Saturday, March 31, 2012

Account Activity: கூகுளின் புதிய வசதி



கூகுள் நிறுவனம் தனது பயனாளர்களுக்கு, புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்திக் கொண்டே வருகின்றது.
பெரும்பாலானவர்கள் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட கூகுள் வசதிகளை பயன்படுத்தி வருகின்றனர். கூகுளில் Account Activity என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளனர்.
நீங்கள் ஒரு மாதத்தில் கூகுள் தயாரிப்புகளை எத்தனை முறை உபயோகித்து உள்ளீர்கள், எதற்காக உபயோகப்படுத்தி உள்ளீர்கள், ஒரு மாதத்தில் எத்தனை மின்னஞ்சல் உங்களுக்கு வந்துள்ளது, எத்தனை மின்னஞ்சல் நீங்கள் அனுப்பியுள்ளீர்கள் என்ற முழு அறிக்கையையும் பார்க்க உதவுவது தான் Account Activity என்ற புதிய வசதி.
முதலில் கூகுள் பிளஸ் தளத்தை திறந்து Account Settings ==> Products ==> Go to Account Activity என்பதை க்ளிக் செய்யவும்.
கூகுள் பிளஸ் கணக்கு இல்லாதவர்கள் இந்த லிங்கில் Google Account Activity க்ளிக் செய்து Account Activity வசதியை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு தோன்றும் விண்டோவில், Opt in என்ற பட்டனை க்ளிக் செய்யவும்.
Opt in பட்டனை அழுத்தியவுடன் உங்களுடைய கோரிக்கை அவர்களுக்கு அனுப்பப்படும். அதிகபட்சமாக இரண்டு நிமிடத்தில் உங்கள் அறிக்கை தயாராகிவிடும். இதனை உறுதிப்படுத்த உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவார்கள்.
அந்த மின்னஞ்சலில் உள்ள லிங்கின் மூலமாகவோ அல்லது Google Plus ==> Account Settings ==> Products ==> Go to Account Activity என்ற இடத்திற்கு சென்று உங்களுடைய ஒரு மாத அறிக்கையை பார்த்து கொள்ளலாம்.