உன் ஒவ்வொரு சந்திப்பின்போதும்
காதல் என்னை மொழிபெயர்த்து
கவிதையாய் அழகுபடுத்தியது.
*
உன்னை நினைத்துக் கொண்டு
என்னைப் பார்தால் கண்ணாடியிலும்
நீதான் தெரிகிறாய்
*
உன்னை பார்க்க கவிதையோடுதான்
தினம் வருவேன் கண்டதும் மெளனமாய்
தலை குனிகிறேன்
*
கண்டபடி வெளியில் சுத்தாதே
உன்னில் விழிக்க எல்லாரும்
தவம் கிடக்கிறார்கள்.
மார்ச் 16, 2012
இனியவளே…
என்னைக் கோவப்படுத்தி
பார்ப்பதற்க்கானா உன் தேடல்
தொடர்ந்து கொண்டேதானிருக்கிறது
தோல்விக்கு மத்தியிலும்
ம்ம்…
உனக்கெப்படி தெரியும்
உன்னை யாரும்
கோவப்படுத்தினால்தான்
எனக்கு கோவம் வருமென்று
***********************************
நமக்குள் பிரிவே வரக்கூடாது
அப்படி வந்தால் உன்னால் வரக்கூடாது
ஏனெனில் அந்த சோகத்தின் கதாநாயகியாக
நீ இருந்துவிட கூடாதென்பதால்
***********************************
உன் கல்மனதுக்குள்
நுழையும்வரைதான்
யோசித்தேன் எப்படி
நுழைவதென்று
நுழைந்தபின் மறந்தே
போனேன் எப்படி யோசித்து
நுழைந்தேனென்று
***********************************
கவிதைகள் எழுதத்
தெரியுமா என்று கேட்டார்கள்
நான் தெரியாது என்றேன்.
அப்ப என்ன தெரியுமென்று
கேட்டார்கள்
கவிதை ஒன்று
தெரியுமென்றேன்.
எங்கே சொல் என்றார்கள்
உன் பெயரைச்
சொல்லி முடித்தேன்.
மார்ச் 09, 2012
இனியவளே..
உனக்கு காதலனாய்
பிறந்ததை விட
உன் காதலாக
பிறந்திருக்கலாம்
அப்படியென்றாலாவது
உன்னோடு சேர்ந்து
உன் கூட வாழ்ந்திருக்கலாம்.
***********************************
கவனமாய் கார் ஓடு
உன்னை கொஞ்ச நேரமாவது
காற்று வாங்க வைக்க ஏதேனும்
ஒரு சந்தியில் சிக்னல் விளக்காய்
காத்திருப்பேன்.
***********************************
உன்னைப் பார்த்தால் மட்டும்
என் கவிதைகள் கண்ணாடி
போடுகிறது
ஏனுங்க..
ம்ம்..
உனக்காய் காத்திருந்து என்னைப்
போல் என் கவிதைகளுக்கும் கண்
தெரியாமல் போய் விட்டது போல
***********************************
உன்
தொலைபேசிக்கு எனக்காக
நீ கொடுத்த முத்தத்தால்
ரொம்ப கவலைப்படுகிறது
என் தொலைபேசி
உன் தொலை பேசியாய்
பிறந்திருக்கலாமெயேன்று.
இனியவளே…
என் இறந்த காலம்
மிக சோகமானது
அதை மறக்க வைக்க
இறைவன் கொடுத்த
நிகழ்காலம்தான்
நீ எனக்கு
**********************************
நான்
பொய் சொல்ல
விரும்பவில்லை
உன்னை ஞாபகப்படுத்த
உன் புகைப்படம் வேண்டாம்
உன் புன்னகையும் வேண்டாம்
உன் கவிதையும் வேண்டாம்
ஏன் உன் நினைவும் வேண்டாம்
உன்னை ஞாபகப்படுத்திக்கொண்டே
இருக்க எதுவாலும் முடியாது
உன்னைத்தவிர எனக்கு
*********************************
இதுவரை நான் அசிங்கமானவன்
என்று சந்தோசப்பட்டதில்லை
நீ அழகானவன் என்று சொல்லும் வரை
***********************************
நான் உன் கவிதையின் ரசிகன்
அதனால்தான் சொல்கிறேன்
இன்றே இறந்து போக தயார்
அடுத்த நொடியே நான் உன்
பேனாவாக பிறப்பேன் என்ற
உறுதி மொழி கிடைக்குமென்றால்
இனியவளே…
உன்னோடு பேசிவிட்டு
கனவு காண்கிறது
என் கைபேசி
நானோ
பேசிக்கொண்டேதானிருக்கிறேன்
இன்னும் உன்னோடு பேசுவதாய் நினைத்து
**************************************
பகலில் சந்தித்தால்
திரும்பி திரும்பி
பாக்கிறாய்
இரவில் சந்தித்தால்
என்னையே பாக்கிறாய்
அவ்வளவு மரியாதையா
உன் நிழல் மீது உனக்கு
**************************************
மது அருந்திவிட்டு
கார் ஓடக்கூடாதாமே
எங்கே உன்
கைக்குட்டையை கொடு
சந்தியில் பொலிஸ் நிக்கிறான்
என் உதட்டில் உன் எச்சிலைப்
பார்தால் பிடித்து விடுவான்
**************************************
என்
புத்தகத்தினுல்
உறங்கும் என்
பேனா போல்
உறங்கிகிறேன்
உனக்காய்
கவிதை
எழுதுவதாய்
கனவு கண்டபடி.