Friday, May 18, 2012

சுய இன்பம் புத்துணர்ச்சியை அளிக்குமா




சுய இன்பம் புத்துணர்ச்சியை அளிக்குமா? இதனால் சோர்வு நீங்குமா? எத்தனை நாட்களுக்கு ஒரு முறை செய்யலாம்.
செக்ஸ் ஒரு அடிப்படைத் தேவை. ஆனால், நாம் மிருகங்கள் அல்ல; நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் கண்ணில்பட்ட நபருடன் உடல்உறவு கொள்ள. புத்துணர்ச்சி கிட்டுமா என்பது ஒவ்வொருவரின் மனநிலையைப் பொறுத்தது.
சிலருக்கு சுய இன்பம் தவறு என்ற சமுதாய கண்ணோட்டத்தால் மனச்சோர்வு ஏற்படலாம். தவறு அல்ல என்று உறுதியாக நம்பும் பட்சத்தில் மனச்சோர்வு வெளியேற்றப்படுமா என்பதுவும் நமது கண்ணோட்டத்தை பொறுத்ததே. உணவு உட்கொண்டு பசியாறிய நிலை ஏற்படலாம். எத்தனை நாட்களுக்கு ஒருமுறை என்ற கணக்கெல்லாம் கிடையாது.



பிரிட்டன் பெண்களிடம் அதிகரிக்கும் பழக்கம்
பிரிட்டனைச் சேர்ந்த 10 பெண்களில் 9 பேர் தாங்களாகவே பாலுறவு இன்பம் (சுய இன்பம்) அனுபவித்துக் கொள்வதற்கு நேரம் ஒதுக்கிக் கொள்வதாக தெரிய வந்துள்ளது.
பிரிட்டனில் நடத்தப்பட்ட புதிய ஆய்வு ஒன்று இத்தகவலை வெளியிட்டுள்ளது.
18 முதல் 30 வயதுடைய சுமார் ஆயிரம் பெண்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்களின் பாலுறவு செய்கைகள், பழக்க வழக்கங்கள், விருப்பம் உள்ளிட்டவை கேட்டறியப்பட்டது.








 
இதில், கடந்த 10 ஆண்டுகளில் அதிக அளவு பெண்கள் தாங்களாகவே இன்பம் அனுபவிப்பது தெரிய வந்துள்ளது.
பிரிட்டனில் மூன்றில் 2 பங்கு பெண்கள் வாரத்திற்கு 3 முறையும், லண்டனில் வாரத்திற்கு 4 முறையில் இதுபோன்ற செய்கைகளில் ஈடுபடுவதும் தெரிய வந்திருப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது.










இப்படிச் செய்வதால் பெண்கள் தங்கள் துணையுடன் பாலுறவு கொள்ளும் போது தன்னம்பிக்கை ஏற்படுவதாக அவர்கள் கருதுவதாகவும் அந்த ஆய்வறிக்கை
கூறுகிறது. 

கண்களை மூடி காதலுடன் உதட்டில் முத்தமிடுங்கள்



முத்தம் என்பது காதலின் தொடக்கம். எந்த ஒரு செயலுமே தொடக்கம் சரியாக இருந்தால் பாதி வெற்றி பெற்றதற்கு சமம். தாம்பத்ய உறவிற்கான முதல் திறவுகோல் முத்தம்தான். சிலர் அதிலேயே சொதப்பிவிடுவார்கள். அப்புறம் என்ன உற்சாகம் வடிந்து காதல் ஆர்வம் ஓடியே போய்விடும். முத்தமிடுவது கூட ஒரு கலைதான் அதை சிறப்பாக செய்தால் மற்ற செயல்களை சரியாக அமையும். முத்தமிடுவது குறித்து நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.
கண்களால் கவருங்கள்
காதலை வெளிப்படுத்த கண்கள்தான் சிறந்த வழி. எனவே நெருக்கமான தருணங்களில் விழிகளின் வழியே உங்களின் விருப்பத்தை வெளிப்படுத்துங்கள். அப்புறம் என்ன சிக்னல் கிடைத்தால் முத்தமிட ஆரம்பிக்கவேண்டியதுதானே.
முத்தமிட சரியான இடம்
புன்னகை தவழும் இடம் இதழ்கள். அந்த இதழ்களில் முத்தம் என்னும் முத்திரையைப் பதிப்பது சாதாரண விசயமல்ல. எந்த இடத்தில் முத்தமிடப் போகிறோமோ அதற்கான சரியான இடத்தை தேர்வு செய்யவேண்டும். தேவையற்ற பகுதிகளை கண்களில் இருந்தும் மனதில் இருந்தும் அழித்துவிடுங்கள். பின்னர் துணையின் புன்னகை மூலம் அனுமதி கிடைத்த உடன் மெதுவாக முத்தமிடுங்களேன்.
ரிலாக்ஸ் ஆக இருங்கள்
எந்த ஒரு விசயத்தையும் செய்வதற்கு முன்பு ரிலாக்ஸ் செய்வது அவசியம். அது முத்தத்திற்கும் பொருந்தும். துணையின் தலையை பிடித்து கூந்தலை கோதி ரிலாக்ஸ் செய்யுங்கள் பின்னம் லேசாக கழுத்தை சாய்த்து வளைத்து சின்னதாய் முத்தமிடுங்கள். முத்தமிடுவதற்கு முன்பாக உதட்டினை சற்றே ஈரப்படுத்துங்கள். அது காதல் உணர்வுகளை அதிகரிக்கும். சரியான பொசிசனுக்கு கொண்டு வந்து முத்தமிடுங்கள். முத்தமிடும்போதோ, முத்தத்தை பெறும்போதோ கண்களை திறந்து வைத்து வேடிக்கை பார்க்க வேண்டாம் அது சுவாரஸ்யத்தை கெடுத்துவிடும். லேசாக கண்களை மூடி அனுபவியுங்கள் இதுதான் சரியான முத்தம் என்கின்றனர் நிபுணர்கள். அப்புறம் என்ன ஆரம்பிக்க வேண்டியதுதானே?

பெண்கள் சுய இன்பம் காண்பது தவறா?* டீன் ஏஜ்… Tips

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் புரியாத புதிரான காலக்கட்டம் அவர்களது டீன் ஏஜ் பருவம். விடை தெரியாத பல கேள்விகள் மனதைக் குடைந்தெடுக்கும் பருவம்.
*டீன் ஏஜில் அடியெடுத்து வைத்திருப்போருக்குத் தோன்றக் கூடிய சில பொதுவான கேள்விகளும், அவற்றுக்கான விளக்கங்களும் இங்கே….. *
*பெண்கள் சுய இன்பம் காண்பது தவறா?*
மனத்தளவிலும், உடலளவிலும் தன்னை பிஸியாக வைத்திருக்கும் பெண்களுக்கு இப்படிப்பட்ட எண்ணமே வருவதில்லை. தனிமையில் இருப்போருக்கே இப்பழக்கம் அதிகமிருக்கிறது. பருவ வயதில் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த சுய இன்பம் காண்பதில் தவறில்லை. ஆனால் அது தினசரிப் பழக்கமாகவோ, அது இல்லாமல் எந்த வேலையும் சாத்தியமில்லை என்கிற அளவிலோ இருக்கக் கூடாது. சுய இன்பம் காண்கிற பெண்கள் அதற்கு ஆபத்தான கருவிகளை உபயோகிக்கிறார்கள். அப்படி உபயோகிக்கும் பொருட்கள், பிறப்புறுப்பினுள் போய் சிக்கிக்கொண்டு, உயிருக்கே ஆபத்தாக முடியலாம். ஸ்டைல் என்ற பெயரில் ரொம்பவும் டைட்டான ஜின்ஸ் அணிகிற பெண்களுக்கு சுய இன்பம் காண வேண்டும் என்கிற உணர்வு வருவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. தளர்வான ஆடைகள் இப்பிரச்சினையைத் தவிர்க்கும்.

*லெஸ்பியன் என்பவர்கள் யார்?*
பெண் ஓரினச் சேர்க்கைப் பிரியர்களுக்கு லெஸ்பியன் என்று பெயர். இவர்களுக்கு ஆணின் மீதான ஈர்ப்பு இன்றி, பெண்ணிடம் ஈர்ப்பு அதிகமிருக்கும். உடலளவிலும் இவர்களது நெருக்கம் அதிகமிருக்கும். பரஸ்பரம் ஒருவரை ஒருவர் தொட்டுக் கொள்வதிலும், உணர்ச்சிகளைத் தூண்டிக் கொள்வதிலும் இன்பம் காண்பார்கள். இவர்கள் விஷயத்தில் முழுமையான செக்ஸ் உறவு இருக்காது. சராசரி செக்ஸ் உறவை வைத்துக் கொண்டு, இம்மாதிரி லெஸ்பியன் உறவில் இருக்கிற பெண்களும் உண்டு. அப்படிப் பட்டவர்களுக்கு எய்ட்ஸ் உள்ளிட்ட பால்வினை நோய்கள் அதிகம் தாக்க வாய்ப்புகள் உண்டு.



*டீன் ஏஜ் பெண்களுக்கேற்ற சரியான கருத்தடைமுறை எது? கருத்தடைமாத்திரைகள் பாதுகாப்பானவையா?*
டீன் ஏஜில் செக்ஸ் என்பதே ஆபத்தானது. அதற்குப் பாதுகாப்பு முறை வேறா? கருத்தடை மாத்திரைகள் என்பவை ஹார்மோன் மாத்திரைகள். கர்ப்பத்தைத் தவிர்க்க நினைக்கிற பெண்கள், இதை மாதவிலக்கான குறிப்பிட்ட நாள் முதல் தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். உடலுக்குள் நிகழ்கிற ஹார்மோன் மாற்றம், கர்ப்பம் நிகழாமல் தடுக்கும்.
வாந்தி, தலைசுற்றல், பசியின்மை, திடீர் இரத்தப் போக்கு, எடை அதிகரிப்பு என கருத்தடை மாத்திரைகள் ஏற்படுத்தும் பயங்கர விளைவுகளைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். வருடக் கணக்கில் சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய்கூட வரும் என்கிறார்கள்.
டீன் ஏஜில், திருமணத்துக்கு முன்பு செக்ஸ் உறவைத் தவிர்ப்பதே நல்லது. தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் ஆணுறை உபயோகிப்பது நல்லது. அது பால்வினை நோய்களையும் தவிர்க்கும்.
*உயரத்தை அதிகரிக்கச் செய்ய ஹார்மோன் சிகிச்சை உண்டாமே?*
லைசின் மாதிரியான அமினோ அமிலங்கள்தான் இளம் வயதில் உயரத்தை அதிகரிக்கச் செய்ய உதவுகின்றன. அதுவும் கூட குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு பலன் தராது. அமினோ அமிலம் கலந்த புரோட்டீன் அதிகமுள்ள உணவுகளை உட்கொண்டால் எடைக் கேற்ற உயரம் கிடைக்கும். ஹார்மோன் சிகிச்சைகள் பல பக்க விளைவுகளைக் கொண்டவை. மிக மிக எச்சரிக்கையாக செய்யப்படாத பட்சத்தில் இத்தகைய சிகிச்சைகள் பேராபத் துக்களை வரவழைக்கும்.

*மார்பகங்கள் குறித்து டீன் ஏஜ் பெண்களுக்கு ஏகப்பட்ட சந்தேகங்கள்…. அவைபற்றி…?*
டீன் ஏஜைத் தொடுகிற வரை பிரா அணிய வேண்டாம். மார்பக வளர்ச்சி ஆரம்பித்ததும் சரியான அளவுள்ள பிரா அவசியம். குளிக்கும்போது மார்பகங்களை நன்றாக சுத்தப்படுத்த வேண்டும். மார்பகங்களின் அடிப்பகுதியில் வியர்வை தங்கி, தொற்று நோய் வரலாம்.
மார்பகங்களின் நடுவே காம்புகள் இருக்கும். பெண் முழு உடல் வளர்ச்சி அடைகிற போது, இதுவும் முழுமையான வளர்ச்சியைப் பெற்றிருக்கும். சில பெண்களுக்கு மார்பகக் காம்புகள் சற்றே உள்ளடங்கி இருக்கலாம். அது கர்ப்பம் தரிக்கிற சமயத்தில் தானாகச் சரியாகிவிடும்.
மார்பகக் காம்புகளின் நிறமும், அளவும் பெண்ணுக்குப் பெண் வேறுபடலாம். சில பெண்களுக்கு அந்த இடத்தில் ஒன்றிரண்டு ரோமங்கள் தென்படலாம். அதுவும் சகஜமான விஷயமே.
பேஷன் என்ற பெயரில் சில டீன் ஏஜ் பெண்கள் பிரா அணிவதில்லை. மார்பக வளர்ச்சி முழு வீச்சில் இருக்கிற டீன் ஏஜ் பருவத்தில் அவற்றின் வளர்ச்சிக்கேற்ற சப்போர்ட் தருவது பிரா. அதைத் தவிர்ப்பதால் மார்பகங்களின் ஷேப் மாறவும், தொய்வடையவும் வாய்ப்புகள் அதிகம்.

*உடலை ஸ்லிம்மாக வைத் திருக்க உடல் இளைக்க வைக்கிற மாத்திரைகள் சாப்பிடலாமா?*
உடலை இளைக்க வைக்கிற மாத்திரைகள் மூளையின் ஹைப்போதலாமஸ் உடன் தொடர்பு கொண்டு, பசியின்மையை உண்டு பண்ணக்கூடியவை. இதன் விளைவாக, தூக்கமின்மை, மனச்சோர்வு, இரத்த அழுத்தம் போன்றவை ஏற்படலாம். சிலவகை உடல் இளைக்கச் செய்கிற மருந்துகள், நாளடைவில் அவற்றுக்கு அடிமையாகிற உணர்வை ஏற்படுத்துமாம். இளம் தலைமுறைக்குப் பொறுமை ரொம்பக் குறைவு. உடல் இளைக்க வேண்டுமென நினைத்தால் அதற்கு முக்கியத் தேவை பொறுமை. உணவுக் கட்டுப்பாடு, சரியான சம விகித உணவை உட்கொள்வது, உடற்பயிற்சி போன்றவை மட்டுமே அழகான உடலுக்குத் தீர்வு.