poem

01.அழகு

குழந்தை அழகு
பொது இடத்தில் மானத்தை வாங்காத வரை

தென்றல் அழகு
புயலாய் மாறாத வரை

நட்பு அழகு
சுயநலம் இல்லாத வரை

பெண் அழகு
நல்ல குணம் இருக்கும் வரை

ஆண் அழகு
வீரம் உள்ள வரை

உறவு அழகு
உண்மையாய் இருக்கும் வரை

தீபம் அழகு
கொள்ளியாய் மாறாத வரை

நட்சத்திரம் அழகு
எரிநட்சத்திரமாய் மாறாத வரை

இயற்கை அழகு
சீற்றம் கொள்ளாத வரை

கடல் அழகு
சுனாமி வராத வரை

என் தாய் அழகு - உலகம்
உள்ள வரை
 
 
02.நேற்றைய அனுபவம்,
நேற்றைய அனுபவம்,
இன்றைய சிந்தனை!
இன்றைய சிந்தனை,
நாளைய வழிகாட்டி!
நாளைய வழிகாட்டி,
இன்றைய தத்துவம்..

தெய்வ நம்பிக்கை என்பது

உன் உடலில் இருக்கும்
குருதி போன்றது,
ஒவ்வொரு துளி சிந்தும்பொழுதும்
உன் இறை நம்பிக்கையை
நினைவுபடுத்திக் கொள்கிறாய்.

நீ கடந்து சென்ற பாதையில்தான்
நீ மறந்து சென்ற வழிகள் இருக்கும்
நீ மறந்து சென்ற வழிகளில்தான்
நீ கடந்துவிட்ட வாழ்வு இருக்கும்..

மண்ணில் இருக்கும்
இரும்பு துகள்களுக்குகூட ஒரு
காந்தபுலன் கிடைத்துவிட்டால்
எழுந்துவிடுகிறது,
நீயும் உன் திறமைகளுக்கான
புலனில் எழாவிட்டால்...
உன் திறமைகளும் மண்ணில்
மறைந்த துகள்களே..!

03.என் காதல் கவிதைகள்

உன் தோழியின் கல்யாணவீட்டில் தாலிகட்ட உதவிசெய்த
உன்னைப் பார்த்தபின் தான் எனக்கும் ஆசை வந்தது
தாலிகட்டி கல்யாணம் செய்ய
*
உன்னோடு கூடவர ஆசையின்றி
விழுந்த உன் கொலுசுதான் உன்னோடு
கூடவர என் ஆசையை வளர்த்தது

*
நான் முதல்த் தடவை பயணித்த
விமானத்தில்த்தான் உன் நினைவுகளை
தரையிறக்கிவிட்டு முதன்முதல்
உன்னை கனவு காண ஆரம்பித்தேன்

*
வருசையில் நின்று வாங்கப் போன
மருந்துக்கடையில்தான் வாங்கி வந்தேன்
மருந்தே இல்லாத காதல் நோயை

*
உன்னை பலமுறை சந்தித்த போதும்
என்னால் உன் மெளனத்தை கலைக்க
முடியாமல்ப் போன போதுதான்
எனக்கு உதவிசெய்து உறுதிப்படுத்தியது
உன் கைபேசி நீ ஊமையானவள் அல்ல என்று

*
தன் பெயரை பிழையாக எழுதிக் கொண்டிருந்த
சிறுமியிடம் அழகாய் எழுத கற்றுக் கொடுத்தேன்
என் காதலியின் பெயரும் அது என்பதால்


 
 

1 comment: