ஆங்கிலம் துணுக்குகள்

ஆங்கிலம் துணுக்குகள் Aangilam Mini Lessons

இன்றிலிருந்து “ஆங்கிலம் துணுக்குகள்” எனும் ஒரு பகுதியையும் தொடர்ந்து வழங்கலாம் என்றுள்ளோம். இது எமது வழமையான “ஆங்கில பாடப் பயிற்சி” திட்டத்திலிருந்து வேறுபட்டது. இருப்பினும் இத்துணுக்குகள் ஆங்கிலம் கற்கும் சிலருக்கு, குறிப்பாக ஆரம்ப நிலை ஆங்கிலம் கற்போருக்குப் பயன்படும் என கருதுகிறோம்.

ஒரு சொல்லை, ஒரு வாக்கியத்தை, ஏன் ஒரு முழு ஆக்கத்தையே வேண்டுமானாலும் கெப்பிட்டல் எழுத்துக்களிலேயே (CAPITAL LETTERS) எழுதலாம். அது உங்கள் விருப்பம்.

ஆனால் ஆங்கில சிற்றெழுத்துக்களில் (Simple Letters) எழுதுவதானால், ஆங்கில மொழிக்கே உரிய சிறப்பியல்புகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியது மிக முக்கியம்.

How To Use Capital Letters

1. ஒரு வாக்கியத்தின் ஆரம்பத்தின் முதல் எழுத்து எப்பொழுதும் கெப்பிட்டல் எழுத்தாகவே இருக்கவேண்டும். (Capital letters are always used at the beginning of a sentence.)

உதாரணம்:

The car is running
I am looking for a job.
He doesn’t understand.
Do you speak in English?
Where are you going?

2. கிழமை, மாதம், பெயர், ஊர், நாடு, மொழி, மதம், போன்றவற்றை எழுதும் பொழுது அதன் முதல் எழுத்தை கட்டாயம் கெப்பிட்டல் எழுத்திலேயே எழுத வேண்டும். இவை வாக்கியத்தின் மத்தியில் வந்தாலும் அப்படித்தான்.

2. கிழமைகள்: Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday

3. மாதங்கள்: January, February, March, April, May, June, July, August, September, October, November, December

4. பெயர்கள்: Ellalan, Iravanan, Sarmilan, Kavitha, Thamilovia, Tamilnenjan, Tamilselvan

5. ஊர்கள், நகரங்கள்: Jaffna, Chennai, Point Pedro, Betticola, Tricomalee, Madurai, Kilinochchi

6. நாடுகள்: Tamileelam, India, America, British, France, Netherland, Norway, Japan

7. மொழிகள்: Tamil, English, Chinese, Latin, French, Indhi

8. மதங்கள்: Hindu, Islam, Christian, Buddhism - God, The Prophet Mohammed, Jesus

9. ஆங்கிலத்தில் "நான்" என்று குறிப்பதற்கு எப்போழுதுமே கெப்பிட்டல் "I" யை மட்டுமே பயன்படுத்த வேண்டும். (சிறிய "i" பயன்படுத்துவதில்லை)

10. "சுருக்கப் பயன்பாடுகள்" அதாவது ஒரு முழுச் சொல் அல்லது வாக்கியத்திற்குப் பதிலாக அதன் முதல் எழுத்துக்களை மட்டும் சுருக்கமாக பயன்படுத்தல். இவற்றை ஆங்கிலத்தில் "Abbreviation" என்றழைப்பர்.

உதாரணம்: தொழில் தகமைகளின் சுருக்கம்: MBBS, LLB
சில நாடுகளின் பெயர்களுக்கான சுருக்கம்: USA, UK, UAE

சிலரது பெயர்களின் சுருக்கம்: MGR, MRR

அதேவேளை ஒரு வாக்கியத்தின் ஒவ்வொரு சொற்களின் முதலெழுத்தையும் கெப்பிட்டல் எழுத்தாக எழுதும் வழக்கம் சிலரிடம் காணப்படுகின்றன. இது இலக்கணப் பிழையானது. (தலைப்புகளை வேண்டுமானால் அப்படி எழுதலாம்.)

ஆங்கிலத்தில் ஓரெழுத்து ஒரு சொல் (One-letter English words)

தமிழில் ஓரெழுத்து ஒரு மொழி என்று நீங்கள் கற்றிருப்பீர்கள். அதாவது "தீ" நெருப்பு, "போ" செல், "தை" தை மாதம் போன்ற சொற்கள் ஒரெழுத்து ஒரு சொற்களாகும். அவ்வாறான ஓரெழுத்து ஒரு சொற்கள் தமிழில் 42 உள்ளன. (அவற்றை இங்கே பதிவிறக்கிக் கொள்ளலாம்.)

சரி! ஆங்கிலத்தில் ஓரெழுத்து ஓர் சொல் எத்தனை இருக்கின்றன தெரியுமா?

A: ஒரு அல்லது ஒன்று என்பதை குறிக்கப் பயன்கிறது.
I: நான் என பயன்படுகிறது.
O: இலத்தீன் வழி வழக்கில் கவிதையியலில் பயன்படும் ஒரு வியப்பிடைச் சொல்.

(இதில் "I" (நான்) எனும் எழுத்தையும், "O" எழுத்தையும் கெப்பிட்டல் எழுத்தில் மட்டுமே எழுதவேண்டும்.)

குறிப்பு: இலத்தீன் மொழி வழக்கில் "O" எழுத்தை ஒரு வியப்பிடைச்சொல்லாக கவிதையியல் பயன்பாட்டில் பயன்படுத்தும் வழக்கு உள்ளது; ஆங்கிலத்திலும் பொதுவாக அதே பயன்பாட்டில் பயன்படுத்தப்படுத்துதல் நடைமுறையில் உள்ளது.

இந்த மூன்று ஓரெழுத்து ஒரு சொல் மட்டுமே ஆங்கிலத்தில் உள்ளன. ஆனால்...

தொழில்நுட்ப பயன்பாட்டில்

இன்றைய தொழில்நுட்ப உலகில் அழைப்பேசி, கணனி, இணையம் போன்றவற்றின் வருகை பல ஓரெழுத்து ஒரு சொற்களை இளம் தலைமுறையினரிடம் தோற்றுவித்துள்ளன. குறிப்பாக குறுஞ்செய்திகள் அனுப்புவதற்கும், இணைய அரட்டையடிப்பதற்கும் பல ஆங்கிலச் சொற்களின் ஒலிப்பை உணர்த்தும் வண்ணம், சொற்களை சுருக்கி ஓரேழுத்து ஒரு சொல் போன்று பயன்படுத்துகின்றனர். இதனை "ஓரெழுத்து ஒரு சொல்" என்று கருதிவிட வேண்டாம். ஆனால் இப்பயன்பாடு இன்று பரவலாக பயன்பாட்டில் தோன்றியுள்ளது. குறிப்பாக இளைய சமுதாயத்தினரிடையே இப்பபயன்பாடு மிகுந்த வரவேற்பையும் பெற்றுள்ளது.

இவற்றில் சில உங்களுக்கும் தெரிந்திருக்கலாம். தெரியாதவர்களும் தெரிந்துக்கொள்ளும் வகையில் இணையப் பயன்பாட்டில் பொதுவாக அதிகம் பயன்படும் எழுத்துக்கள் மற்றும் அந்த எழுத்துக்கள் குறிக்கும் சொற்கள் இரண்டையும் கீழே பார்ப்போமா?

எடுத்துக்காட்டாக:

T: "take"
C: "care"
C: "see"

"E" எனும் எழுத்து "he" என்று குறிக்கவும் சிலநேரங்களில் "she" என்று குறிக்கவும் புதியச்சொல்லாக்கமாக பயன்படுத்தப்படுகிறது. "G" எனும் எழுத்து “gangster” என்றும் பயன்படுகிறது. இவற்றைத் தவிர மேலும் பல எழுத்துக்கள் பல சொற்களுக்கு பதிலாக சுருக்கப் பயன்பாடாக புதியச்சொல்லாக்கமாக பயன்படுகின்றன.

எடுத்துக்காட்டாக:

b: “be” or “bee”
c: “sea” or “see”
f: “fat”
g: “Gee”
I: “eye”
j: “jay”
k: “okay”
n: “and”
o: “oh”
p: “pea” (தாணியம்) or “pee” (to urinate)
q: “cue” or “queue”
r: “are”
t: “tea”
u: “you”
v: “very”
x: (ஒரு சொற்றொடரின் பகுதியாக பயன்படுகிறது) “x out”
y: “why”

சொற்களை சுருக்கி இலக்கங்களையும் ஓரிலக்கம் ஒரு சொல் போன்று பயன்படுத்தலும் பயன்பாட்டில் காணப்படுகின்றன.

எடுத்துக்காட்டாக:

1: “won”
2: “to”, “too”. நாளை என்பதை சுருக்கமாக இரண்டுடன் "2moro" (tomorrow) என எழுதும் வழக்கும் உள்ளது.
4: “for” – வாக்கியங்களை சுருக்கி "for" ஒலிப்பை தரும் வகையில் a4d, 4cast, 4m, 4mer, 4milk, 4most, 4t, 4ty நான்கு (4) இலக்கத்தை இட்டு எழுதும் வழக்கும் உள்ளது.

கவனிக்கவும்:

இவை ஓரெழுத்து ஒரு சொல் அல்ல; ஆனால் ஓரெழுத்து ஒரு சொல் போன்று சொற்களை சுருக்கமாக குறுஞ்செய்தி அனுப்புவதற்கும் இணைய அரட்டைகளில் எளிதாக தட்டச்சுவதற்காகவும் பயன்படும் ஒரு தற்கால முறையே ஆகும். இவை காலத்திற்கு ஏற்ப இளம் தலைமுறையினரால் தோற்றமெடுக்கும் புதுச்சொல்லாக்கங்கள் என்றே கூற வேண்டும். நாளை இவை மேலும் பெருகவும் கூடும். வேறு புதிய வடிவில் தோற்றமெடுக்கவும் கூடும்.

நன்றி!

அன்புடன்
அருண் HK Arun Download As PDF

Friday, December 9, 2011

ஆங்கிலம் துணுக்குகள் 26 ( Yes, Yap, Yeah...)

தமிழில் ஆமோதித்தல் எனும் சொல்லை ஒட்டி, "ஆம்" எனும் சொல் வினையெச்சமாகவும், பெயர்ச்சொல்லாகவும் பொதுவான பயன்பாட்டில் உள்ளது. இருப்பினும் பேச்சு வழக்கில் இச்சொல் திரிந்து தமிழக மற்றும் கொழும்பு தமிழர் பேச்சு வழக்கில் "ஆமா" என்றும், இன்னும் சிலரால் "ஆ" எனும் ஒலியை மட்டுமே எழுப்பும் வழக்காகவும், இலங்கை தமிழ் பேசும் இஸ்லாமியர் பேச்சு வழக்கில் "ஓ" என்றும், இலங்கை யாழ்ப்பாணத் தமிழர் பேச்சு வழக்கில் "ஓம்" என்றும் புழக்கத்தில் உள்ளது. இவ்வாறு இச்சொல் பேச்சு வழக்கில் பல்வேறு வடிவில் திரிபடைந்து பயன்பட்டப்போதும், சரியானச் சொல் "ஆம்" என்பதே ஆகும்.

இந்த "ஆம்" எனும் சொல்லுக்கு நிகரான ஆங்கிலச் சொல் "Yes" என்பதாகும்.

ஆங்கிலப் பேச்சு வழக்கில்

தமிழில் "ஆம்" எனும் சொல், பேச்சு வழக்கில் ஆமா, ஆ, ஓ, ஓம் என பல்வேறு வடிவில் பயன்படுவதுப் போன்றே, ஆங்கிலத்தில் "yes" எனும் சொல்லும் பேச்சு வழக்கில் பல்வேறு வடிவில் பயன்படுகின்றன. அவைகளாவன:

yeah = ய்யா
yah = யஹ்
ya = யா
yea = யீ
yes = யெஸ்
yep = யெப்
yup = ய்யப்

இவற்றில் "யெப்", "ய்யா" போன்றவை அதிகமாக புழக்கத்தில் உள்ளவை.

இரட்டிப்பு வழக்கு

"ஆம்" என்பதை தமிழில் இரட்டிப்பாக கூறும் வழக்கும் புழக்கத்தில் உள்ளன.

ஆம் + ஆம் = ஆமாம்
ஓம் + ஓம் = ஓமோம்

இவ்வாறே ஆங்கிலத்திலும் இரட்டிப்பாக கூறும் வழக்கும் சில இடங்களில் உள்ளன.

Yah + yah = ய்யாயா
Yeah + yeah = ய்யாயா

போன்ற பயன்பாடுகளே அவை.

இவ்வாறு இரட்டிப்பாக "ய்யாயா" என கூறும் வழக்கு தமிழர்களிடமும் இன்று தோன்றியுள்ளதை அவதானிக்கலாம். இந்த பயன்பாடு அநேகமாக ரஜனிகாந்த் நடித்த திரைப்படங்களில் அவர் மிடுக்குடன் (Style) "ய்யாயா" எனக் கூறுவதைக் கேட்டு, அவர் ரசிகர்களூடாக தோன்றியிருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். எப்படியோ இந்த "ய்யாயா" எனும் சொல்லாடலின் வழக்கு Yeah yeah என்பதன் இரட்டிப்பு வழக்கே ஆகும்.

இது ஒரு துணுக்குப் பாடமாகும். மீண்டும் இன்னொரு பாடத்தில் சந்திப்போம்.

நன்றி!

அன்புடன்
அருண் | HK Arun Download As PDF

Thursday, December 8, 2011

ஆங்கிலம் துணுக்குகள் 25 (Cows and Bulls)

வணக்கம் உறவுகளே! இன்றைய ஆங்கிலம் துணுக்குகள் பகுதியில் ஒரு சுவையான ஒரு துணுக்குத் தகவலைப் பார்ப்போம்.

கால்நடைகளான மாடுகளின் பெண் இனத்தைக் குறிக்க "பசு" எனும் பெயர்ச்சொல்லும், ஆண் இனத்தை குறிக்க "காளை" எனும் பெயர்ச்சொல்லும் தமிழில் புழக்கத்தில் உள்ளன. அவற்றை பன்மையில் குறிப்பிடுவதாயின் "பசுக்கள்" என்றும் "காளைகள்" என்றும் குறிப்பிடுவோம்.

ஆங்கிலத்தில் இவற்றிற்கு இணையான பயன்பாடாக "cows" மற்றும் "bulls" எனும் பெயர்ச் சொற்கள் உள்ளன.

அதேவேளை ஆணினம் பெண்ணினம் என பாலினத்தை வேறுபடுத்திக் கூறாமல், பொதுப்படையாக கூறுவதாயின் "மாடு" எனும் பெயர்ச்சொல் தமிழில் உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதேபோன்று அதற்கு இணையான ஒரு பெயர்ச்சொல் ஆங்கிலத்தில் இருக்கிறதா, என்றால், பதில் "இல்லை" என்பது தான். அதாவது பாலினத்தை வேறுபடுத்திக் குறிப்பிடாமல் (Cow or Bull) பொதுபடையாக இருபாலினத்தையும் குறிப்பதற்கான ஒரு பொது பெயர்ச்சொல் ஆங்கிலப் பயன்பாட்டில் இல்லை.

குறிப்பு:
மிருகவியலாளர்களால் "bovine" என பயன்படுத்தும் சொல் துணைக்குடும்ப எருமையினத்தைக் குறிக்கும் பொது சொல்லாகப் பயன்படுகிறதே தவிர, தமிழில் பாலினம் காட்டாமல் பொதுவாக பயன்படும் "மாடு" எனும் பெயர்ச்சொல்லுக்கு இணையான சொல்லாக அதனைக் கொள்ள முடியாது.

இணையத்தில் இதற்கான ஆதாரம்

நன்றி!

அன்புடன்
அருண் | HK Arun Download As PDF

Friday, November 11, 2011

ஆங்கிலம் துணுக்குகள் 24 (1 to 10 letter words)

வணக்கம் உறவுகளே! மிகவும் அதிகமான இடைவெளிக்குப் பின் இந்த துணுக்குப் பாடம் வருகிறது. இது எமது வழமையான ஆங்கில பாடப் பயிற்சிகளில் ஒன்றல்ல. இது ஆங்கிலேயர் மத்தியில் அடிக்கடிப் பயன்படும் அறிவுறுத்தல் சொல்லாடல்களில் ஒன்றாகும். இச்சொல்லாடல்கள் ஒன்றிலிருந்து பத்து வரையிலான எழுத்துக்களை கொண்டு அறிவுறுத்தல்களாகவும் சுவராசியமாகவும் வழங்கப்படுகின்றன. இச்சொற்றொடர்கள் எளிதாக மனதில் இருத்திக்கொள்ளக் கூடியவைகள் என்பதால் இங்கே உங்களுக்காக!

The most selfish 1 letter word "I" Avoid it.
ஆங்கிலத்தில் சுயநலமிக்க ஓரெழுத்துச் சொல் “நான்” அதனை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

The most satisfying 2-letter word "WE" Use it.
ஆங்கிலத்தில் மிகவும் மனநிறைவைத் தரும் ஈரெழுத்துச் சொல் “நாம்” அதனை பயன்படுத்துங்கள்.

The most poisonous 3-letter word "EGO" Kill it.
ஆங்கிலத்தில் மிகவும் விசமான மூவெழுத்துச் சொல் “தன்முனைப்பு” (அகந்தை) அதனைக் கொன்றுவிடுங்கள்.

The most used 4-letter word "LOVE" Value it.
ஆங்கிலத்தில் அதிகம் பயன்படும் நான்கெழுத்துச் சொல் “அன்பு” (காதல்) அதற்கு மதிப்பு கொடுங்கள்.

The most pleasing 5-letter word "SMILE" Keep it.
ஆங்கிலத்தில் மிகவும் மகிழ்வூட்டும் ஐந்தெழுத்துச் சொல் “புன்னகை” அதனை எப்பொழுதும் தவழவிடுங்கள்.

The fastest spreading 6-letter word "RUMOUR" Ignore it.
ஆங்கிலத்தில் வேகமாக பரவும் ஆறெழுத்துச் சொல் “வதந்தி” அதனை புறக்கணியுங்கள்.

The hardest working 7-letter word "SUCCESS" Achieve it.
ஆங்கிலத்தில் மிகவும் கடினமான ஏழெழுத்துச் சொல் “வெற்றி” அதனை வென்றடையுங்கள்.

The most enviable 8-letter word "JEALOUSY" Distance it.
ஆங்கிலத்தில் மிகவும் விரும்பத்தகாத எட்டெழுத்துச் சொல் “பொறாமை” அதனை தூரத்தே நிறுத்துங்கள். (அணுக விடாதீர்கள்)

The most powerful 9-letter word "KNOWLEDGE" Acquire it.
ஆங்கிலத்தில் மிகவும் சக்திவாய்ந்த ஒன்பதெழுத்துச் சொல் “அறிவு” அதனை வளர்த்துக்கொள்ளுங்கள்.

The most essential 10-letter word "CONFIDENCE" Trust it
ஆங்கிலத்தில் மிகவும் இன்றியமையா பத்தெழுத்துச் சொல் “தன்னம்பிக்கை” அதன்மீது நம்பிக்கை வையுங்கள்.

இவ்வாறான சுவாராசியமான ஆங்கில வாக்கியங்களை எளிதாக மனதில் இருத்திக்கொள்ளலாம். சுவையாக பேச்சின் போதும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இவ்விடுகை ஆங்கிலம் துணுக்குகள் பகுதியிலேயே இடப்படுகின்றது.

மேலும் துணுக்குகள்

நன்றி!

அன்புடன்
அருண் HK Arun

Download As PDF

Monday, December 27, 2010

ஆங்கிலம் துணுக்குகள் 23 (Day, Date and Dating)

ஆங்கிலத்தில் “Date” என்பதை நான் முன்னர் “திகதி” என்று எழுதிவந்தேன். பின்னர் “திகதி” எனும் சொல் ஒரு கிரந்தச்சொல் என்றும், அதற்கு சரியான தமிழ்ச் சொல் “நாள்” என்றும் தமிழரிஞர்கள் சொல்வதால் நானும் அவ்வாறே எழுதலானேன்.

இப்பொழுது மீண்டும் ஒரு சிக்கல் உருவானது. அதாவது “date” என்பதற்கும் “Day” என்பதற்கும் இடையிலான வேறுப்பாட்டை உணர்த்தப்போனால், “Day” என்பதற்கே “நாள்” எனும் சொல் பொருத்தமாக இருக்கிறது. Date, Day இரண்டுக்கும் "நாள்" எனும் ஒற்றைச்சொல்லை பயன்படுத்துதல் சிக்கலாக உள்ளது. எனவே “Date” என்பதை “திகதி” என்றே மீண்டும் இங்கே இடுகின்றேன்.

முதலில் “Day” என்பதனைப் பார்ப்போம்.

Day (நாள்)-------------------------------------------------------------------------------------
"Day" எனும் ஆங்கிலச் சொல் 24 மணித்தியாளங்களை உள்ளடக்கிய ஒரு "நாள்" என்பதைக் குறிக்கும் சொல்லாகும். இது ஒரு பெயர்சொல்லாகும். இந்த "நாள்" எனும் சொல்லுடன் தொடர்புடையச் சொற்களை பார்ப்போம்.

Today - இன்றைய நாள் / இன்று
Tomorrow - நாளைய நாள் / நாளை
Day after tomorrow - நாளைக்கு அடுத்த நாள் / நாளைக்கு மறுநாள்
Yesterday - நேற்றைய நாள் / நேற்று
Day before Yesterday - நேற்றைக்கு முந்தைய நாள்
Another day - இன்னொரு நாள்

Midday - நடுநாள்/மதியம் (ஒரு நாளில் பகலின் மதியம்)
Midnight - நள்ளிரவு (ஒரு நாளின் இரவின் மதியம்)
Next day - அடுத்த நாள்

Sunny day - வெய்யில் நாள்
Rainy day - மழை நாள்
Lovely day - பிடித்தமான நாள்/இதமான நாள்

Winter day - குளிர்கால நாள்
Summer day - கோடைக்கால நாள்
Every day - ஒவ்வொரு நாளும்/அன்றாடம்
Someday - எதிர்வரும் ஒரு நாளன்று
One day - ஒரு நாள்
Good day - நல்ல நாள்/நன்னாள்
Holiday - விடுமுறை நாள்
Special day - சிறப்பு நாள்
Wedding day - திருமண நாள்
Birth day - பிறந்த நாள்
Anniversary day - ஆண்டு நிறைவு நாள்
Remembrance day - நினைவு நாள்/நினைவு மீட்டல் நாள்
Full moon day - முழு நிலா நாள்/பௌரனமி
Unforgettable day - மறக்கமுடியாத நாள்

Day to day - ஒவ்வொரு நாளும் நடக்கிற
Day to day work - ஒவ்வொரு நாளும் நடைப்பெறும் வேலை/அன்றாடப்பணி
Day to day activities - அன்றாடக் கடமைகள்
Day by day - ஒவ்வொரு நாளாக /நாளுக்கு நாளாக

"Days" பன்மை பயன்பாடுகள்:

Coming days - வரும் நாட்கள்
Working days - வேலை நாட்கள்
Office days - அலுவலக நாட்கள்
School days - பாடசாலை நாட்கள்
Three days before - மூன்று நாட்களுக்கு முன்பு
Nowadays - இன்றைய நாட்களில்
One of these days - இன்னாட்களில் ஒரு நாள்
One of those days - அன்னாட்களில் ஒரு நாள்

கிழமையில் நாட்கள்

ஆங்கிலத்தில் “week” எனும் சொல் ஏழு நாட்களைக் கொண்ட ஒரு கிழமையைக் குறிக்கிறது. அவ்வாறே அச்சொல்லுக்கு இணையாக “கிழமை” எனும் சொல்லை நாம் பயன்படுத்துகின்றோம். அதேவேளை ஒரு கிழமையில் உள்ள ஒவ்வொரு நாட்களையும் திங்கற்கிழமை, செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை என கிழமையை பின்னொட்டாக பயன்படுத்தும் வழக்கு தமிழர் வழக்காகும். ஆனால் ஆங்கிலத்தில் கிழமையில் உள்ள ஏழு நாட்களையும் "day" (நாள்) என்றே அழைக்கப்படுகின்றது.

Sunday - ஞாயிறு நாள்/ஞாயிற்றுக்கிழமை
Monday - திங்கள் நாள்/திங்கற்கிழமை
Tuesday - செவ்வாய் நாள்/செவ்வாய்க்கிழமை
Wednesday - புதன் நாள்/புதன்கிழமை
Thursday - வியாழன் நாள்/வியாழக்கிழமை
Friday - வெள்ளி நாள்/ வெள்ளிக்கிழமை
Saturday - சனி நாள்/ சனிக்கிழமை

Weekdays - கிழமை நாட்கள் (திங்கள் முதல் வெள்ளி வரை)
Weekend days - கிழமையிறுதி நாட்கள் /வாரயிறுதி நாட்கள் (சனி, ஞாயிறு)

சிறப்பு நாட்கள் (Special days)

இன்னுமின்னும் எமது வாழ்நாளில் ஒவ்வொரு ஆண்டும் எத்தனையோ சிறப்பு நாட்களும், நினைவு நாட்களும் வந்து போகின்றன. அவற்றில் சில:

April Fool's Day - ஏப்பிரல் முட்டாள்களின் நாள்
Christmas Day - கிறிஸ்மஸ் நாள்
Human Rights Day - மனித உரிமைகள் நாள்
Labor Day - தொழிலாளர் நாள்
Mother’s day - தாயார் நாள்
Valentine's Day - காதலர் நாள்
National hero’s day - தேசிய வீரர்களின் நாள்

மேலும் சிறப்பு நாட்களின் அட்டவணை எதிர்வரும் பாடங்களில் எதிர்பாருங்கள்.

இனி திகதி குறித்து சில விடயங்களைப் பார்ப்போமா?

Date (திகதி)----------------------------------------------------------------------------------------
"Date" என்றால் "திகதி" என்பது எல்லோருக்கும் தெரியும். இச்சொல் ஆங்கிலத்தில் வினைச்சொல்லாகவும், பெயர்சொல்லாகவும் பயன்படும். இந்த "திகதி" எனும் சொல்லுடன் தொடர்புடைய சில சொல்லாடல்களைப் பார்ப்போம்.

Date - திகதி
Dateless - திகதியற்ற
Date seal - திகதி இலச்சினை
Date of birth - பிறந்தத் திகதி
Fix a date - ஒரு திகதியை நிர்னயி
Set a date - ஒரு திகதியை குறி
Date of arrival - வந்தடையும் திகதி
Closing date - முடிவடையும் திகதி
Date of renewal - புதுப்பித்தலுக்குரிய திகதி
After date - (குறிப்பிட்ட) திகதிக்குப் பின்
Base date - அடிப்படை திகதி
Date of departure - புறப்படும் திகதி
Out of date - வழக்கொழிந்த திகதி
Expiry date - காலவதியாகும் திகதி
At a future date - எதிர்வரும் ஒரு திகதியில்

Day என்பதற்கும் Date என்பதற்கும் இடையிலான வேறுப்பாடு என்னவென்றால், யாரவது உங்களிடம் "What day is it today?" என்று வினவினால் இன்றைய நாளை குறிப்பிடுங்கள்.

எடுத்துக்காட்டாக:

What day is it today?Monday.

யாரவது உங்களிடம் "What is the date today?" என வினவினால் இன்றைய திகதியைக் குறிப்பிடுங்கள்.

எடுத்துக்காட்டாக:

What is the date today?Today is 27th of December, twenty ten.

கவனிக்கவும்:

ஆங்கிலத்தில் திகதியை எழுதும் வழக்கிற்கும் பேசும் வழக்கிற்கும் இடையில் வேறுப்பாடு உண்டு. அவற்றை கவனத்தில் கொள்ளவும்.

எழுத்து வழக்கில்: 27th December, 2010
பேச்சு வழக்கில்: The twenty seventh of December, twenty ten.

பிரிட்டிஸ் அமெரிக்க வேறுப்பாடு
----------------------------------------------------------------------------------------
திகதிகளை எழுதும் போதும் பேசும் போதும் அமெரிக்க ஆங்கிலத்திற்கும் பிரிட்டிஸ் ஆங்கிலத்துக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை விளங்கிக்கொள்ளுதல் அவசியம்.

பிரித்தானிய ஆங்கிலத்தில்:

எழுத்து வழக்கில்: 28th December, 2010பேச்சு வழக்கில்: The twenty eighth of December, twenty ten.

அமெரிக்க ஆங்கிலத்தில்:

எழுத்து வழக்கில்: December, 28th 2010.
பேச்சு வழக்கில்: December, the twenty eighth twenty ten.

குறிப்பு:

பிரித்தானிய ஆங்கிலத்தில் திகதி/மாதம்/ஆண்டு அல்லது ஆண்டு/மாதம்/திகதி என்று பயன்படும். குறிப்பாக "மாதம்" நடுவில் வரும். அதேவேளை அமெரிக்க ஆங்கிலத்தில் மாதம்/திகதி/ஆண்டு என இடம் மாறி பயன்படுகிறது. இந்த சிக்கல் அநேகமாக திகதியை இலக்கங்களில் எழுதும் போது, பிழையான திகதியாக விளங்கிக்கொள்ளும் நிலையையும் ஏற்படுத்திவிடுகிறது. எனவே சற்று அவதானத்துடன் கவனிக்கவும்.

எடுத்துக்காட்டாக:

8/12/2010 - (பிரித்தானிய ஆங்கிலத்தில்)
எட்டாம் திகதி டிசம்பர் மாதம் 2010 ஆம் ஆண்டு.

8/12/2010 - (அமெரிக்க ஆங்கிலத்தில்)
ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி 2010 ஆம் ஆண்டு.

சரி! "Date" என்றால் "திகதி" என்று பார்த்தோம். "Dating" என்றால் என்னவென்று பார்ப்போமா? இணையத்தில் ஏராளமான "Dating" தளங்களும் உள்ளனவே. அடுத்தப் பதிவில் பார்ப்போம். மிகவும் சுவையான பதிவாகவும், வாக்கியங்களை சேர்த்து எழுதும் பயிற்சி முறையை உள்ளடக்கியப் பாடமாகவும் அது அமையும்.

நன்றி!

அன்புடன்
அருண் HK Arun

Download As PDF

Monday, April 12, 2010

ஆங்கிலம் துணுக்குகள் 17 (Most Definitions)

ஆங்கிலத்தில் ஒரே சொல் வினைச்சொல்லாகவும் பெயர்ச்சொல்லாகவும் பயன்படுபவை நிறைய உள்ளன. சில சொற்கள் முன்னிடைச்சொற்களாகவும் இடையிணைப்புச் சொற்களாகவும் பயன்படும். இன்னும் ஒரு சில சொற்கள் வினைச்சொல், பெயர்சொல், வினையெச்சம், பெயரெச்சம், முன்னிடைச்சொல் என பல்வேறு வரைவிலக்கணங்களைக் கொண்டு பயன்படுபவைகளும் உள்ளன.

சரி, ஆங்கிலத்தில் ஆகக்கூடிய வரைவிலக்கணங்களை கொண்டச் சொல் எது என்று தெரியுமா?

SET
ஆம், "Set" எனும் ஆங்கிலச் சொல்லுக்கு ஒக்ஸ்போர்ட் அகராதியில் 464 வரைவிலக்கணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ("SET" has 464 definitions in the Oxford English Dictionary.) இதுவே ஆங்கிலத்தில் ஆகக் கூடிய வரைவிலக்கணங்களைக் கொண்ட ஆங்கிலச் சொல்லாகும்.

அதற்கு அடுத்த நிலையில் ஆகக்கூடிய வரைவிலக்கணங்களைக் கொண்ட ஆங்கிலச் சொற்கள் சில:

RUN - 396

GO - 368

TAKE - 343

STAND - 334

GET - 289

TURN - 288

PUT - 268

FALL - 264

STRIKE - 250

இணையத்தில் இதற்கான ஆதாரம்.

மேலும் துணுக்குகள்

நன்றி

அன்புடன்
அருண் HK Arun Download As PDF

Thursday, March 11, 2010

ஆங்கிலம் - நன்றி தெரிவித்தல் (Thanks)

ஆங்கில மொழியினர் தம்மிடையே சிறுச்சிறு செயல்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்ளும் பழக்கத்தை வழக்கமாகக் கொண்டவர்களாவர். கணவன் மனைவிக்கும், தாய் பிள்ளைக்கும் கூட நன்றி தெரிவித்துக்கொள்வர். இருப்பினும் இடம், சூழ்நிலை, நபர், உதவியின் தன்மை போன்றவற்றின் அடிப்படையில்; சம்பிரதாய வழக்கப்படி (Formal) நன்றி சொல்லல், சம்பிரதாய வழக்கின் படி அல்லாமல் (Informal) நன்றி சொல்லல், தாழ்மையுடன் நன்றி சொல்லல், உணர்வு மிகுதியுடன் நன்றி சொல்லல் என பல முறைமைகள் உள்ளன.

உண்மையில் "நன்றி தெரிவித்தல்" என்பதே உணர்வை வெளிப்படுத்தும் ஒரு செயல் அல்லவா? ஆம்! முதலில் நன்றி உணர்வை வெளிப்படுத்தும் முறைமைகள் எத்தனை எனப் பார்ப்போம்.

01. Thanks
02. Thanks for . . .
03. Thanks for your . . .
04. Thanks to . . .
05. Thanks a lot
06. Thanks a lot for . . .
07. Thanks so much
08. Thanks very much
18 ways to say thanks thank you in English09. Thank you
10. Thank you for . . .
11. Thank you kindly
12. Thank you for your . . .
13. Thank you so much
14. Thank you very much
15. Thank you very much for . . .
16. Thank you very much for your . . .

17. I can't thank you enough
18. I don't know how to thank you

இனி இவற்றின் பயன்பாடுகளை விரிவாகப் பார்ப்போம்.
How many ways can say thanks in englishவிளக்கம்
-------------------------------------------------------------------------------------
சாதாரணமாக யாரேனும் ஒருவர் ஏதேனும் ஒரு சிறு உதவியைச் செய்தால் அல்லது அன்பாக "எப்படி சுகம்?" என வினவினால் "Thanks" எனலாம். இது ஒரு சம்பிரதாய (Formal) முறைமையாகும்.

How are you?

Fine, thanks.
I'm fine, thanks.
I am very well, thank you.

How is your wife?
She's fine, thanks.
List of Thanks Phrases Words
யாரேனும் ஒருவர் அன்பான அணுகுமுறையுடன் ஏதேனும் ஒன்றை உங்களுக்கு வழங்க முற்பட்டால், அல்லது "வேண்டுமா?" எனக் கேட்டால்; அதனை தாழ்மையுடன் ஏற்கும் விதமாக "நன்றி" சொல்லி ஏற்கலாம். (A polite way of accepting sth that sb has offered you.)

Would you like cup of coffee?
Usage thanks and thank youOh, thanks.
Thanks very much.
Thanks so much.
usage of thanksஏதேனும் ஒன்றை உங்களுக்கு "இன்னும் கொஞ்சம் வேண்டுமா?" என யாரேனும் ஒருவர் கேட்டால், அதனை வேண்டாம் என மறுத்துக் கூறுவதுடன், வேண்டுகோளுக்கான நன்றியையும் தாழ்மையுடன் தெரிவித்தல் ஆங்கில வழக்காகும். (A polite way of refusing sth that sb has offered you.)

Would you like some more?
No, thanks.

Do you want some more milk in your coffee?
No that's fine, thanks.
Polite ways to say thanks in aangilam
யாரேனும் ஒருவர் ஏதேனும் ஓர் உதவி அல்லது நன்மை செய்திருந்தால், அதற்கு நீங்கள் மிகுந்த நன்றியைத் தெரிவிக்க விரும்பினால், கீழுள்ளவாறு கூறலாம். (Used to show that you are very grateful to sb for sth they have done.)

Thanks a lot.
Thanks a bunch.
Thanks a million.
Thanks a billion.
Thanks a bundle.
English polite forms
Thanks a lot for your help.
Thanks a lot for all you’ve done.

சுருக்கமாக நன்றி தெரிவிக்கும் முறைமைகள் சிலவற்றைப் பார்க்கவும்.

Thank you.
Thank you, Mr. Obama.
Thank you, Sir John.
Thank you, Good question.

யாரேனும் ஒருவர் ஏதேனும் ஒரு உதவியை அல்லது அறிவுரையை தாமாகவே வழங்க எத்தனிக்கும் போது, அதனை "என்னால் செய்துக்கொள்ள முடியும், கேட்டலுக்கு நன்றி" என்பதுப்போன்று கூறும் வழக்கம் ஆங்கிலத்தில் உள்ளது. (To tell sb firmly that you do not need their help or advice.)

Shall I do that?
Can I help you?

I can do it myself, thank you.

ஒருவரது உதவிக்கு தாழ்மையாக (Polite way) நன்றிக் கூற விரும்பினால்:

"Thank you kindly." எனலாம்.

ஒருவர் செய்த உதவிக்கு அல்லது நன்மைக்கு "எவ்வாறு உங்களுக்கு நன்றி சொல்வதென்றே தெரியவில்லை!" என்பதுப்போல் சம்பிரதாய வழக்காக அல்லாமல் (Informal) நன்றி உணர்வை மிகைப்படுத்திக் கூறும் வழக்கமும் ஆங்கிலத்தில் உள்ளது.

I don't know how to thank you.
I don't know how to thank you for your help.
I don't know how to thank you for your great service.

"உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது" என்பதுப் போன்றும் தமது நன்றி உணர்வை வெளிப்படுத்திப் பேசலாம். (Informal)

I can't thank you enough.
I can't thank you enough for your kindness.
I can't thank you enough for your kind consideration.

செயலை குறிப்பிட்டு நன்றி தெரிவித்தல்
-------------------------------------------------------------------------------------
Thanks for . . .
Thanks for your . . .
Thanks very much for . . .

Thank you for . . .
Thank you for your . . .
Thank you so much for your . . .
Thank you very much for your . . .

மேலுள்ள சொற்றொடர்களைப் பாருங்கள். அச்சொற்றொடர்கள் முழுமையானவை அல்ல, அவற்றின் முடிவில் புள்ளிகள் இட்டுக் காட்டப்பட்டுள்ளன. அவற்றை முழுமையான சொற்றொடர்களாக்குவதானால், நீங்கள் எதற்கு நன்றி தெரிவிக்க விரும்புகின்றீர்களோ, அச்செய்லை குறிப்பிட்டு நன்றி கூற வேண்டும்.

எடுத்துக்காட்டாக:

Thanks for coming.
Thanks for your kindness.Thanks very much for your kind words
Thank you for not smoking.
Thank you for your comments
Thank you so much for your hospitality.
Thank you very much for your cooperation.

ஒருவர் எந்த விடயத்திற்கு வேண்டுமானாலும் நன்றி தெரிவிக்கலாம். நன்றி உணர்வை மிகுதியாக தெரிவிக்க விரும்பின் "so much / very much" போன்ற சொற்களை இணைத்து தெரிவியுங்கள். ஆனால் நீங்கள் நன்றி தெரிவிக்க விரும்பும் விடயத்தின் ஆங்கிலச் சொற்களை அறிந்து வைத்துக்கொள்ளல் பயன்மிக்கது.

நன்றிக்கு பதிலளித்தல்
-------------------------------------------------------------------------------------
ஆங்கிலத்தில் நன்றி தெரிவித்தலுக்கும், தாழ்மையுடம் மறுமொழி கூறும் வழக்கம் உள்ளது. அவற்றை கீழுள்ள எடுத்துக்காட்டுக்கள் ஊடாகப் பாருங்கள்.

Thank you for your kind help.
You're welcome.
Thank you for your gifts
Don't mention it.

Thank you for a great evening
I really enjoyed it.

Thanks for all your help
It's my pleasure.

Thanks for lending me the money
That's all right.

கவனிக்கவும்:
-------------------------------------------------------------------------------------
இவற்றில் எவ்வாறு எழுதுவது சரி, எவ்வாறு எழுதுவது பிழை, என சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. அவற்றை கவனித்தில் கொள்ளவும்.

Thanks - (பிழை Thank)
Thank you. - (பிழை Thanks you)
Thanks a lot. - (பிழை Thank you a lot)
Thank God it’s Friday. - (பிழை Thanks God …)
Thank you very much indeed. - (பிழை Thank you indeed.)

இங்கே நன்றித் தெரிவிக்கும் சொற்றொடர்கள் 100 வழங்கப்பட்டுள்ளன. விரும்புவோர் பயிற்சி செய்துக்கொள்ளுங்கள்.

Thank you for . . .
-------------------------------------------------------------------------------------
English Polite Usage Thanks Aangilam
01. Thank you for accepting our invitation
02. Thank you for accommodating
03. Thank you for acknowledgement
04. Thank you for agreeing
05. Thank you for agreeing to participate
06. Thank you for answering
07. Thank you for applying
08. Thank you for appreciation
09. Thank you for appreciating my work
10. Thank you for appointment letter
11. Thank you for appreciation letter
12. Thank you for arguing
13. Thank you for arguing summary
14. Thank you for arranging the interview
15. Thank you for asking
16. Thank you for assisting
17. Thank you for attending our wedding
18. Thank you for attending seminar
19. Thank you for attending interview
20. Thank you for auditioning
21. Thank you for award speech
22. Thank you for baptism
23. Thank you for barring with me
24. Thank you for being a friend
25. Thank you for birthday wishes
26. Thank you for birthday wishes comments
27. Thank you for blessing me
28. Thank you for booking with us
29. Thank you for bringing to our attention
30. Thank you for business meeting
31. Thank you for buying our product.
32. Thank you for calling me
33. Thank you for celebrating my birthday
34. Thank you for celebrating our wedding
35. Thank you for choosing our hotel
36. Thank you for clicking
37. Thank you for clapping
38. Thank you for clarifying
39. Thank you for clients
40. Thank you for coming to my party
41. Thank you for considering my application
42. Thank you for condolences
43. Thank you for contacting
44. Thank you for coming into my life
45. Thank you for dedication
46. Thank you for dedication and hard work
47. Thank you for defending our country
48. Thank you for dinner party
49. Thank you for dinner invitation
50. Thank you for donation
51. Thank you for downloading our lessons
52. Thank you for donation to charity
53. Thank you for doing business with us
54. Thank you for driving carefully
55. Thank you for everything
56. Thank you for electing me
57. Thank you for employing me
58. Thank you for emailing me
59. Thank you for encouraging me
60. Thank you for enquiry letter
61. Thank you for eulogy
62. Thank you for explaining
63. Thank you for expressing interest
64. Thank you for excellent work
65. Thank you for facilitating
66. Thank you for feedback
67. Thank you for firing me
68. Thank you for flying with us
69. Thank you for forgiving me
70. Thank you for following up
71. Thank you for forwarding my resume
72. Thank you for funeral support
73. Thank you for good service
74. Thank you for greeting me
75. Thank you for great service
76. Thank you for guiding
77. Thank you for helping me
78. Thank you for inviting me
79. Thank you for joining
80. Thank you for job opportunity
81. Thank you for job application
82. Thank you for my birthday present
83. Thank you for not smoking
84. Thank you for new year wishes
85. Thank you for our wedding gift
86. Thank you for offering me the position
87. Thank you for participating in our event
88. Thank you for quotation
89. Thank you for quick response
90. Thank you for registering
91. Thank you for recommendation
92. Thank you for replying
93. Thank you for remembering
94. Thank you for remembering my birthday
95. Thank you for sending your photo
96. Thank you for sending your resume
97. Thank you for teaching English
98. Thank you for understanding
99. Thank you for using our service
100. Thank you for visiting our aangilam.blogspot.com

இவ்வாறு ஒருவரின் செயலை அல்லது செயலுக்கான காரணியை குறிப்பிட்டு நன்றி தெரிவிக்கும் வகையில் புதியப் புதிய சொற்களைச் சேர்த்து பயிற்சிப் பெறலாம். அவை உங்கள் ஆங்கில அறிவாற்றலை வளர்த்துக்கொள்ள உதவுவதுடன், அவசியமானப் பேச்சுப் புழக்கத்திற்கு எளிதாக அமையும். அத்துடன் ஆங்கில சொல்வளத்தை பெறுக்கிக் கொள்ளவும் உதவும். இவற்றையும் பார்க்கவும்.

ஆங்கிலம் கற்கும் நாம் ஆங்கில மொழியை மட்டுமன்றி, அம்மொழியினரின் பழக்க வழக்கங்களையும் கற்றுத் தெளிவதே, ஆங்கில மொழி ஆளுமை மிக்கவர்களாக எம்மை வளர்த்துக்கொள்ள உதவும். இப்பதிவு ஆங்கில மொழியினரின் பழக்க வழக்கம் சார்ந்த ஓர் கற்கையாகும்.

நன்றி

அன்புடன்
அருண் HK Arun Download As PDF

Friday, October 30, 2009

ஆங்கிலம் துணுக்குகள் 09 ( Word Stress)

ஆங்கிலம் பேசும் பொழுது ஆங்கில சொற்களை சரியாகவும் திருத்தமாகவும் பேசுவதற்கு; அதன் ஏற்ற இறக்க ஒலிப்பு முறைமைகளை "சொல்லழுத்தம்" (Word Stress) கற்பது மிகவும் முக்கியமானது. ஒரு தாய்மொழி ஆங்கிலேயரின் ஆங்கில ஒலிப்பிற்கும், பிற மொழியினரின் ஆங்கில ஒலிப்பிற்கும் வேறுப்பாடுகள் இருப்பதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள்.

நாம் ஆங்கிலேயர் மாதிரியே ஒலிக்க வேண்டும் என்று இல்லாவிட்டாலும், ஆங்கில செய்தி அறிக்கைகளை கேட்டுணரவும், ஆங்கில திரைப்படங்களை எளிதாக விளங்கிக்கொள்ளவும் இவை மிகவும் முக்கியமானது.

சிலர் ஆங்கிலேயரையும் விட தாமே சரியாக ஆங்கிலச் சொற்களை ஒலிப்பதாக கூறி பெருமிதம் பட்டுக்கொள்வோரும் உள்ளனர். உண்மையில் இது பிழையானது. ஏனெனில் ஆங்கில மொழி பாடசாலைகளில் ஆங்கில சொற்கள் ஒவ்வொன்றிலும் எத்தனை syllable கள் இருக்கின்றன. அவற்றை எப்படி உச்சரிக்கப்பட வேண்டும் என்பவற்றை முறையாகவே கற்பிக்கின்றனர். இன்று புலம்பெயர் தேசங்களில் எமது இரண்டாம் மூன்றாம் தலைமுறையினர் ஆங்கிலத்தை ஒலிக்கும் விதத்திற்கும்; இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் ஆங்கிலம் கற்று பேசுவோருக்கும் இடையில் அதிக வேறுப்பாடுகள் காணப்படுகின்றன. அதேவேளை மிகச்சரியாக ஆங்கிலத்தை ஒலிப்போர் எம்மில் இல்லை என்றும் நான் கூறவில்லை. ஆனால் ஒரு சிலர் இருந்தாலும், அதிகமானோரின் ஒலிப்புகளில் இந்த syllable கள் சரியாக ஒலிக்கப்படுவது இல்லை என்பதே உண்மை.

ஏன் எம்மாலும் சரியாக ஆங்கிலச் சிலபல்களை முறையாக ஒலிக்க முடியாதா?

முடியும். நிச்சயமாக முடியும். அதற்கு ஆங்கில ஒலிப்பு முறைகளை உன்னிப்பாக அவதானித்து பயிற்சி செய்ய வேண்டும். இங்கே ஒவ்வொரு சொற்களும் எவ்வாறு ஒலிக்கப்பட வேண்டும் என்பதற்கான சில விளக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

எடுத்துக்காட்டாக:

“போட்டோகிராப்” எனும் சொல்லை எடுத்துக்கொண்டால் இதில் “போ” எனும் ஒலியை அழுத்தமாகவும் “டகிராப்” என்பதை மென்மையாகவும் ஒலிக்கப்பட வேண்டும். இவ்வாறு ஒலிக்கும் பொழுது “to” ட போன்றே ஒலிக்கும்.

PHOtograph - போfட்டகிராfப்.

இதே போன்ற இன்னொரு சொல்லைப் பாருங்கள்.

phoTOgrapher - பொfடோகிராfபர்.

இதில் “பொ” மென்மையாகவும் “TO” அழுத்தமாகவும் “கிராபர்” மென்மையாகவும் ஒலிக்கப்பட வேண்டும். (இதில் “TO” டோ வாகவே ஒலிக்கப்படுகின்றது.

இன்னுமொரு சொல்லையும் பார்ப்போம்.

photoGRAPHic - பொfடோகிராfபிக்

இதில் “கிராபி” என்பதை அழுத்தமாகவும் “பொடோ” உம், “க்” உம் மென்மையாக ஒலிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு ஒரு சிலபலைக் கொண்ட சொற்கள், இரண்டு சிலபல்களை கொண்ட சொற்கள், பல syllable களை கொண்ட சொற்கள் என உள்ளன. இவற்றை அறிந்து சரியாக பயிற்சி செய்துக்கொள்ளல் சிறப்பான ஆங்கில உச்சரிப்பை பெற வழிவகுக்கும்.

இங்கே மேலும் சில சொற்கள் எடுத்துக்காட்டாக கொடுக்கப்பட்டுள்ளன. தடித்த எழுத்துக்களில் இருப்பவற்றை அழுத்தமாக ஒலிக்கவும்.

TEACHer

JaPAN

CHIna

aBOVE

converSAtion

INteresting

imPOrtant

deMAND

etCETera

இவை எல்லா பாடசாலைகளிலும் முறையாக கற்பிக்கப்படுகின்றதா என்று எனக்கு திட்டவட்டமாக கூறமுடியாது. ஆனால் இன்றைய கணனி உலகில் இந்த "Word Stress" முறைகளை கற்றுக்கொள்வதெல்லாம் சர்வ சாதாரணம் என்றே சொல்ல வேண்டும். முதலில் ஆங்கில சொற்களின் ஒலிப்புகளை சரியாக ஒலிக்க வேண்டும் எனும் எண்ணம் உங்களிடன் இருக்க வேண்டும். இரண்டாவது முயற்சி. அதற்கான வழிகள்; ஆங்கிலேயரின் வானொலி ஒலிப்பரப்புக்களை கேட்டல், ஆங்கில திரைப்படங்களில் பேசுபவற்றை உன்னிப்பாக கவனித்தல், ஆங்கில காணொளிகளைப் பார்த்தல், ஆங்கிலப் பாடல்களை கேட்டல் போன்றன உங்களுக்கு பேருதவியாக இருக்கும்.

தொடர்புடைய இந்த ஆக்கங்களையும் பார்க்கலாம்.

ஆங்கில உச்சரிப்புப் பயிற்சி (Pronunciations)

வாக்கிய அழுத்த முறைமைகள் (Sentence Stress)

ஆங்கிலப் பாடல்கள் (Using English Songs With Lyrics)
இன்றைய இப்பாடம் ஆங்கிலம் துணுக்குகள் பகுதியிலேயே வழங்கப்பட்டுள்ளது. மேலும் துணுக்குகள் இங்கே

நன்றி

அன்புடன்
அருண் HK Arun Download As PDF

Friday, August 14, 2009

ஆங்கிலம் துணுக்குகள் 10 (TEEN)

காலேஜ் பெண்கள், டீனேஜ் பெண்கள் என்று அடிக்கடி தமிழர் பேச்சு வழக்கில் தமிங்கிலம் ஒலிக்கும்.

சரி காலேஜ் என்றால், கல்லூரி என்று தெரியும்.

டீனேஜ் என்றால் இளவயதினர் என்றும் நமக்கு தெரியும். ஆனால் டீனேஜில் உள்ள “TEEN” என்றால் என்னவென்று தெரியுமா? எத்தனை வயதில் இருந்து எத்தனை வயது வரையானோரை டீனேஜர் என்று அழைக்கலாம்?

ஆங்கிலத்தில் பன்னிரண்டு வயது பையன்களையோ, பெண்களையோ “டீனேஜ்” வயதினர் என்று குறிப்பது இல்லை. ஆனால் பன்னிரண்டு வயது பூர்த்தியாகி பதின்மூன்று வயதானவர்கள் டீனேஜ் வயதினராவர்.

அது எப்படி?

இப்படித்தான்.

13 - thirTEEN

14 - fourTEEN

15 - fifTEEN

16 - sixTEEN

17 - sevenTEEN

18 - eighTEEN

19 - nineTEEN

எண்களில் பின்னொட்டாக "TEEN" இணைந்து ஒலிக்கப்படும் எண்ணிக்கையை உடைய வயதினரான; பதின்மூன்றில் இருந்து பத்தொன்பது வரையான வயதினரையே டீனேஜர் (Teenager) என்று அழைக்கப்படும். (பத்தொன்பது வயது பூர்த்தியடைந்தவராயின் அவர் டீனேஜ் வயதினர் அல்ல)

இந்த டீனேஜினரை இவ்வாறு பிரித்து கூறும் வழக்கமும் ஆங்கிலத்தில் உண்டு.

Early teens என்றால் 13 – 15 வயதினரைக் குறிக்கும்.
Middle teens என்றால் 15 – 17 வயதினரைக் குறிக்கும்.
Late teens என்றால் 17 – 19 வயது வரையானோரைக் குறிக்கும்.

உச்சரிப்பு:

உச்சரிப்பின் பொழுது சிம்பல் எழுத்தில் எழுதியிருப்பவற்றை மென்மையாகவும், தடித்த எழுத்துக்களில் எழுதியிருப்பவற்றை அழுத்தமாகவும் ஒலிக்க வேண்டும்.

எடுத்துக்காட்டு:

thirTEEN

இதில் “thir” மென்மையாகவும் “TEEN” அழுத்தமாகவும் உச்சரிக்கப்பட வேண்டும்.

மேலும் துணுக்குகள்

நன்றி Download As PDF

Thursday, June 18, 2009

ஆங்கிலம் துணுக்குகள் 08 (Verb Forms)

இன்றைய ஆங்கிலம் துணுக்குகள் பகுதியில் ஒரு வினைச்சொல் ஆங்கில மொழியில் எத்தனை வடிவங்களாகப் பயன்படுகின்றன என்பதைப் பார்ப்போம்.

ஐந்து வடிவங்களாகப் பயன்படுகின்றன. அவைகளாவன:

1. Base Form
2. Gerund Form
3. Third Person Form
4. Past Form
5. Participle Form

எடுத்துக்காட்டு:

"do" எனும் ஒரு வினைச்சொல்லை எடுத்துக்கொண்டோமானால், அது do, doing, does, did, done என ஐந்து வினை வடிவங்களாகப் பயன்படுவதைப் பார்க்கலாம். இவ்வாறு ஆங்கில வினைச் சொற்கள் அனைத்தும் ஐந்து வினை வடிவங்களாக பயன்படுகின்றன.

மேலும் சில எடுத்துக்காட்டாக இந்த அட்டவணையைப் பாருங்கள்.
FormsVerbs
Base Formdogospeakplay
Gerund Formdoinggoingspeakingplaying
Third Person Formdoesgoesspeaksplays
Past Formdidwentspokeplayed
Participle Formdonegonespokenplayed

1. இதில் "Base Form" என்பது ஆதாரமான அடிப்படை வினைச்சொற்களாகும்.

2. "Gerund Form" என்பது base form சொற்களுடன் "ing" யும் இணைந்து பயன்படுபவைகள்.

3. "Third Person Form" என்பது சாதாரண நிகழ்கால வினைச்சொற்கள், மூன்றாம் நபர் ஒருமை பயன்பாடாகப் பயன்படுபவைகள். அதாவது "Base Form" உடன் "s, es" போன்ற எழுத்துக்கள் இணைந்து பயன்படும். இவற்றை அட்டவணை Third Person Singular (He, She, It: infinitive + e/es) பார்க்கலாம்.

4. "Past Form" இவை ஆங்கிலத்தின் இறந்தக்கால வடிவமாகும். இது "Regular Verbs" களின் போது "ed" எனும் எழுத்துக்கள் இணைந்து பயன்படும். அதேவேளை "Irregular Verbs" களின் போது ஒரு ஒழுங்கு முறையற்று காணப்படும். இவற்றை நீங்கள் அட்டவணை (Irregular verbs) இல் பார்க்கலாம்.

5. "Participle Form" இவைகளும் Past Form போன்றே "Regular Verbs" களின் போது "ed" எனும் எழுத்துக்கள் இணைந்து பயன்படும் என்றாலும், Irregular Verbs களின் போது வேறுப்பட்டு காணப்படும். இவற்றையும் நீங்கள் அட்டவணை (Irregular Verbs) இல் பார்த்து பயிற்சி செய்துக்கொள்ளலாம்.

இவ்வாறு ஆங்கிலத்தில் மொத்தம் ஐந்து வினைச்சொல் வடிவங்கள் உள்ளன.

மேலும் சிலதுணுக்குகள்.

நன்றி

அன்புடன் அருண் HK Arun Download As PDF

Tuesday, November 18, 2008

ஆங்கிலம் துணுக்குகள் 11 (Sentence Stress)

ஆங்கிலம் துணுக்குகள் 10 இல் சொல்லழுத்தம் (Word Stress) பற்றிய விளக்கம் பார்த்தோம். அதே போன்றே வாக்கிய அழுத்தப் (Sentence Stress) பயன்பாடுகளையும் சரியாகப் பயின்று பேசுவது மிக முக்கியமானது. இவ் வாக்கிய அழுத்தப் பயன்பாட்டை முறையாகப் பயிற்சி பெறாமல் ஆங்கில மொழியை சரியாக பேசுதலே சாத்தியமற்றது எனலாம்.

இவற்றை பயில்வது கடினமானதா? இல்லை. எதனையும் சரியாக விளங்கிக்கொண்டால் இலகுவாகவே இருக்கும். கீழே கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டுக்களைப் பாருங்கள்.

What is your name?
வட் இஸ் யுவர் நேம்?

என்று சொல்லுக்கு சொல் இடைவெளி விட்டு பேசி பழக வேண்டாம். மேலுள்ள வாக்கியத்தில் உள்ள அனைத்து சொற்களையும் ஒரே சொல்லாக “வட்ஸ்யுவர்நேம்?” என பேசிப் பாருங்கள். பேசுவதற்கு இலகுவாகவும் இருக்கும். விரைவில் ஆங்கில பேச்சும் எமது நாவிற்கு எளிதாகவும் புலப்படும்.

அதேவேளை ஒலிப்பில் அழுத்தம் கொடுக்க வேண்டிய இடங்களை அறிந்து அதற்கேற்ப ஏற்ற இறக்கத்துடன்; அழுத்தமாக ஒலிக்க வேண்டிய இடத்தில் அழுத்தமாகவும், மென்மையாக ஒலிக்கப்பட வேண்டிய இடத்தில் மென்மையாகவும் பேசிப் பழகுவது மிகவும் முக்கியமானது. தாய் மொழி ஆங்கிலேயரின் உச்சரிப்பின் பொழுது இடையிடையான சில சொற்கள் உச்சரிக்கப்படாதது போல் (மென்மையாக) பேசப்படுவதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள். அழுத்தம் குறைவுடன் ஒலிக்கப்படும் சொற்களே அவை.

WHAT is YOUr NAME?
வட்ஸ் யுவர் நேம்?

WHERE are you STAYing?
வெயாராயூ ஸ்டேயிங்?

HOW LONG have you been STAYing in HONG KONG?
ஹவ்லோங் ஹேவ்யூபீன் ஸ்டேயிங்ன் ஹொங்கொங்?

வாக்கிய அழுத்த அடிப்படை விதிமுறைகள்

முக்கியாமாக ஒரு வாக்கியத்தில் இரண்டு வகையாக சொற்கள் ஒலிக்கப்படுகின்றன.

Content Words - (கனமாக) சொல்லழுத்தச் சொற்கள்
Structure Words - சொல்லழுத்தமற்ற சொற்கள் (இவைகளே ஒரு வாக்கியத்தின் அமைப்பை முழுமைப்படுத்துக்கின்றன.)

ஒரு வாக்கியத்தில் சொல்லழுத்தச் சொற்களே (Content Words) பிரதான இடத்தை வகிக்கின்றன. அவைகளே ஒருவர் சொல்வது என்ன எனும் பொருளை விளக்குபவை.

எடுத்துக்காட்டாக:

I + GO + SCHOOL + BUS என்று நீங்கள் ஒருவரிடம் கூறுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அப்பொழுது உங்கள் பேச்சை கேட்பவர் உங்கள் முகக் குறிப்புகளையும், உங்கள் அங்க அசைவுகளை (செய்கைகளை) வைத்தும் நீங்கள் என்ன பேசுகின்றீர்கள் என்பதை புரிந்துக்கொள்வார்.

I am GOing to SCHOOL by BUS.
“ஐ’ம் கோயிங்டு-ஸ்கூல் bபைபஸ்” என்று கூறுவீர்களானால் வாக்கிய அமைப்பு முழுமையானதாக இருக்கும். அதேவேளை இடையில் பயன்படும் சொற்களே அழுத்தமற்று பேசப்பட வேண்டியவை என்பதையும் புரிந்துக்கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

இவற்றை எளிதாக எவ்வாறு அறிந்துக்கொள்ளலாம் என்பதை கீழே பாருங்கள்.

அழுத்தமின்றி (மென்மையாக) ஒலிக்கபட வேண்டிய சொற்கள்:

PronounsIt, his, her, we

PrepositionsAt, in, on

ArticlesA, an, the

ConjunctionsBut, because, and

Auxiliary verbsIs, are, be, can

அழுத்தமாக ஒலிக்க வேண்டிய சொற்கள்:

Main VerbsGO, COME, GIVE

Negative Auxiliary verbs
DON’T, DOESN’T, DIDN’T, CAN’T

NounsSARMILAN, BUS, SCHOOL, ENGLISH

AdjectivesBLUE, SMALL, CLAVER

Adverbs
USUALLY, ACTUALLY, QUICKLY,

இவற்றை முறையாக பயில்வதன் நன்மைகள்?

தாய் மொழி ஆங்கிலேயரின் விரைவான ஆங்கில ஒலிப்புக்களை எளிதாக விளங்கிக்கொள்ளல். நாமும் இந்த வாக்கிய அழுத்த முறைமைகளை சீக்கிரமே புரிந்துக்கொள்ளல். நாமும் ஆங்கிலேயருக்கு நிகரான ஆங்கில பேச்சாற்றலை வளர்த்துக்கொள்ளல். நம்மில் பலர் ஆங்கில இலக்கணம் கற்றவர்களாக இருந்தும், பொது இடங்களில் ஆங்கிலத்தில் பேசுவதற்கு கூச்சப்படும் பலர் இருக்கின்றனர். அவ்வாரானவர்களும் இவ் வாக்கிய அழுத்த முறைமைகளை விளங்கிக்கொள்வதன் ஊடாக பலர் மத்தியில் தடங்களின்றியும் கூச்சமின்றியும் பேசும் ஆற்றலை உருவாக்கிக் கொள்ளலாம்.

எனவே ஒரு வாக்கியத்தின் "வாக்கிய அழுத்தம்" எந்தெந்த இடங்களில் பயன்பட வேண்டும் என்பதை அறிந்துக்கொள்வது சிறந்தது அல்லவா?

மேலும் துணுக்குகள்>>>

அன்புடன் அருண் HK Arun Download As PDF

ஆங்கிலம் மென்பொருள் பதிவிறக்கம்

ஆங்கிலம் பேசி பழகுதல் என்பது இன்றைய இணைய உலகில் எவ்வளவோ எளிதாகிவிட்டது! ஆங்கில ஒலிப்புகளை முறையாக கற்க விரும்புவர் அல்லது பேசி பயிற்சிப்பெற விரும்புவர் எவர்களுக்காயினும் இந்த குரல் வழி மென்பொருள் ஒரு வரப்பிரசாதம் என்றே கூறவேண்டும்.

இந்த மென்பொருளின் பயன்பாடுகள் என்னென்ன?

ஒரு ஆங்கிலச் சொல்லை அல்லது வாக்கியத்தை, ஆங்கிலத்தில் வாசித்துப் பார்க்க வேண்டும் என்றால், அவற்றை தட்டச்சி வாசிப்பதற்கான (Play) அழுத்தியை அழுத்தியவுடன் அது உரத்து வாசித்துக்காட்டும். ஆண் பெண் குரல்களில் வாசிக்கும் படி கட்டளையிட்டு பயன்பெறலாம்.

இன்று பல ஆங்கில இணையத்தளங்கள் தாம் வழங்கும் செய்திகளை குரல் வழி கேட்பதற்கான வசதியையும் கொண்டுள்ளன. அவ்வாறு இல்லாத ஒரு இணையத்தளத்தின் செய்தியை வெட்டி ஒட்டி இங்கே கேட்கலாம்; கேட்டு ஆங்கிலப் பயிற்சியும் பெறலாம். பி.டி.எப், எம்.எஸ். வேர்ட் கோப்புகளையும் இந்த மென்பொருள் கொண்டு வாசிக்கமுடியும்.

குறிப்பு:

நீங்கள் எழுதிய ஆவணங்களை இந்த மென்பொருள் கொண்டு வாசித்து பயிற்சி பெறுவதானால்; முற்றுப்புள்ளி, முக்காற்புள்ளி, அரைப்புள்ளி, காற்புள்ளி இடவேண்டிய இடங்களில் அவற்றை சரியாக இட்டு வாசிக்கும் படி கட்டளையிடுங்கள். இல்லையெனில் இடைவிடாது ஒரே தொடராக வாசிக்கத்தொடங்கிவிடும். ஏனெனில் இந்த மென்பொருள் நிறுத்தற்குறிகளை உணர்ந்து அதற்கேற்றவாறு வாசிக்கக்கூடியது. நீங்கள் எழுதிய ஒரு சொல் சிலவேளை ஆங்கிலச் சொல் அல்லாத ஒரு சொல்லென்றால் அது அவற்றை சொல்லாக உணராமல் எழுத்தாக உணர்ந்து வாசிக்கும்.

பதிவிறக்கம்:

இந்த மென்பொருளை இங்கே அழுத்தி பதிவிறக்கிக் கொள்ளலாம். சிறிய கட்டணம் செலுத்தி பதிவிறக்கிக்கொண்டால் மேலும் தெளிவாகக் கேட்கும் வசதியைப் பெறலாம்.

நன்றி
அன்புடன் அருண் HK Arun Download As PDF

ஆங்கிலப் பெயர்சொற்களின் பிரிவுகள் (Types of Nouns)

பொதுவாக பெயர்சொற்கள் (Nouns) என்பதற்கான வரைவிலக்கணத்தைப் பார்ப்போமானால் மனிதர்கள், உயிரினங்கள், இடங்கள், வாழ்வியல் ஆதாரங்கள், பொருற்கள், உணர்வுகள் போன்றவற்றை விவரிப்பதற்கான பெயர்கள் அல்லது சொற்கள் "பெயர்சொற்கள்" ஆகும்.

இப் பெயர்சொற்களை ஆங்கிலத்தில் பல்வேறு பிரிவுகளாக வகுத்துள்ளனர். அப்பிரிவுகளாவன:

Common Nouns - பொதுவான பெயர்சொற்கள்

man, boy, girl, shop, tree, clock, actor, mobile போன்றவை பொதுவான பெயர்சொற்கள் ஆகும்.

அட்டவணைப் பார்க்கவும்.

Proper Nouns - உரித்தானப் பெயர்சொற்கள்

Peter, Sarmilan, Tamilvani, Hong Kong, Vijai, Nokia போன்றவை குறிப்பிடுப் பெயர்சொற்கள் அல்லது உரித்தானப் பெயர்சொற்கள் எனப்படும்.

அட்டவணைப் பார்க்கவும்.

Countable Nouns - கணக்கிடுப் பெயர்சொற்கள்

car-cars, child-children, tree- two trees போன்று எண்னிக்கையை கணக்கிடக்கூடியப் சொற்களை கணக்கிடுப் பெயர்சொற்கள் என்று அழைக்கபடுகிறது.

அட்டவணைப் பார்க்கவும்.
Uncountable Nouns - கணக்கிடமுடியாப் பெயர்சொற்கள்

water, fire, air, alcohol, blood, cotton, education போன்றவை கணக்கிடாமுடியாப் பெயர்சொற்கள் எனப்படும்.

அட்டவணைப் பார்க்கவும்.
Collective Nouns - கூட்டுப் பெயர்சொற்கள்

a group of things, a flock of birds, faculty, audience, team, crowd போன்ற கூட்டம் அல்லது குழுக்களின் பெயர்களை (பலதின் சேர்க்கை) பெயர்களை "கூட்டுப் பெயர்சொற்கள்" என்றழைக்கப்படும்.

Concrete Nouns - உருவப் பெயர்சொற்கள்

Ford, dog, piano, herd, dancer, football, toy, White House, போன்ற தொடவும், பார்க்கவும் கூடியவற்றை "உருவப் பெயர்சொற்கள்" எனப்படுகின்றது. இவை பொதுவானப் பெயர்சொற்களாகவோ உரித்தானப் பெயர்சொற்களாகவோ இருக்கலாம். கணகிடுப்பெயர்சொற்களாகவோ கணக்கிடமுடியாப்பெயர்சொற்களாகவோ இருக்கலாம்.

Abstract Nouns - பண்புப் பெயர்சொற்கள்

intelligence, love, hate, bravery போன்றச் சொற்கள் எண்ணங்கள், குணங்கள், உணர்வுகள் போன்றவற்றை வெளிப்படுத்துவதால் அவற்றை "பண்புப் பெயர்சொற்கள்" என்றழைக்கப்படும்.

Compound Nouns - இணைவுப் பெயர்சொற்கள்

Blackboard, Homeland, without, wallpaper, brother-in-law போன்ற இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்களை இணைத்து இன்னுமொரு தனிச்சொல்லாக அல்லது தனிப்பெயராக பயன்படுபவற்றை இணைவுப்பெயர்சொற்கள் என்று அழைக்கப்படுகின்றது.

ஆங்கிலத்தில் பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் இப் பெயர்சொற்களின் அட்டவணைகள் எதிர்வரும் பாடங்களில் ஒவ்வொன்றாகத் தரப்படும். அப்போது அதனதன் மேலதிக விளக்கங்களையும் பெற்றுக்கொள்ளலாம்.

இன்று பொதுவான பெயர்சொற்கள் மற்றும் உரித்தானப் பெயர்சொற்கள் அட்டவணைகள் வழங்கப்பட்டுள்ளது.

ஏனையவை விரைவில் வழங்கப்படும்.

நன்றி

அன்புடன் அருண். Download As PDF

Tuesday, October 21, 2008

ஆங்கிலம் துணுக்குகள் 5 (Grammatical Person in English)

எனக்கும் எனது நண்பனுக்கும் சிறிய வாய்த்தர்க்கம் ஏற்பட்டு சில நாட்கள் ஆகின்றன. நான் அதை மறந்தும் விட்டேன். ஆனால் என் நண்பனோ அதை எமது சக பணியாளர் சர்மிலனிடம் கூறிக்கொண்டிருந்தான்.

அப்போது நான் அவனிடம் கேட்டேன்.

"எனக்கும் உனக்கும் தான் பிரச்சினை, இதை ஏன் நீ சர்மிலனிடம் கூறிக்கொண்டிருக்கின்றாய்?"

நண்பன் இவ்வாறு பதிலளித்தான். "சர்மிலன் நமது இருவருக்குமே நண்பன். அதனால் தான் அவனிடம் கூறினேன். தவிர நான் என் காதலியிடமோ, வேறு எந்தக் கழுதையிடமோ கூட கூறவில்லை." என்றான் சற்றுக் கடுகடுப்பாக.

நான் இவ்வாறு பதிலளித்தேன்.

"இதோ பார்! இது நீயும் நானும் மட்டுமே சம்பந்தப்பட்டப் பிரச்சினை. இது வேறு எந்த மூன்றாம் நபருக்கும் தேவையற்ற விடயம். சர்மிலன் நமது இருவருக்குமே நண்பர் என்றாலும், அவரும் இப்பிரச்சினையில் மூன்றாம் நபர்தான். அதேப்போன்றே உன் காதலியும், கழுதையும் கூட மூன்றாம் நபர்கள் தான்."

அப்படியானால் முதலாம் நபர் யார்?

நான் - முதலாம் நபர்.

நீ - இரண்டாம் நபர்.

சர்மிலன், காதலி, கழுதை - மூன்றாம் நபர்.

இப்பொழுது விளங்குகின்றதா? இது ஒரு உதாரணக் கதை மட்டுமேயாகும்.

SINGULAR - ஒருமை

I – நான் (First Person Singular – முதலாம் நபர்)

You – நீ (Second Person Singular – இரண்டாம் நபர்)

He, She, It - அவன், அவள், அது (Third Person Singular – மூன்றாம் நபர்)

PLURAL - பன்மை

We – நாம்/ நாங்கள் (First Person Plural – முதலாம் நபர் பன்மை)

You – நீங்கள் (Second Person Plural – இரண்டாம் நபர் பன்மை)

They – அவர்கள் (Third Person Plural மூன்றாம் நபர் பன்மை)

மின்னஞ்சல் ஊடாக கணேசன் என்பவர் “Third Person Singular, Second Person Singular” என்று எழுதியிருப்பது விளங்கவில்லை என வினவியிருந்தார். அவருக்கான பதிலையே இன்றைய ஆங்கிலம் துணுக்குகளில் பாடமாக தந்துள்ளோம். இப்பாடம் கணேசன் உற்பட எல்லோருக்கும் விளங்கக்கூடியாதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

மேலும் ஆங்கிலம் துணுக்குகள்

நன்றி
welcome to aangilam.blogspot.com, aangilam.com, English Grammar in Tamilஅன்புடன் அருண் Download As PDF

Friday, July 25, 2008

ஆங்கிலம் துணுக்குகள் 4 (Abbreviations / Acronyms)

"Abbreviation" என்பதன் தமிழ் அர்த்தம் "சுருக்கம்" என்பதாகும். இவை நீண்ட வாக்கியங்கள் அல்லது சொற்றொடர்கள் போன்றவற்றை எளிதாகப் பயன்படுத்துவதற்கு உதவுபவைகளாகும்.

உதாரணம்:

சுருக்கம்: BBC - முழு வாக்கியம்: British Broadcasting Corporation.

சுருக்கம்: MGR - முழுப்பெயர்: Maruthur Gopalan Ramachandran

இதுப்போன்று சுருக்கங்களாக பயன்படுத்தப்படுபவைகள் பல்லாயிரக் கணக்கில் உள்ளன. இவை நாடுகள், அமைப்புகள், நிறுவனங்கள், தொழிற்பெயர்கள், கற்கை நெறிகள், தகமைகள், தகவல் பெயர்கள் என்று மட்டுமல்லாமல் நீண்ட சொற்றொடர்களை சுருக்கிப் பயன்படுத்துதல், சொற்களையே சுருக்கிப் பயன்படுத்தல், பெயர்களை சுருக்கிப் பயன்படுத்தல் என இந்த "சுருக்கங்கள்" (Abbreviations) எண்ணற்றவை.

இவற்றை ஏன் பயன்படுத்தப்படுகின்றன?

1. மக்கள் மனதில் இலகுவாக நினைவில் நிற்பதற்கு.

2. எளிதாய் பேசுவதற்கு.

3. நீண்ட சொற்றொடர்களை எளிதாக எழுதுவதற்கும் பேசுவதற்கும்.

என இச்சுருக்கங்களைப் பலரும் விரும்பிப் பயன்படுத்துகின்றனர்.

இருப்பினும் இவற்றை கற்க விரும்புவோர் தத்தமது துறைசார் சுருக்கங்களை முதலில் கற்பதே பொருத்தமானதாக இருக்கும். இங்கே பொதுவாக எல்லோரும் பயன்படுத்தக் கூடிய சில சுருக்கங்களை கீழே காணலாம்.

இச் சுருக்கங்களை ஆங்கிலத்தில் இரண்டு விதமாக வகைப்படுத்தியுள்ளனர். ஒன்று "Initial Abbreviation" மற்றது "Acronym".

Initial Abbreviations சுருக்கங்கள்
-------------------------------------------------------------------------------------
முதலில் "Initial Abbreviations" சுருக்கங்களைப் பார்ப்போம். இவற்றை ஒரு நீண்ட வாக்கியத்தின் ஒவ்வொரு சொற்களினதும் முதல் எழுத்தை மட்டும் எடுத்து "கெப்பிட்டல்" எழுத்துக்களில் பயன்படுத்துபவைகள். கெப்பிட்டல் எழுத்தும் சிம்பல் எழுத்தும் கலந்து பயன்படுத்துபவைகள். சிம்பல் எழுத்துக்களில் மட்டுமே பயன்படுத்துபவைகள் என வகைப்படுத்தலாம்.

அநேகமாக இவற்றை பேசும் பொழுது ஒவ்வொரு எழுத்துக்களின் ஒலியையும் தனித்து தனித்து உச்சரிக்கவேண்டும்.

உதாரணம்:

ஏ.அய் - AI - Amnesty International

ஏ.பி.சி - ABC - American Broatcasting Company

பி.எம்.டப்ளிவ் - BMW - Bavarian Motor Works

மேலுள்ளவற்றைப் போன்றே கீழுள்ளவற்றையும் உச்சரிக்க வேண்டும்.

DND – Do Not Disturb

FYI – For your Information

FBI - Federal Bureau of Investigation

GB – Great Britain

IOU – I Owe You

LOL – Laugh Out Loud

ISI - Inter-Services Intelligence

MP – Member of Parliament

UNM – Under New Management

VIP – Very Important Person

CB - Criminal Bureau

CID - Criminal Investigation Department

CAT - Committee against Torture

CAT - Convention against Torture and Other Cruel, Inhuman or Degrading Treatment or Punishment.

CEDAW - Committee on the Elimination of Discrimination against Women. (Convention on the Elimination of all Forms of Discrimination against Women.)

CERD - Committee on the Elimination of Racial Discrimination (Convention on the Elimination of Racial Discrimination.)

CESCR - Committee on Economic, Social and Cultural Rights.

CHR - Commission on Human Rights

CMW - Committee on the Protection of the Rights of All Migrant Workers and Members of Their Families

CRC - Committee on the Rights of the Child (Convention of the Rights of the Child)

CSW - Commission on the Status of Women

CBI – Central Bureau of Investigation or Intelligence

CDC – Commonwealth Development Corporation

CE – Civil Engineer

CIA – Criminal Investigation Agency

CIA - Central Interlligence Agency

CID – Criminal Investigation Department

DPI - Department of Public Information

ECOSOC - United Nations Economic and Social Council

FAQ - frequently asked questions

GAOR - General Assembly Official Records

HRC - Human Rights Committee

ICC - International Criminal Court

ICCPR - International Covenant on Civil and Political Rights

ICERD - International Convention on the Elimination of All Forms of Racial Discrimination

ICESCR - International Covenant on Economic, Social and Cultural Rights

ICRC - International Committee of the Red Cross

ILO - International Labour Organization

IPKF - Indian Peace Keeping Forces

LTTE - Liberation Tigers of Tamil Eelam

NGO - Non-governmental organization

OHCHR - Office of the High Commissioner for Human Rights

RAW - Research and Analysis Wing

UDHR - Universal Declaration of Human Rights

UN - United Nations

UNAMIR - United Nations Assistance Mission for Rwanda

UNAMSIL - United Nations Mission in Sierra Leone

UNAVEM III - United Nations Angola Verification Mission III

UNCLOS - United Nations Convention on the Law of the Sea, also known as LOS

UNCRO - United Nations Confidence Restoration Operation in Croatia

UNCTAD - United Nations Conference on Trade and Development

UNDCP - United Nations Drug Control Programme

UNDOF United Nations Disengagement Observer Force

UNDP - United Nations Development Programme

UNEP - United Nations Environment Programme

UNESCO United Nations Educational, Scientific, and Cultural Organization

UNFICYP - United Nations Peacekeeping Force in Cyprus

UNFPA - United Nations Population Fund

UNHCR - United Nations High Commissioner for Refugees

UNHCRHR - United Nations High Commissioner for Human Rights

UNICEF - United Nations Children's Fund

UNICEP - United Nations International Comparison Programme

UNICRI - United Nations Interregional Crime and Justice Research Institute

UNIDIR - United Nations Institute for Disarmament Research

UNIDO - United Nations Industrial Development Organization

UNIFIL - United Nations Interim Force in Lebanon

UNIKOM - United Nations Iraq-Kuwait Observation Mission

UNITAR - United Nations Institute for Training and Research

UNMEE - United Nations Mission in Ethiopia and Eritrea

UNMIBH - United Nations Mission in Bosnia and Herzegovina

UNMIK - United Nations Interim Administration Mission in Kosovo

UNMIL - United Nations Mission in Liberia

UNMIS - United Nations Mission in the Sudan

UNMISET - United Nations Mission of Support in East Timor

UNMOGIP - United Nations Military Observer Group in India and Pakistan

UNMOP - United Nations Mission of Observers in Prevlaka

UNMOT - United Nations Mission of Observers in Tajikistan

UNMOVIC United Nations Monitoring and Verification Commission

UNOMIG - United Nations Observer Mission in Georgia

UNOCI - United Nations Operation in Côte d'Ivoire

UNOMSIL - United Nations Mission of Observers in Sierra Leone

UNOPS - United Nations Office of Project Services

UNRISD - United Nations Research Institute for Social Development

UNRWA - United Nations Relief and Works Agency for Palestine Refugees in the Near East

UNSC - United Nations Security Council

UNSMIH - United Nations Support Mission in Haiti

UNSSC - United Nations System Staff College

UNTAET - United Nations Transitional Administration in East Timor

UNTSO - United Nations Truce Supervision Organization

UNU - United Nations University

USA - United States of America

USSR - Union of Soviet Socialist Republics (தற்போது உடைந்துவிட்டது)

UAE - United Arab Emirates

UK - United Kingdom (நான்கு நாடுகளின்-ஐக்கிய இராச்சியம் England, Northern Ireland, Scotland, Wales.)

NAACP - National Association for the Advancement of Colored People

கல்விக்கான தகமைகளின் சுருக்கங்கள்

BA – Bachelor of Arts

BCL – Bachelor of Civil Law

BGL – Bachelor of General Law

B.Com., – Bachelor of Commerce

BD – Bachelor of Divinity

BDS – Bachelor of Dental Surgery

BL – Bachelor of Law

B.Lit., – Bachelor of Literature

BM – Bachelor of Medicine

B.Mus., – Bachelor of Music

B.Sc., – Bachelor of Science

BVSc., – Bachelor of Veterinary Science

DM – Doctor of Medicine

DSE – Director of School Education

DPH – Director of Public Instruction

DPH – Diploma in Public Health

D.Sc., - Doctor of Science

MA – Master of Arts

கணனித் துறைசார் சுருக்கங்கள்

AMD - Advanced Micro Devices

API - Application Programming Interface

CD - Compact Disc

CD-R - CD-Recordable

CD-ROM - CD Read-Only Memory

CD-RW - CD Re-Writable

CPU - Central Processing Unit

DRAM - Dynamic Random Access Memory

DVD - Digital Video Disc

WWW - World Wide Web

சொற்களின் சுருக்கங்கள்

அநேகமாக இவற்றில் முதல் எழுத்து ''கெப்பிட்டல்" எழுத்தாகவும் அதன் பின் வருபவை "சிம்பல்" எழுத்தாகவும் வரும். சிம்பல் எழுத்துக்களில் மட்டுமே எழுதப்படுபவைகளும் உள்ளன.

Mr - Mister (always abbreviated)

Mrs - Mistress (always abbreviated)

இச்சுருக்கங்கள் இரண்டும் பேசும் பொழுது முழுச்சொற்களாக பேசப்பட்டாலும், எழுதும் பொழுது எப்பொழுதும் சுருக்கமாகவே எழுதப்படுவன.

kg - kilogram(s)

km - kilometer(s)

B.C. - Before Christ

A.D. - Anno Domini (in the year of the Lord) (லத்தீன் சொற்கள்)

a.m. - Ante Meridiem - முற்பகல் (before midday) (லத்தீன் சொற்கள்)

p.m. - Post Meridiem - பிற்பகல் (after midday) (லத்தீன் சொற்கள்)

etc. - et cetera ("and the others", "and other things", "and the rest") (லத்தீன் சொற்கள்)

e.g. - exempli gratia (means "for example) (லத்தீன் சொற்கள்)

AC - Alternating Current

DC - Direct Current

Ltd - Limited

Acronyms சுருக்கப்பெயர்கள்
-------------------------------------------------------------------------------------
"Acronyms" என்றால் என்ன?

"Acronyms" என்றால் ஒரு சொற்றொடரின் முதல் எழுத்துக்களை எடுத்து அவற்றை இன்னுமொரு புதியச் சொல் போன்று பேசுப்படும் சுருக்கப்பெயர்களாகும். இவற்றில் நாம் மேலே பார்த்தைப் போன்று எழுத்துக்களை தனித்தனியாக உச்சரிப்பதில்லை; சொற்களின் முதல் எழுத்துக்களை கூட்டுச்சேர்த்து இன்னுமொரு புதியச் சொல்லாகவே ஒலிக்கப்படுபவைகள் ஆகும். (In this case the first letters from each word actually form another word)

அநேகமாக சொற்கள் என்றே நினைத்து பேசும் பலருக்கு, இவை பலக் கூட்டுச்சொற்களின் "சுருக்கம்" என்பது தெரியாமலும் இருக்கலாம்.

உதாரணம்:

LASER - Light Amplification by Stimulated Emission of Radiation

இதனை "எல்-ஏ-எஸ்-ஈ-ஆர்" என உச்சரிப்பதில்லை. "லேஸzர்" என்றே உச்சரிக்க வேண்டும். இதுப்போன்ற சுருக்கங்களையே ஆங்கிலத்தில் "Acronym" என்றழைக்கின்றனர். மேலும் சில "Acronyms".

SARS - Severe Acute Respiratory Syndrome.

AIDSAcquired Immune Deficiency Syndrome.

BAFTABritish Academy of Film and Television Arts.

DEFRADepartment for Environment Foods and Rural Affairs.

JPEGJoint Photographic Experts Group.

SALTStrategic Arms Limitation Treaty.

NATONorth Atlantic Treaty Organization.

NASANational Aeronautical and Space Administration.

OPECOrganization of Petroleum Exporting Countries.

WHOWorld Health Organization.

RADAR - Radio Detection And Ranging.

RAMRandom Access Memory.

ஆங்கிலம் கற்க விரும்பும் ஆர்வலர்கள் அல்லது மாணவர்கள் இதுப்போன்ற சுருக்கங்களின் பயன்பாடுகளையும், சுருக்கப்பெயர்களின் பயன்பாடுகளையும் அறிந்து வைத்துக்கொள்ளல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் ஒரு ஆங்கில அகரமுதலியில் ஏதாவது ஒரு சொல்லுக்கான பொருளை அல்லது விளக்கத்தைப் பார்க்க எத்தனிப்பதானாலும் முதலில் அந்த அகரமுதலியின் பயன்படுத்தப்பட்டிருக்கும் (Abbreviation used in this Dictionary) சுருக்கப் பயன்பாடுகளை அறிந்து வைத்துக்கொள்ளல் மிக முக்கியமானதாகும்.

Download As PDF

Wednesday, July 2, 2008

ஆங்கிலம் துணுக்குகள் 2 (Use a/an - Vowels and Consonant)

ஆங்கிலத்தின் மொத்த 26 எழுத்துக்களில் உயிர் எழுத்துக்கள் - 5, மெய் எழுத்துக்கள் - 21 ஆகும்.

உயிர் எழுத்துக்கள் Vowels Sound

a e i o u = 5

மெய் எழுத்துக்கள் Consonant Sound

b c d f g h j k l m n p q r s t v w x y z = 21

பொதுவாக ஆங்கிலத்தில் ஒரு/ஓர் என்பதைக் குறிக்க பெயர்சொற்களுக்கு முன்பாக a, an சுட்டிடைச் சொற்கள் பயன்படுத்தப் படுகின்றன. இவற்றில் "a" பயன்படுத்தும் இடங்கள் எவை? "an" பயன்பத்தும் இடங்கள் எவை? என்பதைப் பார்ப்போம்.

பொதுவாக மெய் எழுத்துக்களில் ஆரம்பிக்கும் பெயர்ச் சொல்லுக்கு முன்னால் "a" பயன்படுத்துகின்றது.

உதாரணமாக:

I am a Sri Lankan
நான் ஒரு இலங்கையன்.

I am a student.
நான் ஒரு மாணவன்.

This is a car
இது ஒரு மகிழூந்து.

This is a book.
இது ஒரு புத்தகம்.

He is a teacher.
அவர் ஒரு ஆசிரியர்.

பொதுவாக a, e, i, o, u போன்ற உயிர் எழுத்துக்களில் ஆரம்பிக்கும் பெயர் சொற்களுக்கு முன்னால் ஓர்/ஒரு என்பதைக் குறிக்க "an" பயன்படுத்தப் படுகின்றது.

உதாரணம்:

This is an animal - (animal begins with a vowel sound)
இது ஒரு மிருகம்.

I am an Indian
நான் ஒரு இந்தியன்.

I am an English teacher
நான் ஒரு ஆங்கில அசிரியர்.

He is an old man
அவர் ஒரு வயதான(வர்) மனிதர்.

கவனிக்கவும்

மேற் கூறிய விதிமுறைகள் மாறுப்படும் இடங்களும் உள்ளன. கீழுள்ள உதாரணங்களைப் பாருங்கள்.

உயிர் எழுத்துக்களான a, e, i, o, u போன்ற பெயர் சொல் முன்னால் வந்தாலும் ‘a’ வாகவே பயன்படுபவைகள்.
a user - யூசர் என்பதன் சத்தம் ‘உ” சத்தமாக இல்லாமல் “யு” வாக ஒலிப்பதால் ‘a’ பயன்படுத்தப் படுகிறது. (sounds like 'yoo-zer,' i.e. begins with a consonant 'y' sound, so 'a' is used)

a university - இதன் சத்தமும் “உ” சத்தமாக இல்லாமல் “யு” என்றே ஒலிப்பதை அவதானியுங்கள்.

a European country – இதிலும் ‘இ’ சத்தமாக இல்லாமல் ‘யு’ போன்று ஒலிப்பதே அதற்கான காரணம். (sounds like 'yer-o-pi-an,' i.e. begins with consonant 'y' sound)

மெய் எழுத்து முன்னால் வந்தும் ‘an’ பயன்படும் இடங்கள்.
an hour - என்பதில் “hour” என்பது “our” போல் “அ” உயிர் எழுத்தின் சத்தமாக ஒலிப்பதால் இவ்வாறு “an” பயன்படுத்தப்படுகின்றது. (sounds like 'a-our,' begins with vowels 'a' sound)

an honour - இதுவும் “அ’ உயிர் எழுத்தின் சத்தமாகவே ஒலிக்கிறது.

இதற்கான காரணம் உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக்கள் என்று மட்டும் பார்க்கப்படாமல், உயிர் எழுத்துக்களாக ஒலிப்பவைகள், மெய் எழுத்துக்களாக ஒலிப்பவைகள் என உச்சரிப்புக்கு அமையவே இவ்வாறு பயன்படுத்தப் படுகின்றதாம்.

இது போன்ற பயன்பாடுகளின் பொழுது ஆங்கிலேயர்களும் பிழை விட்டுவிடும் சந்தர்ப்பங்கள் இருப்பதாகக் கூறப்படுகின்றது.

இவற்றை நாம் கவனமாக அவதானித்துக் கற்பது மிகவும் பிரயோசனமானதாக இருக்கும்.

மேலும் துணுக்குகள்

நீங்கள் இந்த ஆங்கிலம் வலைத்தளத்திற்கு புதிதாக வருகைத் தந்தவரானால், உங்கள் பயிற்சிகளை ஆங்கில பாடப் பயிற்சி 1 லிருந்தே தொடருங்கள். முக்கியமாக "Grammar Patterns" களை மனப்பாடம் செய்துக்கொள்ளுங்கள். பின் இலக்க வரிசை கிரமத்தில் மற்றப் பாடங்களை தொடருங்கள். அதுவே இந்த ஆங்கிலப் பயிற்சி நெறியை தொடர மிகவும் எளிதானதாக இருக்கும்.

நன்றி
அன்புடன் அருண் HK Arun
ஆங்கிலப் பாட, ஆங்கிலப் பாடம், ஆங்கிலப் பாடங்கள், Article Aangilam, சுட்டுப்பெயர் சொல், சுட்டிடைச்சொல், சுட்டிடைப்பெயரெச்சங்கள், சுட்டிடைப் பெயர் எச்சங்கள், சுட்டிடைப் பெயரெச்சம், பெயர்குறி, பெயர்குறிச் சொற்கள், பெயர்சொற்குறி, பெயர்சொற்குறிகள், பெயர் சுட்டுச்சொற்கள் Download As PDF

Monday, June 30, 2008

ஆங்கிலம் துணுக்குகள் 3 (Date and Money)

சாதாரணமாக தமிழில் "ஆண்டை" இலக்கங்களில் எவ்வாறு எழுதுகின்றோமோ; அவ்வாறே பேசுகின்றோம். எழுத்துக்களில் எழுதும் பொழுதும் அவ்வாறே எழுதுகின்றோம்.

ஆனால் ஆங்கிலத்தில் அப்படியில்லை. அநேகமாக நான்கு இலக்கங்களில் எழுதும் "ஆண்டை" பேசும் பொழுது இரண்டாகப் பிரித்து இரட்டை இரட்டை இலக்கங்கள் போன்றே பேசப்படுகின்றது.

உதாரணம்:

1954 – nineteen fifty-four

1977 – nineteen seventy-seven

1983 – nineteen eighty-three

தமிழில் பேசுவதுப் போன்றே ஒரே தொடராகப் பயன்டுத்தும் சந்தர்ப்பங்கள்.

2000 = two thousand - இரண்டாயிரம்

2001 = two thousand and one - இரண்டாயிரத்து ஒன்று

2002 = two thousand and two - இரண்டாயிரத்து இரண்டு

2009 = thousand and nine - இரண்டாயிரத்து ஒன்பது

இனி மீண்டும் இரட்டை இரட்டை இலக்கங்களாக மாறுப்படுகின்றன.

2010 = twenty ten

2011 = twenty eleven

2012 = twenty twelve

கவனிக்கவும்.

2010 = twenty ten - இதனை "two thousand and ten" என்று கூறுவதில்லை.
Money

பொதுவாக தமிழிலும் சரி ஆங்கிலத்திலும் சரி நாணயத்தின் தொகையை இலக்கங்களில் எழுதும் போது, குறிப்பிட்ட நாணயத்திற்கு வழங்கப்படும் பெயரை அதாவது 'ரூபாய்' அல்லது 'டொலர்' என்பதை இலக்கங்களிற்கு முன்னதாகவே எழுதப்படுகிறது.

உதாராணமாக:

ரூ100

$150

£200

ஆனால் பேசும் பொழுது நாணயத்தின் தொகையை முதலில் கூறி, அதன் பின்பே நாணயத்தின் பெயரைக் குறிப்பிடப்படுகின்றது.

உதாரணமாக:

ரூ 100 - Hundred rupees

ரூ 150 - One hundred and fifty rupees

இவற்றையும் பாருங்கள்

ரூ120.55 = One hundred and twenty rupees, fifty-five cent.
நூற்றி இருபது ரூபாய்(கள்) ஐம்பத்து ஐந்து சதம்.

$225.10 = Two hundred and twenty five dollars, ten cent.
இருநூற்றி இருபத்தைந்து டொலர்(கள்) பத்து சதம்.

£450. 21 = Four hundred and fifty pounds, twenty-one pence.
நானூற்றி ஐம்பது பவுண்ட்ஸ்(கள்) இருபத்தி ஒரு ப்பென்ஸ்

மேலும் துணுக்குகள் Download As PDF

ஆங்கிலம் துணுக்குகள் Aangilam Mini Lessons

வணக்கம் உறவுகளே!

இன்றிலிருந்து “ஆங்கிலம் துணுக்குகள்” எனும் ஒரு பகுதியையும் தொடர்ந்து வழங்கலாம் என்றுள்ளோம். இது எமது வழமையான “ஆங்கில பாடப் பயிற்சி” திட்டத்திலிருந்து வேறுபட்டது. இருப்பினும் இத்துணுக்குகள் ஆங்கிலம் கற்கும் சிலருக்கு, குறிப்பாக ஆரம்ப நிலை ஆங்கிலம் கற்போருக்குப் பயன்படும் என கருதுகிறோம்.

நீங்கள் இந்த "ஆங்கிலம்" வலைத்தளத்திற்கு புதிதாக வருகைத் தந்தவரானால், எமது வழமையான ஆங்கில பாடப் பயிற்சிகளை தொடர விரும்புவரானால் ஆங்கில பாடப் பயிற்சி 1 இலிருந்தே தொடருங்கள். முக்கியமாக "Grammar Patterns" களை மனப்பாடம் செய்துக்கொள்ளுதல் பயனுள்ளதாக இருக்கும்.
ஒரு சொல்லை, ஒரு வாக்கியத்தை, ஏன் ஒரு முழு ஆக்கத்தையே வேண்டுமானாலும் கெப்பிட்டல் எழுத்துக்களிலேயே (CAPITAL LETTERS) எழுதலாம். அது உங்கள் விருப்பம்.

ஆனால் ஆங்கில சிற்றெழுத்துக்களில் (Simple Letters) எழுதுவதானால், ஆங்கில மொழிக்கே உரிய சிறப்பியல்புகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியது மிக முக்கியம்.

How To Use Capital Letters

1. ஒரு வாக்கியத்தின் ஆரம்பத்தின் முதல் எழுத்து எப்பொழுதும் கெப்பிட்டல் எழுத்தாகவே இருக்கவேண்டும். (Capital letters are always used at the beginning of a sentence.)

உதாரணம்:

The car is running
I am looking for a job.
He doesn’t understand.
Do you speak in English?
Where are you going?

2. கிழமை, மாதம், பெயர், ஊர், நாடு, மொழி, மதம், போன்றவற்றை எழுதும் பொழுது அதன் முதல் எழுத்தை கட்டாயம் கெப்பிட்டல் எழுத்திலேயே எழுத வேண்டும். இவை வாக்கியத்தின் மத்தியில் வந்தாலும் அப்படித்தான்.

2. கிழமைகள்: Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday

3. மாதங்கள்: January, February, March, April, May, June, July, August, September, October, November, December

4. பெயர்கள்: Ellalan, Iravanan, Sarmilan, Kavitha, Thamilovia, Tamilnenjan, Tamilselvan

5. ஊர்கள், நகரங்கள்: Jaffna, Chennai, Point Pedro, Betticola, Tricomalee, Madurai, Kilinochchi

6. நாடுகள்: Tamileelam, India, America, British, France, Netherland, Norway, Japan

7. மொழிகள்: Tamil, English, Chinese, Latin, French, Indhi

8. மதங்கள்: Hindu, Islam, Christian, Buddhism - God, The Prophet Mohammed, Jesus

9. ஆங்கிலத்தில் "நான்" என்று குறிப்பதற்கு எப்போழுதுமே கெப்பிட்டல் "I" யை மட்டுமே பயன்படுத்த வேண்டும். (சிறிய "i" பயன்படுத்துவதில்லை)

10. "சுருக்கப் பயன்பாடுகள்" அதாவது ஒரு முழுச் சொல் அல்லது வாக்கியத்திற்குப் பதிலாக அதன் முதல் எழுத்துக்களை மட்டும் சுருக்கமாக பயன்படுத்தல். இவற்றை ஆங்கிலத்தில் "Abbreviation" என்றழைப்பர்.

உதாரணம்: தொழில் தகமைகளின் சுருக்கம்: MBBS, LLB
சில நாடுகளின் பெயர்களுக்கான சுருக்கம்: USA, UK, UAE

சிலரது பெயர்களின் சுருக்கம்: MGR, MRR

அதேவேளை ஒரு வாக்கியத்தின் ஒவ்வொரு சொற்களின் முதலெழுத்தையும் கெப்பிட்டல் எழுத்தாக எழுதும் வழக்கம் சிலரிடம் காணப்படுகின்றன. இது இலக்கணப் பிழையானது. (தலைப்புகளை வேண்டுமானால் அப்படி எழுதலாம்.)

மேலும் இதுப் போன்ற சுருக்கங்களை "ஆங்கிலம் துணுக்குகள் Abbreviation" பக்கத்தில் பாருங்கள்.
மேலும் துணுக்குகள்>>>
Download As PDF
ஆங்கிலச் சொல் தேடி:- ஆங்கில இலக்கணம் தொடர்புடைய, தமிழ் அல்லது ஆங்கிலச் சொல்லை உள்ளிட்டு தொடர்புடையப் பாடத்தை அல்லது அதன் பொருளை இங்கே தேடிப் பெறலாம்.
உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவுசெய்து பாடங்களை மின்னஞ்சல் ஊடாகப் பெறுங்கள் Enter your e

 

No comments:

Post a Comment