
சவூதியில் பணிப்பெண்ணாக கடமையாற்றி சிசுவொன்றை கொலை செய்ததாகத் தெரிவித்து மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கையின் ரிசானா நபிக்கிற்கு மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்தது. இன்று புதன்கிழமை, 9 ஆம் திகதி, இலங்கை நேரப்டி 11.40 மணியளவில் சகோதரரி றிசானா மீது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 2005ம் ஆண்டு சவூதி அரேபியாவிற்கு பணிப் பெண்ணாக சென்ற ரிசானா, இரண்டு வாரங்களில் சிசுவொன்றை கொலை செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டது. ரிசானாவிற்கு 2007ம் ஆண்டு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது. கடவுச் சீட்டில் வயதை மாற்றி ரிசானா சவூதி அரேபியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மனித உரிமை கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்புச் சபை போன்ற அமைப்புக்களும், இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் போன்ற பல்வேறு தரப்பினரும் மரண தண்டனையை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். ரிசானாவிற்கு மரண தண்டனையை நிறைவேற்றுமாறு சவூதி அரேபிய உள்துறை அமைச்சர் இளவரசர் நயீப் பின் அப்துல் அசீஸ் இன்று உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் ரிசானாவிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. றிசானா இக்கொலையை செய்யவில்லை என்பது ஊர்ஜிதமாகி இருந்ததால் சவுதி, இலங்கை மற்றும் மேலத்தேய மனித உரிமை அமைப்புக்களும், சிரேஷ்ட அதிகாரிகளும் றிசானாவுக்கு பொது மன்னிப்பை அளித்து விடுதலை செய்யுமாறு குறித்த பெற்றோரைக் கேட்டிருந்தனர். 18 வயதை அடைவதற்கு முன்னர் இடம்பெற்ற இச்சம்பவம் மனித உரிமைக்கு அப்பாற்பட்டது எனவும் இதனால் பொது மன்னிப்பளிப்பதால் ஓர் அப்பாவியான இச்சிறுமியை உயிராபத்திலிருந்து காப்பாற்றி வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் அவர்களின் பெற்றோர்களிடம் திருப்பி அனுப்ப முடியும் எனவும் கோரப்பட்டிருந்தன. எனினும் அரபி, அஜ்னபி என்ற ஓர் பாகுபாட்டில் ஓர் உயிர் இன்று பறிக்கப்பட்டிருக்கின்றது. சவுதியில் பணியாற்றிய இலங்கை பணிப்பெண்ணான ரிசானா நஃபீக்குக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டதாக இலங்கை வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். தான் பணியாற்றிய சவுதி அரேபிய வீட்டில் ஒரு குழந்தையைக் கொன்றதாக 2005 ஆம் ஆண்டில் ரிசானாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அந்த 4 மாதக் குழந்தையை தான் கொன்றதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டை ரிசானா மறுத்திருந்தார். அந்த கொலை நடந்ததாகக் கூறப்பட்ட தருணத்தில் ரிசானாவுக்கு 17 வயது மாத்திரமே என்றும் அவர் சட்டபூர்வ வயதை எட்டாதவர் என்றும் அவரது ஆதரவாளர்களும், குடும்பத்தினரும் கூறியிருந்தனர். இந்தக் கூற்று உண்மையாகும் பட்சத்தில், ஒரு சிறுமிக்கு மரணதண்டனை விதித்ததற்காக சவுதி அரேபிய மீது குழந்தைகள் உரிமைகள் குறித்த சர்வதேச சட்டங்களின்படி குற்றஞ்சாட்டப்பட முடியும். ரிசானாவுக்கு அஞ்சலி செலுத்துமுகமாக இலங்கை நாடாளுமன்றம் ஒரு நிமிடம் மௌனம் காத்தது. சவுதி அரேபியா என்றும் அமெரிக்கர்களையோ அல்லது ஐரோப்பியர்களையோ கொல்வதில்லை என்றும் அது ஆசியர்களையும், ஆப்பிரிக்கர்களையுந்தான் கொலை செய்வதாகவும் கூறியுள்ள வெளிநாட்டுப் பணியாளர்களின் நலனுக்காகக் குரல்கொடுக்கும் நாடாளுமன்ற உறுப்பினரான ரஞ்ஜன் ராமநாயக்க, அந்த அரசாங்கம் ஒரு சர்வாதிகார அரசாங்கம் என்று கூறியுள்ளார்.