மனநூல் துறையிலே இப்னு சீனா ஆத்மாவைப் பற்றி வெகு ஆழமாக ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். மனநூல்/உளவியல் என்பது வெகுகவனமாகவும் ஒழுங்குடனும் அமைக்கப்பட்டிருக்கிறது என்பது அவர் கருத்தாகும். தாவர மனம் (தாவர உளவியல்) மிருக மனம் (விலங்கு உளவியல்), மனித மனம் என்ற மூன்று மனங்கள் ஒன்றைவிட மற்றொன்று மேலாக இருப்பதாகவும் கூறுகிறார். மனித மனத்திற்குத்தான் பகுத்தறிவு இருக்கிறதென்கிறார். இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் தான் போஸ் என்ற இந்திய விஞ்ஞானி ஒருவர் தாவரங்களுக்கு உணர்ச்சி இருக்கிறது என்று விஞ்ஞான ஆய்வில் நிரூபித்தார்.
மருத்துவத்தில் உயர்நிலை பெற்றது போல் இப்னு சீனா மனவியலிலும் உயர்விடம் பெற்றார். ஒவ்வொரு மருத்துவரும் உளவியல் வல்லுனராக இருக்க வேண்டுமென்று அவரது வாழ்க்கை நமக்குக் கற்பிக்கின்றது. நோயாளியின் குணத்தை ஆராய்ந்து அதற்குத் தகுந்தபடி மருந்து கொடுக்க வேண்டுமென்றும் நோயாளியின் தீய குணங்களைத் திருத்த அவனுக்கு ஆத்மீக மறுமலர்ச்சி கொடுக்க வேண்டுமென்றும் அவர் அபிப்பிராயப்படுகின்றார்.
இப்னு சீனா இந்த இரண்டு முறைகளையும் நடைமுறையில் கொண்டுவந்து வெற்றியடைந்தார். அவர் மருத்துவக் கலையோடு சோர்த்து மனவியளையும் கற்றார். பல ஆராய்ச்சிகளும் செய்தார். மனித பண்புகளை அலசி அவர் ஆராய்ச்சி செய்ய பிறகு அதற்கேற்ற முறையில் நோயாளிக்கு மனமாற்றமும் ஒழுக்கச் சீர்திருத்தமும் உண்டாகும்படி இன்னின்ன மருந்து கொடுக்க வேண்டுமென்று அவர் குறிப்பிடுகிறார்.
இந்த அடிப்படையில் அவர் குனப்படுத்திய நோய்கள் மிகப்பல. ஒரு சமயம் புவைஹ் என்ற அரசவம்சத்தைச் சேர்ந்த சுல்தானுடைய ஒரு பெண்ணுக்கு கையில் பக்கவாதம் (கீல்வாயு) இருந்தது. கையை அசைக்க முடியாத நிலை. அதனைக் குணப்படுத்தும் பொறுப்பை இப்னு சீனா ஏற்றுக் கொண்டார். சுல்தானுடைய தர்பாரில் அந்தப் பெண்ணைக் கொண்டுவந்து நிறுத்தினார். அவளிடம் சொல்லாமல் திடீரென்று அவளது முகமூடியை நீக்கினார். பாவம் அந்தப் பெண் திடுக்கிட்டுப் போனாள். வெட்கத்துடன் இருக்கும் நிலையில் அடுத்த நிமிஷத்தில் அவளது பாவாடையைப் பிடித்து ஒரே விநாடியில் அவள் தலைக்கு மேல் தூக்கிவிட்டார். மானம் போனால் உயிர்போனது போல் இருக்குமல்லவா? சட்டென்று அதைத்தடுக்க அந்தப் பெண் தனது கையை இயக்கினாள், உயர்த்தினாள், தடுத்தாள். அவ்வளவுதான். அதுவரை இயங்காமல் மரம் போல் இருந்தகை இயங்கியவுடன் அந்தப் பெண் குணமடைந்தாள்.
இன்னொரு சமயம் புவைஹி என்ற அரசவம்சத்தைச் சேர்ந்த ஓர் இளவரசி தன்னை ஓர் இளவரசி தன்னை ஒரு பசுவாக நினைத்துக் கொண்டாள். அவளுடைய மனஉறுதியை மாற்ற ஒருவராலும் முடியவில்லை. அன்னம், ஆகாரம் இல்லாமல் அவளுடைய உடல் மெலிவடைந்த்து. பைத்தியம் பிடித்தவள் போல் அந்த இளவரசி காணப்பட்டாள். “என்னைக் கொன்றுவிடுங்கள். நல்ல கறி தயார்செய்து கொள்ளுங்கள்” என்று எப்பொழுதும் கூச்சலிடுவாள். அரசகுடும்பத்துப் பெண்ணாதலால் இறந்துவிடுவாளோ என்று எல்லோரும் அஞ்சினார்கள். எத்தனையோ மருத்துவர்கள் முயன்றும் அவளுடைய வியாதி குணமடையவில்லை.
அந்த நோயாளியைக் குணப்படுத்த இப்னு சீனா முன்வந்தார். கசாப்புக்காரன் வருகிறான். கசாப்புக்காரன் வருகிறான் என்று சப்தமிட்டு அந்த மாதிடம் சொல்லும்படி இப்னு சீனா ஒரு மனிதரை அனுப்பினார். அந்த மனிதரும் அவ்வாறே சொன்னார். அம்மாதிடம் கசாப்புக்காரன் வருகிறான்… வருகிறான்… வந்துவிட்டான்… ஆமாம் இதோ வந்துவிட்டான் என்று கூச்சலிட்டான். அப்போது வீறு நடையுடனும் கையில் கத்தியுடனும் இப்னு சீனா அங்கு தோற்றமளித்தார். எங்கே அந்தப் பசு… நான் கொல்லப்போகம் அந்தப் பசு எங்கே… எங்கே.. என்றார். மருத்துவர் இப்னு சீனா அந்த இளவரசி தன்னைப் பசுவாக நினைத்துக் கொண்டிருந்தாளல்லவா. பசு கொல்லப்பட வேண்டுமென்று விரும்பினாளல்லவா அவளுக்குச் சந்தேசம் வந்துவிட்டது. பசுவைப் போல் ம்ப்பா.. ம்பா.. என்று கத்தினாள். இந்தப் பசுவைக் கீழே விழுத்தாட்டுங்கள்.. கயிற்றால் கட்டுங்கள்.. நான் இப்பொழுது இதைக் கொன்றுவிடுகிறேன் என்றால் இப்னு சீனா.
பசுவைக் கீழே தள்ளுவதைப் போல அந்த இளவரசியைக் கீழே தள்ளினார்கள். பிறகு கயிறுகளால் இறுகக் கட்டிவிட்டார்கள். இப்னு சீனா நெருங்கி வந்தார். பசுவைக் கூர்மையாகப் பார்த்தார். கசாப்புக்காரன் பசுவின் உடலையும் ஆட்டின் உடலையும் தொட்டுப்பார்த்து சோதனை செய்வதுபோல் உடம்பில் பல பாகங்களையும் இப்னு சீனா தொட்டுப்பார்த்தார். ‘ஓஹோ, முடியாது முடியாது இந்தப் பசு மெலிந்திருக்கிறது. அறுக்கத் தகுதியான முறையில் இது இல்லையே இதைக் கொழுக்கச் செய்ய வேண்டும்‘ என்றார். அவர் அங்கிருந்து போனபிறகு அந்த இளவரசி ஆகாரம் சாப்பிட ஆரம்பித்தாள். உணவை உட்கொண்டவுடன் உடல் சக்தி வந்தது. உடல் நல்ல நிலைக்கு வந்துவிட மனநோயும் மறைந்தது. பூரணமாகக் குணமடைந்தாள். (மருத்துவ மேதை இப்னு சீனா, செய்யித் இப்றாஹீம், வளர்மதிப்பதிப்பகம், திருச்சிராப்பள்ளி, பக்கம் 36-40)
இசைமூலம் மனநல சிகிச்சை
இப்னு சீனா இசைத்துறையிலும் சிறந்து விளங்கினார். ஷிபா என்னும் நூலில் அவர் இசையைப் பற்றி எழுதுகிறார். இந்தத் துறையில் அவரது விளக்கங்களும் கொள்கைகளும் வெகுகாலத்திற்குப் பிறகு பிறந்த மக்களிடம் இருக்க வேண்டிய நவீனக் கொள்கைகளாகும். இசை என்பது அறிவியலின் ஒரு வாசல் என்று கூறுகிறார். இசையின் உட்கருத்தை நன்கு அறிந்து ஆராய்ந்த இந்த நிபுணர் இசையின் மூலமாக மக்களின் தன்மையை மாற்ற முடியும் என்னும் உண்மையை கண்டடைந்தார்.
மேலும் இசையின் மூலமாக நோய்களைத் தீர்க்க முடியும் என்றறிந்து வியாதிகளைக் குணப்படுத்தும் கலையாக கற்று ஆய்வு செய்தார். எல்லாவியாதிகளுக்கும் மருந்து கொடுக்க வேண்டிய அவசியமில்லை. பேச்சினாலும் செல்வாக்கினாலும் இசையாலும் சமயோசிதப் புத்தியாலும் வியாதியினைக் குணப்படுத்தலாம் என்று ஆராய்ச்சிகளின் மூலமாகக் கண்டுபிடித்தார். இவருக்கு முன் அல் பாராபி என்பவர் இசைக்கலையைப் பற்றி எழுதியிருந்த நூலானது அக்காலத்தில் இருந்த இசை நூல்களிலெல்லாம் நவீனமானதாக இருந்தது. ஆனால் இப்னு சீனா எழுதிய ஷிபா என்ற நூலின் இசைக்கலைப் பகுதியானது அதைவிடச் சிறந்ததாக அமைந்துள்ளது.
தினொன்றாம் நூற்றாண்டிலே கிறிஸ்தவ, ஐரோப்பிய இசையானது முஸ்லிம்களைப் பின்பற்றியதாகவே இருந்தது. மேல்நாட்டு மக்களால் முஸ்லிம்களின் இசை விரும்பப்பட்டது. முஸ்லிம் சூஃபிகள் இசையை விரும்பினார்கள். குர்ஆன் ஓதுவதும் இன்னிசையுடன் ஓதும் ஓர் கலையாயிற்று. அவ்வாறு ஓதுவோர் காரி என்று அழைக்கப்படுவார்கள்.
ஆடல் பாடலுக்கும் இன்னிசைக்கும் உள்ள வேறுபாடு, ஆடலும் பாடலும் பெண்களை இணைத்தே நடைபெற்றது. இசைக்கலையை முஸ்லிம்கள் தூய்மைப்படுத்தி அதை ஆன்மீகத் துறைக்கு உயர்த்தினார்கள். இசைக்கருவிகள் செய்து மேல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தார்கள். இசைக்கலை குறித்து பல நூல்களையும் எழுதினர். இவ்வாறு எழுதியோரில் இரண்டு தத்துவஞானிகள் முக்கியம் பெறுகின்றனர் ஒன்று அல் பாராபியும் மற்றவர் இப்னு சீனாவுமாவார்.
இசைக்கலையானது மருத்துவத்துறையில் எவ்வாறு பயன்படுத்தப்படும், அது நோயாளியின் மனத்தை எவ்வாறு மாற்றி அவனுடைய நோயை நீக்கும் என்ற பிரச்சினைகளில் இப்னு சீனா ஈடுபட்டார். உடல் நோய்களுக்கு மனவலிமையால், மனமாற்றத்தால் மருந்து செய்ய முடியும் என்ற உண்மையை முஸ்லிம் மருத்துவர்கள் ஆராய்ச்சியின் மூலம் உணர்ந்தார்கள். இதனால்தான் மருத்துவ நிலையங்களிலே நோயாளிகள் இருக்கும் இடத்திலே இசைச் செல்வத்தைத் தந்து நோயாளிகளின் துன்பத்தையும் கவலையையும் மாற்றினார்கள் முஸ்லிம்கள். மருத்துவ நிலையங்களில் இசைவல்லுனர்களும் பாடகர்களும் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். நோயாளிகளின் வியாதி சிறிது சிறிதாகக் குணமடைந்து பின்னர் இசையின் மூலமாக நோயாளிகள் பூரணமாக குணமடைந்தார்கள்.