|
உடல்ரீதியான காரணிகள்:
- நியுரோ டிரான்மீட்டர்கள்: மூளையில்
நியுரோ டிரான்மீட்டர்கள் எனப்படும் சிறப்பு இரசாயனங்களின் அசாதரணமான
நிலைப்புத்தன்மைக்கும் மனநோய்களுக்கும் தொடர்புகள்
இருப்பதாகக்கூறப்படுகிறது. மூளையில் உள்ள செல்களுக்கிடையே தகவல் தொடர்பு
ஏற்பட நியுரோ டிரான்மீட்டர்கள் உதவுகின்றன. இவை சரியாக வேலை செய்யாவிட்டாலோ
அல்லது அவற்றின் அளவுகள் நிலையில்லாமல் இருந்தாலோ, மூளையில் தகவல்கள்
சரியாக பரிமாறிக்கொள்ளப்படாமல், மனநோய்க்கான அறிகுறிகள் தோன்றுகின்றன.
- மரபியல்: பரம்பரையாக
தோன்றுவதால், குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு மனநோய் இருந்தால், பிறருக்கும்
அது வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இத்தகைய பாதிப்பு, மரபணுக்கள்
மூலமாக சந்ததிகளுக்கிடையே கடத்தப்படுவதால் இவ்வாறு உண்டாகிறது. ஒன்றுக்கு
மேற்பட்ட மரபணுக்களில் கோளாறுகள் இருந்தால், மனநோய்கள் ஏற்பட அதிக
வாய்ப்புகள் இருப்பதாக நிபுணர்கள் கருதுகிறார்கள். எனவேதான், பரம்பரையாக
அத்தகைய மரபணுக்களை ஒருவர் பெற்றிருந்தாலும், அவர் மனநோய் இல்லாமலும்
இருக்கக்கூடும். பல மரபணுக்களின் கூட்டுச் செயல்பாடுகளோடு, மனஅழுத்தம்,
துக்க நிகழ்வுகளின் தாக்கம் ஆகிய பிற காரணிகள் இணையும் போது, அதிக
பாதிப்புக்குள்ளாக வாய்ப்பு உள்ள நபர் இந்நோயால் தாக்கப்படுகிறார்.
- நோய்தொற்றுகள்: சிலவகை
நோய்தொற்றுகள், மூளையில் பாதுப்புகள் எற்படுத்துவதால் மனநோய்கள் ஏற்படலாம்
அல்லது அதிகரிக்கப்படலாம். உதாரணமாக, ஸ்ட்ரோகாக்கஸ் பாக்டீரியா
(Streptococcus bacteria) தொற்றுக்கும், பீடியாட்ரிக் ஆட்டோஇம்யூன் ந்யூரோ
சைக்கியாட்ரிக் டிஸார்டர் (pediatric autoimmune neuropsychiatric disorder
- PANDA) என்ற நிலைக்கும் தொடர்பிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால்
குழந்தைகளிடையே, அப்ஸஸிவ் கம்பல்சிவ் டிஸார்டர் (obsessive-compulsive
disorder) மற்றும் பிற மனநோய்கள் ஏற்படக்கூடும்.
- மூளை பாதிப்புகள் அல்லது காயங்கள்: மூளை பாதிப்புகள் அல்லது குறிப்பிட்ட பகுதிகளில் ஏற்படும் காயங்களால், சில வகை மனநோய்கள் ஏற்படுகின்றன.
தேசிய
மனநலக் கொள்கைகள் (National mental health policies), மனநலக்குறைபாடுகள்
பற்றி மட்டுமல்லாமல், அவை ஏற்படக் காரணமாக உள்ள பல விரிவான விஷயங்களையும்
உணர்ந்து, அவற்றை தீர்க்கும் முயற்சிகளை செய்யவேண்டும். மனநலம் பற்றிய
கருத்துக்களை சுகாதாரம் மட்டுமன்றி, கல்வி, வேலைவாய்ப்பு, நீதி,
போக்குவரத்து, சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாடு ஆகிய அரசு மற்றும் தனியார்த்
துறைகளின் திட்டங்கள் மற்றும் கொள்கைகளில் ஒருங்கிணைக்க நடவடிக்கை
மேற்கொள்ள வேண்டும்.
|
No comments:
Post a Comment