Friday, April 13, 2012

மயிரிழையில் தப்பித்த கார் – உயிர்பிழைத்தன இரண்டு உயிர்கள்! (படங்கள்,


ரயில் பாதை ஒன்றைக் கடக்கும்போது போதிய அவதானமின்றி காரைச் செலுத்தியதால் ஏற்படவிருந்த பாரிய விபத்து ஒன்று தெய்வாதீனமாக நிறுத்தப்பட்டுள்ளது.
வேல்ஸ் நகரின் லாண்டீலோ பகுதியில் இடம்பெற்ற இவ் அதிர்ச்சிச் சம்பவத்தின்போது காரினுள் தாயும் மகனும் இருந்துள்ளனர்.
எனினும் குறித்த இடத்திற்கு ரயில் வரும் முன்பாக கார் பாதையைக் கடந்ததனால் மயிரிழையில் விபத்து தவிர்க்கப்பட்டது. இச்சம்பவத்தை அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கமெரா பதிவு செய்துள்ளது.

மாரடைப்பை ஏற்படுத்தும் குளிர்பானங்கள்



இனிப்பு கலந்த குளிர்பானத்தை தினமும் குடிப்பவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ஹார்வர்டு பல்கலைக்கழகம், குளிர்பானங்கள் குடிப்பதால் ஏற்படும் விளைவுகள் பற்றி ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. கடந்த 22 ஆண்டுகளாக அமெரிக்கர்கள் 40 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வை மேற்கொண்டது.
இந்த ஆய்வில் ஆண்கள் மட்டுமே உட்படுத்தப்பட்டனர். ஆய்வின் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. சர்குலேஷன் என்ற பத்திரிகையில் வெளியாகி உள்ள ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது, இனிப்பு கலந்த குளிர்பானத்தை தினமும் குடிப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு 20 சதவீதமும் அதிகரிக்கிறது.
அதேசமயம் வாரத்தில் இரண்டு நாள் அல்லது அதற்கு குறைவாக குளிர்பானம் எடுத்துக் கொள்ளும் நபர்களுக்கு மாரடைப்பு அபாயம் காணப்படவில்லை. குளிர்பானங்களில் பயன்படுத்தப்படும் செயற்கை இனிப்பூட்டும் பொருள்களால் உடல்நலக்குறைவு ஆபத்து ஏற்படவும் வாய்ப்பு இல்லை.
தொடர்ச்சியாக குளிர்பானம் பருகி வந்தால் மட்டுமே உடல் எடை அதிகரித்து, மாரடைப்பு ஏற்படும் நிலை வருகிறது. குளிர்பானத்தில் கலக்கப்படும் சில ரசாயன கலவைகள் இதயத்துக்கு தீங்கு விளைவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனின் மிகப்பெரிய கட்டுடல் அழகி! (படங்கள் இணைப்பு)


ஹாம்பெல் என்ற 35 வயதுடைய பெண் ஒருவர் லண்டனின் மிகவும் பெரிய பெண்ணாகவும் சிறந்த கட்டுடல் உடைய பெண் ஆகவும் கருதப்படுகின்றார்.
கடுமையான உடற்பயிற்சிகளின் மூலமும் உணவுப் பழக்கவழக்கத்தின் மூலமும் தனது உடலை ஆணழர்களின் உடலுக்கு நிகராகப் பேணும் இந்த பெண்ணின் தோள் மூட்டானது 18 அங்குலங்களாகவும், தொடையின் சுற்றளவானது 26 அங்குலங்களாகவும் காணப்படுகின்றது.
இப்பெண் நாளொன்றிற்கு ஏழு கோழியின் நெஞ்சுப்பகுதி இறைச்சி உட்பட சுமார் 4,200 கலோரிகளைக் கொண்ட உணவை உட்கொள்ளுகின்றார். எனினும் தனது கணவர், குழந்தைகளின் பிரிவினால் கடந்த ஒன்பது வருடங்களாக தனிமையிலேயே வசித்து வருகின்றார்.

பில்லா-2 தாமதத்தின் பின்னணியில் ரஜினி ?


பில்லா வைப் போலவே பில்லா 2 படத்தின் இசைக்கும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
பில்லா 2 பாடல்கள் தயாராகிக் கொண்டிருந்த போதே, அது குறித்த தகவல்கள் வெளிவந்தவண்ணம் இருந்தன. அஜீத் ரசிகர்கள் மிக ஆவலாக பில்லா 2 பாடல்களை கேட்க காத்துக் கொண்டிருக்கிறார்கள். யுவன் இசையில் அஜீத் நடித்த பில்லாவின் பாடல்கள் வரவேற்பைப் பெற்றது.
முக்கியமாக படத்தின் தீம் மியூசிக்கை அப்போது பல இளைஞர்கள் தம் செல்போனின் ரிங் டோன் ஆக்கிக் கொண்டார்கள்.
படத்தயாரிப்பு தரப்பில், மார்ச் மாத இறுதியில் படத்தின் இசை வெளியீடு நடைபெறும் என தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால், அது இன்னும் தள்ளிப் போகக் கூடும் எனத் தெரிகிறது.
அஜீத்தின் பில்லா படத்தினைத் துவக்கி வைத்த ரஜினிகாந்த் இப்படத்தின் இசை வெளியீட்டில் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும் என நினைக்கிறார்களாம். ஆனால், ரஜினி தன் கோச்சடையான் படத்திற்காக லண்டன் செல்ல இருக்கிறார்.
அவர் படப்பிடிப்பு முடித்து, சென்னைக்கு அடுத்த மாதம் தான் வருகிறார். எனவே, இசை வெளியீட்டை அவர் வந்த பிறகு, ஏப்ரல் மாதத்திலேயே வைத்துக் கொள்ளலாம் என திட்டமிடப்படுகிறதாம்.

50 ஆண்டு சினிமா வாழ்க்கையில் முதல் முறையாக விளம்பரங்களில் நடிக்கும் கமல்!

தனது 50 ஆண்டு சினிமா வாழ்க்கையில் முதல் முறையாக விளம்பரங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் கமல்ஹாஸன்.
நடிகர், நடிகைகள் பலர் நடிக்க வந்த ஒரு சில ஆண்டுகளில் விளம்பர படங்களில் நடித்து பெரும் வருவாய் பார்த்து வருகின்றனர். ஆனால் தமிழ் நடிகர்களில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் மற்றும் கமலஹாசன் மட்டும் எந்த விளம்பர படங்களையும் ஒப்புக் கொள்ளாமல் இருந்தனர்.
தாங்கள் இத்தகைய விளம்பரங்களில் நடிப்பதால், ரசிகர்களை தவறாக திசை திருப்பவது போலாகிவிடும் என்ற காரணத்தால் இத்தகைய முடிவை மேற்கொண்டிருந்தனர். கமல் தற்போது தனது முடிவை மாற்றிக் கொண்டு விளம்பர படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார்.
50 ஆண்டுகளாக கமல் சினிமாவில் இருக்கிறார். இதுவரை அவர் விளம்பரங்களில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது முதல் தடவையாக விளம்பர படங்களில் நடிக்க மும்பை நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.
இந்த நிறுவனம் மூலம் எற்கனவே இந்தி நடிகர்கள் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய், ஷாருக்கான, கரீனாகபூர், பிரியங்கா சோப்ரா போன்றோர் விளம்பர படங்களில் நடித்துள்ளனர். சினிமா வாழ்க்கையில் முதல் தடவையாக இந்த முயற்சியில் இறங்குவதாக கமல் தெரிவித்துள்ளார்.
சமூக சேவையில் அக்கறையுள்ள விளம்பர படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து நடிக்கப் போவதாக அவர் அறிவித்துள்ளார். அல்லயன்ஸ் மீடியா என்ற நிறுவனம்தான் கமலை வைத்து விளம்பரங்களை எடுக்கப் போகிறது. இந்த நிறுவனம்தான் அமிதாப், ஷாரூக், சாயிப் அலிகான், கரீனா என பல பிரபலங்களையும் ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.