Wednesday, March 14, 2012

வாழ்க்கையை மாற்றப் போகும் புளூடூத் 4....


வயர் இணைப்பு எதுவுமின்றி இணைப்பைத் தரும் புளுடூத் தொழில் நுட்பம், எப்படி நம் வாழ்வையே மாற்றும்? என்ற கேள்வி நம்மில் பலருக்கு எழலாம். அதுதான் உண்மை என அடித்துக் கூறுகிறார் புளுடூத் எஸ்.ஐ.ஜி. (Special Interest Group) குழுமத்தின் செயல் இயக்குநர் போலே. இந்த குழுமத்தில், புளுடூத் தொழில் நுட்பத்தில் இயங்கும் சாதனங்களைத் தயாரிக்கும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன.
புளுடூத் முதலில் நமக்கு அறிமுகமான போது, பைல் மற்றும் டிஜிட்டல் தகவல்கள் பரிமாற்றத்திற்கு மிக அருமையான வசதி என அனைவரும் பாராட்டினோம்; பயன் படுத்தினோம். பின்னர், இதில் பல பிரச்னைகளைச் சந்திக்க வேண்டி இருந்தது.
தகவல் பரிமாற்றத்திற்கான சாதனங்கள் இணையாக இருந்து இணைப்பதில் சிக்கல், பாஸ்வேர்ட் அமைத்து இயக்குவதில் பிரச்னை, திடீரென தகவல் இணைப்பு அறுந்து போதல்,மற்றும் பிற உடனடியாகத் தீர்க்க இயலாத சிக்கல்களும் இருந்தன. இவை அனைத்தும் புளுடூத் 4 தொழில் நுட்பம் தீர்த்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சரி, எப்படி தீர்க்கும்? என்ன என்ன வகையில் இது முந்தைய தொழில் நுட்பத்தைக் காட்டிலும் கூடுதல் திறன் கொண்டது? புளுடூத் தொழில் நுட்பம் இயங்கும் தொலைவு அதே 300 அடியாக உள்ளது. புளுடூத் 2ஐக் காட்டிலும் பதிப்பு 3, சற்றுக் கூடுதல் வேகத்தில் டேட்டாவினைக் கடத்தியது. பதிப்பு 2.1 ன் வேகம் 2Mbps ஆக இருந்தது. பதிப்பு 3ன் வேகம் 26Mbps ஆக உள்ளது. இது வீடியோ ஸ்ட்ரீமிங் போன்ற பணிகளுக்கு மிகவும் உதவியது.
புளுடூத் 4 இவற்றைக் காட்டிலும் கூடுதல் திறன் கொண்டதாக இருக்கும். ஐந்திலிருந்து பத்து மடங்கு வேகக் கூடுதல் இருக்கும். அதிக நாட்கள் மின்திறன் தரும் பேட்டரியுடன் இயங்கும் திறன் கொண்டதாக இருக்கும். இதனால், ட்ரெட்மில் போன்ற, தனி நபர் உடல்நலன் கணக்கிடும் சாதனங்களில் இதன் செயல்பாடு நமக்கு மிக மிக உதவியாக இருக்கும்.
அடுத்ததாக, என்.எப்.சி. எனப்படும் அண்மைக் கள தகவல் பரிமாற்றம் (Near Field Communication) திறன் கொண்ட சிப்களின் செயல்பாட்டிற்கு இந்த புளுடூத் பதிப்பு 4 மிகவும் பயன்படும்.
புளுடூத் 4 இந்த தொழில் நுட்பம் கொண்ட போன்களுடன் எளிதில் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியும். லேப்டாப், மொபைல் போன் மற்றும் ரௌட்டர் போன்ற சாதனங்களின் இணைப்பு, புளுடூத் பதிப்பு 4 மூலம் அதிகத் திறன் கொண்டதாக அமையும். இந்த தொழில் நுட்பத்திற்கேற்ப வடிவமைக்கப்படும் சாதனங்கள் அனைத்தும், புளுடூத் பதிப்பு 2 மற்றும் 3 ஆகியவற்றையும் கையாளும். புளுடூத் 4 ஏற்கனவே Motorola_Droid_ Razr_Maxx ஆகிய மொபைல் போன்களில் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய தொழில் நுட்பத்திற்கு Bluetooth Smart Ready எனப் பெயர் இடப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு கீழ் உள்ள தளத்தை அணுகவும்.

முகப்புப் படத்தைப் பார்த்து உங்களைக் கணிக்கும் நண்பர்கள்! பேஸ்புக் சுவாரஷ்யம்


பேஸ்புக் தொடர்ச்சியாக பயன்படுத்துபவரா நீங்கள்? அப்படிஎன்றால் இந்தச் செய்தி உங்களுக்கானதே.
பேஸ்புக்கில் உள்ள உங்களின் சுயவிவரப் படத்தைப் பார்த்தே உங்களின் நண்பர்கள் உங்களைக் கணிப்பதாக புதிய ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது. முகப்பில் நீங்கள் போடுகின்ற சுயவிவரப் படத்தை அடிப்படையாக வைத்து தான் நீங்கள் எவ்வாறானவர்கள்? என்று கணிப்பதாக அந்த சுவாரஷ்யமான ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவின் ஓஹியோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்களே மேற்படி முடிவை அறிவித்துள்ளனர். நீங்கள் போடுகின்ற நிலைத்தகவல்கள், மற்றும் உங்களின் புகைப்பட அல்பங்களை அவர்கள் பார்த்து உங்களை ஒரு போதும் மதிப்பிடுவதில்லை என்று அடித்துச் சொல்கின்றார்கள் ஆய்வாளர்கள்.

சைக்கிள் ஓட்டுங்க பெண்களே!!


வாரம் ரெண்டு தடவை சைக்கிளிங் போங்க... உடம்பு ஹெல்த்தியா இருக்கும்’’ என்கிறார் பிரபல பின்னணிப் பாடகி தன்விஷா. ‘சென்னை சைக்கிளிங்’ என்ற அமைப்பில் இருக்கும் தன்வி ஷா, வாரம் ஒரு முறையாவது, பல கிலோமீட்டர் தூரத்தை சைக்கிளில் கடப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்

‘‘நான் இந்த அமைப்புல சேர்ந்து மூணு வருஷமாச்சு. இன்றைய சூழ்நிலைல குழந்தைகள்லருந்து பெரியவங்க வரை எல்லாருமே இயந்திர வாழ்க்கைக்கு அடிமையாயிட்டாங்க. குழந்தைங்க வெளிய வந்து விளையாடுறதில்லை. பெண்கள் வீட்டுவேலைகள் செய்யறதில்லை. விளைவு? உடம்பு சோம்பல்தனத்துக்குப் பழகிடுது... பருமனாயிடுது.

இந்த நிலைமையை விரட்டணும்னுதான் ‘வாரம் ஒரு தடவையாவது மகாபலிபுரம் வரை சைக்கிள் பயணம் செய்யுங்க’ன்னு பல பெண்களைத் தூண்டிக்கிட்டு இருக்கோம். சென்னைலருந்து மகாபலிபுரம் 52 கிலோமீட்டர். டூவீலர்ல இந்த தூரத்தை ஈஸியா கடந்துடலாம். சைக்கிள்ல கொஞ்சம் கஷ்டம். ஆனா, ஒரு தடவை சைக்கிள்ல பழகிட்டா, அடுத்து எப்பப் போகலாம்னு ஆசை வந்துடும்’’ என்கிற தன்வி சைக்கிள் பயணத்தால் ஏற்படும் நன்மைகளைப்பட்டியலிட்டார்.

‘‘சைக்கிளிங் ஆரோக்கியத்தைத் தரும். குறிப்பா பெண்களுக்கு ஏற்ற எக்ஸர்சைஸ். தேவையற்ற கொழுப்பை குறைச்சு, உடம்பை ட்ரிம்மா வச்சுக்கலாம். கால்களுக்கு நல்ல பயிற்சி. இதயக் கோளாறுகள் ஏற்படாது. உடம்புல ரத்த ஓட்டம் அதிகரிக்கும். டென்ஷன் குறையும். ‘சைக்கிளிங் செஞ்சா பார்கின்சன் நோயையே கட்டுப்படுத்த முடியும்’னு டாக்டர்கள் சொல்றாங்க.

அது சம்பந்தமா ஆய்வும் நடந்துகிட்டு வருது...’’ தன்வியை தொடர்ந்து, இக்குழுவைச் சேர்ந்த அனுராதாவும் அபர்ணாவும் தங்களுடைய சைக்கிளிங் எக்ஸ்பீரியன்ஸை பகிர்ந்துகொண்டார்கள்.‘‘நான் பத்து மாசமாதான் சைக்கிளிங் செய்றேன். ஒவ்வொரு ஞாயித்துக்கிழமையும் மகாபலிபுரம் போயிடுவேன். கும்பலா போகும்போது ரொம்ப நல்லா இருக்கும்.

நாம கொஞ்சம் சோர்ந்து போயிட்டாலும் மத்தவங்க ஊக்கம் குடுப்பாங்க. 52 கிலோமீட்டர்னு சொன்னதும் முதல் தடவை உதறலா இருந்துச்சு. ஆனா, அங்கே போய்ச் சேந்ததும் கிடைச்ச சந்தோஷத்துக்கு அளவே இல்லை. என்னோட பெரிய ரைடுன்னா, பாண்டிச்சேரிக்கு 100 கிலோமீட்டர் தூரம் சைக்கிள்லயே போனதுதான். இப்போ சைக்கிளிங் மேல ஆர்வம் அதிகமாயிடுச்சு. சொந்தமா சைக்கிள் வாங்கிட்டேன்.

அடுத்த டார்கெட் 200 கிலோமீட்டர். அதோடு, வாரம் ரெண்டு முறையாவது ஆபீஸுக்கு சைக்கிள்ல போணும்னு முடிவு செஞ்சிருக்கேன்’’ என்கிறார் அனுராதா.அபர்ணாவோ வேறு மாதிரி சொல்கிறார்... ‘‘எனக்கு அனு மாதிரி கும்பல்ல போகப் பிடிக்காது. நினைச்சா சைக்கிளை எடுத்துகிட்டு மூணு மணி நேரம் காணாம போயிடுவேன்.

விடியற்காலையில இயற்கை காட்சிகளை ரசிச்சுகிட்டு, பிடிச்ச பாட்டுகளைக் கேட்டுக்கிட்டு சைக்கிள்ல போறப்போ ஜில்லுன்னு ஒரு காத்து முகத்தை வருடுமே... அது ஒரு சுகமான அனுபவம். பயணம் சுகமா இருக்கணும்னா, சரியான சைக்கிளைத் தேர்வு செய்யணும். எடையை குறைக்க விரும்புறவங்க, சைக்கிளிங் செஞ்சா, கண்டிப்பா சீக்கிரமே பலன் கிடைக்கும்.

ரொம்ப தூரம் சைக்கிள்ல போறப்போ உடம்புல இருக்குற தண்ணி எல்லாம் வத்திப் போயிடும். அதை ஈடுகட்டுறதுக்கு நிறைய தண்ணி, பழங்கள் சாப்பிடணும். எதுவுமே சாப்பிடாம சைக்கிள் ஓட்டினா, கை கால் எல்லாம் பிடிச்சுக்கும். எல்லாத்தையும்விட சைக்கிளிங், தன்னம்பிக்கையையும் நம்ம சக்தியையும் உணரவைக்கிற அற்புதமான விளையாட்டு!’’

அபர்ணா கடந்த வாரம்தான் தன் தோழியுடன் இணைந்து 100 கிலோ மீட்டர் தூர இலக்கை சைக்கிளில் அடைந்திருக்கிறார். பல நாடுகள் சுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்தவும், பெட்ரோல் சிக்கனத்தைக் கடைப்பிடிக்கவும் சைக்கிள் சவாரியை ஊக்குவிக்கின்றன. வாரம் ஒருமுறை நீண்ட தூர சைக்கிள் பயணம் செய்வது, பெண்களின் உடலுக்கு ஆரோக்கியம்.அன்றாட வேலைகளுக்கும் சைக்கிள் பயன்படுத்துவது சிக்கனமும்கூட

பெண்களின் மனதை கவர


இந்த பொண்ணுங்களுக்கு எப்படி இருந்தா பிடிக்கும் என்று மண்டையை பிய்த்துக் கொள்கின்றனர் இன்றைய இளசுகள்.
இதையே நினைத்து கவலைப்பட்டுக்கொண்டிருக்கும் இளசுகளுக்கு பெண்களின் மனதை கவரவும், அவர்களுக்கு பிடித்தமாதிரி நடந்து psychologyகொள்ளவும் ஆலேசானை கூறியுள்ளனர் நிபுணர்கள். பெண்களோட பேசப்போறதுக்கு முன்னாடி இளைஞர்களே இதப் படிச்சிட்டு போங்க.
நேர்மையா இருங்க
நேர்மையான ஆண்களை மட்டுமே பெண்களுக்குப் பிடிக்கிறதாம். எதற்கெடுத்தாலும் பொய்சொன்னால் உங்களுடன் பழகுவது ரிஸ்க் என்று உங்கள் பக்கம் திரும்பி கூட பார்க்கமாட்டார்களாம்.
நகைச்சுவை உணர்வு
ஆண்களுக்குநகைச்சுவை உணர்வு அவசியம். சிரிக்க சிரிக்க பேசும் ஆண்களையே பெரும்பாலான பெண்கள் விரும்புகின்றனராம் உங்களின் பேச்சு ஆண்களை அப்படியே அட்ராக்ட் செய்யவேண்டும். அதேசமயம் நகைச்சுவை என்ற பெயரில் போரடித்துவிடக்கூடாது என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.
பாதுகாக்கும் தன்மை
எந்த ஆணின் அருகில் இருக்கையில் பாதுகாப்பாக உணர்கின்றனரோ அந்த ஆண்தான் பெண்ணின் மனதை கவர்ந்தவன். அதனால்தான் எம்.ஜி.ஆர் காலத்திய திரைப்படங்களில் இருந்து இன்றைய தனுஷ் திரைப்படங்கள் வரை கதாநாயகன் நான்கு பேரிடம் சண்டை போட்டாவது கதாநாயகியை காப்பாற்றுவது போல காட்சி அமைக்கின்றனர் இயக்குநர்கள். எனவே பெண்களுக்கு பாதுகாப்பு அரணாக செயல்படுங்கள்.
அழகும், அறிவும்
ஆண்களுக்கு அழகு மட்டுமல்ல அறிவும் அவசியம் அது மாதிரியான ஆண்களையே பெண்கள் விரும்புகின்றராம். எனவே பெண்களுக்கு பிடித்தமாதிரி பேசவும் கற்றுக்கொள்வது அவசியம்.
அன்பும், பாசமும்
அதிக அன்போடும், பாச உணர்வோடும் இருக்கும் ஆண்களைத்தான் அதிகம் பிடிக்கிறதாம். வாழ்நாள் முழுதும் உன் கூட வருவேன் என்ற உறுதி மொழி தருவதோடு அதை கடைபிடிக்கும் ஆண்களை ரொம்ப ரொம்ப பிடிக்குமாம். எந்த காரணத்திற்காகவும் மனதை காயப்படுத்தாத ஆண்களைத்தான் அவர்கள் விரும்புகின்றனராம்.
ஆரோக்கியம் அவசியம்
உணவு, உடை, ஸ்டைல் என அனைத்திலுமே ஒரு தனித்தன்மை இருக்கட்டும். ஒரு ஹைஜீனிக் பெர்சனைத்தான் பெண்கள் விரும்புகின்றனராம். ஏதாவது சிறிய தவறு நேர்ந்தாலும் உடனடியாக மன்னிப்பு கேட்கும் ஆண்களை அவர்கள் நேசிக்கின்றனராம்.
இடைவெளி அவசியம்
எப்பவுமே கொஞ்சம் இடைவெளி விட்டுப்பேசும் ஆண்களைத்தான் பெண்கள் அதிகம் விரும்புகின்றனராம். அதேபோல் மரியாதையோடு பேசும் ஆண்களைத்தான் அவர்கள் எதிர்பார்க்கின்றனராம்.
நட்பான ஆண்கள்
முதல்ல நட்பா பேசுங்க அதைத்தான் பெண்களும் எதிர்பார்க்கின்றனர். உங்களின் நட்பான அணுகுமுறை பெண்களின் மனதை கவரும்.
ஓவரா சீன் போடாதீங்க
பெண்களை கவர் பண்ண ஓவரா சீன் போடும் ஆண்களைக் கண்டாலே பெண்களுக்கு அலர்ஜியாம். எனவே எதையுமே அளவோடு செய்யுங்கள். நம்பிக்கையோடு செயல்படுங்கள் வெற்றி நிச்சயம் என்கின்றனர் நிபுணர்கள்.