Thursday, March 8, 2012

மனைவிக்கு தன் கணவன்

மனைவி, தன் கணவன் மீதுள்ள சந்தேகத்தால் மனைவிக்கு நேர்ந்த‌ விபரீதம்

ஒரு மனைவிக்கு தன் கணவன் தன்னை நீண்டகாலமாக ஏமாற்று வதாக சந்தேகம் கொண்டி ருந்தாள். வீட்டு வேலைக் காரியுடன் தொடர்பு இருப்ப தாக உறுதி நம்பினாள். இரு வரையும் கையும் களவுமா கப் பிடிக்க ஒரு திட்டம் தீட் டினாள்.
திடீரென்று ஒருநாள் மதியம் வீட்டு வேலைக்காரியை அ ரைநாள் விடுமுறை கொடுத்து அனுப்பினாள். இதை கணவரிடம் சொல்ல வில்லை. அன்று வேலை முடிந்து வந்தகணவர், “குட்டி, எனக்கு இன்று வயிறு சரியில்லை” என்று சொல்லி குளியலறை க்குச் சென்றார். இரவில் அவர்கள் படுக்கைக் கு சென்ற போதும், கணவர் பழையபடி மீண் டும் குளியலறைக்குச் சென்று விட்டார்..
 
மனைவி உடனடியாக வேலைக்காரியின் படு க்கைக்குச் சென்று படுத்துக் கொண்டாள். உட னே விளக்குகளையும் அணைத்து விட்டாள். அவர் அமைதியாக சத்தமில்லாமல் பூனை போல் வந்து எதுவும்பேசாமல் கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்க ஆரம்பித்தார்.
 
உடனே மனைவி கோபத்துடன் “நான் இங்கே இருப்பேன் என்று நீங்கள் எதிர்பார்க்கவில்லைதானே?” என்று கத்திவிட்டு விளக் கைப் போட்டாள்.
 
“இல்லை மேடம்” என்றான் தோட்டக்காரன்!

அழகில் சிறந்தவர்கள்

பெண்ணைப்பற்றிய உளவியல் ஆய்வாளர்களின் கண்டுபிடிப்புகள்

அழகில் சிறந்தவர்கள், ஆண்களா? பெண்களா?, தாம்பத்ய ஆசை யாருக்கு அதிகம்?, பெண்கள் எந்த விஷயத்தில் சிறப்பாக செயல்படுவார் கள்?, ஆண்கள் எந்த விஷயத்தில் கோட் டைவிடுகிறார்கள்? இந்தக் கேள்விக ளுக்கெல்லாம் விடை தெரிந்துகொள்ள ஆர்வமா?
உளவியல் ஆய்வாளர்கள் கண்டு பிடித்த சில அடிப்படை உண்மைகள் இங்கே…
* பெண்கள் பலதிறன் கொண்டவர்கள். அவர்களால் ஒரே நேர த்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை பார்க்க முடியும். போ னில் பேசிக் கொண்டே அலுவலக வேலையையும் கவனம் சிதறா மல் செய்துவிடக் கூடியவர்கள் பெண்கள். அதற்கேற்ப அவர்க ளின் மூளையும் வடிவமைந்துள்ளது. ஆனால் ஆண்களால் இப் படி ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்ய முடியாது.
* ஆண்கள் பொய் பேசினால் பெண் கள் உடனே கண்டுபிடித்து விடுவா ர்கள். ஆண்களின் முகபாவனை, அங்க அசைவுகள், வார்த்தை உச்ச ரிப்பு இவற்றை வைத்தே அதை கண்டுபிடிக்கி றார்கள். ஆண்களால் இப்படி கண்டுபிடிக்க முடிவதில்லை. அதனால்தான் அவள் என் னை ஏமாற்றிவிட்டாள் என்று தாடி வைத்துக் கொண்டு புலம்பித் திரிகிறார்கள்.
* குழப்பமான நேரங்களில் ஆண்கள் தனியாக உட்கார்ந்து வா னத்தை பார்த்து யோசித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் பெண் கள் பிரச்சினைகளை மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாமல் அன்புக்குரியவர்களிடம் சொ ல்லிவிட்டு மறந்துவிடுவார்க ள்.
* ஆண்களுடைய சிந்தனை, செயற்பாடு எல்லாம் மதிப்பு, வெற்றி, தீர்வு பற்றியே இருக் கும். சுயநலவாதிகள். ஆனால் பெண்க ளுடைய சிந்தனைகள் எல்லாம் குடும்பம், நண்பர்கள், உறவு பற்றியே இருக்கும்.
* உறவுகளுக்குள் ஒரு பிரச்சினை என்றால் பெண்களால் அவர் களுடைய வேலையில் கவனத்தை செலுத்த முடியாது. ஆண்கள் அப்படியில்லை.

* ஒரு ஆண் சந்தோஷமாக இருக்க நல்ல வேலை வே ண்டும். கூடு தலாக சந்தோ ஷமாக நினைக்க மது, மாது ஏதாவது ஒன்று வே ண்டும். ஆனால் பெண்களுக்கு நல்ல கணவர், நல்ல உறவு, நல்ல உறவினர்கள், நல்ல பொழு துபோக்கு, நல்ல சந்தோ ஷம்… இப்படி எல்லாமே நல்லதாக இருந்தால் மட்டுமே அவர்கள் திருப்தி அடை வார்கள்.
* பெண்கள் எதையும் சுற்றி வளைத்துதான் பேசுவார்கள். ஆசை களையும் ஒளிவுமறைவாக வெளிப்ப டுத்துவார்கள். ஆண்கள் `ஓபன் டைப்’. நல்லதோ கெட்டதோ விஷயத்தை நேராக போட்டு உடைத்துவிடுவார் கள். ஆசையையும் கொட்டித் தீர்த் துவிடு வார்கள்.
* பெண்கள் எதையும் யோசிக்காமல் பேசிக் கொண்டே இருப்பார்கள். ஆனா ல் ஆண்கள் எதையும் யோசிக் காமல் செய்வார்கள். – சில ஆண்களும், பெண்களும் இதில் உள்ள எல்லா விஷயங்களுக்கும் விதி விலக்கான வர்களாகவும் இருப்பார்கள்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

03.என் காதல் கவிதைகள்

03.என் காதல் கவிதைகள்

உன் தோழியின் கல்யாணவீட்டில் தாலிகட்ட உதவிசெய்த
உன்னைப் பார்த்தபின் தான் எனக்கும் ஆசை வந்தது
தாலிகட்டி கல்யாணம் செய்ய
*
உன்னோடு கூடவர ஆசையின்றி
விழுந்த உன் கொலுசுதான் உன்னோடு
கூடவர என் ஆசையை வளர்த்தது
*
நான் முதல்த் தடவை பயணித்த
விமானத்தில்த்தான் உன் நினைவுகளை
தரையிறக்கிவிட்டு முதன்முதல்
உன்னை கனவு காண ஆரம்பித்தேன்
*
வருசையில் நின்று வாங்கப் போன
மருந்துக்கடையில்தான் வாங்கி வந்தேன்
மருந்தே இல்லாத காதல் நோயை
*
உன்னை பலமுறை சந்தித்த போதும்
என்னால் உன் மெளனத்தை கலைக்க
முடியாமல்ப் போன போதுதான்
எனக்கு உதவிசெய்து உறுதிப்படுத்தியது
உன் கைபேசி நீ ஊமையானவள் அல்ல என்று
*
தன் பெயரை பிழையாக எழுதிக் கொண்டிருந்த
சிறுமியிடம் அழகாய் எழுத கற்றுக் கொடுத்தேன்
என் காதலியின் பெயரும் அது என்பதால்

வன்தட்டினை பிரிக்க Aomei Partition Assistant Professional -இலவச பதிவிறக்கம்

வன்தட்டினை பிரிக்க Aomei Partition Assistant Professional -இலவச பதிவிறக்கம்

வன்தட்டினை (Hard Disk) தனித்தனி பகுதியாக (C: D: E:) போன்று  பிரிக்க வேண்டுமெனில், கணினியில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தினை நிறுவும் போதே பிரிக்க வேண்டும், அவ்வாறு இல்லாமல் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டம் நிறுவிய பிறகு வன்தட்டினை நமது விருப்பபடி மாற்றியமைத்துக்கொள்ள முடியும். இதனை நம்முடைய கணினியில் நிறுவப்பட்டுள்ள ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தினுடைய உதவியுடனே செய்ய முடியும். அவ்வாறு நாம் செய்யும் போது ஒரு சில நேரங்களில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆப்ரேட்டிங் சிஸ்ட்டமே பழுதடைய வாய்ப்புண்டு. இல்லை நம்முடைய வன்தட்டினை இழக்க நேரிடும். இதனை தவிர்க்க வேண்டுமெனில் நாம் வேறு மென்பொருளை நாட வேண்டும். இது போன்ற மென்பொருட்கள் அனைத்துமே பணம் செலுத்தி பெற வேண்டும். அவ்வாறு இல்லாமல் இணையத்தில் இலவசமாக கிடைக்கும் மென்பொருட்கள் பலவும் நம்பகத்தன்மையற்றதாக உள்ளது. Aomei Partition Assistant Professional என்ற மென்பொருளானது இலவசமாக கிடைக்கும்.

இலவச தரவிறக்க சுட்டி

இந்த தளத்திற்கு சென்று உங்களுடைய ஈ-மெயில் முகவரியை உள்ளிட்டு Submit பட்டனை அழுத்தவும். பின் உங்களுடைய ஈ-மெயில் முகவரிக்கு மென்பொருளை பதிவிறக்கம் செய்வதற்கான சுட்டி அனுப்பபடும். அந்த சுட்டியை பயன்படுத்தி மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இந்த மென்பொருளானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த மென்பொருளின் உதவியுடன் நாம் வன்தட்டினை Copy, Paste, Format போன்ற செயல்பாடுகளை செய்ய முடியும். இந்த மென்பொருளானது NTFS, FAT பைல் சிஸ்ட்டங்களை ஆதரிக்க கூடியது ஆகும்.

இந்த மென்பொருளின் மதிப்பானது $29.95 ஆகும். இந்த மென்பொருளை இலவசமாக பதிவிறக்கம் செய்ய கடைசி தேதி ஜனவரி 28 வரை மட்டுமே, என்பது குறிப்பிடதக்கது.

ISO இமேஜ்களை பெண்ட்ரைவ் மற்றும் CD/DVDக்களில் பூட்டபிள் பைல்களாக மாற்ற

பூட்டபிள் பைல்களாக மாற்றம் செய்ய நாம் நீரோ அல்லது Powers, Magic-ISO, ISO Burner இதில் எதாவது ஒரு ரைட்டிங் சாப்ட்வேரினை பயன்படுத்தியே மாற்றம் செய்வோம். ISO பைல்கள் பெரும்பாலும் அதிக அளவுடையதாகவே இருக்கும். இந்த ISO பைல்களை நாம் பெண்ட்ரைவ்களில் பூட்டபிள் பைல்களாக மாற்றம் செய்ய ஒரு அருமையான மென்பொருள் உள்ளது. ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தினை நாம் USB வழியாக பூட் செய்ய இந்த மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த மென்பொருளானது Freeware அப்ளிகேஷன் ஆகும். 

மென்பொருளை தரவிறக்க சுட்டி

இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும். பின் இந்த மென்பொருளை Unzip செய்துகொள்ளவும்.  IsoBurner என்பதன் மீது வலதுகிளிக் செய்து தோன்றும் பாப்அப் விண்டோவில் Run as Administrator என்பதை தேர்வு செய்யவும். பின் ஒப்பன் ஆகும் விண்டோவில் உங்களுக்கு விருப்பமான தேர்வை ஒகே செய்து விட்டு Next பொத்தானை அழுத்தி பூட்டபிள் பைலை உருவாக்கி கொள்ள முடியும். 

இந்த மென்பொருளின் உதவியுடன் நாம் பெண்ட்ரைவுகளிளும் பூட்டபிள் பைல்களை உருவாக்க முடியும். நேரிடையாக CD/DVDக்களில் ISO இமேஜ்களை  ரைட் செய்யவும் முடியும்.

மொபைலில் தமிழ் தளங்களை காண ஸ்கைபயர் உலவி

மொபைலில் தமிழ் தளங்களை காண ஸ்கைபயர் உலவி

நீங்கள் மொபைல் போனில் இணையம் உபயோகிப்பவராக இருந்தால் உலாவி ஸ்கைபயர்  நிச்சம் உங்களை கவரும்.



ஸ்கைபயர் (Skyfire). கணினியில் இணையதளங்கள் தெரிவது போன்று ஸ்கைபயர் மொபைல் உலாவியில்

இணையதளங்கள் தெளிவாக தெரிகின்றன. யூடியுப் போன்ற வீடியோ தளங்களில் வீடியோக்கள் உலாவியின் உள்ளேயே
ப்ளே ஆகின்றன.

ஸ்கைபயரின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு 1.5 சிம்பியன் இணையங்குதளத்தை உபயோகிக்கும் மொபைல் போன்களுக்கு
என்று வெளியாகி உள்ளது. இது தொடுதிரை (Touch Screen) மொபைல்களையும் ஆதரிக்கும் .

நமக்கு ஸ்கைபெயரில் சிறப்பம்சம் என்னவெனில் தமிழ் இணையதளங்கள் தெளிவாக தெரிகின்றன.

ஸ்கைபயரின் இணையதளம். உங்கள் கணினியில் தரவிறக்க இந்த சுட்டிக்கு செல்லுங்கள். தரவிறக்கிய பின் உங்கள்

மொபைலுக்கு மாற்றி நிறுவி கொள்ளுங்கள். நேரடியான உங்கள் மொபைலில் இருந்து ஸ்கைபயரை தரவிறக்க உங்கள்
மொபைலில் இருந்து இந்த m.skyfire.com முகவரியை அணுகுங்கள். உங்கள் மொபைலுக்கு ஏற்ற பதிப்பு தரவிறக்கப்பட்டு
நிறுவப்படும்.