Wednesday, May 2, 2012

2016ம் ஆண்டில் பயணம் செய்யவிருக்கும் டைட்டானிக் 2

இங்கிலாந்து மற்றும் நியூயோர்க் இடையே சொகுசு கப்பலான டைட்டானிக் 2 எதிர்வரும் 2016ஆம் ஆண்டு பயணம் செய்ய உள்ளது.
இந்த கப்பலை அவுஸ்திரேலிய சுரங்க தொழில் முன்னணி நிறுவனம் ஒன்று வடிவமைத்து வருகின்றது. இதற்காக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கோடீஸ்வரர் கிலிப் பார்மர் என்ற நபர் சீன நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.
உலகின் மிகப் பெரியதாக உருவாகி வரும் இந்த கப்பல் 1912ஆம் ஆண்டு விபத்துக்குள்ளான கப்பலை போன்று வடிவமைக்கப்படுகிறது. மேலும் டைட்டானிக் கப்பல் மூழ்கி 100வது ஆண்டு நிறைவடைந்ததை ஒட்டி, அதன் நினைவாக பல்வேறு பாதுகாப்பு தொழில்நுட்பங்களுடன் வடிவமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
 

No comments:

Post a Comment