Sunday, March 11, 2012

உங்களுக்கு மன இறுக்கம் தோன்றி, தொடர்ந்தால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?




முதலில் இது அவமானப்பட வேண்டிய விஷயம் அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் எந்த தவறும் செய்துவிடவில்லை. மரபணு, சுற்றுப்புற சூழல் (அதாவது உங்களால் கட்டுப்படுத்த இயலாதவை) உங்கள் மனச்சோர்வுக்குக் காரணமாக அமைந்திருக்கக் கூடும்.

உடனே மனநல மருத்துவரிடம் ஓட வேண்டும் என்பதில்லை. மனதிற்கு உற்சாகம் அளிக்கும் வகையில் ஏதாவது மாற்றங்களை கொண்டு வரமுடியுமா என்று பாருங்கள். ஒரு சின்னச் சுற்றுலா, இடம் மாறுதல், மொட்டை மாடியில் உணவு, அலுவலகத்தில் வேறு திசையில் உங்கள் இறுக்கையை மாற்றிக்கொள்வது போன்ற விஷயங்கள்கூட இதில் உதவலாம்.

மனச்சோர்வு தொடர்ந்தால், உங்கள் குடும்ப டாக்டரை அணுகலாம். ரத்தக்கொதிப்பு, நீரிழிவு நோய் போன்ற காரணங்கள் கூட மனச்சோர்வுக்கு வழி வகுக்கலாம். காரணங்களை கட்டுக்குள் கொண்டு வந்தாலே மனச்சோர்வு மறைந்துவிடும்.

அப்படியும் மனச்சோர்வு தொடருகிறது என்றால் தயங்காமல் மனநல மருத்துவரையோ, மனவியல் மருத்துவரையோ அணுகுங்கள். அவர்களின் சிகிச்சைக்கு உடன்படுங்கள்.

காதல் எதுவரை?

காதல் எதுவரை?



மனம் : கல்யாணத்தின் பின் ஒருவரையொருவர் காதலிக்க முடியாதா?

எதிர்மனம் : காதலிக்கும் போதிருக்கும் சூழல் கல்யாணத்தின் பின் இருப்பதில்லை. சூழல் மாறிவிடுவதால் காதலித்த மனிதர்களும் கல்யாணத்தின்பின் மாறிவிடுகிறார்கள்.

மனம் : காதல் என்பது உணர்வு. அதெப்படி மாறும்?

எதிர்மனம்: உணர்வையே அந்தந்தச் சூழல்தான் தீர்மானிக்கிறது.

மனம் : பொதுமைப்படுத்திக் சொல்வதால் எனக்கு விளங்கிக்கொள்ளக் கடினமாயிருக்கிறது.

எதிர்மனம்: நான் காதலித்தேன்.

மனம் : அட, புதிசாயிருக்கிறதே! யார் அவள்?

எதிர்மனம்: அவள் இப்போது திருமணம் செய்து குழந்தைகளுடன் இருப்பதால் அவளின் விபரங்களைச் சொல்ல விரும்பவில்லை.

மனம் : அவள் வேறொருவரைத் திருமணம் செய்திருக்கிறாளா?

எதிர்மனம்: ஆம்

மனம் : ஏன் ஒருதலைக் காதலா?

எதிர்மனம்: அப்படியென்றால்?

மனம் : நீ அவளைக் காதலித்தாய். அவள் உன்னைக் காதலிக்கவில்லை.

எதிர்மனம்: நான் அவளைக் காதலித்தேன் என்று எனக்குத் தெரியும். அவள் என்னைக் காதலித்தாளா என்று அவளுக்குத்தான் தெரியும். அவளும் என்னைக் காதலிப்பதாகவே எனக்கு ஒரு உணர்வு இருந்தது.

மனம் : ஏன் நீங்கள் இதைப் பற்றி ஒருவருடன் ஒருவர் சொல்ல வில்லையா?

எதிர்மனம்: இதைத் தவிர எல்லாவிடயங்களையும் பற்றிக் பேசிருக்கிறோம்.

மனம் : ஏன் முக்கியமான விடயத்தைப் பற்றிக் சொல்ல வில்லை?

எதிர்மனம்: நீ என்னைக் காதலிக்கிறாயா என்று கேட்பது முக்கியமான விடயமாக எங்களுக்குள் இருந்திருக்கவில்லை.

மனம் : இரண்டுபேரும் அறிவாளிகளாகத்தான் இருந்திருக்கிறீர்கள். சரி அதைவிடு. அவளை நீ காதலிப்பது உனக்கு எப்படித் தெரியும்?

எதிர்மனம்: அவளைப் பார்த்ததில் பிடித்துப் போயிருந்தது. அவளைப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் போலிருந்தது. அவளுடையதும் என்னுடையதுமான பெரும்பாலான கருத்துகள் ஒத்துப்போயிருந்தன. அவள் எனது வாழ்க்கைத் துணையாக இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என்று நினைத்தேன்.

மனம் : அப்பிடிப் போடு. பிறகேன் இதைப் பற்றி அவளுடன் கதைக்கவில்லை?

எதிர்மனம்: பயம்.

மனம் : அவளுடன் கதைப்பதற்கு உனக்குப் பயமா?

எதிர்மனம்: இல்லை. அவளுடன் சேர்ந்து வாழ்ந்தால் இதே போல அவளைத் தொடர்ந்தும் காதலிக்க முடியுமா? இதேபோல அவளுடன் தொடர்ந்தும் பழக முடியுமா என்ற பல பயங்கள்.

மனம் : என்னைக் கொலைகாரனாக்காதே. அவளை உனக்குப் பிடித்திருந்தது. அவளுடன் சேர்ந்து வாழவும் விரும்பியிருக்கிறாய். அவளும் உன்னை விரும்பியிருக்கிறாள். பிறகேன் உனக்குப் பயம் வருகிறது? உனக்கு உன் மீதே நம்பிக்கையில்லையா?

எதிர்மனம் : உனக்கு விளங்கும்படியாக சொல்ல எனக்கு முடியவில்லை. காதலிக்கும்போது எந்தக் கட்டுபாடுகளுமில்லை. எந்தச் சுமைகளோ, பாரங்களோ இல்லை. இவற்றைவிட முக்கியமான விடயம் நானும் அவளும் தனித்தனி மனிதர்கள் என்ற உணர்வு இருப்பதால் ஒருவரையொருவர் அவரவர் பலம்/பலவீனங்களுடன் அங்கீகரிக்க முயல்கின்றோம். குடும்பம் என்பது ஒரு வடிவமைக்கப்பட்ட நிறுவனம். அதற்குள் போய்விட்டால் நாம் விரும்பியோ விரும்பாமலோ அதற்குரிய சட்ட திட்டங்களை ஏற்றுக் கொள்கிறோம். ஒருவர் மற்றவரின் சொத்தாகவோ பொருளாகவோ ஆகிவிடுகிறோம். குடும்பப் பாரங்கள் அதிகரிக்கின்றன. எனக்கும் அவளுக்குமிடையிலான மெல்லிய உணர்வுகள் சாகடிக்கப்படுகின்றன. அல்லது அவற்றுக்கு நேரமில்லாமல் போய்விடுகிறது. இறுகிப்போன சட்டங்களுக்குள் மனித உறவுகளுக்கு அர்த்தமில்லை.

மனம் : அட, இதுதான் விசயமா? நீ எந்த உலகத்தில் இருக்கிறாய்? உலகம் எங்கேயோ போய்விட்டது மகனே! நீங்கள் இருவரும் ஏன் திருமணம் செய்ய் வேண்டும்? நண்பர்களாகச் சேர்ந்து வாழலாமே?

எதிர்மனம்: அவளுக்கு இதில் உடன்பாடில்லை. பெண் என்ற ரீதியில் அவளுக்கிருக்கும் மேலதிக பயங்கள், பாதுகாப்பின்மை, சமூக அழுத்தங்களை நான் விளங்கிக் கொண்டேன். அதனால் அவளை வற்புறுத்தவில்லை. இதைவிட, சேர்ந்து வாழ்வதில் கூட குடும்பங்களுக்குரிய வடிவம் மறைமுகமாக இருப்பதாகவே நான் நினைக்கின்றேன்.

மனம் : சரி, இப்போது அவளையே நினத்துக்கொண்டு இப்படியே இருக்கப்போகிறாயா?

எதிர்மனம் : அருகில் இருக்கும்போது மட்டுமே நெருக்கம் இருக்கும். அவளது நினைவுகள் இனிய ஞாபகங்களாக் இருக்கின்றன. அவ்வளவுதான். இனிவரும் நாட்களில் நான் இன்னும் ஒருவரையோ இருவரையோ அல்லது பலரையோ காதலிக்கலாம். யாருக்குத் தெரியும்!


எளிமையாக புரிந்து கொள்வதற்காகவும் காதலின் ஒருவகைப்பற்றியது மட்டுமே இந்த பதிவு

மனச்சோர்வில் இந்தியர்களுக்குதான் முதலிடம்!!

மனச்சோர்வில் இந்தியர்களுக்குதான் முதலிடம்!!

உலக சுகாதாரக்கழகத்தின் சார்பில் நடைபெற்ற ஆய்வில், மனதளவில் பெரிய அளவில் சோர்வாக இருப்பவர்களில் இந்தியர்கள்தான் அதிகமானவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின்படி, சீனர்கள்தான் அதிக மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள். தங்கள் வாழ்நாளில் மனச்சோர்வு நீடித்த வண்ணம் இருந்தது என்று 9 விழுக்காடு இந்தியர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். மிகவும் கடுமையான மனச்சோர்வு கொண்ட காலத்தை அனுபவித்தோம் என்று 36 விழுக்காடு இந்தியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தியாதான் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 18 நாடுகளில் அதிக அளவு மனச்சோர்வு உடையதாக இருக்கிறது.

பி.எம்.சி. மருத்துவ சஞ்சிகை ஒன்றில் இந்த ஆய்வு விபரங்கள் வெளியாகியுள்
ளன. மொத்தம் 18 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

அதிக வருமானம் ஈட்டும் நாடுகள் என்ற பிரிவில் பத்து நாடுகள் உள்ளன. பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான், நெதர்லாந்து, ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா ஆகியவை அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

 நடுத்தர அளவில் வருமானம் ஈட்டக்கூடிய நாடுகளின் பட்டியலில் பிரேசில், கொலம்பியா, இந்தியா, சீனா, லெபனான், மெக்சிகோ, தென் ஆப்பிரிக்கா மற்றும் உக்ரைன் ஆகிய எட்டு நாடுகள் உள்ளன. வளர்ச்சி குறித்து உலக வங்கி நிர்ணயித்திருக்கும் தரத்தின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டது.

மனச்சோர்வு என்பது ஆயுட்காலத்தைக் குறைக்கும் காரணியில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது என்கிறார்கள் ஆய்வாளர்கள். உலகம் முழுவதும் சுமார் 12 கோடிப்பேர் மனச்சோர்வால் பாதிக்கப்பட் டுள்ளனர். குறிப்பாக, 15 வயது முதல் 44 வயது வரைஉள்ளவர்களுக்குதான் அதிக பாதிப்பாகும். மிகவும் கடு மையான மனச்சோர்வு பற் றிய ஆய்வு புருவத்தை உயர்த் தச் செய்யும் தகவல்களைத் தந்துள்ளது. பணக்கார நாடு கள், அதாவது வருமானம் அதிகம் ஈட்டக்கூடிய நாடுக ளில்தான் இந்த பாதிப்பு அதிக அளவில் உள்ளது. நடுத்தர அளவில் வருமானம் ஈட்டக்கூடிய நாடுகளில், எதிர்பார்த்ததைவிடக் குறை வானதாகவே இருக்கிறது.

அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட பணக்கார நாடுகளில் தவறான கொள்கைகளால் உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடி, பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான அச்சம், ஆக்கிரமிப்பு பணிகளில் ஈடுபடும் ராணுவத்தினருக்கு ஏற்படும் மனரீதியான பாதிப்புகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மக்கள் நெருக்கடியில் சிக்கியுள்ளனர். அமெரிக்க வேலையின்மை, அதனால் உருவான பிரச்சனையான வீடின்மை அந்நாட்டு மக்களிடம் வாழ்க்கை பற்றிய கவலையை உருவாக்கியுள்ளதை மனிதவள வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

 அதற்கு மாறாக, பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள சீனா உள்நாட்டுப் பொருளாதாரத்தை பலப்படுத்தும் வேலையைச் செய்தது. அதனால்தான் அந்நாட் டில் மனச்சோர்வு குறைவு என்பது அந்த வல்லுநர்க ளின் கருத்தாகும்.

பெண்களுக்கு கூடுதல் பாதிப்புஅனைத்து நாடுகளிலுமே கூடுதல் நெருக்கடியைச் சந்திப்பவர்களாக பெண்கள் இருக்கிறார்கள். ஆண்களைவிட இரண்டு மடங்கு மனச்சோர்வு பெண்கள் மத்தியில் காணப்படுவதாக ஆய்வு தெரிவிக்கிறது. கணவரை இழப்பது, விவாகரத்து மற்றும் வாழ்க்கைத் துணைவரைப் பிரிந்து வாழ்வது ஆகிய பிரச்சனைகள் பெண்கள் மத்தியில் பெரும் மனச்சோர்வை ஏற்படுத்தும் காரணிகளாக இருக்கின்றன. சமூக அமைப்பில் பெண்களுக்கு தரப்படும் இடமே இத்தகைய பிரச்சனைகளை உருவாக்குகின்றன. கிட்டத்தட்டஅனைத்து நாடுகளிலுமே பெண்களை இரண்டாந்தர குடிமக்களாகக் கருதும்போக்கு உள்ளது.

கடுமையான மனச்சோர்வுஇந்தியாவில்தான் இந்த பாதிப்பு அதிகமாக இருக்கிறது. கவலை, துக்கம், தவறு செய்துவிட்டதாகக் கருதுதல், தாழ்வு மனப்
பான்மை, தூக்கமின்மை, பெரும் கவனக்குறைவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் இது குறித்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. முக்கியமான நாடுகளில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக பிரான்ஸ், அமெரிக்கா, ஜெர்மனி, சீனா என்ற வரிசையில் இந்தப் பாதிப்பு இருக்கிறது. உலகிலேயே அதிக மக்கள்தொகையைக் கொண்ட சீனாவில் மனச்சோர்வு என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. மற்ற நாடுகளைவிட சீனாவின் குடிமக்கள் அதிக மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள் என்பது இந்த ஆய்விலிருந்து தெரிய வருகிறது.

எதற்கு டென்ஷன்!

எதற்கு டென்ஷன்!

;ஓரு மனிதனுடைய இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது. ரத்தம் ஒரு நாளில் 16,80,00,000 மைல் தூரம் உடலில் பயணிக்கிறது. ஒருவன் 438 கன அடிக்காற்றை மூச்சாக உள்ளே இழுத்துக் கொள்கிறான். 750 தசைகளை அசைக்கிறான். 70,00,000 மூளை செல்களைப் பயன்படுத்துகிறான். இந்தச் செயல்களால் மனிதன் களைத்துப் போவதில்லை. ஏனென்றால் இவை எல்லாம் தன்னிச்சையாக நடக்கின்றன. இதில் நம் முயற்சி என்று எதுவும் இல்லை. 

நாமாக முயற்சி எடுத்துச் செய்யும் சில்லறை வேலைகளால்தான் நாம் களைத்துப் போகிறோம். ஏன்? இயற்கை, தான் செய்யும் வேலைகளுக்கு கணக்கு வைத்துக் கொள்வதில்லை. நாம் துரும்பை நகர்த்தினால்கூட கணக்கு வைத்துக் கொள்கிறோம். இயற்கை, தன் செயல்களைச் சுமையாக நினைப்பதில்லை. மனிதன் தன் பெரும்பாலான செயல்களை சுமையாகவே கருதுகிறான். 

இயல்பாக, மனிதன் மகிழ்ச்சியாக செய்யும் எந்தச் செயலும் அவனுக்கு களைப்பையும், டென்ஷனையும் தருவதில்லை. ஆனால் அப்படிச் செய்யும் செயல்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இயற்கை தேவையில்லாத செயல்களைச் செய்ய முனைவதில்லை. தேவையுள்ளதை மட்டுமே செய்வதால் அனைத்தையும் அலட்டிக் கொள்ளாமல் செய்து முடிக்கிறது. ஆனால் மனிதன் செய்கின்ற பல செயல்கள் பயன் தராதவையாகவும், தேவையில்லாதவையாகவும் இருக்கின்றன. அதனால் செய்யவேண்டிய வேலைகளைச் செய்ய அவனுக்கு நேரம் போதுமானதாக இல்லை. இயற்கையின் வழி
முறைகளைப் பின்பற்றினால், "நோ டென்ஷன்.

குழந்தைகளின் மன அழுத்தத்தைக் குறைப்பது எப்படி?


மன அழுத்தம் என்பது ஒருவரை மிகுந்த குழப்பத்தில் ஆழ்த்திவிடும். மன அழுத்தம் என்பது அனைவருக்கும் பொதுவானதே. ஆனால் குழந்தைகள் மற்றும் இளவயதினருக்கிடையேயான மன அழுத்தம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு பல காரணங்கள் உண்டு.

முறையான அரவணைப்பு இல்லாதது, பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் இடையே உள்ள இடைவெளி, சமுதாயச் சூழல் போன்ற பல காரணங்களால் குழந்தைகள் மற்றும் இளம் வயதினரிடையே மன அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் அவர்கள், தவறான பாதைக்கு செல்வதாக ஏற்கனவே வெளிவந்த பல ஆய்வறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்த மன அழுத்தத்தை சிறந்த குழுத் திட்டத்தின் மூலம் தடுக்க முடியும் என தற்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மருத்துவ ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் சர்வதேச நிறுவனம், கோச்ரே எனும் புத்தகப் பதிப்பு நிறுவனத்துடன் இணைந்து, ஒரு ஆண்டுக்கும் மேலாக இந்த ஆராய்ச்சியை நடத்தியது. இதில் மன அழுத்தம் அதிகரிப்

பதற்கான காரணம் மற்றும் அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்தது.

இதுகுறித்து, அக்குழுவில் ஒருவரான, குழந்தைகள் மனநல மருத்துவர் சாலி மெர்ரி கூறுகையில், இந்த ஆராய்ச்சி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஏனென்றால், மன அழுத்த நோய் உலகெங்கிலும் பொதுவாகவே உள்ளது. கடந்த 2002ம் ஆண்டு ஆராய்ச்சியாளர்கள், வளர்ந்த நாடுகளில் மன அழுத்தக் குறைபாடு இரண்டாவது இடத்தையும், வளரும் நாடுகளில் பிரதான இடத்தையும் பெற்றிருந்ததாக அறிவித்தனர்.

இதுகுறித்து, மனநல வியாதியைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை ஆய்வு செய்து வரும் ஜான் ஹாகின்ஸ் பொது நலப் பள்ளியின் துணை பேராசிரியரான டாமர் மெண்டெல்சன் தெரிவிக்கையில், இந்நோயின் மூலம் இளைஞர்களின் தினசரி மகிழ்ச்சி அடியோடு அழிக்கப்படுகிறது. மேலும், அவர்களின் பள்ளி மற்றும் சமுதாயத்துடனான உறவையும் குறைக்கிறது. அது மட்டுமின்றி, மன அழுத்தம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வரும். இறுதியில், தொடர்ச்சியான நோய்களில் கொண்டு சென்று நிறுத்தும். முன்கூட்டியே எடுக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கையின் மூலம் இதனை தடுக்கலாம். ஆனால் இம்முறையை குழந்தை களுக்கு செயல்படுத்துவது மிகக் கடினமான ஒன்றாகும் என்று அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், நாங்கள், பல்வேறு நாடுகளில், ஐந்து முதல் பத்தொன்பது வயதிற்குட்பட்ட மொத்தம் 14,406 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட 53 ஆய்வுகளை ஒன்றிணைத்தோம். இதில், ஆரம்பத்திலிருந்தே பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டவர்களிடம் எந்தவித நோய் அறிகுறியும் தென்படவில்லை.

குழு சார் தடுப்பு நடவடிக்கை, மற்ற மருத்துவ முறைகளை விட அனைத்து நபர்களிடமும் எளிதில் சென்றடையக்கூடியதாக உள்ளது. பெரும்பாலான திட்டங்கள், புலனறிவு நடத்தை சிகிச்சை சார்ந்தவையாக உள்ளன. மற்றவை , அழுத்தத்தைக் குறைத்தல், சுய திறன் மற்றும் அதிர்ச்சி மற்றும் தன்னம்பிக்கையை ஒழுங்குபடுத்தும் நுணுக்கத்திற்கு முன்னுரிமை அளிப்பதாக உள்ளது.

மன அழுத்தம் என்பது உலகெங்கிலும் உள்ள தனிமனிதர்களிடம் உள்ள ஒரு நோயாகும். இந்த ஆராய்ச்சி இளைஞர்கள், பெற்றோர்கள், சுகாதார நல அலுவலர்கள், குழந்தைகள், குடும்பங்கள் மற்றும் பள்ளிகளில் பணிபுரியும் நபர்களுக்கு ரொம்ப உதவியாக இருக்கும். ஆனால், மன அழுத்தத்தை ஒழுங்குபடுத்தும் நடவடிக் கைக்கு அதிக செலவாகும். இதனை பல நாட்டு அரசுகளிடம் விவரித்திருக்கிறோம். அவர்கள் நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

உன்னை மறக்க......!!!!!

உன்னை மறக்க......!!!!! 


உன்னை மறப்பதர்க்கான
எல்லா முயற்ச்சிகளிலும்
தோற்றுப்போன
ஒரு நாளில்தான்
தெரிந்துகொண்டேன்
உன்னை மறக்க வேண்டுமென்றால்
நான் இறக்க வேண்டுமென்று.............!!!!!

காதலின் வேதனை

காதலின் வேதனை  - காதல் தோல்வி கவிதைகள்

காதலின் வேதனை  

காய்ந்த முற்களாக கருவேல மரம்
காதலி நினைவோடு கட்டெறும்பு கடியில்
வீங்கும் சருமத்தில் வேதனையாய் இதயம்
விட்டு விட்டு துடிக்கவே வலிகளில் உதயம்

கொன்றுபோடப்பட்ட சடலமாய் கட்டெறும்பு
கொலைபழியில் சாவதற்கு காதலியால் என்னுடம்பு
காற்றால் எறும்புடம்பு காணமல் போனதுபோல்
காதலியால் என்னுடம்பும் கண்டுபிடிக்க சொல்கிறதே


ஒற்றை எறும்பு கொன்றதால்
உள்ளுக்குள் ஓர் உறுத்தல்
மற்றை எறும்பு காதலியென்றால்
மறந்து போகுமோ காதலனை

குட்டி எறும்பு கடிக்கின்றதே
கொன்றுபோடவோ மனசில்லை
முந்தை எறும்புக்கு முறை என்னவோ
முடியும் வாழ்வுக்கு உறவென்னவோ

கடித்த வாயினில் கத்தியாய் பற்கள்
காதலால் நகர்ந்ததால் குத்திய முற்கள்
குருதியை குடித்ததே குட்டி எறும்பு
குத்தாட்டம் போட்டதே கூடவே அவள் நினைவு

இனிக்க இனிக்க பேசிய என்னவளின் காதல்
இதை ருசிக்க வந்ததோ கட்டெறும்பு கூட்டம்
உடல் விட்டு போனதோ உயிர் மட்டும் எங்கோ
உடனிழுத்து சென்றதோ எ (று)லும்பு என் கூடை

கசக்கும் வரை கட்டெறும்பு கண்டபடி குடித்தனம் செய்ய
காதலின் தோல்வியால் கடைசிவரை என் எலும்பு
வருத்ததோடும் வாழும் வருங்காலத்தில் சேமிப்பாய்
வாழ்க வாழ்க காதல் என்றும் வாழ்க வாழ்க !

ஏன் இதய வாசலை.! பூட்டிவிட்டாய்

ஏன் இதய வாசலை.! பூட்டிவிட்டாய் - காதல் தோல்வி கவிதைகள்

ஏன் இதய வாசலை.! பூட்டிவிட்டாய் 

என்னை காதலித்த நீ.!
ஏன் இதய வாசலை.!
பூட்டிவிட்டாய்!!
உன் இதயத்தில் குடியிருப்பது.!
உனக்கு பிடிக்கவில்லையா???
காதல இன்பத்தை விட.!
துன்பத்தையே காதலிக்கின்றது...!!!
இதை நீயும் உணர்வாயோ இல்லையோ...!!
அது உன் இதயத்தை பொறுத்தது.!