Sunday, April 29, 2012

ஒன்பது குழந்தைகளை சுமக்கும் தாய்! அரங்கேறும் மருத்துவ அதிசயம்


உண்மையில் இது ஒரு மருத்துவ அதிசயம் தான்.
மெக்சிக்கோ நாட்டைச் சேர்ந்த பெண்ணின் வயிற்றில் ஒன்பது குழந்தைகள் வளர்ந்து வருவதாக பிரித்தானியப் பத்திரிக்கை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
குறித்த பெண் டெக்ஸாஸ் அருகில் உள்ள கோகுலியா வைத் சேர்ந்த கர்லா வனீஸ்ஸா பரீஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் தற்போது மாநிலத் தலைநகர் சால்டில்லோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கு மே 20-ம் தேதி அளவில் குழந்தைகள் பிறக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக் கின்றன. 6 பெண்குழந்தைகளும், 3 ஆண் குழந்தைகளும் பரீஸின் வயிற்றில் வளர்ந்து வருவதாக தெரிவிக் கப்பட்டுள்ளது.
ஏற்கனவே Nadya Suleman என்ற தம்பதியினர் 2009 ஆம் ஆண்டு எட்டுக் குழந்தைகளைப் பிர்சவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சென்னையில் பி.சி.சர்க்கார் மேஜிக் ஷோ: பெண்ணை இரண்டாக துண்டித்து ஒட்ட வைத்து உயிர் கொடுக்கிறார்



சென்னையில் கோடைகால விடுமுறையை கொண்டாடும் வகையில் குழந்தைகளை கவர பி.சி.சர்க்கார் மேஜிக் ஷோ தொடங்கியுள்ளது.
சென்னை தியாகராயநகர் அபிபுல்லா சாலையில் உள்ள ராமாராவ் கலா மண்டபத்தில் இந்த மேஜிக் ஷா நடந்து வருகிறது. இதன் தொடக்க விழாவில் இசை அமைப்பாளர் தேவா கலந்து கொண்டு குத்துவிளக் கேற்றி மேஜிக் ஷோவை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சி.எம்.கே. ரெட்டி, சுந்தர்ராஜன், பி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, வி.ஜெயச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த மேஜிக் ஷோவில் பி.சி. சர்க்கார் தந்தை மகன் இருவரும் பல்வேறு சாகசங்களை நடத்திக் காட்டி குழந்தைகளையும் பெரியவர்களையும் அதிசயிக்க வைக்கிறார்கள்.
குடும்ப புகைப்பட பெட்டியில் இருந்து மாயாஜாலமாக பி.சி.சர்க்கார் தோன்றுவதுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. பி.சி.சர்க்கார் தனது முக பாவனையால் அனைவரையும் ஈர்க்கிறார். காலி உருளையில் இருந்து தோரணங்கள், கம்பி கூடைகளை வரவழைப்பது, பெண்ணை பெட்டியில் அடைத்து கத்தியால் சொருவது வாட்டர் ஆப் இந்தியா என்ற பெயரில் காலியான சொம்பில் இருந்து அடிக்கடி தண்ணீரை வரவழைப்பது, வயிற்றை கிழித்துக் கொண்டு பெண்ணை வெளியே எடுப்பது என அதிரடி சாகசங்களை செய்கிறார்.
ஒரு இளம் பெண்ணை 2 துண்டாக அறுத்து மீண்டும் ஒட்ட வைத்து உயிர்ப்பிக்கும் அதிசயம் பார்வையாளர்களை வெகுவாக கவர்கிறது. தந்தை பி.சி.சர்க்கார் கண்ணை கட்டிக் கொண்டு செய்யும் சாகசம் ஆச்சரியப்பட வைக்கிறது. பார்வையாளர்கள் 7 பேரை அழைத்து கரும் பலகையில் எழுதும் நம்பர்கள், ஆங்கில வார்த்தைகள் போன்றவற்றை கண்ணை கட்டிக் கொண்டு கண்டுபிடிக்கிறார்.
பார்வையாளர்கள் வரையும் குறியீடுகளை வைத்து முழு படத்தையும் கண்ணை கட்டிக் கொண்டு வரைந்து முடித்து ஆச்சரியப்பட வைக்கிறார். வருகிற ஜூன் மாதம் 3-ந் தேதி வரை இந்த மேஜிக் ஷோ நடக்கிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4.15, இரவு 7.15 என 2 காட்சிகளும், இதர நாட்களில் இரவு 7.15 மணி காட்சியும் இடம் பெறுகிறது. பிரியா கல்சுரல் அகாடமி சார்பில் மூர்த்தி, கார்த்திக் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

13 வயதுச் சிறுமியை திருமணம் செய்த 35 வயது பேராசிரியர்!


ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பெத்தமானியம் மண்டலம் தாடிமாகுலப்பள்ளியை சேர்ந்தவர் ரமேஷ் (35). இவர் திருப்பதியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிகிறார்.
இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த சுனில்ரெட்டி என்பவரது 13 வயது மகளுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இந்த பெண் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களது திருமணத்திற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் ரமேஷிடம் சென்றும் அறிவுரை கூறினர். இதை ஏற்க அவர் மறுத்துவிட்டார்.
ரமேஷூக்கு, தங்களது மகளை திருமணம் செய்து வைப்பதில் மாணவியின் பெற்றோர் பெரிதும் விரும்பினர். இந்நிலையில் திருமண பத்திரிகை கொடுத்தால் ஊர் மக்கள் பிரச்னையை பெரிதுபடுத்திவிடுவார்கள் என இருவீட்டாரும் கருதினர்.
எனவே திருமணத்தை வேறுபகுதியில் ரகசியமாக நடத்தி முடிக்க திட்டமிட்டனர். அதன்படி மதனப்பள்ளி அயோத்தியா நகரில் புதிதாக கட்டப்பட்ட ஒரு கோயிலுக்கு நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) சென்றனர்.
நெருங்கிய உறவினர்கள் என சுமார் 20 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுத்திருந்தனர். அதிகாலை 5 மணியளவில் சிறுமியின் கழுத்தில் பேராசிரியர் தாலி கட்டினார். கோயில் பூசாரி இந்த திருமணத்தை நடத்தி வைத்தார். இதுகுறித்து தகவலறிந்த பத்திரிகையாளர்கள் மற்றும் மகளிர் அமைப்பினர் அந்த கோயில் முன் திரண்டனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பேராசிரியர், புதுப்பெண்ணை அவசர, அவசரமாக அழைத்துக்கொண்டு பைக்கில் ஏறி புறப்பட்டார். இதேபோல் திருமணம் நடத்தி வைத்த அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்களும் அங்கிருந்து உடனடியாக சென்றுவிட்டனர்.
இதுகுறித்து மதனப்பள்ளி 2வது போலீசாருக்கு கிராம மக்கள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட் டது. சப்&இன்ஸ்பெக்டர் கங்காதர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து திருமணத்தை நடத்தி வைத்த பூசாரியிடம் விசாரித்தனர். இது தொடர்பாக பேராசிரியரிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

காரில் செக்ஸ் வைத்துக் கொண்ட ஜோடிகள்! அதிர்ச்சிப் படங்கள் இணைப்பு

உண்மையில் நீங்கள் இங்கே இருக்கின்ற விந்தையான ஜோடிகளைப் பார்த்து சற்று மிரளத்தான் போகின்றீர்கள்.
ஆனால் ஒன்று மட்டும் நன்றாகப் புரிகின்றது… இந்தப் படங்களை எடுத்த புகைப்படப் பிடிப்பாளர் நல்ல சக்தி வாய்ந்த கமரா லென்ஸ்களைப் பயன்படுத்தியுள்ளார்..
எவ்வளவு நுணுக்கமாக இந்தப் படப் பிடிப்பாளர் படம் பிடித்துள்ளார் என்று பாருங்கள்… எங்கு என்று இல்லை உயிருள்ள ஜீவன்கள் செக்ஸ் உறவு கொள்ளும் காட்சிகளே இவை.. எங்கே நீங்களும் பாருங்களேன் இந்தக் காட்சிகளை…