Saturday, April 14, 2012

பிணவறையிலிருந்து 12 மணி நேரத்திற்கு பின்பு உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை


அர்ஜென்டியானாவின் வடபகுதி மாகாணமான சரகோவில் அரசு மருத்துவமனையில் இளம் பெண்ணான அனாலியா பவுட்டர் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்ட அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக கூறினர். அடையாளம் கண்டறிய முடியாத நோயால் அந்த குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் இறப்பு சான்றிதழ் வழங்கினர்.
இதையடுத்து அந்த குழந்தை பிணவறை கொண்டு செல்லப்பட்டு பிணங்கள் வைக்கப்படும் இழுவறை (டிராயர்) பெட்டியில் வைத்து பூட்டப்பட்டது. உயிர் இருந்தது பிணங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் வரை, கெட்டுப்போகாமல் இருப்பதற்காக அந்த அறை குளிரூட்டப்பட்டுள்ளது.
குழந்தை பிறந்து 12 மணி நேரத்துக்கு பின்பு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பவிருந்த அனாலியா கடைசியாக தனது குழந்தையின் முகத்தை பார்த்து விட்டு செல்ல ஆசைப்பட்டார். பிண அறைக்கு சென்று தனது குழந்தை வைக்கப்பட்டு இருந்த இழுப்பறையை (டிராயர்) திறந்து பார்த்தார்.
அப்போது குழந்தையின் உடலில் அசைவு காணப்பட்டது. உடனடியாக குழந்தையை தூக்கி கொண்டு மருத்துவரிடம் ஓடிவந்தார். அந்த குழந்தைக்கு தேவையான அவசர சிகிச்சை உடனடியாக அளிக்கப்பட்டது.
சில மணி நேரத்துக்கு பின்னர் குழந்தையின் உடல் நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டது. குறைப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை வைத்து பராமரிக்கப்படும் பிரிவில் வைத்து அந்த குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குழந்தையின் உடல் நிலை சீராகவும், நல்ல நிலையிலும் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பிணவறைக்கு சென்று 12 மணி நேரத்துக்கு பிறகு பச்சிளம் குழந்தை உயிருடன் திரும்பி வந்திருப்பது தாய்க்கு மகிழ்ச்சியையும், மருத்துவமனை ஊழியர்களுக்கு ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் பணக்கார வீதி!


இது தான் இந்தியாவின் பணக்கார வீதி. கிட்டத்தட்ட 30 பில்லியன் பவுண்களால் தள்ளாடுகிறது.
இந்தியாவின் புதுடில்லியில் உள்ள Aurangzeb என்ற வீதியே மேற்படி சிறப்பைப் பெற்றதாகும். குறித்த வீதியில் ஏழு கோடீஸ்வரர்கள் வசிக்கிறார்கள்.
பிரித்தானியாவின் கோடீஸ்வரராக உள்ள Lakshmi Mittal இன் வீடும் குறித்த தெருவில் உள்ளது. ஒரு வீதியில் இத்தனை கோடீஸ்வரர்களா என்று மலைக்காதீர்கள்…

ஐந்து பேருடன் செக்ஸ் இல் ஈடுபட்ட மாணவியை கையும் களவுமாகப் பிடித்த பொலிஸ்!


இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்தவர் பிரியா. இவருக்கு வயது 19.
கல்லூரி ஒன்றில் இரண்டாவது வருடம் படித்து வருகிறார். அவருக்கும் குலசேகரம் அருகே உள்ள சேனம்கோடு பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் படிக்கும் போது ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியுள்ளது.
இருவரும் செல்போனில் பேசி காதலை வளர்த்து வந்தனர். இந்நிலையில் நேற்று அந்த வாலிபர் தனது 3 நண்பர்களுடன் சேர்ந்து மாணவியை அழைத்து கொண்டு ஆட்டோ ஒன்றில் சேனம்கோடு பகுதிக்கு வந்துள்ளார்.
அங்கிருந்து வேட்டி மலை வனப்பகுதிக்கு சென்றுள்ளனர். அங்குள்ள ஒரு குடிசையில் 5 பேரும் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. அதை செல்போனில் மாறி மாறி படம் பிடித்துள்ளனர்.
இந்நிலையில் காட்டுப்பகுதிக்கு வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய தொழிலாளர்கள் குடிசைக்குள் இருந்து சத்தம் வருவதைக் கேட்டு சந்தேகமடைந்தனர். அங்கு சென்று நிலமையை கண்ட அவர்கள் அதிர்ச்சியடைந்து குலசேகரம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
பொலிஸார் விரைந்து சென்று 5 பேரையும் கையும் களவுமாக பிடித்து காவல்நிலையம் கொண்டுவந்தனர். அவர்களது செல்போன்களை பறிமுதல் செய்தனர். பெண்ணின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
பெண்ணின் தாயார் அழுது கொண்டே காவல்நிலையம் வந்தார். பொலிஸார் மாணவிக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். பிடிபட்ட வாலிபர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.