Thursday, March 29, 2012

விபசாரத்திற்காக பாலியல் பெட்டிகள் அமைப்பதற்கு சுவிஸ் மக்கள் ஆதரவு : விடுமுறை நீடிப்பு எதிர்ப்பு




விபச்சாரிகள் தமது வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றுவதற்கு வசதியாக  வாகனத் தரிப்பிடங்களில் பாலியல் பெட்டிகளை நிர்மாணிப்பதற்கு ஆதரவாக சுவிட்ஸர்லாந்து  மக்கள் வாக்களித்துள்ளனர்.
சுவிஸின் சூரிச் நகரப்  பகுதியில் விபசாரிகள் விபசார நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக சுமார் 40 கோடி ரூபா செலவில்  இந்த பெட்டிகள் அமைக்கப்படவுள்ளன.
சூரிச் நகரில் வேகமாக விஸ்தரிக்கப்பட்டு வரும் சிவப்பு விளக்குப் பகுதியில் 24 மணித்தியாலங்களும் செக்ஸ் காட்சிகளை பார்க்கவேண்டியிருப்பதாக அங்கு வசிக்கும் மக்கள் தெரிவித்த முறைப்பாட்டையடுத்து, விபசாரிகளின் சேவைகளுக்காக கார் அளவிலான பாலியல் பெட்டிகள் எனப்படும் மறைவிடங்களை அமைக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டது.
'அவர்கள் பட்டப்பகலில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றனர். நாங்கள் அதனை பார்த்து சகித்துக்கொள்ள முடியாதுள்ளது' என உள்ளூர்வாசியொருவர்  தெரிவித்துள்ளார்.
பொலிஸ் பேச்சாளரான ரெடோ கசனோவா தெரிவிக்கையில், 'நாங்கள் விபசாரத்தை ஒழிக்க முடியாது. அதனால் நாம் அதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதை கற்றுக்கொள்ள வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
இதேவேளை தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்துடனான வருடாந்த விடுமுறையை 4 வாரங்களிலிருந்து 6 வாரங்களாக அதிகரிக்க வேண்டும் என்ற தொழிற்சங்கங்களின் கோரிக்கைக்கு எதிராக சுவிஸ் மக்கள் வாக்களித்துள்ளனர்.
பாலியல் பெட்டிகள், விடுமுறை நீடிப்பு உட்பட 5 விடயங்கள் தொடர்பாக சுவிட்ஸர்லாந்தின் கென்டோன் எனப்படும் 26 மாகாணங்களிலும் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் மூன்றில் இரு பகுதி கென்டோன்களிலுள்ள மக்கள் விடுமுறை நீடிப்புக்கு எதிராக வாக்களித்தனர்.
இத்தீர்மானத்தை வர்த்தகத் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். இவ்விடுமுறை நீடிப்புத் திட்டம் அங்கீகரிக்கப்பட்டிருந்தால் அது சுவிஸ் பொருளாதாரத்திற்கு 600 கோடி சுவிஸ் பிராங் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது.

 

மீண்டும் கும்ளேவுடன் இணைவது மகிழ்ச்சி: முரளிதரன்



இந்திய அணியின் முன்னாள் நட்சத்திரச் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளேயுடன் இணைந்து செயற்படுவது மகிழ்ச்சியாக உள்ளது என்று இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.எதிர்வருகிற ஐ.பி.எல் போட்டிகளில் முத்தையா முரளிதரன், ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சார்பாக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ரோயல் சலஞ்சர்ஸ் அணியின் நிர்வகிப்பவர்களில் ஒருவராக கும்ப்ளே செயற்படுகிறார்.
இந்நிலையில் முரளிதரன் கூறியதாவது, அனில் கும்ப்ளேவுடன் இணைந்து 2000 ற்கும் அதிகமான டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளோம்.
தற்போது கும்ப்ளேயுடன் மீண்டும் இணைந்து செயற்படுவது மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்தார்.

முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை வென்றது இலங்கை



காலியில் நடைபெற்ற இங்கிலாந்துடனான முதலாது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி  75 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

வெற்றி பெறுவதற்கு இரண்டாவது இன்னிங்ஸில் 340 ஓட்டங்கள் பெற வேண்டியிருந்த இங்கிலாந்து அணி போட்டியின் நான்காவது நாளான இன்று பிற்பகல், 264 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

அவ்வணியின் சார்பில் ஜொனதன் ட்ரொட் 112 ஓட்டங்களை பெற்றார்.   ஆனால் வேறு எவரும் அரைச்சதத்தையும் பெறவில்லை. மத்தியூ பிரையோர் 41 ஓட்டங்களைப் பெற்றார்.

இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 252 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் இருந்தது. எனினும் பின்வரிசை வீரர்கள் ஐவர் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தால் அவ்வணி தோல்வியைத் தழுவியது.

இலங்கை பந்துவீச்சாளர்களில் ரங்கன  ஹேரத் 97 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  சுராஜ் ரந்தீவ் 74 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இப்போட்டியில் மொத்தமாக 12 ரங்கன ஹேரத்  இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக தெரிவானார்.

2010 ஓகஸ்ட் மாதம் காலியில் நடைபெற்ற இந்தியாவுடனான டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றிபெற்றது. அது முத்தையா முரளிதரனின் கடைசி டெஸ்ட் போட்டியாகவும் அமைந்தது. அதன்பின் சொந்த மண்ணில் இலங்கை அணி டெஸ்ட் போட்டியொன்றில் வென்றமை இதுவே முதல் தடவையாகும்.

இத்தொடரின் இரண்டாவது போட்டி ஏப்ரல் 3 ஆம் திகதி பி. சரவணமுத்து அரங்கில்  ஆரம்பமாகவுள்ளது.

தற்போதுடெஸ்ட் தரவரிசையில் உலகில் முதலிடத்தில் உள்ள இங்கிலாந்து அணி, தொடர்ச்சியாக 4 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்குமுன் பாகிஸ்தானுடனான 3 போட்டிகளில் அவ்வணி தோல்வியைத் தழுவியது. 







ஞாபகம் உன்னோடு...



மனசெல்லாம் இசைக்கும் - உன்
நாமம் மறந்தும் நான்
அணுவளவேனும்
மறந்து போய் விடவில்லை..
காதலின் வேதனை
கவியாய்ச் சொட்டுகையில்
மனசெங்கும் உன் எண்ணம்
விரவி ஓடும் விந்தைக்குப்
பெயர் தான் காதலா?
மெல்ல வாய் திறந்து
சொல்ல வா காதலா.
நினைவுகளின் அடுக்குகளில் - நிகழ்ச்சி
நிரலாய் நீ தான் என்பதால்..
நீங்காது உன் ஞாபகம் என்றதால்..
நினைவுகள் உனக்கு மட்டுமே
சொந்தமாகிப் போனது.
மனசுன்னை வரித்த நாள் முதலாய்
மயிலிறகு வார்த்தைகளை நிதம்
தேடி அலைகிறது..
வாடிப் போன பெண்மையது- உனை
தேடித் போக வகை தெரியாது
தேம்பி இங்கு அழுகிறது..
தினம் ஒரு வேதனை இங்கு
தொடர் கதையாய்... - துயரம்
ஒரு படி மேலாய் நெஞ்சை தைக்க
மனம் இங்கு மரணித்து வெகு காலம்..
கனவே வாழ்க்கையாய் உன்னினைவோடு
நெடுங்காலம் நான் வாழவோ...?

யாரறிவார் இவள் மனதை?


 
 
 
                                                                                                                            வரம் ஒன்று தந்தான்
இறைவன் இலவசமாக
அழுகையும் கண்ணீரையும்

கனவுகள் பிரதிபலிக்க வேண்டிய
காலத்தில் - வாழ்க்கையெனும் பயணமே
கனவாகியது எனக்கு....

வேதனை என்ற சொல்லுக்கு
வரை விலக்கணம் தனைக் கூறியது
கன்னங்களின் ஓரம்
காய்ந்துபோன கண்ணீர்த்துளி..

எனைவிட்டு புன்னகையும் பொன்னகையும் தொலை தூரம் தொலைந்து போனதால்
பொன்னகையில் பார்ப்பதை விட
புன்னகையில் பார்ப்பது என்னை
பகல் நேர பௌர்ணமிகளாய்
தோன்றியது சிலருக்கு ....

எனை நோக்கி அனுதாபம்
அடைந்த சில நட்புகளை
மறக்கவில்லை இன்னும் என் மனம் - ஆனால்
காயம் கண்ட இதயமதை மீண்டும்
காயப்படுத்திய உறவுகளை இன்னும்
ஏற்கவில்லை என் மனம் ஏனோ?

காலங்களும் கரைந்து சென்றது
காட்சிகளும் மாறியது
கனவுகள் போல
கண்கள் கண்ட கனவுகளும்
கலைந்து சென்றது
கார்மேகம் போல...

மனதில் எழுந்த கேள்விகளுக்கு
விடை தேடுகின்றேன்
நான் நாளும்..

மனித மனங்களும் மரித்து விட்டது
இறைவனோ மௌனம் காக்கின்றான்
கண்ணீரைப் பரிசாக தந்து விட்டு....

பேதை இவள் பேதலிக்கின்றாள்
வரும் கால வாழ்வை எண்ணி
யாரறிவார் இவள் மனதை.......

அமலா பால் – ஆர்யா உறவில் விரிசல்!



சர்ச்சைகளின் நாயகி அமலாபால் என்றால் அது சற்றும் மிகையாகாது. நடிகர் விக்ரம் வீடு வாங்கிக்கொடுத்தார், இயக்குநர் விஜய் காதலிக்கிறார், பத்திரிகை, மீடியாக்களை அமலாபால் மதிக்க மாட்டேங்கிறார் என்று அடுக்கடுக்காக அவரைப் பற்றி கோடம்பாக்கத்தில் எக்கச்சக்க செய்திகள் றெக்கை கட்டி பறக்கின்றன.
ஜிகினா உலகின் லேட்டஸ்ட் கிசுகிசு என்னவென்றால், அமலாபாலுக்கும் – ஆர்யாவுக்கும் இடையில் இப்போது பெரிய விரிசல் விழுந்து விட்டது என்பது தான்.
இப்படி ஒரு செய்தி வெளியாக மூலக்காரணம் என்னவென்று பார்த்தால், வேட்டை படத்தின் மூலம் நெருங்கிப் பழக வாய்ப்பு கிடைத்து தன்னுடன் நல்ல நெருக்கம் பாராட்டி வந்த அமலாபாலை, புது வீடு கட்டி கோடம்பாக்கத்தையே கூப்பிட்டு கொண்டாடிய ஆர்யா அழைக்கவில்லை என்பதில் இருந்து தான் ஆரம்பித்திருக்கிறது என்பது தெரிய வந்தது. நெருப்பில்லாமல் புகையுமா என்ன?!
இது குறித்து அமலாபாலிடம் கேட்டால் : வழக்கம் போல இப்படி எல்லாம் பொய்யான செய்திகளை யார் பரப்பி விடுகிறார்கள்? நானும் ஆர்யாவும் ஸ்டில் பிரெண்ட்ஸ் என்கிறார். ஆர்யா வீட்டில் திறப்பு விழா நடந்த நாளன்று துபாயில் ஏற்கனவே கமிட் ஆன விழாவில் கலந்து கொள்ள வேண்டியிருந்தது அதனால் தான் கலந்து கொள்ள முடியவில்லை என ஒரு நொண்டி சாக்கு வேறு கூறுகிறார். ஆர்யாவோ இது பற்றி மவுனம் சாதிக்கிறார். கூட்டி கழித்து பார்த்தால் அம்மணி எங்கேயோ கணக்கு இடிக்குதே!! கரெக்டா நீங்களே சொல்லுங்க பார்க்கலாம்!

தாம்பத்யத்திலும் தன்னம்பிக்கை வேண்டும்....

எந்த ஒரு விசயத்திற்கும் தன்னம்பிக்கை வேண்டும். நம்பிக்கையில்லாமல் தொடங்கும் விசயம் வெற்றியடையாது என்கின்றனர் நிபுணர்கள். அதுபோலத்தான் தாம்பத்யத்தையும் தன்னம்பிக்கையோடு அணுகவேண்டும் என்கின்றனர் உளவியலாளர்கள். வெற்றிகரமான இல்லற வாழ்க்கைக்கு அவர்கள் கூறும் ஆலோசனைகளை கேளுங்களேன்.
பயத்தை விட்டொழியுங்கள்
படுக்கையறையில் பயத்துக்கு எந்த வேலையும் இருக்கக் கூடாது. ஒரு கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ படுக்கையறை என்பது பயங்களின் கூடாரமாக இருந்தால் தாம்பத்ய சுகம் பெறுவதில் சிக்கல் ஏற்படும்.தேவையில்லாத பயத்தை விட்டொழியுங்கள். உங்கள் தன்னம்பிக்கைதான் தாம்பத்யத்தில் உங்களை வெற்றிகரமானவராக செயல்பட வைக்கும். எனவே படுக்கையறைக்கு பாம்பு, பூதம், எதுவும் இல்லை. எனவே தேவையற்ற பயத்தை விட்டுவிட்டு தன்னம்பிக்கையுடன் தொடங்குங்கள் வெற்றிகரமான வாழ்க்கை கிடைக்கும்.
சந்தோசமான சிரிப்பு
படுக்கையறையில் நுழையும் போதே புன்னகையுடன் இருங்கள். முடிந்த அளவு மகிழ்ச்சியோடு சிரியுங்கள். தாம்பத்யம் என்பது மகிழ்ச்சிகரமானதுதானே. அங்கே எதற்கு சோகமும், கவலையும். எனவே சந்தோசமாக சிரியுங்கள். சிரிப்பே உங்கள் இருவரின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
சின்ன சின்ன விளையாட்டு
படுக்கையறையில் நீங்கள் விளையாடும் சின்ன சின்ன விளையாட்டுக்கள் உங்களின் உற்சாகத்தை அதிகரிக்கும். விளையாட்டுக்களின் மூலம் உங்கள் உணர்வுகள் கிளர்ச்சியடையும் என்கின்றனர் நிபுணர்கள். இதன் மூலம் தன்னம்பிக்கையோடு தாம்பத்ய வாழ்க்கையை தொடரலாம்.
அமைதி அவசியம்
படுக்கையறையில் எப்போதும் பூரண அமைதி நிலவ வேண்டும். படுக்கையறை தூய்மையின் இருப்பிடமாக தாம்பத்திய உறவும், ஆரோக்கியம் ததும்புவதாகவும், மிகுந்த பாதுகாப்பு கொண்டதாகவும் அமைந்திருக்க வேண்டும். புழுக்கமும் வியர்வையும் நங்கூரம் போடும் இடமாக இருக்கக் கூடாது. காற்றுக்கு எந்த பஞ்சமும் இருக்கக் கூடாது.
உற்சாகமாக தொடங்குங்கள்
கணவன் மனைவி இருவரும் இன்பம் பொங்க இணைவதற்கு இரண்டு பேரும் ஒருவரையருவர் தாம்பத்திய உறவில் விரும்பி ஏற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு கணவன் மனைவி இருவரும் ஒருவரையருவர் விரும்பி ஏற்றுக் கொள்வதில் எந்த சிக்கல்களும். இருக்கக் கூடாது. சுத்தமின்மை, வழியும் வியர்வை, உடல் துர்நாற்றம், எரிச்சலூட்டும் வியர்க்குரு, நெருங்கவே முடியாமல் செய்யும் வாய் துர்நாற்றம் ஆகியவை இல்லற சுகத்தை பாதிக்கும். பெண்கள் கஸ்தூரி மஞ்சள், கடலை மாவு, வால்மிளகு சேர்த்து அரைத்த குளியல் பொடியை பயன்படுத்தி தங்களை சுகாதாரமாக வைத்துக் கொள்ளலாம்.
கணவனோ மனைவியோ தங்களுக்கு தோல் நோய்கள் இருந்தால் அதற்கு அம்மான் பச்சரிசி, மஞ்சள், வேப்பிலை, துளசி இலை போன்றவற்றை மைய அரைத்து உடம்பு பூராவும் பூசி வைத்து அரை மணி நேரம் கழித்து குளிக்கலாம்.
சிகரெட் புகைப்பவர்கள். மதுப் பழக்கம் உள்ளவர்கள் மேல் எப்போதும் ஒரு வித வாசனை வீசும். இது போன்ற பழக்கம் உள்ளவர்கள் படுக்கையறைக்குள் நுழையும் போது தங்கள் மேல் நாற்றம் அடிக்காமல் இருக்க ஒரு குளியலைப் போட்டு விட்டு நுழைவது நல்லது.
மணக்கும் மலர்கள்
நமது படுக்கையறையை தங்கமும் வைரமும் வைத்து இழைத்து வைத்திருக்க வாய்ப்பில்லை. நம்மால் எளிதில் வாங்கி சூடிக் கொள்ள முடிகிற பூக்களைக் கொண்டே நமது படுக்கையறையை கமகமக்க வைக்கலாமே. பூக்களின் நறுமணமே உற்சாகத்தையும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
பகிர்ந்து கொள்ளுங்கள்
கணவனோ மனைவியோ தாம்பத்தியத்தில் தங்களுக்கு ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள். இது உங்கள் மீதான தேவையற்ற அச்சத்தை விலக்க உதவும். இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்துகொள்ளுங்கள். தாம்பத்யம் குறித்த பயம் விலகும்.

அநாவசியமா பயப்படாதீங்க! ஆபத்தாயிடும்!!


எதற்கெடுத்தாலும் சிலர் பயப்படுவார்கள். தண்ணீரைக் கண்டால் பயம், உயரமான இடத்தில் ஏற பயம், யாராவது கத்தினால் கூட பயந்து நடுங்குவார்கள். இதற்கு போபியா என்று பெயர். இதனை இயற்கைக்கு மாறான பேரச்சம் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். போபியா என்பது வேறு. பயம் என்பது வேறு. பயம் என்பது இயல்பானது. போபியா என்பது அசாதாரணமான பயம். அளவுக்கு மீறிய பயம்..
பயம் அவசியம். ஆனால் போபியா அநாவசியம். வாழ்க்கையில் நேரிடும் சில அசாதாரண சம்பவங்களினால் சிலர் இந்த போபியாக்களை தங்களுக்குள்ளே உருவாக்கிக் கொள்கிறார்கள். இது ஒரு மனநோய்தான். வேறு பயப்படும்படி ஒன்றுமில்லை என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
எதனால் இந்த போபியா ?
நூற்றுக்கணக்கான போபியா வகைகள் இருக்கின்றன.சிலர் திறந்த வெளியிலோ பொதுமக்கள் மத்தியிலோ போவதற்கும் பேசுவதற்கும் பயப்படும் போபியாவினால் பாதிக்கப்பட்டிருக்கலாம். மாறாக சிலர் தனிமையிலே இருப்பதற்கு பயப்படும் போபியாவினால் பாதிக்கப்பட்டிருக்கலாம். சிலருக்கு இருட்டைக் கண்டால் பயம். பகலில் கூட வீட்டிலே தனியாக இருக்க பயப்படுவார்கள். சிலருக்கு இரத்தத்தைக் கண்டதும் மயக்கமே வந்துவிடும். சிலருக்கு பாம்பு, பல்லி, கரப்பான் பூச்சி, தேள் போன்றவற்றைக் கண்டவுடனே மயக்கம் போட்டு விழுந்து விடுவார்கள். சிலர் உயரமான கட்டிடங்கள், மலை போன்றவற்றைக் கண்டதும் அலறுவார்கள். சிலர் கிருமிகள் கிருமிகள் என்று அளவுக்கு மீறி பயந்து நடுங்குவார்கள். ஒரு நாளைக்கு நூறு முறை கைகளைக் கழுவுவார்கள். ஒன்றும் வேண்டாம். ஹெல்மட்டைக் கண்டாலே அலறும் போபியாவினால் பாதிக்கப்பட்டவர்களும் உண்டு.
போபியாக்கள் ஆபத்தானவை.
எல்லா நாடுகளிலுமே 7 சதவீதம் முதல் 13 சதவீதம் வரை மக்கள் ஏதோ ஒரு போபியாவினால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்று புள்ளிவிபரம் கூறுகிறது. அமெரிக்காவில் மட்டும் 6 மில்லியன் மக்கள் ஏதேனும் ஒரு போபியாவினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று மற்றொரு புள்ளிவிபரம் கூறுகிறது.
அளவுக்கு மீறிய பயம்தான் போபியாவாகும். இது நமக்கு மட்டுமல்லாமல் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் பிரச்சினையை உண்டாக்குகிறது. சிலருக்கு இந்த போபியாவினால் அளவுக்கு மீறி பிரச்சினை ஏற்பட்டு இதய வியாதி வரை கொண்டு போய்விடும். ஒரு தடவை நாய் பயத்தினால் நீங்கள் பாதிக்கப்படும் போது நல்ல நாயைக் கண்டாலும் அலறி ஓடுவீர்கள்.
போபியாவின் அறிகுறிகள்
போபியா ஏற்பட்டிருக்கிறது என்றால் சில அறிகுறிகள் உண்டாகும். அளவுக்கு மீறிய அச்ச உணர்வினால் உடல் நடுங்குவது, வியர்ப்பது, மூளைச் சோர்வு, மூக்கு ஒழுகல், இதயத்துடிப்பு அளவுக்கு மீறுவது, சுவாசிக்கவே திணறுவது போன்ற உணர்வுகள்தான் போபியாவினால் நாம் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதற்கான அறிகுறிகளாகும்.
எப்படி குணமாக்குவது?
உங்களுக்குத் தெரிந்தவர்கள் இவ்வித போபியாக்களினால் பாதிக்கப்பட்டிருப்பார்களானால் தகுந்த மனோதத்துவ நிபுணரிடம் காண்பித்து சிகிச்சை அளியுங்கள். பாதிப்பின் விதத்தைப் பொறுத்து சிகிச்சை அளிப்பார்கள் மனோதத்துவ நிபுணர்கள்.

மூளையின் அளவே உங்களின் நண்பர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்கிறது! ஆய்வில் ஆச்சரியம்


உங்களுக்கு எத்தனை நண்பர்கள் இருக்கின்றார்கள் என்பதனை உங்களின் மூளையின் அளவு தான் தீர்மானிக்கின்றது என்று சுவாரஷ்யமான ஆய்வு ஒன்று கூறுகின்றது.
பிரித்தானியாவின் புகழ்பெற்ற ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களில் ஒருவரான Robin Dunbar என்பவரின் தலைமையிலான குழுவினரே மேற்படி சுவாரஷ்யமான செய்தியைக் கண்டறிந்துள்ளனர்.
மூளையின் அளவு பெரிதாக இருந்தால் அவருக்கு ஏராளமான நண்பர்கள் இருப்பார்களாம். இந்த ஆய்வு முடிவுகள் பல்வேறு தரப்பினரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளன.
ஏராளமான நண்பர்கள் உள்ளவர்களைப் பார்த்து இனிமேல் நீங்களும் தயங்காமல் கேட்கலாம். உங்களுக்கு என்ன பெரிய மூளையா என்று? உண்மை தானே.