Wednesday, May 30, 2012

விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொல்கிறார்.....





ஐன்ஸ்டீன் தன் மரணப்படுக்கையிலும் கடைசி நொடிவரை கணக்குகளாய் போட்டுத்தள்ளிக் கொண்டிருந்தார் என்பார்கள். அவர் மூளையை ஆராய ஆர்வம் கொண்ட Dr.Thomas Harvey ஐன்ஸ்டீனின் மரணத்துக்கு பின் திருட்டுத் தனமாய் அவர் மூளையை எடுத்து வைத்துக்கொண்டாராம். இன்றும் அது Princeton Hospital Pathology lab-ல் இருக்கின்றது. ஐன்ஸ்டீனின் வார்த்தைகள் பொதுவாய் நகைச்சுவையும் அர்த்தமும் செறிந்ததாய் இருக்கும். இங்கே சில உதாரணங்கள். எளிய தமிழில்.
ஐன்ஸ்டீன் சொல்கிறார்.....
எனக்கென தனித் திறமைகள் எதுவும் கிடையாதப்பா. ஆனால் எதையோ ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கின்றேன் என மட்டும் எனக்குத் தெரியும்.
அவ்வப்போது என்னை பைத்தியம் பிடிக்க வைக்கும் ஒரே கேள்வி. நான் பைத்தியமா? இல்லை மற்றவர்களா?
அறிவியல் அற்புதமானது தான். ஆனால் அதுவே பிழைப்பாய் இருக்காதவரை.
ரொம்ப முக்கியமானது என்னவென்றால் கேள்வி கேட்பதை நிறுத்த கூடாது.
கடவுள் முன் நாம் எல்லாரும் சம அளவு அறிவாளிகள்,சம அளவு முட்டாள்கள்.
கற்பனாவளம் அறிவைவிட மிக முக்கியமானதாக்கும்.
A-யை வெற்றி யென நான் கொண்டால் என் சூத்திரம் A = X + Y + Z
அதாவது இங்கு X உழைப்பையும் Y விளையாட்டையும் Z வாயை மூடிக்கொண்டு கம்னு இருத்தலையும் குறிக்கும்.
ஒரே நேரத்தில் யாரும் போருக்கும் சமாதானத்துக்கும் தயாராக முடியாது.
மூன்றாவது உலகப்போரில் எந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்படுமென எனக்கு தெரியாது.ஆனால் நான்காம் உலகப்போரில் கம்புகளும் கல்லுகளும் தான் பயன்படுத்தப்படும்.
ஆகாயமண்டலத்துக்கும் மனிதனின் முட்டாள் தனத்துக்கும் முடிவே இல்லை. முன்னதுக்கு முடிவிருந்தாலும் இருக்கலாம்.
தவறே செய்திராதவர்கள் புதுசாய் எதையும் முயலாதவர்கள் தாம்.
காதலில் விழுதலுக்கெல்லாம் புவி ஈர்ப்புவிசை காரணமாகாதையா.
உலகிலேயே புரிந்து கொள்ள முடியாத ரொம்ப கஷ்டமான ஒன்று இன்கம்டாக்ஸ்.
சிலவை எளிதாயிருக்க வேண்டும் தான். ஆனால் ரொம்ப ரொம்ப எளிதாய் அல்ல.
கடவுள் என்ன நெனைப்பில் இருக்கிறார்னு விளங்கிக்கனும், மற்றவையெல்லாம் விளக்கமாயுள்ளன.
நேரம் என ஒன்றிருக்க காரணம், எல்லாம் ஒரே சமயத்தில் நடக்காததால் தான்.
சூடேறிப்போயிருக்கும் ஓர் அடுப்பில் நீங்கள் ஒரு நிமிடமே கையை வைத்தாலும் அது ஒரு மணிநேரம் போல் தோன்றும். ஆனால் அழகான பெண்ணோடு ஒரு மணிநேரமாய் பேசினாலும் அது ஒரு நிமிடமாய் தான் தோன்றும். அதான் ரிலேடிவிட்டி.
உலகை புரிஞ்சிக்கவே முடியாத காரணம் அதை புரிந்துகொள்ள முடிவதுதான்.
கடவுள் உலகை படைத்த போது அவருக்கு வேறு எதாவது தெரிவு இருந்ததாவென அறிய ஆவல்.
வெற்றிகரமான மனிதனாவதைவிட மதிப்பிற்குரிய மனிதனாதல் வேண்டும்.
உதாரணமாய் வாழ்ந்து மற்றவர்களுக்கு வழிகாட்டவேண்டும். அதுவே வழிகாட்ட சிறந்த வழி.
நான் கற்றுக்கொள்ள அதிகம் தொல்லை கொடுப்பது என் கல்வியே.
நிஜம் ஒரு மாயை. ஆனால் பாருங்கள் அதுதான் நிலைத்திருக்கின்றது.
எதிர்காலத்தை பற்றி ரொம்ப யோசிப்பதில்லை. அது சீக்கிரமாய் வந்துவிடுகின்றதே.
-ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (Albert Einstein)

உலகிலேயே மோசமான கணவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.



உலகிலேயே மோசமான கணவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்தான் என்று ஒரு புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.உலகிலேயே மிகப் பெரிய விஞ்ஞானியாக நாம் அனைவரும் ஐன்ஸ்டீனை நினைத்துக் கொண்டிருக்கையில் இப்படி ஒரு குண்டைப் போட்டுள்ளார் வால்டர் ஐசக்சன். இவர் எழுதிய 'Einstein: His Life and Universe', என்ற நூலில்தான் உலகிலேயே மோசமான கணவர் ஐன்ஸ்டீன் என்று குறிப்பிட்டுள்ளார்.ஐன்ஸ்டீன் தொழில் ரீதியாக எத்தனையோ பெரிய சாதனைகளைப் படைத்திருந்தாலும், அற்புதங்களை நிகழ்த்தியிருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் எதையும் சாதிக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.தன்னுடன் பணியாற்றிய விஞ்ஞானி மிலவா மாரிக்கைத்தான் கல்யாணம் செய்து கொண்டு வாழ்ககை நடத்தினார் ஐன்ஸ்டீன். இவர்களது திருமண வாழ்க்கை 11 ஆண்டு காலமே நீடித்தது. இந்த 11 ஆண்டு காலமும் அவரிடமிருந்து எந்தவிதமான காதல் அணுகுமுறையும் இருந்ததில்லையாம். இருவரும், அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்காக சம்பிரதாயத்திற்காக சேர்ந்து வாழ்க்கை நடத்தினார்களாம்.

தனது மனைவியை வேலைக்காரி போல நடத்தி வந்தாராம் ஐன்ஸ்டீன். அன்பையும், பரிவையும் அவர் தனது மனைவியிடம் காட்டியதில்லையாம். 11 ஆண்டு கால வாழ்க்கைக்குப் பின்னர்தான் தனது திருமண வாழ்க்கை தோல்வியடைந்த ஒன்று என்று அவருக்குப் புரிய வந்ததாம். ஐன்ஸ்டீனின் மனைவி மாரிக், ஐரோப்பாவிலேயே முதல் முறையாக கணிதம் மற்றும் இயற்பியல் படித்த முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.இத்தனைக்கும் ஐன்ஸ்டீனை விழுந்து விழுந்து கவனத்திவர் மாரிக் என்பது குறிப்பிடத்தக்கது. ஐன்ஸ்டீனின் அறையை மிகச் சிறப்பாக அவர் பராமரித்து வந்தார். அவருக்கு மூன்று வேளை உணவை தவறாமல் அவரது அறைக்கே கொண்டு வந்து கொடுத்தார். உடைகளை சுத்தமாக துவைத்து தேய்த்துக் கொடுத்தார். படுக்கை அறையை சுத்தமாக வைத்திருந்தார். ஆனால் பதிலுக்கு மனைவிக்கு எந்த கைமாறும் செய்ததில்லையாம் ஐன்ஸ்டீன்.

மாறாக, மனைவிக்கு பல நிபந்தனைகளைப் போட்டு வைத்திருந்தாராம அவர். அதாவது அருகில் வந்து உட்காரக் கூடாது, வெளியில் கூட்டிச் செல்லுமாறு வற்புறுத்தக் கூடாது. தேவையில்லாமல் தன்னுடன் பேசக் கூடாது, வெளியுலக தொடர்புகளை அதிகம் வைத்துக் கொள்ளக் கூடாது.. இப்படிப் போகிறது ஐன்ஸ்டீனின் நிபந்தனை லிஸ்ட்.அதை விட கொடுமை, தன்னுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று தனது மனைவி எதிர்பார்க்கக் கூடாது என்றும் கூறியிருந்தாராம் ஐன்ஸ்டீன். எந்த வகையிலும் தன்னைக் கவர முயற்சிக்க் கூடாது. அனுமதி இல்லாமல் பேசக் கூடாது என்பதும் அந்த நிபந்தனைகளில் ஒன்று.11 ஆண்டு கால வேதனை வாழ்க்கைக்குப் பின்னர் ஐன்ஸ்டீனை விட்டு அவரது மனைவி பிரிந்து சென்றார். கூடவே தனது பிள்ளைகளையும் அழைத்துச் சென்று விட்டார்.

ஐன்ஸ்டீன் நடத்திய இந்த லட்சணமா இல்லறத்தில் பிறந்த குழந்தைகள் இருவர். ஒருவர் ஹான்ஸ் ஆல்பர்ட். இன்னொருவர் எட்வர்ட். 1902ம் ஆண்டு லிசரல் என்ற மகள் பிறந்தார். பின்னர் அவரைத் தத்துக் கொடுத்து விட்டனர். பிள்ளைகளோடு ஜூரிச் சென்ற மாரிக், ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் 1919ம் ஆண்டு விவாகரத்து கோரினார். அது பின்னர் கிடைத்தது.அதன் பின்னர் ஐன்ஸ்டீன் 1919ம் ஆண்டே எல்சா என்பவரை மணந்தார். பி்ன்னர் அவரது செயலாளர் பெட்டி நியூமன்னுடனும் உறவு ஏற்படுத்திக் கொண்டார். அதன் பின்னர் வேறு ஒரு பெண்ணுடனும் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது.ரிலேட்டிவிட்டி தியரியை உலகுக்கு அறிவித்த ஐன்ஸ்டீனால் ரிலேஷன்ஷிப்பை பராமரிக்க முடியாமல் போனது வியப்புக்குரியதுதான்...

குடும்ப உறவுகள் சீர்குலைவதற்கு உளவியல் ரீதியான காரணங்கள்!





[ ஒரு பெண், ஆணின் 'உடல்தேவை' சார்ந்த அருகாமையைவிட அவன் அன்பும், பாசமும்தான் பெரிது என்று நினைக்கிறாள். நிறைய குடும்பங்களில் பிரச்னையே, 'என் கணவர் என்கூட உட்கார்ந்து பேசுவதில்லை, எனக்காக நேரம் செலவிடுவதில்லை' என்பது தான். அந்த குறைந்தபட்ச எதிர்பார்ப்பு தொடர்ந்து நிறைவேறாமல் போக, அந்த எதிர்பார்ப்பை யார் பூர்த்தி செய்கிறார்களோ அவர்களை நம்பி எல்லை தாண்டுகிறாள்.
கணவன்-மனைவி இருவரில் ஒருவர் தாம்பத்திய வாழ்க்கையில் அதிகம் நாட்டம் உள்ளவராக இருந்து, மற்றொருவர் அந்த நாட்டத்துக்கு இணையான ஜோடியாக இல்லாமல் போகும்போதுதான் பிரச்னைகள் பூதாகாரமாக எழுகின்றன. விரிசல்கள் ஆழமாகின்றன. அந்தரங்கத்துக்கும் அன்புடன் நேரத்தை ஒதுக்குவது காதலை வெல்லும் வழி.]
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பார்கள். ஆனால் அந்த குடும்பம் எனும் பல்கலைக்கழகம் இடிந்து கொண்டு இருக்கிறதோ என்கிற பயம் கலந்த வாழ்க்கையே கணவன் - மனைவி உறவுச் சிக்கல்கள்.
ஏன் இந்த உறவு சிக்கல்கள்... இத்தனை உறவுச் சிக்கல்கள்?! "பாவம், புண்ணியம் போன்றவற்றில் நம்பிக்கை குறைந்து வருவதே இந்த உறவுச் சிக்கல்களுக்குக் காரணம்"
வேதங்கள் யாவும் அன்னியப்பெண்களை பார்ப்பதை தவறென்கிறது. ஆனால். இன்றைய டி.வி, சினிமா போன்ற ஊடகங்களில் முறை தவறும் ஒழுக்கம்தான் வாழ்க்கையில் பிழைப்பதற்கான வழி என்று திரும்பத் திரும்பக் காண்பிக்கப்படுகிறது. தொடர்ந்து அதையெல்லாம் பார்ப்பவர்களின் மனநிலை, சிந்தனை என்னவாகும்?

இரண்டாவது காரணம், முந்தைய தலைமுறை மனிதர்கள் 'மானம் பெரிது' என்றார்கள். இன்றைய தலைமுறைக்கு 'பணம்தான் வாழ்க்கை' என்றாகிவிட்டது. பணத்தைத் தேடி ஒடிக்கொண்டே இருப்பதால், வீட்டுக்குள் ஒவ்வொருவரும் ஒரு தீவாக வாழ்கிறார்கள். இந்த வாழ்க்கை முறைதான், பிரச்னைகளின் மூலகாரணம். 'இப்படித்தான் வாழ வேண்டும்' என்கிற தீர்மானத்தைவிட 'எப்படியும் வாழலாம்' என்கிற மனநிலையை வளர்க்கும் சூழ்நிலைகள் பெருகி வருவதும், அதை எப்படி எதிர்கொள்வது என்பதை போதிக்கும் வழிமுறைகள் வீடு, கல்விக்கூடம் என எங்கும் இல்லாமல் இருப்பதும் ஒரு காரணம்"
குடும்ப உறவுகள் சீர்குலைவதற்கு உளவியல் ரீதியான காரணங்கள் என்ன, கணவன்-மனைவி உறவு இதயத்துக்கு இணக்கமாகவும், உறவுக்கு இறுக்கமாகவும் இருக்க வழிகள் என்ன?
"ஆண், பெண் இருபாலருமே தங்களுக்கான எல்லையைக் கடந்து வரும்போது உறவுச் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். ஒரு ஆணின் மனநிலையும் பெண்ணின் மனநிலையும் முற்றிலும் வேறானவை. 'என் மனைவிக்காகவும் குழந்தைகளுக்காகவும் தானே உழைக்கிறேன்' என்று நேரம் காலம் பார்க்காமல் உழைப்பதும், சம்பாதிப்பதும்தான் கௌரவம் என ஆண் நினைக்கிறான்; அதுதான் சந்தோஷம் என நம்புகிறான்.
ஆனால், ஒரு பெண், ஆணின் 'உடல்தேவை' சார்ந்த அருகாமையைவிட அவன் அன்பும், பாசமும்தான் பெரிது என்று நினைக்கிறாள். நிறைய குடும்பங்களில் பிரச்னையே, 'என் கணவர் என்கூட உட்கார்ந்து பேசுவதில்லை, எனக்காக நேரம் செலவிடுவதில்லை' என்பது தான். அந்த குறைந்தபட்ச எதிர்பார்ப்பு தொடர்ந்து நிறைவேறாமல் போக, அந்த எதிர்பார்ப்பை யார் பூர்த்தி செய்கிறார்களோ அவர்களை நம்பி எல்லை தாண்டுகிறாள்.
சம்பாதிப்பதற்காக வெளிநாடு செல்கின்றவர்கள் - முடிந்தவரை என்று சொல்வதைவிட - கட்டாயமாக மனைவியையும் அழைத்துச்செல்வதே இக்காலாதில் பாதுகாப்பு.
மனைவி என்பவள் வெறும் ஜடப்பொருள் அல்ல. அவளுக்கும் ஆசா பாசங்கள் உணர்வுகள் அனைத்தும் இருக்கவே செய்யும் என்பதை ஆண்கள் நினைவில் கொள்ள வேண்டும். அதுவும் இலவசமாக வேறு டி.வி. பெட்டிகள் வந்துவிட்ட பிறகு டி.வி. பெட்டிகள் இல்லாத வீடே இல்லை எனலாம். உணர்வுகளைத்தூண்டக்கூடிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நிறைந்த காலத்தில் மனைவியை தனியே விட்டுவிட்டு ஆண்டுக்கணக்கில் பிரிந்திருப்பது சரியானதல்ல.
அடுத்த காரணம், ஆண், பெண் இருவருக்கும் நடக்கும் அவசரத் திருமணங்கள். பொருத்தமில்லாத ஒருவரை கல்யாணம் செய்து கொள்கிறார்கள். ஆனால், அவர்களது ஆழ்மன விருப்பத்துக்கு ஏற்ற ஒருவரைப் பார்க்கும்போது மனம் தடுமாறுகிறார்கள். அதேபோல் அதீத எதிர்பார்ப்புடன் திருமண பந்தத்தை உருவாக்கி, அந்த எதிர்பார்ப்பில் பலன் பூஜ்யமாகிப் போகும்போது அடுத்த உறவை நாடுகிறார்கள். உளவியல் ரீதியாக இந்த காரணங்கள் உறவுச் சிக்கலை எண்ணெய் ஊற்றி வளர்க்கின்றன. இதைத் தொடர்ந்து விவாகரத்துகள் அதிகரிக்கும், தனித்து வாழும் பெண், ஆண் எண்ணிக்கை அதிகரிக்கும். பிரச்னைகளும் அதிகரிக்கும்.
இல்லற வாழ்க்கை இனிக்க

மனைவிக்கு என்ன தேவை என்பதை கணவன் தெரிந்து வைத்திருக்க வேண்டும். கணவனுக்கு என்ன தேவை என்பதி மனைவி புரிந்து வைத்திருக்க வேண்டும்.
கணவனுக்கும் மனைவிக்கும் ஏதோ ஒரு பிரச்னையின் காரணமாக கருத்து வேறுபாடு வந்தால், 'யார் சரி?' 'யார் தவறு'? என்ற போட்டி மனப்பான்மையில் சண்டையை நீட்டிக்கொண்டே இருக்காமல், யாராவது ஒருவர் உடனே முற்றுப்புள்ளி வைப்பது, வாழ்க்கையை இனிமையான தொடர்கதையாக்கும்!
நம் சமூகத்தில், மனைவி தன்னை 'ஸ்பெஷலாக' கவனிக்க வேண்டும் என்று எல்லா ஆண்களும் எதிர் பார்க்கிறார்கள். குழந்தை, தாய் வீட்டுப் பிரச்னைகள், அலுவலக வேலைகள் என்று மனைவி பிஸியாக இருந்துவிட்டு, கணவருக்கு ஸ்பெஷல் கவனிப்பு தராதபோது... கணவர் கண்ணியம் மீறுகிறார். அதற்கு வாய்ப்புத் தராமல் இருந்து விடுவதே 'வாழும் கலை'.
கணவன்-மனைவி இருவரில் ஒருவர் தாம்பத்திய வாழ்க்கையில் அதிகம் நாட்டம் உள்ளவராக இருந்து, மற்றொருவர் அந்த நாட்டத்துக்கு இணையான ஜோடியாக இல்லாமல் போகும்போதுதான் பிரச்னைகள் பூதாகாரமாக எழுகின்றன. விரிசல்கள் ஆழமாகின்றன. அந்தரங்கத்துக்கும் அன்புடன் நேரத்தை ஒதுக்குவது காதலை வெல்லும் வழி.
நம் குடும்ப அமைப்பில், கணவரின் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களை புண்படுத்துவதை ஒரு கணவரால் தாங்கிக் கொள்ள இயலாது. குறிப்பாக, அவரின் அம்மாவை இன்சல்ட் செய்து விட்டால், அவர் மனரீதியாக மிகவும் பாதிப்படைகிறார். அது, இல்லற வாழ்க்கையில் வன்முறையாக எதிரொலிக்கும் என்பதை மனைவி புரிந்து கொள்ள வேண்டும்.
அதுபோல மனைவியின் குடும்பத்தாரை கணவன் குறை சொல்லும்போது அங்கு பூகம்பமே கூட வெடிக்கலாம்.

Tuesday, May 29, 2012

Islam chat-நாத்திகத்திலிருந்து இஸ்லாத்திற்கு பயணம்




புரிந்தவர்கள் போற்றுகிறார்கள், 
பிடித்தவர்கள் தழுவுகிறார்கள், 
புரியாதவர்கள் குழம்புகிறார்கள், 
பிடிக்காதவர்கள் தூற்றுகிறார்கள். 
இதுதான் இன்று இஸ்லாம் நோக்கியுள்ள காட்சிகள். எங்கே தெளியும் என்று ஏக இறைவனுக்கே வெளிச்சம் உடனே டக்குனு I Accept Islam அப்படினு சொல்லி ஜாகிர்நாயக் முன்னிலையிலோ சவுதி பேரரசிலோ தனது விருப்பத்தை தெரிவித்து கலிமா சொல்லிவிடுகிறார்கள்.
எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் குர்ஆன் படிக்கும் வாய்ப்பு கிடைத்து ஆள் எஸ்கேப் From Eternal Life's Punishment. பாவம் சில பேருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் நரக நெருப்புக்கு முழு உடலையும் தானம் செய்து விடுகிறார்கள். அந்த அளவுக்கெல்லாம் நமக்கு தியாகம் செய்ய முடியாதுப்பா.

Wayne Parnell, Cricket Player இஸ்லாத்தை தழுவியதை சமீபத்தில் படித்திருப்பீர்கள். ஆனால் எனக்கு தெரியாது, லேட்டாதான் அறிந்தேன். (தமிழ் வாழ்க)
ஜனவரியில் தழுவினார், ஜூலையில் அறிவித்தார். இரண்டுமே 2011ல்தான்...விளையாட்டு பிள்ளைதானே....விளையாட்டாய் சொல்றாங்களோ என்னவோனு கூட...
அதன் நிமித்தமாக.....
You tube ல்அந்த Player ரின் Video Play பன்னி பார்க்கும்போது, இறுதியில் ஒரு இணையமுகவரியை பரிந்துரைத்தார். அது ஏற்கனவே பிரபலமான ஒன்று என்றாலும், எனக்கு தெரியாமல் போனது ஒரு பிராப்ளம்தான்.
அந்த இணைய முகவரிதான் இது



இஸ்லாம் என்ற வெளிச்சத்திலிருந்து விலகி இருப்போருக்கு இஸ்லாத்தில் இணைய இந்த இணையம் கூட காரணமாகலாம். இதை அவர்களுக்கு தெரிவிப்பதன் மூலம் நாமும் ஒரு மூலகாரணமாகலாம். அப்பறம் என்ன கியாமத் டேய்ஸ்ல ஒரே ஜாலிதான் :-)
எனக்கும் ஒரு ப்ளாக் இருந்தால் இதை அதில் டிஸ்ப்ளே பன்னுவேன். இப்ப இங்கே Supply பன்றேன்.

நானும் இந்த சைட்ல போயி பார்த்தேனே..,Live Chat la போனவுடனே ஒருத்தங்க வந்து Welcome பன்றாங்க. ஒரு வேள அல்ரெடி Auto Message சா இருக்குமோனு Typical ல இல்லாமல் ஒரு டைப்பா சில கேள்விகள் கேட்டு பாத்தேன். கரெக்ட்டான ரியாக்‌ஷந்தான் வந்துச்சு. Non Muslim க்குதான் அங்கே முக்கியத்துவம், நான் முஸ்லீம்தானே Non Muslim இல்லையே.... அதனால் அயம் எஸ்கேப் From there.

Non Muslim & New Muslim களுடன் இஸ்லாம் குறித்து சந்தேகங்கள் குறித்து சாட்டிங்க பன்றதுக்கு 24 நேரமும் யாராவது காத்துகிட்டு இருக்காங்க. மாஷாஅல்லாஹ். அருமையான சேவை. இதை அப்படியே பாஸ் பண்ணினால், மறுமையில் நாம் பாஸ் இன்ஷாஅல்லாஹ்...

விபச்சாரம் - ஒரு பார்வை





o பெண்மையும், விபச்சாரமும்

o தொழில்வளம் இல்லாத சமூகங்களில் விபச்சாரம்
o பணியிடங்களில் நடைபெறும் பாலியல் பலாத்காரங்கள்
o பண்டைய கால கிரீஸ் நாகரீகத்தில்
o பல்வேறு பரிமாணங்களில் 20-ம் நூற்றாண்டில் விபச்சாரம்
o இஸ்லாமியப்பார்வையில் விபச்சாரம்
நபிமொழி எச்சரிக்கை
''ஒருவர் விபச்சாரம் செய்யும் நிலையில் முஃமினாக இருக்க மாட்டார்' (புகாரி, முஸ்லிம்) ''விபசாரத்தை விட்டு உங்களை எச்சரிக்கின்றேன். அதில் நான்கு விளைவுகள் இருக்கின்றன. அவையாவன:
முகத்தின் வசீகரத்தை நீக்கிவிடும்

வருமானத்தை அறுத்துவிடும்
ரஹ்மானின் கோபத்தைப் பெற்றுக் கொடுக்கும்
நரகில் நிலைத்திருக்க வழிவகுக்கும்' (ஆதாரம் : அத்தபராணி)
பெண்மையும், விபச்சாரமும்
விபச்சாரம், பொருளாதார நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதே மிகப் பொருத்தமாக இருக்கும். வறுமை தான் விபச்சாரத்தின் பக்கம் பெண்களை நெருங்கச் செய்கின்றது, அவர்கள் தங்களது உடல் இச்சைகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதன் மூலம் பணம், பரிசுகள் அல்லது சம்பளம் என்பன கிடைக்கின்றன. அதாவது விபச்சாரம் என்ற தொழிலில் பெண்களின் உடம்பே மூலதனமாகப் பயன்படுகின்றது.
இந்த விபச்சாரம் என்பது ஓரினச் சேர்க்கை மற்றும் எதிர்எதிர் பாலினருடன் வைத்துக் கொள்ளக் கூடிய பொருளாதாரம் சார்ந்த ஒன்று என்று கருத்துக் கூறப்படுகின்றது. வரலாறு நெடுகிலும் இந்தப் பாலியல் சார்ந்த தொழில் பெண்கள் தான் அதிகமாக சீரழிக்கப்பட்டு வருகின்றனர். ஏனென்றால் அவர்களது உடம்பு தான் அந்தத் தொழிலின் உன்னதமான மூலதனம். காரணம், சமூகத்தில் நிலவுகின்ற சமூக பொருளாதார காரணங்கள் தான் பெண்களை இந்த விபச்சாரத்தின் பக்கம் கொண்டு வருகின்றன.
இன்னும் இந்த உலகத்தின் மிகப் புராதானமானதொரு தொழிலாக பல்வேறு சமூக கலாச்சாரங்களுக்கு மத்தியில் இருந்து வந்தது என்பதும், அதில் பெண்கள் மூலதனமாக்கப்பட்டிருந்தார்கள் என்ற நிலை கடந்த 19 ம் நூற்றாண்டு வரைக்கும் இருந்து வந்திருக்கின்றது என்பதையும், ஆண்களே இந்தத் தொழிலை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள் என்பதையும் பார்க்க முடிகின்றது. அநேகமாக ஆண்களே இந்தத் தொழிலுக்கு வாடிக்கையாளர்களாக இருந்துள்ளார்கள் என்பதும், சிலவேளைகளில் ஆண்களும் பெண்களைப் போலவே விபச்சாரர்களாகவும் இருந்துள்ளதையும் பார்க்க முடிகின்றது.
மேலும், கடந்த காலங்களில் சிறுமிகளும் கூட இந்த விபச்சாரத்திற்குள் தள்ளப்பட்ட அவல நிலையையும் தாய்லாந்து, ஜப்பான் போன்ற நாடுகளில் நடந்து வருவதையும் பார்க்க முடிகின்றது. இவர்களது முக்கியமான குறிக்கோள் பணம் சம்பாதிப்பது மட்டுமேயாகும். குறிப்பாக சிறுமிகளை விப்பச்சாரத்தில் ஈடுபட வைப்பது என்பது உலகம் முழுவதும் நடைபெற்று வரக் கூடியதொரு தொழிலாகவே மாறி விட்டது, இதில் பயனாளிகளாக இருப்பவர்கள் பணக்கார நாடுகளைச் சேர்ந்த உல்லாசப் பிரியர்கள், இவர்களது உடல் பசியைத் தீர்க்கக் கூடியவர்களாக ஏழை நாடுகளைச் சேர்ந்தவர்கள் இருக்கின்றார்கள். இதிலிருந்து பணம் என்ற ஒன்றே இந்த விபச்சாரத்தை ஒரு தொழிலாக மாற்றி வைத்திருக்கின்றது.
பண்டைய காலங்களில் விபச்சாரமானது பல்வேறு முகங்களில் பரவி இருந்தது. அது சமூக, பொருளாதார மற்றும் அந்த பகுதியின் அமைப்பைப் பொறுத்து மாறுபடக் கூடியதாக இருந்தது. இது மதச்சார்பற்ற அல்லது சில சமயங்களில் மதத்தின் அடிப்படையிலும் இந்த தொழில் கொடி கட்டிப் பறந்தது. சில சமூகங்களில் விபச்சாரத்தில் ஈடுபடுவது என்பது தங்களது குடும்பத்தின் இருப்பைத் தக்க வைப்பதற்கான காரணியாக இருந்தது. அதாவது, நம் நாடுகளில் ஆரம்ப காலங்களில் காணப்பட்ட தேவதாசி முறைகளைப் போல.
பெண்கள் வற்புறுத்தல் மூலமாக அல்லது பலவந்தமாக அல்லது பொருளாதாரத் தேவையின் பொருட்டே அநேகமாக இந்தத் தொழிலுக்குள் நுழையக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். சில சமூகங்களில் இந்தத் தொழிலை மக்கள் அவமானகரமானதாகக் கருதியதோடு, அவ்வாறான பெண்களுக்கு சமூக அந்தஸ்தை வழங்க மறுத்தார்கள், ஏனென்றால் அவர்கள் வாழக் கூடிய அந்த சமூகம் இதனை இழிதொழிலாகக் கருதியதே காரணமாக இருந்தது. இன்னும் சில இடங்களில், சில விபச்சாரிகள் செல்வ வளத்தையும் இன்னும் அதிகாரத்தையும் கூட தங்களது திருமண உறவுகளின் மூலம் பெற்றுக் கொண்டார்கள். உதாரணமாக, பைஸாந்தியப் பேரரசர் ஜஸ்டின்(1) என்பவரது மனைவி தியோடோரா என்பவள் ஒரு விபச்சாரி என்பது குறிப்பிடத்தக்கது. மன்னரை மணந்து கொண்டதன் மூலம் அவள் மகாராணியாகி விட்டாள்.
தொழில்வளம் இல்லாத சமூகங்களில் விபச்சாரம் 
தொழில் வளர்ச்சியடையாதிருந்த சமூகங்களில் விபச்சாரம் பரவி இருந்தது. தங்களது மனைவிமார்களைக் கூட மாற்றிக் கொள்வது இந்த சமூகங்களில் காணப்பட்டது. பண்டைய கால மத்திய கிழக்கு, இந்தியா, போன்ற நாடுகளில் கோயில்களில் ஏராளமான விபச்சாரிகள் இருந்தார்கள். இவர்கள் சில சமயங்களில் அதிகம் படித்தவர்களாகவும், திறமை மிக்க நாட்டிய மங்கைகளாகவும், பாடகிகளாகவும், பாடல்கள் இயற்றும் கவிஞர்களாகவும், புலவர்களாகவும், குறிப்பாக இவர்களிடம் மலிந்திருந்த கலைகள் மற்ற பெண்களுக்கு தடுக்கப்பட்டதாகவும் இருந்தது. இவர்களிடம் உடலுறவு வைத்துக் கொள்வது என்பது கடவுளிடம் ஐக்கியமாகி விடுவதற்குச் சமமாகக் கருதப்பட்டது.
பண்டைய கால கிரீஸ் நாகரீகத்தில்...
பண்டைய கால கிரீஸ் நாகரீகத்தில், விபச்சாரம் என்பது சமூகத்தின் அனைத்து மட்டத்திலும் பரவி இருந்தது. விபச்சாரத்திலேயே கீழ் மட்டத்தில் இருப்பவர் அனுமதி பெற்றுக் கொண்ட சிவப்பு விளக்குப் பகுதிகளில் பணியாற்றினார்கள், இன்னும் அவர்கள் தாங்கள் அனுமதி பெற்ற விபச்சாரிகள் என்பதை அறிவிப்பதற்காக வேண்டிய அடையாள அட்டைகளையும் தொங்க விட்டிருந்தார்கள். விபச்சாரத்தில் உயர்மட்டத்தில் பணியாற்றக் கூடிய பெண்கள் நடன மங்கைகளாகவும், பாடகிகளாகவும் இருந்தார்கள். இந்த உயர் மட்டத்து விபச்சாரிகள் அரசியல் பிரமுகர்கள் கூடும் கிளப்புகளில் பணியாற்றினார்கள், அவர்களில் சிலர் அதிகார மட்டத்துத் தொடர்புகள் காரணமாக உயர் அந்தஸ்துகளையும் அதிகார மட்டத்தில் பெற்றுக் கொண்டார்கள்.
பண்டைய கால ரோமாபுரியில், விபச்சாரத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் பொதுவாக காணப்பட்டன. இருப்பினும், வெளிதேசங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட பெண்ணடிமைகள், கட்டாயப்படுத்தப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டார்கள், இன்னும் அவர்களது எஜமானர்களால் பாலியல் வன்முறைக்குப்படுத்தப்பட்டார்கள். இவ்வாறாக அடிமைகளை விபச்சாரத்தில் தள்ளப்படுவதை ரோமர்கள் தடுக்க முயற்சி செய்தார்கள். இதற்காக கடுமையான நடவடிக்கையையும் எடுத்தார்கள். விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள அதற்கென உள்ள அடையாளமிடப்பட்ட அடையாள அட்டைகளை அணிந்து கொள்வது, தங்களது பெயர்களை அரசு பதிவகத்தில் பதிந்து கொள்வது என்ற நிலை இருந்தது, மற்றும் அவர்கள் மீது கடுமையான வரியும் விதிக்கப்பட்டது.

மத்திய காலங்களில், மக்களின் கற்பு நெறியைப் பாதுகாக்கும் பொருட்டு கிறிஸ்தவ சர்ச்சுகள், விபச்சாரத்தில் ஈடுபடுவோர்களை மதம் மாற்றினார்கள் அல்லது அவர்களுக்கென மறுவாழ்வு மையங்களை ஏற்படுத்தினார்கள். ஆனால் இந்த தொழிலுக்கு எதிராக அவர்கள் போராடுவதற்கு முன்வரவில்லை. புனித அகஸ்தின் என்பவரது அறிவுரையின்படி, அவ்வாறு அந்தத் தொழிலைத் தடை செய்தால், அதன் காரணமாக முன்பைக் காட்டிலும் அதிகமான அளவில் ஒழுக்க வீழ்ச்சியை நோக்கி ஆண்கள் செல்வார்கள் அல்லது தவறான வழியில் திருமண உறவிற்கு அப்பால் தங்களது இச்சைகளைத் தீர்த்துக் கொள்வதற்குக் கிளம்பி விடுவார்கள் என்று கூறப்பட்டது. மத்திய கால ஐரோப்பாவில் அரசால் அனுமதி வழங்கப்பட்ட விபச்சார மையங்கள் தேசமெங்கும் காணப்பட்டன, இந்த விபச்சார மையங்கள் மூலமாக அரசு அதிகாரிகளுக்கும், இன்னும் தவறான வழியில் செல்லும் தேவாலயப் பிரமுகர்களுக்கும் அதிக வருமானத்தைக் கொடுத்தன.
ஆசியாவைப் பொருத்தவரையில், பெண்களை கீழ்த்தரமான படைப்பாகக் கருதினார்கள், அவர்களுக்கு மத அடிப்படையில் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுவதை; தடுக்கும் அச்சுறுத்தும் சட்டங்கள் இருக்கவில்லை, மாறாக விபச்சாரம் என்பது பொதுவாக ஒப்புக் கொள்ளப்பட்டதொன்றாகவே இருந்து வந்தது.
16-ம் நூற்றாண்டிலிருந்து புராட்டஸ்டண்டு மற்றும் கத்தோலிக்க திருச்சபைகளின் நடவடிக்கைகளின் மூலமாக இந்த விபச்சாரம் குறைய ஆரம்பித்தது. விபச்சாரம் என்பது ஒழுக்கக் கேடானது என்றும், அதில் ஈடுபடுபவர்கள் ஒழுக்கக் கேடானவர்கள் என்றும் பிரச்சாரம் செய்யப்பட்டது, அவ்வாறானதொரு நடவடிக்கை எடுப்பதற்குக் காரணம் இருந்தது, அப்பொழுது மக்களிடையே அதிமான பால்வினை நோய்கள், அதாவது 'சிபிலிஸ்" போன்ற பால்வினை நோய்கள் வெகுவேகமாகப் பரவ ஆரம்பித்ததே இந்த நடவடிக்கைக்குக் காரணமாக அமைந்தது. நகரின் பல்வேறு விபச்சார மையங்களை அதிகாரிகள் மூடினார்கள்.
கி.பி.1635 ம் ஆண்டு பாரிஸ் இயற்றப்பட்ட சட்டத்தின்படி, விபச்சாரிகளுக்கு கசையடி கொடுக்கப்பட்டது, அவர்களது தலை மொட்டை அடிக்கப்பட்டது, முன் விசாரணை இன்றி அவர்கள் நாடு கடத்தவும்பட்டார்கள்.
தொழில்வளர்ச்சியடைந்த நாடுகளில் விபச்சாரம் தொழில் வளர்ச்சி குன்றிய நாடுகளில் தான் பொருளாதார நோக்கத்தை முன்னிட்டு பெண்கள் விபச்சாரத்தை நாடினார்கள் என்று முன்பு பார்த்தோம். ஆனால், தொழில் வளர்ச்சியடைந்த நாடுகளில் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையேயும் விபச்சாரம் என்பது வெளிப்படையானதொன்றாக மாறிப் போனது, வளர்ச்சியடைந்தது, அத்துடன் பாலியல் நோய்களும் கூட அதிகம் பரவ ஆரம்பித்தன. இன்னும் 18 மற்றும் 19 ம் நூற்றாண்டுகளில் மேற்குலகில் மக்கள் அதிகம் வாழ்ந்த பெருநகரங்களில் விபச்சாரம் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்தது.
1700-ம் ஆண்டுகளில் ஐரோப்பா மற்றும் ரஷ்ய எல்லைப் பகுதிகளில் பரவி வந்த பால்வினை நோய்களைக் கட்டுப்படுத்தும் முகமாக விபச்சார மையங்களையும், விபச்சாரத்தில் ஈடுபடுவோர்களையும் அரசு அலுவலகங்களில் பதிவு செய்து கொள்ளும் நடைமுறையைக் கொண்டு வந்தார்கள். அவ்வாறு லைசன்ஸ் வழங்கப்பட்ட விப்பச்சார மையங்களுக்கு அடிக்கடி மருத்துவ பரிசோதகர்கள் சென்று பரிசோதித்தும் வந்தார்கள். ஆனால், பிரிட்டனில் லைசன்ஸ் வழங்கும் நடைமுறை இல்லையெனினும், 1860 ல் இயற்றப்பட்ட கொள்ளைநோய் தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் விபச்சாரிகளுக்கு மருத்துவ பரிசோதனை அளிக்கப்பட்டது, மற்றும் கப்பல்துறை மற்றும் இராணுவ மையங்களில் விபச்சாரம் அனுமதிக்கப்பட்டது.
பிரிட்டனிலும், அமெரிக்காவிலும் சிவப்பு விளக்குப் பகுதிகளில் இந்த விபச்சாரம் வெளிப்படையாகவே கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்தது. நகர அதிகாரிகள் விபச்சாரத்தை ''தேவையானதொரு தீமை"" என்றே கருதினார்கள். இந்தப் பகுதியில் வாழக் கூடிய ஏதாவதொரு கண்ணியமிக்கதொரு மனிதர் தலையிடும் வரைக்கும், அதிகாரிகள் விபச்சாரத் தொழிலை அந்தப் பகுதிகளில் அனுமதித்தார்கள். அதுமட்டுமல்ல, பண்டங்கள் போல ஒருநாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு விபச்சாரிகள் கொண்டு போகப்பட்டார்கள், விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டார்கள்.
விபச்சாரத் தொழிலுக்கு வழங்கி வந்த லைசன்ஸ் முறைகளில் நடந்த முறைகேடுகள், பல்வேறு கிளர்ச்சிகளை பிரிட்டனிலும், ஐரோப்பிலும் உண்டாக்கியது.
பிரிட்டனில் கொண்டு வரப்பட்ட கொள்ளை நோய்களுக்கு எதிரான சட்டத்தினால் எந்தவிதமான சாதகங்களும் விளையவில்லை, மாறாக, தங்களது சொந்த வாழ்வில், சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக அது அமைவதாக மக்கள் கருத ஆரம்பித்தார்கள். விபச்சாரத் தொழிலுக்காக பெண்களும், குழந்தைகளும் கடத்தப்படுவதைத் தடுப்பதற்கு பல்வேறு தடுப்பு முறைகளை பல்வேறு நாடுகள் கொண்டு வந்தன. இவ்வாறு பெண்களையும், குழந்தைகளையும் விபச்சாரத்திற்காக கடத்துவதை கிரிமினல் குற்றம் என்று பிரிட்டன் அறிவித்தது, இதற்காக 1885 ல் கிரிமினல் சட்ட வரையறையை அறிவித்தது. இன்னும் 1904 ல் 13 வளர்ந்த நாடுகள் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்த கடத்தலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் பரஸ்பரம் ஒத்துழைப்பு வழங்கிக் கொள்ளவும், தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளவும் தீர்மானித்தன.
1910-ல் அமெரிக்காவானது, வெள்ளை அடிமைகள் கடத்தல் தடுப்பு - ன் அடிப்படையில், பெண்களையும், சிறுமிகளையும் 'ஒழுங்கீன" நோக்கத்தின் அடிப்படையில் (விபச்சாரத்திற்காக கடத்துவதை) தடை செய்தது.
பல்வேறு பரிமாணங்களில் 20-ம் நூற்றாண்டில் விபச்சாரம்
20-ம் நூற்றாண்டில் விபச்சாரம் என்பது பல்வேறு பரிமாணங்களில் தலையெடுக்க ஆரம்பித்தது. சில விபச்சாரிகள் தங்களை ''கார்ல் கேர்ள்ஸ்"" என்றழைத்துக் கொண்டு, தங்களுக்கென்றதொரு முகவரியில் இருந்து கொண்டு, வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்த ஆரம்பித்தனர். இன்னும் சிலர் மஸாஜ் பார்லர்களில், அதாவது விபச்சார விடுதி என்றில்லாமல் புதியவகை முகத்தோடு தொழில் செய்ய ஆரம்பித்தனர். அநேகமாக தெருவில் வசிக்கக் கூடியவர்கள் தான் இதுமாதியான விபச்சார விடுதிகளுக்கு வாடிக்கையாளர்களைக் கொண்டு சேர்க்கக் கூடியவர்களாக இருந்தார்கள். இன்னும் கிராமப்புறங்களிலிருந்து நகர்ப்புறம் நோக்கி வரக் கூடியவர்கள், தங்களது வாழ்க்கைத் தேவையை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு, இந்தத் தொழிலில் கால் பதிக்க ஆரம்பித்தனர்.
இவ்வாறு வீட்டை விட்டு ஓடி வந்த ஆண்களில் சிலர் வாடிக்கையாளர்களைக் கொண்டு வருபவர்களாக மாறினார்கள், பெண்கள் விபச்சார விடுதிகளில் பணியாற்ற ஆரம்பித்தார்கள். இவை யாவும் இவர்களை பொருளாதாரத் தேவையை நிறைவு செய்து கொள்ளுமுகமாகத் தான் இந்தத் தொழிலில் ஈடுபட வைத்தன.

பொதுவாக எல்லா சமூகங்களிலும் விபச்சாரத்தை அங்கீகரிக்கவில்லை எனினும், அரசாங்கங்கள் இதனைத்தடை செய்திருப்பினும், விபச்சாரத்திற்கு ஆதரவு தருவது, விபச்சாரிகளை வைத்திருப்பது அல்லது அது சார்ந்த தொழிலின் மூலம் வருமானம் பார்ப்பது ஆகியவையே சட்டங்களால் தடை செய்யப்பட்டது என்றாகியது. இன்னும் இந்தத் தொழிலில் ஈடுபடக் கூடிய விபச்சாரிகளின் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட்டதே ஒழிய, அவர்களது வாடிக்கையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இல்லை.
அநேகமாக விபச்சார மையங்களை ஆண்களே நடத்துபவர்களாக நிர்வகிப்பவர்களாக இருக்கின்றார்கள், பெண்கள் தங்களது உடம்பை விற்றுப் பெறுகிற கூலியில் இந்த ஆண்களே அதிக ஊதியத்தை எடுத்துக் கொண்டார்கள். சம்பாத்தியத்தில் ஓரளவு பணத்தையே அந்தப் பெண்களுக்கு வழங்கியதோடு, அரசின் நடவடிக்கைகளின் பொழுது தேவைப்பட்டால் அவர்களுக்காக பிணையாளர்களாகவும் செயல்பட்டு அவர்களை சிறையிலிருந்து வெளியே கொண்டு வர உதவினார்கள். விபச்சார மைய நிர்வாகிக்கும், விபச்சாரிக்கும் உறவு முறைகளில் நெருக்கம் இருந்தாலும், அநேகமான நேரங்களில் விபச்சாரியே பாதிப்புக்கு ஆளாகக் கூடியவளாக இருந்தாள் என்பது தெளிவு.
அமெரிக்கா : பாலியல் பலாத்காரங்கள்
பணியிடங்களில் நடைபெறும் பாலியல் பலாத்காரங்கள் :
ஆண்களும் பெண்களும் கலந்து பணியாற்றும் இடங்கள் எதுவாக இருப்பினும் அவற்றில் 40-70 சதவீதப் பெண்களும், 10-20 சதவீத ஆண்களும் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுகின்றார்கள் என்று ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன.

அமெரிக்காவில் அமைக்கப்பட்டுள்ள (Equal employment opportunity commission- (EEOC) கமிஷனிடம் ஒவ்வொரு ஆண்டும் 15 ஆயிரம் வழக்குகள் கொண்டு வரப்படுகின்றன. இதில் அதிசயம் என்னவென்றால் தாங்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுகின்றோம் என்று குற்றம் சாட்டும் ஆண்களின் எண்ணிக்கை முன்பைக் காட்டிலும் இப்பொழுது மும்மடங்கு அதிகரித்துள்ளது என்கிறது இந்த அமைப்பு. சமீபகாலமாக, பணியிடங்களில் தங்களின் மேலதிகாரிகளாக வேலைபார்க்கும் பெண்களினால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுகின்றோம் என்று 11 சதவீத வழக்குகள் பதிவாகி இருக்கின்றன.
1999-ல் எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தின் அடிப்படையில் 62 சதவீத கம்பெனிகள் தங்களது தொழிலாளர்களுக்கு பாலியல் பலாத்காரத்தினை எவ்வாறு தடுத்துக் கொள்வது என்பதற்கான பயிற்சியை வழங்கி இருக்கின்றன. இதில் 97 சதவீதக் கம்பெனிகள் பாலியல் பலாத்காரத்தினை எதிர்கொள்வது குறித்த கொள்கையை வகுத்து வைத்துள்ளன.
லூயிஸ் ஹாரிஸ் என்ற அமைப்பு 782 தொழிலாளர்களிடம் தொலைபேசி உரையாடல் மூலமாக ஒரு புள்ளிவிபரத்தைத் தயாரித்தது. அதில்,
o பணியில் இருக்கும் 37 சதவீதப் பெண்கள் தாங்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுவதாகக் குற்றம் சாட்டினார்கள்.
o 7 சதவீதப் பெண்கள் தங்களது தொழிலகங்களில் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுவதாகவும்,
o 62 சதவீத பலாத்காரங்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்றும்
o இதில் 100 சதவீதப் பெண்கள் தங்களை பலாத்காரம் செய்வது ஆண்களே என்றும்
o 59 சதவீத ஆண்கள் தங்களை பாலியல் பலாத்காரம் செய்வது பெண்களே என்றும்
o 41 சதவீத ஆண்கள் தங்களை பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்குவோர் வெளியில் உள்ள ஆண்கள் என்றும் குற்றம்சாட்டுகின்றனர்
பெண்களில் பலாத்காரத்திற்கு உள்ளாவோர் :
o 43 சதவீதப் பெண்களை அவர்களது முதன்மை அதிகாரிகளே பலாத்காரம் செய்கின்றனர்
o 27 சதவீதப் பெண்களை அவர்களது சீனியர் அதிகாரிகளே பலாத்காரம் செய்கின்றனர்

o 19 சதவீதப் பெண்களை அவர்களது தரத்தில் உள்ளவர்களாலும்
o 8 சதவீதப் பெண்களை அவர்களை விட தரத்தில் கீழ் நிலையில் உள்ளவர்களாலும் பலாத்காரம் செய்யப்படுகின்றனர்.
கல்விக் கூடங்களில் :
அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பயிலும் பெண்களின் குழுமத்தினால் 8-11 வயதுடைய 1632 மாணவர்களிடம் எடுக்கப்பட்டதொரு புள்ளிவிபரத்தில் :
o 85 சதவீத மாணவிகள் பாலியல் பலாத்காரத்திற்குள்ளாக்கப்படுகின்றனர்

o 76 சதவீத மாணவர்கள் பாலியல் பலாத்காரத்திற்குள்ளாக்கப்படுகின்றனர்
o 31 சதவீத மாணவிகள் அடிக்கடியும்
o 18 சதவீத மாணவர்கள் அடிக்கடியும்
o 13 சதவீத மாணவிகள் முத்தத்தை விட.., அதற்கும் மேலாக பாலியல் வல்லுறவுக்கு வற்புறுத்தப்படுவதாகவும்
o அதேபோல் 9 சதவீத மாணவர்கள் முத்தத்தை விட.., அதற்கும் மேலாக பாலியல் வல்லுறவுக்கு வற்புறுத்தப்படுவதாகவும்,
o 25 சதவீத மாணவிகளை அவர்களது பள்ளிக்கூடத்தில் பணிபுரிபவர்களாலும்
o 10 சதவீத மாணவர்களை அவர்களது பள்ளிக்கூடத்தில் பணிபுரிபவர்களாலும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்று அந்த ஆய்வு கூறுகின்றது
அமெரிக்காவில் பெண் பட்டதாரிகளிடம் எடுத்ததொரு ஆய்வில்
o 12.7 சதவீத பெண்கள் பாலியல் பலாத்காரத்தில் உட்படுத்தப்பட்டவர்களாகவும்
o 21 சதவீதப் பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்குப் பயந்து வகுப்புக்களை தவிர்க்கக் கூடியவர்களாகவும்
o 11 சதவீதப் பெண்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை புகார்களாகத் தெரித்தவர்களாகவும்
o 3 சதவீதப் பெண்கள் பாலியல் பலாத்காரத்தின் காரணமாக பள்ளிப்படிப்பை விட்டு விட்டவர்களாகவும் இருந்தனர்.
அமெரிக்காவில் உள்ள ஒரு ஆய்வு அறிக்கை இவ்வாறு கூறுகின்றது :
o பள்ளிக்கூடங்களில் பாலியல் பலாத்காரங்கள் இடம் பெறுகின்றன என்பதை 80 சதவீதமானவர்கள் அறிந்தே வைத்திருக்கின்றனர்
o இதில் 75 சதவீதம் மாணவர்களுக்கு இடையே நடைபெறுகின்றன என்பதையும்

o 50 சதவீதமானவைகள் அவர்களது பள்ளிக்கூட ஆசிரியர் மற்றும் நிர்வாகத்தினரால் நடைபெறுகின்றன.
இஸ்லாமியப்பார்வையில் விபச்சாரம்
விபச்சாரம் இஸ்லாமிய நோக்கில் மிகப் பெரிய பாவமும் குற்றச் செயலுமாகும். இஸ்லாம் விபசாரத்தை மட்டுமன்றி அதற்கு தூண்டுதல் வழங்குகின்ற அனைத்தையும் விலக்கியுள்ளது. இந்த வகையில் நாம் மேலே குறிப்பிட்டது போல, ஓர் ஆண் அந்நிய பெண்ணுடன் அல்லது ஒரு பெண் அந்நிய ஆணுடன் தனித்திருத்தல், ஆண்கள் - பெண்கள் சுதந்திரமாகப் பழகுதல் ஆகியவற்றுடன் நடனம், ஆபாசப் படங்கள், பாடல்கள், தரக்குறைவான இலக்கியப் படைப்புக்கள், கெட்ட பார்வை, காதல் போன்றவற்றையும் இஸ்லாம் ஹராமாக்கியுள்ளது.
விபச்சாரத்தை ஆகக் கூடிய தண்டனை வழங்கப்படவேண்டிய குற்றமாக இஸ்லாம் கருதுகின்றது. இஸ்லாமிய ஷரீஅத் அமுலில் உள்ள இடத்தில் ஓர் ஆணோ பெண்ணோ விபச்சாரம் புரிந்தால் அவருக்குக் கல்லெறிந்து கொல்லும் தண்டனை வழங்கப்பட வேண்டும். திருமணமாகாதவருக்கு தலா நூறு கசையடி வழங்கப்பட வேண்டும் என்பது இஸ்லாத்தின் தீர்ப்பாகும்.

விபசாரத்தினால் விளையும் ஆன்மீக, மறுமைப் பாதிப்புக்கள் பற்றி விளக்கும் நபிமொழிகளும் உண்டு. அவற்றுள் பின்வருவன குறிப்பிடத்தக்கவையாகும்:
''ஒருவர் விபச்சாரம் செய்யும் நிலையில் முஃமினாக இருக்க மாட்டார்' (புகாரி, முஸ்லிம்)
மோசமான நான்கு விளைவுகள்
''விபசாரத்தை விட்டு உங்களை எச்சரிக்கின்றேன். அதில் நான்கு விளைவுகள் இருக்கின்றன. அவையாவன:
முகத்தின் வசீகரத்தை நீக்கிவிடும்
வருமானத்தை அறுத்துவிடும்
ரஹ்மானின் கோபத்தைப் பெற்றுக் கொடுக்கும்
நரகில் நிலைத்திருக்க வழிவகுக்கும்' (ஆதாரம் : அத்தபராணி)
எனவே, தகாத பாலியல் தொடர்பு உடலாரோக்கியத்தைக் கெடுக்கின்றது. உள்ளத்தைக் கெடுக்கின்றது. அறிவையும், ஆன்மாவையும் பாதிக்கின்றது. தனிமனிதனை அழித்து, குடும்பவாழ்வை குட்டிச்சுவராக்கி விடுகின்றது. இறுதியில் முழுசமூக வாழ்வுக்கும் வேட்டு வைக்கிறது. இஸ்லாம் மனிதனது இயல்பான பாலுணர்ச்சியைத் தீர்த்துக்கொள்ளவே பண்பாடான திருமணம் என்ற ஒழுங்கைத் தந்துள்ளது. ஹராமானவற்றை நாடவேண்டிய அவசியம் இல்லாத அளவுக்கு இந்த தீனுக்கூடாக அனைத்தையும் ஹலாலாக்கி தந்திருப்பது அல்லாஹ்வின் பேரருளாகும்.

Monday, May 28, 2012

வேலை வாய்ப்புகள் குவிந்துள்ள உளவியல் படிப்புகள்



பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
மனித மனங்கள் எப்படி செயல்படுகின்றன என்பதை ஆராய்வது தான் உளவியல். இந்த பதில் கிடைக்காத கேள்விக்கு யூகத்தின் அடிப்படையில் பதிலளிப்பது உளவியலின் சிறப்பாக கருதப்படுகிறது.
சரியாக யூகம் செய்யும் திறன், ஆர்வம், பொறுமை, தகவல் தொடர்வு திறன் ஆகியவை இந்த துறைக்கு இன்றியமையாதது. இந்த துறையில் ஆர்வம் உள்ளவர்கள் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்து உளவியல் படிப்புகளை தேர்ந்தெடுத்து படிக்கலாம். இதில் டிப்ளமோ, பட்டப்படிப்பு, பட்டமேல் படிப்புகள், ஆராய்ச்சி படிப்புகள் ஆகியவை வழங்கப்படுகின்றன.

உளவியலில் பல துறைகள் அடங்கியுள்ளன. இதில் கல்வி உளவியல், சமூக உளவியல், தடய உளவியல், கலாசார உளவியல், எக்ஸ்பிரசிவ் தெரபி, ஆற்றுப்படுத்தல் உளவியல், செயற்கை அறிவு, மனிதக்கூறுகள், குழந்தை மற்றும் இளம்பருவ உளவியல், பிறழ்வு உளவியல் ஆகிய பிரிவில் கூடுதல் படிப்புகளும் வழங்கப்படுகின்றன.

இந்து துறையில் மனநல மருத்துவராக பணி புரிவதற்கு மருத்துவ படிப்புகளை பயில தேவையில்லை. இந்த துறை பட்டமேல் படிப்புகளை முடித்து, பணியில் நல்ல அனுபவம் பெற்றாலே மனநல மருத்துவராக பணிபுரியலாம்.

படிப்புகள்
* பி.ஜி., டிப்ளமோ (கிளினிக்கல் அண்டு கம்யூனிட்டி சைக்காலஜி)
* பி.ஜி., டிப்ளமோ (சைக்கலாஜிக்கல் கவுன்சிலிங்)
* பி.ஏ., (சைக்காலஜி)
* எம்.ஏ., (கிளினிக்கல் சைக்காலஜி)
* எம்.ஏ., (கவுன்சிலிங் சைக்காலஜி)
* எம்.எஸ்சி., (அப்ளைடு சைக்காலஜி)
* எம்.எஸ்சி., (ஹோலிஸ்டிக் சைக்காலஜி)

கல்வி நிறுவனங்கள்
* அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம்
* பாரதியார் பல்கலைக்கழகம், கோவை
* சென்னை பல்கலைக்கழகம், சென்னை
* கேரளா பல்கலைக்கழகம், திருவனந்தபுரம்
* பெங்களூரு பல்கலைக்கழகம், பெங்களூரு

வேலைவாய்ப்புகள்
தற்போது அனைத்து துறைகளிலும் உளவியல் நிபுணர்களின் தேவை கட்டாயமாக இருக்கிறது. கவுன்சிலிங், சோதித்தல், ஆராய்ச்சி, நிர்வாகம், சுகாதாரத் துறை, மனநல மருத்துவ மையங்கள், அரசின் மறுவாழ்வு மையங்கள், சட்டம், காவல் துறை, சமூக சேவகர்கள், சமூகவியலாளர்கள், கருத்துக்கணிப்பு ஆராய்ச்சியாளர்கள், உளவியல் பயிற்சியாளர்கள், தொழிலாளர் உறவுகள் மேலாளர்கள் ஆகிய

பிரிவுகளில் உளவியல் நிபுணர்களுக்கு பணி வாய்ப்புகள் காணப்படுகின்றன. அரசுத்துறை, வெளிநாடு களிலும் உளவியலாளர்களின் தேவை இருக்கிறது. இவர்களுக்கு ஆரம்ப கட்டத்தில் ரூபாய் 5 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை ஊதியம் கிடைக்கிறது. பின்னர் தங்களது தகுதி, திறமைக்கேற்ப ஊதியம்

பன்மடங்கு உயரும். இந்த துறையில் சமூகத்தின் நிலைமையை அறிந்து, அதற்குகேற்ப செயல் படுவதால் சமூகசேவை செய்யும் மனநிறைவு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

உளவியலின் பிரிவுகள்.....


உளவியல் பல்வேறு வகைப்படுகின்றன.அதன் தேவைக்கு ஏற்ப கத்தான் எல்லைகள் விரிவடைகின்றன.

  • நியம உளவியல்.....
மனித நடத்தையின் இயல்புகளை இது விளக்கும்.

  • பிறள் நிலை உளவியல்...
நடத்தையின் சமனற்ற நிலை,மனவெழுச்சிப் பிரச்சினைகள்,அசாதரண நடத்தை,என்பவை பற்றி இது ஆராயும்.

  • உயிரணுக்கள் பற்றிய உளவியல்....
ஒரு கரு உற்பத்தியில் இருந்து குழந்தைப் பருவம்,பிள்ளைப் பருவம்,கட்டிளமைப் பருவம்,வளர்ந்த பருவம்வரை நடத்தை எவ்வாறு வளர்ச்சி அடைகிறது என்பது பற்றி இது விளக்கும்.

  • குழந்தை உளவியல்....
குழந்தை வளர்ச்சியில் செல்வாக்கு செலுத்தும் பரம்பரைச் சூழல், முதிர்ச்சி,கற்றல் ,பரம்பரைத் தொடர்புகள், என்பன இதில் ஆராயப் படுகின்றன.பிள்ளைப் பருவத்தில் நிகழும் புலன் வளர்ச்சி,விவேக வளர்ச்சி ,சமுக வளர்ச்சி என்பன பற்றி இங்கு ஆராயப்படுகின்றன.

  • சமுக உளவியல்.
ஒருவருடைய நடத்தை ஏனையவர்களின் நடத்தையால் எவ்வாறு பாதிப்படைகிறது? குழுக்களுக்கு இடையே உள்ள பரஸ்பரத் தொடர்புகள் யாவை?என்பன பற்றி சமுக உளவியல் விளக்குகிறது.

  • பிரயோகஉளவியல்...
உளவியல் மூலம் பெற்ற அறிவை பல்வேறு துறைகளுக்கு பயன்படுத்த முடியும்.கல்வித் துறை எனின் கல்வி உளவியல் எனவும் மருத்துவத் துறை எனின் மருத்துவ உளவியல் எனவும் சட்டத் துறை எனின் சட்ட உளவியல் எனவும் இராணுவத் துறை எனின் இராணுவ உளவியல் எனவும் அமையும்.

கவுன்சிலிங் பண்ணலையோ கவுன்சிலிங்!!!





பழைய ஈயம் பித்தளைக்கு பேரீச்சம்பழம் என கூவி அழைப்பதை போல் பலர் கவுன்சிலிங் பண்ண வாங்க! என கூவி அழைக்கிறார்கள்.

""நானே தினமும் நாப்பது பேருக்கு கவுன்சிலிங் கொடுத்துக்கிட்டிருக்கேன். எனக்கே கவுன்சிலிங்கா?''
(திருப்பதிக்கே லட்டா மாதி)
"எவ்வளவோ பண்றோம் இதை பண்ணமாட்டமா?'' என்பது மாதி சிலர் கூறுவதுண்டு.


டாக்டர் இவனுக்கு நல்ல கவுன்சிலிங் பண்ணுங்க டாக்டர். சொன்ன பேச்சை கேட்க மாட்றான். இந்த காலத்துல படிக்கட்டி வாழ்க்கையே கிடையாது. நாங்கதான் படிக்கல புள்ளையாச்சும் படிக்கட்டுமேன்னு பார்த்தா (நீங்க படிக்காததாலதான் அவனுக்கும் அதே மூளை வந்திருக்குன்னு புஞ்சுக்குங்க ப்ளீஸ்)... என பல பெற்றோர்கள் புலம்புவதுண்டு.

உண்மை என்ன?


நீங்கள் குடியிருக்கும் தெருவில் கூட ஒரு கவுன்சிலர் இருப்பார் தெயுமா? வார்டு கவுன்சிலர். நீங்க பஞ்சாயத்து தேர்தல்ல ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தீங்களே அவர்தான். அவரும் கவுன்சிலர்தான். அவருடைய வேலையும் கவுன்சிலிங்தான். "ஏரியாவுல தெரு லைட்டெல்லாம் சரியா எயுதா?'' ""தண்ணி ஒழுங்கா வருதா?'' தெருவ சுத்தமா-,சுகாதாரமா வச்சுக்கணும் என பல கவுன்சிலிங் வேலைகள் அவருக்கு.

அரசுப்பணியில் காலியிடங்களை நிரப்ப, பிஇ. சேர்வதற்கு அண்ணா பல்கலைக்கழகம் போன்ற இடங்களில் கூட கவுன்சிலிங்கிற்கு கூப்பிடுவார்கள். இதுவும் கவுன்சிலிங்தான். ஆனால் உளவியல் கவுன்சிலிங் என்பது மட்டும் ஏதோ மந்திரவாதி, மாயாஜாலம் செய்வது போல நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். கலந்தாய்வு என்பதுதான் கவுன்சிலிங்.

அது சர்க்கரை வியாதிக்கு சிகிச்சையளிக்க கலந்தாய்வாக இருக்கலாம். கண்வன்-மனைவி பிரச்சினையை தீர்த்து வைக்கும் கலந்தாய்வாக இருக்கலாம். வார்டு கலந்தாய்வு, அணுசக்தி ஒப்பந்தம் குறித்து அனைத்துகட்சி கலந்தாய்வு என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். உளவியல் கலந்தாய்வு செய்ய பயிற்சி பெற்ற நிபுணர்களால் மட்டுமே முடியும். அது அறிவியல்பூர்வமானது. அறிவுரைகளும் ஆறுதல்களும் கவுன்சிலிங் கிடையாது.

Sunday, May 27, 2012

காதல் தம்பதியர் சேர்வதே… பிரிவதற்காகத்தானா?


“உன்னோடு வாழாத வாழ்வு என்ன‍ வாழ்வு
என் உள் நெஞ்சம் சொல்கிறதே!
என்ற பாடல் வரிகளை பாடி, பேசி, ஏங்கி ஏங்கித் தவித்துக் காதலித்து, பெற்றவர்களையும் உறவுகளையு ம் எதிர்த்து, சவால்களை தூசுகளாய் க் கடந்து… காதல் திருமணம் செய் துகொள்ளும் தம்பதிகள் பெருகி வருகிறார்கள். அதேசமயம், திரு மண வாழ்க்கையை பூரணமாக வா ழாமல், கைப்பிடித்த வேகத்திலே யே அந்த உறவிலிருந்து சட்டப்பூர் வமாக விலகுவதும் அதிகரித்து வருகிறது!
இந்தக் காலத்தில் கணவன் – மனைவி இருவரும் சம்பாதிக்கும் குடும்ப ங்களில் திருமண முறிவு என்பது வெகு இயல்பான விஷயமாகிப் போய் விட்டது என்கிற நிதர்சனம், நடுக்கத்தை ஏற்படுத்துகிறது.
ஏன் இந்த மன, மண முறிவுகள்?
இதைப்பற்றி அக்கறையுடன் நாம் நடத்திய ஆலோசனைகள் இங்கே …
சென்னை, குடும்பநல நீதிமன்றம். விவாகரத்துக்காகக் காத்திருக்கிறா ர்கள் பல பெண்கள். ”நானும் அவ ரும் மூணு வருஷமா லவ் பண்ணி, வீட்டை எதிர்த்து கல்யாணம் செய் துகிட்டோம். ஒரு நாலு மாசம்வரை க்கும் வாழ்க்கை நல்லாத்தான் போயிட்டு இருந்தது. என் வேலை சம்பந்தமா அடிக்கடி டூர் போக வே ண்டி இருக்கும். இதுதான் என்வொ ர்க் நேச்சர்னு தெரிஞ்சுதான் கல்யா ணம் செய்துகிட்டார். ஆனா, கல்யாணத்துக்கு அப்புறம், ‘டூர் போகக் கூடா து’னு தினம் தினம் சண்டை, டார்ச்சர். ஒரு லெவல் வரைக்கும் பொறு த்துப் பார்த்து முடியாமதான் இப்ப கோர்ட் டுக்கு வந்தேன்” என்று அதிக வலியின்றிப் பேசிய அந்தப் பெண்ணுக்கு வயது 25.
”நான் காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் படிச்சப்போ அவர் என்கூட பஸ்ல வருவார். பார்த்ததும் புடிச்சுப் போச்சு. செகண்ட் இயர் படிக்கும் போது எங்க வீட்ல மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. அதனால அவசரமா நானும் அவரும் கல்யாணம் பண்ணிக்கிட் டோம். ஆனா, பொருளாதாரப் பிரச்னை களை அவரால சந்திக்க முடியலை, என் னோட சின்ன தேவைகளைக்கூட நிறை வேத்த முடியலைங்கறது அப்புறம்தான் புரிஞ்சுது. இதனால தினம் சண்டை போட் டுக்கஷ்டப்படுறதைவிட, பிரிஞ்சு போயிடறதுனு முடிவு பண்ணிட்டேன் . இப்ப டைவர்ஸ் கேஸுக்கு ஆகற செல வைக்கூட என் அம்மா, அப்பா தான் பார்த்துக்குறாங்க” என்று அலட்டிக் கொள்ளாமல் சொல்லும் இந்தப் பெண்ணுக்கு வயது 22!
காதலைக் குலைக்கும் ‘ஈகோ’!
”நீதிமன்றத்துக்கு விவாகரத்துக் கேட்டு செல்வது தவறு என்கிற சிந்தனை, போன தலைமுறை யில் இருந்தது. விவாகரத்துக் கேட்பதில் என்ன தவறு இருக்கி றது என்கிற சிந்தனையுடன்தான் வாழ தலைப்பட்டிருக்கிறது இந் தத் தலைமுறை” என்று சுடும் உண்மையைச் சொல்லி ஆரம்பி த்த வழக்கறிஞர் சுதா ராமலிங் கம்,
”எல்லாவற்றிலும் வேகம், வேகம் என்று ஓடும் இந்தத் தலைமுறையி னர், பார்த்ததும் காதலிக்கிறார்கள். குடும்பம் நடத்த ஆரம்பித்ததும் ஒருவரின் ப்ளஸ், மைனஸ் தெரிய ஆரம்பிக்க, ‘நீயும் சம்பாதிக்கிறாய், நானும் சம்பாதிக்கிறேன். உன் தவறுகளை எதற்காக நான் சுமக்க வேண் டும், பொறுத்துக் கொள்ள வேண்டும்?’ என்கிற ஈகோ தலைக் குள் வந்தவுடன், நீதிமன்றத்துக்குள் நுழைந்து விடுகிறார்கள்” என்று எதார்த்தத்தை எடுத்து வைத்தார்.
அதிகம் படித்தவர்கள்தான் அதிகம்!
நீதிமன்றத்துக்கு இப்படி அவசரப்பட்டு வரும் தம்பதிகளுக்கு ஆலோசனை தருவதற்காக வே பிரத்யேகமாக கவுன்சலர்கள் நியமிக்கப்ப ட்டுள்ளனர். அவர்களில் சிலரிடம் பேசியபோ து… ”விவாகரத்துக்காக வரும் தம்பதிகளுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் மூன்று முறை கவுன்சலிங் கொடுக்கிறோம். 21-28 வயதுக் காரர்கள், ‘இதுதான் தீர்வு’ என்று தீர்மானித்து விட்டே இங்கே வருகிறார்கள். நாங்கள் என்ன ஆலோசனை சொன்னாலும், அவர்கள் பொறு மையுடன் கேட்பதில்லை என்பது வருத்த மான விஷயம்.
அதிகம் படித்த ஆண்களும், பெண்களும் மனம் முழுக்க ‘நான்’ என்கிற ஈகோவுடன்தான் எங்கள் முன் அமர்கிறார்கள். எங்களிடம் வரு கிற நூறு கேஸ்களில் ஒரு ஜோடிதான், மீண்டும் தம்பதியாக வீட்டுக்குத் திரும்பிப் போகிறார்கள். மற்ற 99 ஜோடிகளும் தனித்தனியாகவே பிரி ந்து நடை போடுவது துயரம்” என்று கனத்த மனதுடன் பகிர்ந்து கொண் டார்கள்.
‘அவன் என்னை டாமினேட் பண்றான்!’
”மறுகல்யாணம் வரை தீர்மானித்துவிட் டே… நீதிமன்றம் ஏறுகிற காதல் தம்பதிகளு ம் உண்டு. உண்மை, சிலசமயங்களில் கற்பனையைவிட பயங்கரமானதாக இருக் கும் என்பதை இம்மாதிரியான வழக்குகளி ல் இருந்துதான் தெரிந்து கொள்கிறோம்” என்று அதிரவைக்கிறார் மற்றொரு வழக்க றிஞரான சுதா.
”சாட்டிங்கில் பேசி, பழகி வீட்டுக்குத் தெரியா மல் கல்யாணம் செய்து கொண்டு, ஒரு வரு டம் முடிந்ததும் வீட்டுக்குத் தெரியாமலே யே விவாகரத்து வாங்கிப்போன வழக்குக ளையும் நீதிமன்றம் பார்த்திருக்கிறது.
ஆரம்பத்தில் ஏற்படுகிற ‘எதிர்பாலின ஈர்ப்பை’ காதல் என்று நம்பி கல் யாணம் செய்துகொண்டு, சில வருடங்கள் போன பின்பு, ‘இது காதல் அல்ல… எனக்கு ஏற்ற ஜோடி இது அல்ல’ என்று நீதிமன்றம் நாடுகிறவர் கள், ‘நானும் அவன் அள வுக்கு சம்பாதிக்கிறேன், அப்புறம் எதுக்கு என் னை டாமினேட் பண்றா ன்?’ என்று கேட்கும் வழக் குகள், மனைவி வேலை க்குப் போவது பிடிக்கவில்லை, அதனால் டைவர்ஸ் வேண்டும் என்று வரும் வழக்குகள், ‘அவனுக்கு நிறைய ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க’, ‘அவ எப்பவும் கம்ப்யூட்டர்ல சாட் பண் ணிட்டே இருக்கா’ என்று வரும் வழக்குகளில் எல்லாம் சம்பந்தப் பட்டவர்கள் காதலித்துத் திரு மணம்செய்து கொண்டவர்கள் தான்” என்று தான் சந்தித்த வழக் குகளை அடுக் குகிறார் சுதா.
ஏன் பெருகுகிறது விவாகரத்து?
காதல் தம்பதிகளிடம் ஏன் விவாக ரத்து பெருகிறது என்ற கேள்விக்கு, மன நல மருத்துவர் ஷாலினியின் பதில்…
”இன்றைய பெண்ணின் தேவை மாறி வருகிறது என்பதை ஓர் ஆண் புரிந்து கொள்ளாததுதான் எல்லா பிரச்னைகளுக்கும் காரணம். அவ ன் பார்த்து வளர்ந்த அவன் அம்மா வைப் போல்… வெறும் உணவும், உடையும், நகையும் பெண்ணின் தேவை அல்ல இன்று. அவள் எதி ர்பார்ப்பது சமத்துவம், சமமான மரியாதை. காரணம், பெண்ணும் இன்று ஆணுக்கு நிகராக சம்பாதிக் கிறாள், படித்து இருக்கிறாள், உல கம் தெரிந்து இருக்கிறது. அதனால் பெண் அட்வான்ஸ்டாக வளர்ந்துவிட்டாள். ஆனால்… ஒரு ஆண், ஒரு பெண்ணை நடத்தும் சிந்தனையில் இன்னும் பத்து வருடங்கள் பின் தங்கிதான் இருக்கிறான். வெறும் மல்லிகைப் பூவுக்கும் சினிமாவுக்கும் சமாதானமாகிப் போகிற பெண்தான் அவனுடைய சிந்தனையில் இருக் கிறாள். ஆனால், பெண்ணின் மன தில் இருப்பதோ… இந்தத் துணை ,  நம்மை சரிசமமாக நடத்துவான் என்கிற நம்பிக்கை தான். இந்த எதிர் பார்ப்புகள் எதிரெதிர் திசையில் செல்லும்போது, விவா கரத்துதான் வழி என்று தீர்மானிக்கிறார்கள்.
காரணம் தொழில்புரட்சி!
இது தவறு, சரி என்று சுட்டிக்காட்டுவதற்கு ம், வழிகாட்டுவதற்கும் அம்மா, அப்பா, அண்ணன், அக்கா, மாமா, அத்தை என்று உறவுகள் அவர்கள் அருகில் இல்லை. அல் லது அந்த உறவுகளுக்கு இவர்களின் பிரச் னை போய் சேருவதில்லை. இன்றைய தலைமுறையினர் மனதுக்குள் ஒவ்வொரு வரும் ஒரு தனித்தீவாகத்தான் வாழ்கிறார் கள். தொழில் புரட்சி ஏற்பட்ட நாடுகளில் எல்லாம் இந்தப் பிரச்னை எழுந்தது. உலக மயமாக்கலால் எழுந்துள்ள தொழிற்புரட் சியால் இன்று நாமும் அந்தப் பிரச்னையை எதிர்கொள்கிறோம்” என்றவரிடம், இதற்குத் தீர்வுதான் என்ன என்றோம் கவலையுடன்.
”மாறும் குடும்பச் சூழ்நிலையை, தொழில் அமைப்பை படித்த தம்பதிகள் உணர்ந்து, இந்தத் திருமண உறவை இறுதி வரை எடுத்துச் செல்வதற்கு மனதளவில் முயன்றால்தான் விவாகரத்துகள் குறையும். விவாகரத்து செய்வதால் குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை, சம்பந்தப்பட்ட அப்பாவும், அம்மாவும் உணர வேண்டும்!” என்றார் ஷாலி னி வேண்டுகோளாக!
சேர்வதே… பிரிவதற்காகத்தானா?
*
இனி, இங்கே… சிங்கிள் மதர்ஸ்!
சமூகவியல் பேராசிரியர் முனைவர் ஆனந்தி, ”மேலைநாட்டின் தொழில் நுட்ப ம், உணவு, உடை நம்மை ஆக்கிரமிக்கு ம்போது அவர்களது கலாசாரமும் நம்மி டம் வந்து ஒட்டிக் கொள்கிறது என்ப தைத்தான் இது காட்டுகிறது. மேலை நாடுகளைப் போல் இங்கும் இனி ‘சிங்கிள் மதர்ஸ்’ அதிகம் இருப்பார்கள். அதை நோக்கித்தான் நகர்த்துகிறது இந்த வேக மும் தொழில் புரட்சியும். 80-கள் வரை விவசாயம் சார்ந்த நம் வாழ்க்கை முறையில் உறவுகள், வாழ்க்கை மதிப் பீடுகள், திருமணம் எல்லாவற்றுக்கும் உணர்வுப்பூர்வமான முக்கியத்துவம் இருந்தது. இன்று நம் நாட்டில், குறி ப்பாக… தமிழ்நாட்டில் விவசாயம் கிட்டத்தட்ட அழிந்து விட்டதால் அத னுடன் தொடர்புடைய சமூக கலாசாரம், திருமணம் எல்லாமே கேள்வி க்குள்ளாகிக் கொண்டிருக்கிறது” என்று மாறிவரும் சூழ்நிலையைச் சொன்னார்.
விவாகரத்துகள்… சில உண்மைகள்!
சென்னை உயர் நீதிமன்றத்தில் மொத்தம் 4 குடும்ப நல நீதி மன் றங்கள் இருக்கின்றன. மதுரை உயர் நீதிமன்றத்தில் ஒரு குடும்ப நல நீதிமன்றம் இருக்கிறது. இவ ற்றுடன் ஒவ்வொரு மாவட்டத் தில் இருக்கும் சிவில் கோர்ட்டு களிலும் தினசரி விவாகரத்து வழ க்குகள் பதிவாகின்றன.
1980-களில் ஓராண்டுக்கே 20 – 30 விவாகரத்து வழக்குகள் வரைதான் ஒரு நீதிமன்றத்துக்கு வரும். இன்று தினமும் ஒவ்வொரு நீதிமன்றத்து க்கும் குறைந்தது 10 வழக்குகள் என்கிற அளவுக்கு நிலைமை கைமீறிப் போயிருக்கிறது.
 சென்னையில் கடந்த 3 ஆண்டு களில் விவாகரத்து வழக்குகளி ன் எண்ணிக்கை இரட்டிப்பாகியு ள்ளது. 2008-ல் 25 வயதுக்குள் விவாகரத்து பெற்ற ஆண்கள் 2%, 2011-ல் 4%. 2008-ல் பெண் கள் 3%, 2011-ல் 6%.
மும்பை, டெல்லி, லக்னோ, சென்னை போன்ற பெரு நகரங் களில் விவா கரத்து வழக்குகள் அநியாயத்துக்கும் பெருகிக் கொண்டிரு க்கின்றன. 1990-களில் வருடத்துக்கு 1,000 வழக்குகள் பதிவான நிலை யில், அடுத்த பத்தாண்டுகளில், அதாவது 2000 ஆண்டுகளில் வருடத் துக்கு 9,000 வழக்குகள் என உயர்ந்துள்ளது.
இதில் 25-35 வயதுக்கு உட்பட்டவர்கள் 75 சதவிகிதத்தினர். திருமணம் செய்துகொண்ட 3 ஆண்டுகளுக்குள் விவாகரத்துக்கு விண்ணப்பித்தவர் கள் 85 சதவிகிதத்தினர்.

மனநல மருத்துவர் வேதமாலிகா - நேர்காணல்



மனநல மருத்துவர் வேதமாலிகா - நேர்காணல்


நாம் பரபரப்பாக இயங்கும் பெரு நகர கலாச்சாரங்களில் வாழ்ந்து வருகிறோம், தினசரி வாழ்வு ஏற்படுத்தும் பிரச்சனைகளினாலும் நெருக்கடிகளாலும் இன்று, என்றுமில்லாத அளவிற்கு மன நோய்கள் அதிகமாகிவிட்டன, மேலும் மன நோய்க்கு மருந்து மாத்திரைகளும், முரட்டுத்தனமான சிகிச்சை முறையுமே சாசுவதம் என்று நம்பிக்கொண்டிருக்கிறோம், எந்த மருந்துகளுக்கும் கட்டுப்படாத சிக்கலான மன நோய்கள் சாதாரண மன சிக்கல்களிலிருந்து தோன்றுபவைகளே, இதற்கு புதிய புதிய மருத்துவ சிகிச்சை முறைகள் கண்டு பிடிக்கப்பட்டு வருகின்றன, அதில் ஹிப்னோ தெரபி மற்றும் பாரா ஹிப்னோ தெராபி முறைகள் மன நோய்களை தீர்க்கவல்லது என்று உலக சுகாதார அமைப்பு தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.

டாக்டர் வேதமாலிகா ஒரு மனநல ஹிப்னோ மருத்துவர். இவர் ஹிப்னோ தெரபி, Para Hypno Therapy, Past lite Therapy முறைகளை அமெரிக்காவில் கற்றுத் தேர்ந்து 20 ஆண்டுகளாக இத்துறையில் பணியாற்றி வருகிறார்.

மியாமி பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆராய்ச்சி செய்தவர். சைக்கோ-மியூசிக் தெரபி என்ற இசை மருத்துவ ஆய்விலும் ஈடுபட்டவர். ஹிப்னோ தெரபி அன்ட் மென்டல் ஹெல்த் என்ற மாத இதழின் ஆசிரியராக பணியாற்றியவர். பல்வேறு வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் வழங்கியவர்.

ஹிப்னோ தெரபி என்பது மருந்தின்றி மனநோய்களை குணப்படுத்தவல்லது என்று உலக சுகாதார அமைப்பு உறுதி செய்துள்ளது. அத்தகைய ஹிப்னோ சிகிச்சை பற்றியும், உடல், மன நோய்கள் பற்றியும் வெப்உலகத்திற்கு டாக்டர் வேதமாலிகா தந்த நேர்காணலின் முதல்பாகம் வருமாறு. அடுத்தடுத்த பாகங்களை வரும் வாரங்களில் பிரசுரிக்க உள்ளோம்.

வெப்உலகம் : ஹிப்னோ தெரபி பற்றி கூறுங்களேன்?

டாக்டர் வேதமாலிகா : ஹிப்னோ தெரபிக்கு மனம்தான் அடிப்படை. மனம் என்பதை 3 விதமாக பொதுவாக பிரிக்கலாம். வெளி மனம் அதாவது இப்ப நாம பேசிக்கிட்டு இருக்கற Concious mind. பிறகு உள் மனம்னு சொல்லப்படுகிற Sub-concious mind. இதைத் தவிர இன்னொன்று உள்ளது. இது புதை மனம்.

ஹிப்னோ தெரபிலே 2 மனசை டீல் செய்கிறோம். வெளி மனம் பற்றி முதலில் சொல்லிவிடுகிறேன். நம்முடைய வெளி மனது அலைபாயும் குணமுடையது. அதை முதலில் கட்டுப்படுத்த வேண்டும். கட்டுப்படுத்திய பிறகு Sub-concious mind -ங்கற உள் மனது நோக்கி கவனம் செலுத்துகிறோம். ஏனெனில் நம்முடைய அனைத்து குணாம்சங்களுக்கும், மனோநிலைக்கும் உள் மனம்தான் காரணம். வெளி மனதை கட்டுப்படுத்துவது என்பது ஹிப்னோ தெரபி முறைல ரிலாக்ஸ் செய்ய வைப்பது, சற்றே தளர்த்துவது. பிறகு உள் மனதை அணுகுகிறோம்., இதைத்தான் ஹிப்னாடிசம் என்கிறோம்.

வெப்உலகம் : ஹிப்னாடிசம் - ஹிப்னோ தெரபி வேறுபாடு உள்ளதா?

டாக்டர் வேதமாலிகா : ஹிப்னாடிசம் - ஹிப்னோ தெரபி வேறுபாடு பற்றி கூறவேண்டுமென்றால் வெளி மனதை அமைதிப்படுத்தி உள் மனதை அணுகுவது ஹிப்னாடிசம்னு சொல்றோம்.

ஹிப்னோ தெரபில உள் மனதுக்கு தகுந்த கட்டளைகளை அதாவது Suggestion கேளை கொடுத்து உதாரணத்துக்கு இப்ப ஒருத்தருக்கு mental disorder இருக்கு என்று கண்டுபிடிக்க வேண்டும், எப்படி கண்டுபிடிக்கிறோம், முதலில் Body relaxation பிறகு mind relaxation உடலை அமைதிப்படுத்தி பிறகு மனது அமைதிப்படுத்தி உள் மனதோட பேச தொடங்குகிறோம். உள் மனசோட பிரச்சினைகளை தெரிந்து கொண்டு அதற்கான கட்டளைகளை இட்டு நோய் தீர்க்கறதுதான் ஹிப்னோ தெரபி என்று கூறுகிறோம். இதை 3 ஆகச் சொல்லலாம்.

1. ரிலாக்சேஷன் என்றால் உங்களுக்கே தெரியும். மனம் மற்றும் உடலை அமைதிப்படுத்துவது.

2. Regression அதாவது ஒரு பிரச்சினைக்கான காரணம், லைஃப்ல எப்பவோ நடந்த ஒரு நிகழ்ச்சியா இருக்கும். இப்பொழுது நாம் என்ன செய்கிறோம் நினைவை பின்னோக்கி செலுத்துகிறோம். அதாவது கடந்த காலத்தை நோக்கிப் போதல். அதாவது Hypno-regression முறையில் என்ன பிரச்சினை என்பதை தெரிந்துக் கொள்கிறோம்.

3. Suggestion : பிரச்சினை என்னவென்று தெரிந்த பின்னால் அதற்குத் தகுந்த கட்டளைச் சொற்களைக் கொடுத்துக் கொடுத்து அந்த நோயை தீர்க்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்கிறோம். அதாவது கட்டளைச் சொற்களை வெளி மனதுக்குக் கொடுத்தால் அது தங்காது, எனவே ஹிப்னோ தெரபியில் உள் மனதிற்கு பதியும்படி கட்டளைச் சொற்களை கொடுக்கிறோம்.

வெப்உலகம் : ஹிப்னோ சிகிச்சை மூலம் எந்த மாதிரியான மனநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும்?

டாக்டர் வேதமாலிகா : இப்ப சாதாரண மக்கள்ங்கறவங்க நோயாளிகள் அல்ல. ஆனால் mental stress, மன இறுக்கம் தோன்றுகின்றன. ஆனால் மனநோயாளிகள் என்பவர்கள் உண்மையில் மனச்சிதைவு ஏற்பட்டவர்கள். முதலில் நாம் சாதாரண மக்களில் இருந்தே தொடங்குவோமே. ஒரு 4 வயசுக் குழந்தைக்குக் கூட சில பிரச்சினைகளை பெற்றோர்கள் கூறுவதைப் பார்க்கிறோம்.

அதாவது சொல்ற பேச்சை கேக்கறதில்ல, ஒழுங்கா படிக்கிறதில்ல, சாப்பிடறதில்ல அப்டீன்னு சொல்வாங்க. நீங்கள் கேட்கலாம். ஒரு சின்ன குழந்தைக்கு என்ன stress இருக்க முடியும் என்று கேட்கலாம். ஆனா இன்னிக்கு சின்னக்குழந்தைகளுக்கு ளவசநளள அதிகமாக இருக்கிறது. உதாணரமாக பள்ளிகள்ல புக்ஸ் தூக்குவது மட்டுமல்லாமல் பாடத்திட்டங்களும் அதிகமாக இருக்கிறது.

எக்கச்சக்கமா ஹோம் ஒர்க் கொடுக்கறாங்க. பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் படிக்க வேண்டும். முன்னுக்கு வர வேண்டும் என்று நினைக்கிறார்கள். குழந்தைகளுக்கும் இன்றைக்கு அமைதியான சூழல் தேவைப்படுது. பள்ளியிலிருந்து வந்தவுடன் ரிலாக்ஸ் செய்ய அவகாசம் கொடுத்துவிட்டு அடுத்த வேலை கொடுத்தால் சிறந்தது. வந்தவுடனேயே இதைச் செய் அதைச் செய் என்றால் வெறுப்புதான் ஏற்படும்.

எனவே நாம் குழந்தை மனோ நிலையை புரிந்து கொள்ள வேண்டும். விளையாடச் சொல்ல வேண்டும். பிறகு டிபன் கொடுத்துவிட்டு சற்று நேரம் கழித்து படிக்கலாமா? என்பதுபோல் கேட்டால் குழந்தைகளுக்கு படிப்பு மேல் வெறுப்பு ஏற்படாது. பெற்றோர்கள் இதைச் செய்வதேயில்லை. நல்லெண்ணம் இருக்கலாம். ஆனால், இதை விட குழந்தையின் மனநலம் தான் முக்கியம் என்பதை உணரவேண்டும். ஆனால், தற்பொழுது பெற்றோர்கள் என்ன புகார் கூறுகிறார்கள் என்றால், குழந்தைகள் டி.வி. பார்க்கின்றனர், படிப்பதில்லை, மக்காக இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

குழந்தைகள் டி.வி.ல பொதுவாக கார்ட்டூன்களை பார்க்கின்றன. ஏன் குழந்தைகள் கார்ட்டூன்களை ரசிக்கின்றன என்று பார்த்தோமானால், கார்ட்டூனில் நாய் பேசுகிறது, பூனை பேசுகிறது, மரம் பேசுகிறது. இதை குழந்தைகள் ரசிப்பது வெறும் ஆர்வத்தினால் மட்டுமல்ல, பெற்றோர்கள் வேலைக்குச் சென்றுவிடுகின்றனர். பள்ளி விட்டு திரும்பிய பிறகு தனிமையில் இருக்கும் குழந்தைகள் பேசக் கூட ஆளில்லாமல் தவிக்கும்போது பேசும் விலங்குகள், பேசும் தாவரங்கள் என்று வரும் கார்ட்டூன் நிகழ்ச்சிகளில் தனது இச்சையை பூர்த்தி செய்து கொள்கிறது. பேசாத மனிதர்களுக்கு நடுவே பேசும் பொருட்கள் விலங்குகளில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கின்றன.

என்னிடம் இது போன்ற ஒரு குழந்தையை அழைத்து வந்தார்கள். பரிசோதனை செய்துபார்த்த போது அந்த குழந்தையிடம் நல்ல புத்திக்கூர்மை இருந்தது. ஆனால், பள்ளிக்குச் சென்று படிக்க விருப்பமில்லை. ஏனென்று காரணம் கேட்டபோது, யாரோ டீச்சர் தன்னை அடித்துவிட்டதாக தெரிவித்தது. இது அந்தக் குழந்தையின் உள் மனதில் தீவிரமாக பதிந்திருக்கிறது. அதனால் பள்ளி என்றாலே ஒரு வெறுப்புணர்வு ஏற்பட்டுவிட்டது. ஹிப்னோ தெரபி மூலம் இத்தகைய குழந்தைகளின் உள் மனதில் கட்டளைகளை இட்டு மீண்டும் நார்மல் நிலைக்கு கொண்டு வர முடியும்.

கொஞ்சம் வளர்ந்த அதாவது +1, +2 படிக்கும் மாணவர்களை எடுத்துக் கொண்டால் அந்த வயதில் நிறைய attention தேவைப்படும். இப்போது பார்த்தீர்களானால் நிறைய பேர் Drug addictiony போய்விடுகிறார்கள். ஏனெனில் வீட்டில் அவர்களுக்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை. அடையாள நெருக்கடிகள் ஏற்படுகின்றன. தீவிரவாதிகள்னு நாம சொல்ற சிலர் உருவாவதற்கும் இதே போன்ற அங்கீகாரமில்லாமை காரணமாக இருக்கலாம். ஒரு சின்னக் குழந்தையை நாம் பாராட்டுகிறோம். இந்த பாராட்டு கிடைக்காதபோது இதற்கு பதிலாக வேறு ஒன்றை அவர்கள் வெளியில் தேடிக் கொள்கின்றனர்.

மாணவர்கள் ஏன் போதைக்கு அடிமையாகின்றனர் எனில் பல சமயங்களில் அவர்கள் எதிர்பார்க்கும் உற்சாகமும், பாராட்டும், தூண்டுதலும் பெற்றோர்களிடமிருந்து கிடைப்பதில்லை. இதை மறக்க மாணவர்கள் கெட்ட நண்பர்களுடன் சேருகின்றனர். போதைப் பழக்கம் ஏற்படுத்திக் கொள்கின்றனர். வீட்டில் அம்மா, அப்பா இருவரும் வேலைக்குச் செல்கின்றனர். வீட்டிற்கு வரும் குழந்தைகள் தங்கள் வேலையை தாங்களே செய்து கொள்ள வேண்டியுள்ளது. இப்ப இந்த குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு என்ன இருக்கிறது? எவ்வளவு நேரம் டி.வி. பார்த்துக் கொண்டிருக்கும். அதனால நண்பர்களை நோக்கி செல்கின்றன. இவர்கள் நல்ல நண்பர்கள், இவர்கள் கெட்ட நண்பர்கள் என்றெல்லாம் பார்க்க முடியாமல் கிடைத்தவர்களை பற்றிக் கொள்கின்றனர். இவர்கள் அவர்களை போதைக்கு பழக்கலாம். இதுபோன்று வளர்ந்த நிலையில் உள்ள மாணவர்களுக்கு ஹிப்னோதெரபி மூலம் நிலைக்கு கொண்டு வருகிறோம். அதாவது தவறான பாதைக்குச் சென்ற மனதை மீண்டும் பொருத்தமான கட்டளைகள் மூலம் நல்ல நிலைக்கு திருப்புவதில் ஹிப்னோ தெரபி பயன்படுகிறது.

அதேபோல் வேலைக்குச் செல்பவர்கள் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை என்கின்றனர். எங்களுக்கு பின்னாடி இருக்கிறவங்க பிரமோஷன் வாங்கிக் கொண்டு செல்கின்றனர் என்று கூறுகின்றனர். இதனால் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக நிம்மதியிழக்கின்றனர். அவர்களுக்கும் இந்த ஹிப்னோ தெரபி பயன்படுகிறது. குறிப்பா சாஃப்ட்வேர் துறையில் இருப்பவர்கள் இரவு அதிக நேரம் வேலை செய்கின்றனர். இதனால் தூக்கம் கெடுகிறது. இதனால் இரவு நேரத்தில் நம் உடலில் சுரக்கும் செரடோனா சுரப்பிகள் சுரப்பதில்லை. இதனால் உடல், மனப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே, தினசரி வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளால் உந்தப்படும் மன அமைதியின்மைக்கு ஹிப்னோ தெரபி பெரிதும் பயன்படுகிறது.

விளம்பரத் துறைகள்ல ஹிப்னாசிஸ் முறையைத்தான் கையாள்கிறார்கள். விளம்பரம் எப்படி செய்கிறார்கள் என்று பார்த்தால், ஒரு க்ஷசயனேஐ திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். இதனால் அதன் பெயர் நம் உள் மனதில் பதிகிறது. எனவே ஏதாவது ஒரு பொருள் வாங்க வேண்டுமென்றால் நமக்கு உடனே அந்த பிராண்ட் ஞாபகத்திற்கு வருவது ஒரு வகையில் பார்த்தால் ஹிப்னாடிச முறைகளிலேயே.