Tuesday, May 1, 2012

பில்லேடன் உடல் கடலில் அல்ல- அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டது- விக்கிலீக்ஸ்!

பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்ட அல்-கொய்தா தலைவர் பின்லேடனின் உடல் கடலில் புதைக்கப்படவில்லை என்றும், உடல் அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் வீக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
சமீப காலமாக அமெரிக்க அரசுக்காகவும் ராணுவத்துக்காகவும் உளவுப் பிரிவுக்காகவும் அமெரிக்க நிறுவனங்களுக்காகவும் பல்வேறு நாடுகளில் உளவு பார்த்து வரும் தனியார் நிறுவனத்தின் ரகசிய இமெயில் பரிமாற்றங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் உளவு நிறுவனத்தின் துணைத் தலைவர் பர்ட்டன் தனது அதிகாரிக்கு எழுதியுள்ள இமெயிலை விக்கிலீக்ஸ் இன்று வெளியிட்டுள்ளது
பாகிஸ்தானின் அபோடாபாத் நகரில் கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் 2ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்ட ஒசாமா பின் லேடனின் உடல் அமெரிக்க அரசு கூறியபடி கடலில் புதைக்கப்படவில்லை.
மாறாக அந்த உடல் சிஐஏவின் விமானத்தில் அமெரிக்காவுக்குக் கொண்டு வரப்பட்டது. அந்த உடலை பரிசோதனை செய்ய சிஐஏ முடிவு செய்தது. மேரிலாண்டின் பெதெஸ்டா பகுதியில் உள்ள ராணுவத்தின் நோய் தடுப்பியல் ஆராய்ச்சி மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த உடல் இப்போதாவது புதைக்கப்பட்டுவிட்டதா அல்லது இன்னும் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை என விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
முன்னதாக ஒசாமாவின் உடலை இஸ்லாமிய முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்து அரபிக் கடலில் புதைத்தாக அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்திருந்தார். ஆனால், அது பொய் என விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

உறுதி…

உன்னிடம் சொல்ல
உள்ளத்திலில்லை உறுதி…
உறுதியான செய்தியில்லை
இருந்தும்…
உதடுகளை தாண்டிய பின்னே
செவிகளை தீண்டிய பின்னே
உள்ளத்தை உருக்குலைக்காமல்
ஒருபோதும் விடுவதில்லை சொற்கள்!
அவ்வகையில்…
உறுதியோடு…
உள்ளமும் உடைந்தது எனக்கு!