Thursday, April 12, 2012

மும்தாஜ் சாஜஹானை எதற்காக ஏமாற்ற வேண்டும்? அதிரடித் தகவல்கள். (வீடியோ இணைப்பு)


ஒரு தடவை மன்னன் சாஜஹானுக்கு காணிக்கை கொண்டு வந்த குழுவில் ஓர் அழகிய இளம் பெண் இருந்தாள். அவள் அப்படியே ஜொலித்தாள்.
அவள் அணிந்திருந்த வைரமணிகள் கூட சாஜஹானைக் கவர்ந்தன. மன்னரின் பொழுதுபோக்கு வரத்தினங்களை எடை போட்டு ஆய்வது. அவள் கொண்டுவந்த காணிக்கையோ வைரமணிகள்.
அவை தன் கருவூலத்திலில்லாத வேலைப்பாடமைந்த, பட்டை தீட்டிய வைரமணிகள் ஆகும். அரசர் மற்றவர்களை விரைவாக அனுப்பி விட்டு அவளிடம் தனியாகப் பேசி காணிக்கையை ஆசையுடன் பெற்று வழியனுப்பினார். சிறிது நேரத்தில் வைரங்களை எறும்புகள் மொய்த்திருந்தன. எல்லாம் இனிப்புகள்.
தான் ஏமாந்ததை சாஜஹான் உணர்ந்தாலும் அந்தப் பெண்ணின் குறும்புத்தனத்தையும் வேலைத் திறனையும் மெச்சி அவள் மேல் காதல் கொண்டார். அந்த அழகிதான் மும்தாஜ். சாஜஹானின் மனைவியன் பெயர்கள் என்ன? சாஜஹானின் மனைவி மும்தாஜ் எவ்வாறு இறந்தார்?மூன்று மனைவிகள் ஷாஜஹானுக்கு அதில் முதலாமவர் அக்பர்பாடி மஹால் அடுத்தவர் கண்டாரி மஹால் மூன்றாமவர்தான் மும்தாஜ் மஹால்.
1631ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஏழாம் திகதி அகமத் நகர், பீஜப்பூர் சுல்தான்களையும் வழிக்குக் கொண்டுவருவதற்காக மத்திய இந்தியாவுக்குப் படையோடு ஷாஜஹான் சென்றிருந்தபோது, மும்தாஜ் பதினாலாவது குழந்தையைப் பெற்றெடுத்தார். பிரசவம் முடிந்த கையோடு மும்தாஜுக்குத் திடீரென்று ஜன்னி பிறந்தது.ஷாஜகானுக்கு தகவல் சொல்லப்பட் டது.
பதறிப்போய் ஓடிவந்தார் ஷாஜகான். அருமை மனைவியை அழுதபடி வாரி மடியில் இருந்திக்கொண்டார்.சில நிமிடங்கள் கணவன் கரத்தை இறுகப் பற்றிக்கொண்டிருந்த மும்தாஜின் தலை சாய்ந்தது. அன்பு மனைவியின் பிரிவைத் தாக்கமுடியாமல் துவண்டுபோனார் மன்னர். அந்த அன்புக்காக உளிச்சத்தங்களால் அறிவிக்கப்பட்ட வெள்ளை மௌனம்தான் அந்த தாஜ்மஹால். உலக வரலாற்றில் தாஜ்மஹாலைப் போல் ஒரு இனிய கல்லறை இன்னும் எத்தனை ஜென்மங்களிலும் உதயமாகப் போவதில்லை.
மும்தாஜ்எனும் அழகிய மனைவியின் மீது ஷாஜகான் வைத்திருந்த நேசத்தின் கலை வடிவம் அது.வாழ்வில் ஒரு முறையாவது காண வேண்டிய அந்த கலை மிகு கட்டிடம் எழுந்த கதை பெருங்கதை. தட்சிணப் பிரதேசம் பர்ஹான்பூர் என்ற ஊரில்தான் முதன் முதலாக மும்தாஜின் உடல் புதைக்கப்பட்டது.
இதற்குப் பின் ஆறு மாதம் கழித்து அவரது உடல் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ஆக்ராவில் இப்போது தாஜ்மஹால் உள்ள இடத்தில் புதைக்கப்பட்டது.மும்தாஜ் இறந்து சரியாக ஒரு வருடம் கழித்து ஷாஜஹான் களத்தில் இறங்கினார். வெனிஸ் நகரத்து வெரோனியா, துருக்கி நாட்டு உஸ்தாக் இசா அபாண்டி, லாகூரைச் சேர்ந்த அகமத் எனப் பலரும் வந்திருந்து ஷாஜகானும், கூட்டுச் சேர்ந்து அமைத்த மொத்த வடிவமே இன்றைய தாஜ்மஹால்.
அடுத்த கட்டமாக கட்டிடக் கலைஞர்கள், சிற்பிகள், கொத்தனார்கள் என இருபதாயிரம் பேர் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டு மள மளவென பணிகளைத் தொடங்கினார் ஷாஜஹான்.1632- ம் ஆண்டு வேலைத் தொடங்கி 1652 வரை சுமார் 20 ஆண்டு கால உழைப்பின் சின்னம்தான் இந்த தாஜ்மஹால்ஸ.
அதற்குப் பிறகு கூட ஒரு ஆண்டுக்கு வெளியேயுள்ள சுற்றுப் புறத்தில் மிக நுண்ணிய வேலைகள் நடந்தன. தாஜ்மஹாலைச் சுற்றி 42 மீட்டர் உயரத்திற்கு நிற்கும் 4 மினார்களும் (தூண்) லேசாக வெளிப்புறம் சாய்த்து வைத்து கட்டியிரிக்கிரார்கள். காரணம் ஏதேனும் அசம்பாவிதத்தில் அந்த தூண்கள் விழுந்தால் கூட தாஜ்மஹால் மீது பட்டுவிடக் கூடாதே என்ற காரணுத்துக்காகத்தான்.
தாஜ்மஹாலின் வெளிப்புறக் கதவுகள், சுவர்களில் பதிக்க இந்தியாவைத் தவிர ரஷியா, திபெத், பாரசீகம் என பல இடங்களில் இருந்தும் வைரம், வைடூரியம், முத்து, பவளம் என பல விதம் விதமாக வரவழைத்து பயன்படுத்தி அழகு பார்த்தார் ஷாஜஹான்.புனித குரானிலிருந்து குறிப்பிட்ட வாசகங்களை தேர்ந்தெடுத்து அவற்றை கல்லறையைச் சுற்றிலும் உள்ள சுவர்களில் பொறிப்பது என்று முடிவு செய்தார்.
இதற்காக உலகிலேயே மிகத் திறமையான பாரசீக கலைஞர் அமானாத்கான் பெயர் சிபாரிசுச் செய்யப்பட்டது. நான் எந்த வேலைச் செய்தாலும் அதில் என் கையெழுத்தைப் போடுவேன் என்று அடம்பிடித்த அவரை சரிஸகையெழுத்து போட்டுக்கொள்ளுங்கள் என்று அனுமதிக் கொடுத்து வரவழைத்தார் ஷாஜஹான். இன்றைக்கும் அந்தச் சிற்பியின் கையழுத்தைக் காணலாம். தாஜ்மகாலில் இவரது கையழுத்தைத் தவிர வேறு எவரின் பெயரும் கிடையாது. இப்படி அங்குலம் அங்குலமாக பொன் நகையை உருவாக்குவது போல் கட்டினார் ஷாஜஹான்.
தாஜ்மஹால் கட்டி முடிக்கப்பட்டு கொஞ்சம் காலம் முஸ்லீம்கள் மட்டுமே பார்க்க அனுமதிக்கப்பட்டனர்.பிற்பாடு உலகெங்கிலும் இருந்து பலர் வர வர அந்தத் தடை தானாகவே நீங்கிப் போனது. இத்தகைய அழகான தாஜ்மகால் அதன்பிறகு வந்த ஆங்கிலேயெர்களின் கண்களை பறிக்காமல் இருக்குமா? பல ஆங்கில அதிகாரிகள் சுவர்களில் பதிக்கப் பட்ட வைர, வைடூரியங்களை சுரண்டி எடுத்துக் கொண்டு போனார்கள்.
லார்டு வில்லியம் பெண்டிங் என்பவர் இடித்து விடலாம் என்று ஐடியா கொடுத்தார். இன்னும் பல ஆங்கிலேய அதிகாரிகள் தாஜ்மகாலை ஒவ்வொரு கல்லாக பெயெர்தெடுத்து, கப்பலில் ஏற்றிக் கொண்டு போய், இங்கிலாந்தில் இறக்கி மீண்டும் செட்டப் செய்து விடலாம் என்று ஆலோசனை வழங்கினார்.
இறைவனின் கருணையால்ஸ இன்றைக்கும் இப்படியொரு அற்புதக் கட்டிடம் இந்தியாவில் இருக்கிறதென்றால் அதற்குக் காரணம் அப்போது வைஸ்ராயாக இருந்த கர்சன் பிரபுஸகலைஞர்களின்பால் மிகுந்த ஆர்வமும், ஆசையும் கொண்டிருந்த அவர் மற்றவர்களின் யோசனையை தூரத் தூக்கி எறிந்துவிட்டு தாஜ்மஹாலை நல்ல முறையில் பராமரிக்க ஒரு சட்டமே இயற்றினார். அதோடு மட்டுமல்ல..

இப்போது நீங்கள் தாஜ்மஹாலுக்குப் போனால் மும்தாஜ் – ஷாஜஹான் கல்லறைகளுக்கு மத்தியில் மேலே ஸ ஒரு அழகான பித்தளை விளக்கு தொங்கிக் கொண்டிருக்கும். இதனைக் கொய்ரோவிலுருந்து வாங்கி, இங்கு தொங்கவிட்டவரே இந்த கர்சன் பிரபுதான்.இந்த தாஜ்மஹால் கட்டுவதற்கு 1000 யானைகளும், 40000 பணியாளர்களும் வேலை செய்யப்பட்டனர்.
மும்தாஜின் கடைசி நாள்:
மும்தாஜுக்கு மொத்தம் 13 குழந்தைகள் (1613- 1631) க் குள் இந்தக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். இதில் 7 குழந்தைகள் மிக சிறுவயதிலேயே இறந்து போனது. உயிருடன் தாரா, சூசா, அவுரங்கசீப், மூரத் ஆகிய 4 ஆண் குழந்தைகளும் சாகனார, ரோனார, கவுஷனாரா ஆகிய 3 பெண் குழந்தைகளும் இருந்தார்கள்.இதில கடைசிப் பெண்ணான கவுஷனாராவைப் பெற்றுடுக்கும்போதுதான் பிரசவ வலி தாள மாட்டாமல் 07-06-1631 ல் மும்தாஜ் இறந்துபோனாள்.
தாஜ்மஹால் உண்மை ரகசியம்: (காதலின் சின்னம்)
தாஜ் மஹால் ஷாஜஹானால் கட்டப் பட்டது கிடையாது. அது அவர் ஒரு ராஜ்புட் அரசரிடமிருந்து (ஜெய் சிங்) பிடுங்கியது. மும்தாஜுக்காக ஷாஜஹான் தாஜ் மஹாலைக் கட்டியாதக் கூறப்படுவது உலக மஹா டகால்டி.
இப்ப விஷயத்துக்கு வருவோம்.
தாஜ் மஹால்ல் விஷயத்தில் உலகம் முழுவது ஏமாற்றப் பட்டுள்ளது. தாஜ் மஹால் மும்தாஜின் சமாதி அல்ல அது ஒரு புராதான சிவன் கோயில் என்று பேராசிரியர் பி. என். ஓக் குறிப்பிடுகிறார். முன் காலத்தில் தாஜ் மஹால் தேஜோ மஹாலயா என்ற பெயரால் அழைக்கப் பெற்றது என்கிறார்.
நம்ம ஷாஜஹான் ராஜ்புட் அரசர் ஜெய் சிங் கிட்டேர்ந்து இந்த பெரிய பில்டிங்கை ஆட்டைய போட்டதா சொல்றார். அது மட்டுமின்றி ஷாஜஹான் தன் சொந்த குறிப்புகளில் (பாத்ஷாநாமா) ஆக்ராவில் மிகவும் அழகான ஒரு மாளிகை தனை ஆட்டையைப் போட்ட விவரத்தைக் குறித்து வைத்துள்ளார்.
எனினும் அது தான் தாஜ் மஹால் என அவர் எழுதவில்லை. முன்னால் ஜெய்பூர் மஹா ராஜாவின் குறிப்புகளில் ஷாஜஹான் ராஜ்புட் மன்னன் ஜெய் சிங்கிற்கு இது குறித்து அனுப்பிய இரண்டு ஆணைகள் இன்னும் பத்திரமாய் உள்ளன என்றும் கூறியுள்ளார்.
முகலாயர்கள் ஆண்ட காலத்தில் கோயில்களைலும் பெரிய மாளிகைகளைலும் இறந்த முகலாய மன்னர்களையும் ராணிகளையும் புதைப்பதை வழக்கமாய் கொண்டிருந்தனர் என்பது எல்லோரும் அறிந்ததே. உதாரணம். ஹுமாயுன், அக்பர், எத்மத் உத் தவுலா, சப்தர்ஜங் இவர்கள் அனைவரும் புதைக்கப் பட்டுள்ள இடங்கள் பெரிய மாளிகைகளே என்பது குறிப்பிடத் தக்கது.
பேராசிரியர் ஓக் தன் விசாரணை தனை தாஜ் மஹால் எனும் பெயரிலிருந்து துவக்கினார். இது பற்றி அவர் மஹால் எனும் வார்த்தை அப்கானிஸ்தான் முதல் அல்ஜீரியா வரை எந்த ஒரு நாட்டிலும் வழக்கத்தில் இல்லை என்று குறிப்பிடுகிறார். வழக்கத்துக்கு மாறான இந்த மஹால் எனும் சொல் நிச்சயம் மும்தாஜ் மஹால் எனும் பெயரிலிருந்து வரவில்லை என்று உறுதியாய்க் கூறுகிறார். முதலாவதாய் மும்தாஜின் முழுப் பெயர் மும்தாஜ் உல் ஜமானி என்பதாகும்.
இரண்டாவதாய், மும்தாஜ் என்ற பெயரின் முதல் மூன்று எழுத்துக்களை நீக்கி விட்டு தாஜ் என்ற பெயரைப் பெற்றிருப்பது சற்றே விசித்திரமானது என்றும் அவ்வாறு நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும் கூறுகிறார். மேலும் ஷாஜஹான் மும்தாஜின் காதல் கதை தாஜ் மஹால் விவகாரத்தை மறைக்க உருவாக்கப் பெற்ற ஒரு அம்புலிமாமா கதை என்கிறார்.
பல ஆண்டுகளுக்கு முன்னர் நியுயார்க்கை சேர்ந்த பேராசிரியர் மார்வின் மில்லர் தாஜ் மஹாலின் சில மாதிரிகளை எடுத்து கார்பன் டேட்டிங் முறைப் படி தாஜ் மஹாலின் ஆயுளை கணித்தார். அவர் கருத்துப் படி தாஜ் மஹாலின் வயது 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்று குறிப்பிட்டுள்ளார். ஆல்பர்ட் மாண்டேஸ்லோ என்பவர் 1638ஆம் ஆண்டு (மும்தாஜ் இறந்து ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு), ஆக்ரா வந்த்துள்ளார்.
அவருடைய குறிப்புகளில் தாஜ் மஹால் கட்டப் படுவதற்கான எந்த ஒரு குறிப்பும் இல்லை. மேலும் பீட்டர் மண்டி என்ற ஒரு ஆங்கிலேயர் மும்தாஜ் இறந்து ஒரு ஆண்டுக்குள் ஆக்ரா வந்த போது தன் குறிப்புகளில் இன்றைய தாஜ் மஹாலின் கலை நயம் பற்றி மிகவும் புகழ்ந்து எழுதியுள்ளார். வரலாறின் படி தாஜ் மஹால் மும்தாஜ் இறந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டி முடிக்கப் பட்டது என்பது நினைவிருக்கட்டும். மேலும் பேராசிரியர் ஓக் அவர்கள் ஏகப்பட்ட கட்டிட நுணுக்கங்களை மையமாகக் கொண்டு அது ஒரு இந்துக் கோயில் என்று அடித்துக் கூறுகிறார்.
இன்றும் தாஜ் மஹாலின் பெரும் பகுதி பொது மக்களின் பார்வைக்கு திறந்து விடப்படுவதில்லை. அதன் காரணம் என்னவென்று கேட்ட எவருக்கும் கிடைக்கும் பதில் – பாதுகாப்பு எனும் ஒற்றை வார்த்தை தான். அது மட்டுமின்றி தாஜ் மஹாலினுள் தலையில்லாது ஒரு சிவன் சிலையும் இந்துக்கள் பூஜைக்குப் பயன் படுத்தும் பல பொருட்களும் உள்ளன என்றும் அவர் கூறுகிறார்.
அரசியல் காரணங்களார் திரு ஓக் அவர்களின் புத்தகம் இந்தியாவில் இந்திரா காந்தியால் தடை செய்யப்பட்டது. அவர் கூறுவதை உறுதிப் படுத்திக்கொள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையில் ஒரு தொல் பொருள் ஆய்வுக் குழு ஒன்றை உருவாக்கி அவர்கள் தாஜ் மஹாலை ஆய்வு செய்ய வகை செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார்.

முத்தம் தரப்போறீங்களா? முக்கியமாக படிங்க!


முத்தமிடுவதன் மூலம் முக நரம்புகள் அனைத்தும் உற்சாகமடைகின்றன கலோரிகள் எரிக்கப்படுகின்றன என்பது ஆராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

அதேசமயம் உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிடுவதன் மூலம் தொண்டையின் புண்கள், உதட்டில் வெடிப்பும் ஏற்படும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் தொற்று ஏற்பட்டு காய்ச்சல் பரவும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மோனோநியூக்ளியோசிஸ் (Mononucleosis ) என்று மருத்துவ உலகினர் இந்த நோய்க்கு பெயரிட்டுள்ளனர். இந்த நோய் தாக்கினால் இதை குணப்படுத்த இதுவரைக்கும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இபிவி வைரஸ் மூலம் இந்த நோய் பரவுகிறது. முத்தமிடுவதனால் உமிழ்நீர், ஈறுகளில் இருந்து கசியும் ரத்தம் போன்றவைகளின் மூலம் இந்த வைரஸ் கிருமி பிறருக்கு பரவுகிறது. இளம் வயதினரையும், கல்லூரி மாணவர்களையும் இந்த நோய் அதிகம் பாதிப்பது கண்டறியப்பட்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை இந்த இபிவி வைரஸ் எளிதில் தொற்றுகிறதாம்.
முதலில் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து படிப்படியாக உடலை ஆக்கிரமித்து கிருமிகளை பரப்புகிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். முத்தமிடுவதன் மூலம் ஏற்படும் வைரஸ் தாக்குதலுக்கு உடலில் உள்ள சக்தி குறைந்த உணர்வு ஏற்படும். ஜீரணசக்தி குறையும். காய்ச்சல் ஏற்படும். வாந்தியும், வயிற்றுவலியும் அதிகரிக்கும்.
எடைகுறையும், தசைகளில் வலி ஏற்படும். மூக்கில் ரத்தம் வடிதல், தொண்டையில் ரணம், மார்பக வலி, தொடர் இருமல் போன்றவையும் இதன் அறிகுறிகள் என்று அச்சுறுத்துகின்றனர் மருத்துவர்கள்.
ரத்தப் பரிசோதனை செய்வதன் மூலம் நமக்கு இபிவி வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறியலாம். எனவே முத்தமிடுவதன் மூலம் நோய்கள் பரவும் என்பதால் உங்கள் துணையை முத்தமிடும்முன் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடியுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளனர் மருத்துவர்கள்.

நிலநடுக்கம்! - இலங்கை உட்பட 28 நாடுகளில் சுனாமி எச்சரிக்கை, அச்சத்தில் மக்கள்

நிலநடுக்கம்! - இலங்கை உட்பட 28 நாடுகளில் சுனாமி எச்சரிக்கை, அச்சத்தில் மக்கள் (செய்தித்திருத்தம்)
[ புதன்கிழமை, 11 ஏப்ரல் 2012, 09:12.52 AM GMT ]
இலங்கையில் சற்று முன்னர் இன்று பிற்பகல் 2.20 மணியளவில் சிறியவான பூமியதிர்வு ஏற்பட்டதை உணர முடிந்தது. கொழும்பில் 30 செக்கன் வரை இவ்வதிர்வை உணரமுடிந்தது என மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் இந்த அதிர்வானது 2004 இல் சுனாமி ஏற்படுவதற்கு முன்பு ஏற்பட்ட பூமியதிர்வைப் போன்று இருந்ததாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் நில  நடுக்கம் உணரப்பட்டதாக தெரியப்படுகிறது.
தலைநகரம் கொழும்பில் இவ்வாறான ஒரு உணர்வு ஏற்பட்டதாகவும், தொடர் மாடிகளில் உள்ளோர் மற்றும் அனைவரும் பீதியில் வெளியே ஓடிச் சென்றதாகவும் தற்சமயம் நடுக்கம் அற்றுப் போய் உள்ளதாகவும் அறிய முடிகிறது.
யாழ்ப்பாணத்தில் பெரிய கட்டிடங்களில் இந்நில நடுக்கத்தினை நன்கு உணரமுடிந்ததாகவும், வீரசிங்கம் மண்டபம், யாழ் பொதுநூலகம் போன்ற கட்டிடங்களில் இருந்தோர் பீதியில் வெளியில் ஓடிவந்தனர் எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை யாழ் கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு யாழ்.பொது அமைப்புக்கள் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
யாழில் சித்திரைப் புத்தாண்டு குதூகலத்தில் இருக்கும் மக்கள் இந்நில நடுக்கத்தினால் அச்சத்தில் உள்ளனர்.
இன்று உணரப்பட்ட நில அதிர்வு மலையகப்பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இன்று பிற்பகல் 2 .15 மணியளவில் நுவரெலியா, நாவலப்பிட்டி, நானுஓயா, அட்டன், கொட்டகலை, டிக்கோயா போன்ற பகுதிகளிலும் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு இலங்கையின் கரையோரப் பகுதிகளுக்கான மின் விநியோகம் மற்றும் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மின்சாரசபை மற்றும் ரயில்வே கட்டுப்பாட்டுத் திணைக்களம் என்பன அறிவித்துள்ளன. இதேவேளை நாட்டின் பல பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் காணப்படுவதாகவும் அறியமுடிகின்றது.
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நில நடுக்கத்தினை அடுத்து, இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் இந்நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில், சென்னை மாவட்டத்தில் பல இடங்களில் இந்நில நடுக்கத்தினை உணர்ந்ததால் அனைத்து கம்பனிகள், நீதிமன்றங்கள், அலுவலகங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை உட்பட 28 நாடுகளுக்கு இச்சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2006இல் இந்தோனேசியாவில் சுமத்திரா தீவில் ஏற்பட்ட அதிர்வு போன்றே, அதே இடத்தில் மீண்டும் இன்று 8.7 ரிக்டர் அளவில் அதிர்வு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தோனேசியா, இந்தியாவில் பல சேதங்கள் ஏற்பட்டதாகவும், இலங்கையில் மாலை 6 மணிக்கு மேல் சுனாமி வரும் எனவும் இலங்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன் இலங்கையில் கரையோரப்பகுதிகளில் மக்களின் பாதுகாப்பு கருதி மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
குறிப்பாக தெற்கு கிழக்கு வடக்கு பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதனையடுத்து கரையோரப் பகுதிகளுக்கான ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வேத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கரையோரப்பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, மீனவர்கள் தொழிலுக்குச் செல்லவேண்டாமெனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பசுபிக் சுனாமி எச்சரிக்கை நிலையத்தினால் இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

பெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்?

அக்காலம் முதல் இக்காலம் வரை பெண்களை புரிந்து கொள்வது என்பது ஆண்களுக்கு சற்று குழப்பமாகவே உள்ளது.
எந்த நேரத்தில் என்ன நினைக்கிறார்கள் என்று பல ஆண்களுக்கு தெரியவில்லை. பெண்களை புரிந்து கொண்டவன் அவர்களின் கலாப காதலன் ஆகிறான். ஆண்களில் எந்த வகையான ஆண்களை பிடிக்கும் என்பது ஓரு சின்ன ஆய்வின் மூலம் தெரிந்துள்ளது அதைப்பற்றி இப்போது பார்ப்போம்.
பெண்களுக்கு பொதுவாக மிகவும் பிடிக்கும் ஆண்கள் யார் என்று தெரியுமா நகைச்சுவை உணர்வோடு உலா வரும் ஆண்களைத்தான். பெண்களுக்கு எப்பவும் டுகடு சிடுசிடுவேன்று இருக்கும் ஆண்களை பிடிக்கவே பிடிக்காது.
ஆனால் அவர்களை சந்தோஷத்தில் முழ்கடிக்கும் வகையில் குறும்பும் நகைச்சுவையும் செய்யும் ஆண்களைத்தான் பெண்களுக்கு பிடிக்கும். அந்நகைச்சுவை உணர்வோடு காதலனோ அல்லது கணவரோ அமைந்து விட்டால் அவர்களின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை.
அவர்கள் உங்கள் மீது வைக்கும் காதலுக்கும் அளவு இல்லை. அதற்க்காக 24 மணி நேரமும் காமெடி செய்தாலும் பிடிக்காது மற்றும் முக்கியமான முடிவு எடுக்கும் சமயத்தில் நகைச்சுவையாக இருந்தாலும் பிடிக்காது. வாழ்க்கையில் சின்னஞ்சிறு சண்டையும் வேண்டும், ஊடலும் வேண்டும்.
இவ்வகையான ஆண்களை கணவனாக அடைந்த சில பெண்களிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது : நான் மிகவும் பாக்கியசாலி என்று நினைக்கிறேன். அவரை நான் மிகவும் காதலிக்கிறேன்.
நான் அலுவலகத்திலிருந்து மிகவும் கோபத்துடனோ அல்லது சோர்வுடனோ வந்தால், அவர் அவரது நகைச்சுவை உணர்வின் மூலம் என்னை சிரிக்க வைத்துவிடுவார்.
அந்த சமயம் நான் என் கவலைகளையும் மற்றும் களைப்பையும் மறந்து விடுகிறேன். எனக்கு ஒவ்வொரு நாளும் மிகவும் மகிழ்ச்சிகரமான நாளகவே செல்கிறது. என்கின்றனர்.என்ன ஆண்களே நீங்கள் எப்படி?