங்கள்:
- உங்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை தற்காலிகமானது என்று எண்ணுகிறீர்களா? கடந்த முறை அவ்வாறு ஏற்பட்டது எப்போது என மறந்தேவிட்டீர்களா?
- உங்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை வீடு அல்லது அலுவலக் வேலையுடன் தொடர்புபடுத்துகிறீர்களா?
- உங்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்திற்கு பிறர்தான் காரணம் என்று கருதுகிறீர்களா அல்லது இது இயற்கையானதே என நினைக்கிறீகளா?
உங்கள் காரியங்களுக்கு நீங்கள் பொறுபேற்கும் வரை, மன அழுத்தத்தை உங்களால் கட்டுப்படுத்த இயலாது.
இவ்வாறான
பதிவுகள் மூலம், வழக்கமாக அழுத்தம் ஏற்படுத்தும் காரணிகளை அடையாளம்
காணவும் அவற்றை தவிர்க்கவும் இயலும். மன அழுத்த பாதிப்பு இருப்பதாக ஒருவர்
உணர்ந்தால், அதை பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யப்படும் பதிவு
மூலம், நாளடைவில் ஒரு பொதுத்தன்மையை உணர முடியும்.
- எதனால் மன அழுத்தம் ஏற்பட்ட்து (சரியாக அறிய முடியாவிட்டால் யூகம் செய்தாவது எழுதுங்கள்)
- நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள் (சரியாக அறிய முடியாவிட்டால் யூகம் செய்தாவது எழுதுங்கள்)
- உடல் மற்றும் மன்வியல்ரீதியாக எப்படி உணர்ந்தீர்கள்?
- எப்படி நீங்கள் செயல்பட்டீர்கள்?
- நீங்கள் இயல்பு நிலையை அடைய என்ன செய்தீர்கள்?
தற்போது
மன அழுத்தம் ஏற்பட்டால் அதை எவ்வாறு சமாளிக்கிறீர்கள் என்று
சிந்தியுங்கள். இதற்கு உங்கள் பதிவுகள் உங்களுக்கு உதவக்கூடும். உங்கள்
சமாளிப்பு உத்திகள் ஆரோக்கியமானதா அல்லது அழுத்தத்தை அதிகப்படுத்தும்
வண்ணம் உள்ளதா? பலர், தங்கள் எதிர்மறையான சமாளிப்பு நடவடிக்கைகள் மூலம், மன
அழுத்தத்தை அதிகரித்துக் கொள்கிறார்கள்.
|
|
இவை தற்காலிகமாக மன அழுத்தத்தை குறைக்க உதவலாம். ஆனால், நீண்டகாலப் போக்கில் இவை அதிக அபாயமானவை:
- புகை பிடித்தல்
- அதிகமாக மது அருந்துதல்
- அதிகமாக அல்லது குறைவாக உண்பது
- தொலைக்காட்சி அல்லது கணினி முன் மணிக்கணக்கில் அமர்ந்திருப்பது
- நண்பர்கள், உறவினர்களுடன் பழகுவதை நிறுத்திவிடுவது
- அழுத்தத்தை குறைக்கும் மாத்திரைகள் அல்லது மருந்துகளை உண்பது
- அதிகமாக தூங்குவது
- பிறரை தூற்றுவது
- பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரம் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அதிகமாக உழைப்பது
- உங்கள் அழுத்தத்தை பிறர் மீது கோபமாக வெளிக்காட்டுவது (திட்டுதல், கத்துதல், வன்முறை)
- மன அழுத்தத்தை
சமாளிக்கும் ஆரோக்கியமான வழிமுறைகளும் உள்ளன, ஆனால் அவை மாற்றங்கள் மூலம்
மட்டுமே சாத்தியம். மன அழுத்தத்தை ஏற்படுத்தும் சூழ்நிலை அல்லது அதனால்
ஏற்படும் விளைவுகள் ஆகிய ஏதாவது ஒன்றை நாம் மாற்ற வேண்டும். இதைப்பற்றி
ஆழமாக சிந்தியுங்கள், பிறருடன் ஆலோசனை செய்யுங்கள். காரணிகள் அல்லது
நபர்களை அறிந்து அவற்றை குறைக்கும் அல்லது நீக்கும் வழிகளை கடைபிடியுங்கள்.
- மன அழுத்த வகைகளை
அறிந்து, அவற்றை உண்டாக்கும் காரணிகளையும் அறியுங்கள். நீங்கள் எதை
கட்டுப்படுத்த விரும்புகிறீர்கள் என்பதை அறிவது மிகவும் முக்கியம்:
|
|
- மன அழுத்த காரணியை நோக்குங்கள்
- மன அழுத்த காரணியை மாற்றியமையுங்கள்
|
|
- மன அழுத்த காரணியை பொறுத்து உங்கள் நடவடிக்கையை மாற்றியமையுங்கள்
- மன அழுத்த காரணியை ஏற்றுக்கொள்ளுங்கள்
|
|
- ’முடியாது’ எனக் கூறப் பழகுங்கள்: உங்கள்
நிலைமையை அறிந்து அதற்கேற்றவாறு நடக்கவும். தனிநபர் அல்லது வேலை
சூழ்நிலைகளில், உங்கள் திறனுக்கு மேற்பட்ட பொறுப்புக்களை ஏற்காதீர்கள்.
முடிக்க இயலாததை அடைய முயல்வது கண்டிப்பாக அழுத்தத்தை ஏற்படுத்தும்.
- மன அழுத்தம் ஏற்படுத்தும் நபர்களைத் தவிருங்கள்: தொடர்ச்சியாக
உங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் ஒரு நபரை நீங்கள் தவிர்க்க முடியாமல்
இருக்கும் சூழ்நிலையில், அவருடன் செலவிடும் நேரத்தை குறையுங்கள்.
- உங்கள் சூழ்நிலையை கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்: மாலை
நேர செய்தி உங்களை அழுத்தமடைய செய்வதாக இருந்தால், தொலைக்காட்சியை
நிறுத்திவிடுங்கள். போக்குவரத்து நெரிசலாக இருந்தால், போக்குவரத்து குறைவான
பாதையை தேர்ந்தெடுங்கள். சந்தைக்கு சென்று பொருள் வாங்குவதை கடினமாக
உணர்ந்தால், இணைய்வழியில் பொருட்களை வாங்குங்கள்.
- பதற்றத்தை ஏற்படுத்தும் விஷயங்களை விவாதிப்பதை தவிர்க்கவும்: அரசியல்
அல்லது மதம் சம்பந்தமான விவாதங்களில் உங்களுக்கு விருப்பமில்லாவிட்டால்,
அவற்றை தவிர்க்கவும். ஒரே நபருடன் அதே தலைப்பில் விவாதம் ஏற்படுமானால்,
அவ்விவாதத்தை தவிர்த்துவிடுங்கள்.
- நீங்கள் அன்றாடம் முடிக்க வேண்டிய பணிகளை பட்டியலிட்டு நிறைவேற்றுங்கள்: உங்கள்
வேலைத்திட்டம், பொறுப்புகள், அன்றாடப் பணிகள் ஆகியவற்றை ஆய்வு
செய்யுங்கள். இது அதிகமாக இருந்தால், அவற்றை முன்னுரிமைப்படுத்துங்கள்.
உண்மையில் அதிகம் தேவையில்லாத பணிகளை கடைசிக்கு கொண்டு சென்று அவற்றை
நீக்கவும் கற்றுக்கொள்ளுங்கள்.
|
|
- உங்கள் எண்ணங்களை தேக்கி வைக்காமல், வெளிப்படுத்திவிடுங்கள்: எதாவது
அல்லது எவராவது உங்களுக்கு தொந்தரவு செய்வதாக கருதினால், அதை மரியாதையான
வழியில் அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள். இவ்வாறு வெளிப்படுத்தாவிட்டால்,
விரோதம் வளர்ந்து சூழ்நிலை சிக்கலாகும்.
- சமரசம் செய்துகொள்ள தயாராக இருங்கள்: பிறரை
மாற்ற வேண்டும் என்று விரும்பும் அதே வேளையில், நீங்களும் மாற தயாராக
இருக்க வேண்டும். இருவரும் சிறிது விட்டுக்கொடுக்க துவங்கும் போது, நல்ல
தீர்வு கிடைப்பது எளிதாகும்.
- உங்கள் நிலையில் உறுதியாக இருங்கள்: உங்கள்
சொந்த வாழ்வில் பின்தங்கிவிடாதீர்கள். பிரச்சினைகளை நேரடியாக எதிர்கொண்டு
சமாளியுங்கள். உங்களுக்கு தேர்வு இருக்கும் சமயம், உங்கள் அறைத்தோழர்
அதிகமாக பேசுபவராக இருந்தால், நேரடியாக பிரச்சினையை விளக்கி பேச்சைக்
குறையுங்கள்.
- உங்கள் நேரத்தை சரியாக நிர்வகியுங்கள்: நேரத்தை
சரியாக நிர்வாகம் செய்யாவிட்டால், அதிக மன உளைச்சல் உண்டாகும். வேலைகளை
முடிக்க நீங்கள் திணரும் போது, அவற்றில் கவனம் செலுத்துதல் மற்றும்
அமைதியாக இருத்தல் ஆகியவை சிரமமாகும். நீங்கள் சரியாக திட்டமிட்டால்,
உங்கள் மன உளைச்சலை குறைக்கலாம்.
|
|
- பிரச்சினைகளை மாற்றியமையுங்கள்: பிரச்சினைக்குரிய
சூழ்நிலையை வேறு கண்ணோட்டத்தில் அணுகி தீர்க்க முயலவும். போக்குவரத்து
பிரச்சினையை பற்றி எண்ணி வருந்தாமல், அதை தனிமையாக செலவழிக்க கிடைத்த
நேரமாகவும் நல்ல வாய்ப்பாகவும் கருதலாம்.
- முழு சூழ்நிலையை கவனியுங்கள்: அழுத்த
சூழலின் முழு பரிமாணத்தைக் காணுங்கள். நீண்டகால போக்கில் அது எப்படி
மாறும் என்று கணித்து, அதற்கேற்ப உங்கள் சக்தி அல்லது நேரத்தை செலவிடுங்கள்
- உங்கள் குணங்களை மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்: முழுமையாக
முடிக்க நினைப்பதே சில நேரங்களில் அழுத்தம் ஏற்படக் காரணமாகிவிடும்.
முழுமையை கருதி தோல்வியில் முடிய வேண்டாம். தகுதியான தர நிலையை மட்டுமே
இலக்காக வைத்து, அதனை அடைய முயற்சிக்கவும்.
- நேரிடையான எண்ணம் கொள்ளுங்கள்: மன
அழுத்தம் அதிகரிக்கும் போது, உங்கள் வாழ்வில் சாதனையாக கருதுபவை மற்றும்
உங்கள் தனிப்பட்ட நல்ல குணாம்சங்களை எண்ணிப் பாருங்கள். இதன் மூலம்
பிரச்சினையின் உண்மை பரிமாணத்தை காணும் தெளிவு பிறக்கும்.
|
|
சிலவகை
காரணிகள் தவிர்க்க முடியாதவை. பிரியமானவர்களின் மரணம், கொடிய நோய்கள்,
இயற்கை பேரழிவுகள் போன்றவற்றை தடுக்கவோ மாற்றவோ இயலாது. அவ்வாறான
சூழல்களில் அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்வதே சிறந்த அழுத்தம் தவிர்க்கும்
முறை. இது சிரமமாக இருந்தாலும், நீண்டகால போக்கில் எளிதாக கைவசப்படும்.
- முடியாதவற்றை கட்டுப்படுத்த முயல வேண்டாம்: அடுத்தவரின்
நடத்தை போன்ற சில விஷயங்கள் நம்மால் கட்டுப்படுத்த இயலாதவை. அவற்றை
கட்டுப்படுத்த முயலுவதை விட அவற்றுக்கு எப்படி நடந்துகொள்வது என
சிந்திப்பது சிறந்தது.
- தீதிலும் நன்மையை காண்பீர்: ‘நம்மைக்
கொல்லாதவை, நம்மை வலிமையாக்குகின்றன’ என்ற பழமொழிக்கேற்ப, பிரச்சினைகளை
வளர்ச்சிக்கான வாய்ப்புகளாக பார்த்து பழக வேண்டும். உங்கள் தவறான
முடிவுகளால் பிரச்சினை ஏற்பட்டால், அதை ஆராய்ந்து, அனுபவங்களை பெற முயல
வேண்டும்.
- உணர்வுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்: நம்பிக்கையான ந்ண்பரிடம் அல்லது மருத்துவரிடம் ஆலோசனை செய்யுங்கள். இவ்வாறு பகிர்ந்து கொள்வதால், உங்கள் மனக்குறை குறையும்.
- மன்னிக்க பழகுங்கள்: முழுவதும்
குறைகளற்ற உலகில் நாம் வாழவில்லை, தவறு செய்யாத மனிதரும் இல்லை என்பதை
ஒப்புக்கொள்ளுங்கள். ஆத்திரம் மற்றும் ஆற்றாமையை விட்டொழியுங்கள்.
மன்னித்து மறப்பதன் மூலம் எதிர்மறை எண்ணங்களை குறையுங்கள்.
சரியாக திட்டமிட்டு, கேளிக்கைகள் மற்றும் பொழுதுபோக்கில் ஈடுபட்டால், மன அழுத்தத்தை நன்றாக கட்டுப்படுத்தமுடியும்.
|
|
|
No comments:
Post a Comment