Thursday, July 26, 2012

குழந்தைகள் எங்கு நன்கு தூங்கும் தெரியுமா?


அனைத்து அம்மாக்களுக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை குழந்தைகள் இரவில் நன்றாக தூங்காமல் இருக்கின்றன என்பதே. அதிலும் பிறந்த குழந்தை என்றால் சொல்லவே வேண்டாம். அந்த குழந்தை தூங்கியப் பின் தான் பெற்றோர்களுக்கு தூக்கமே வரும். மேலும் அவர்கள் அந்த குழந்தை எதற்கு அழுகிறது என்று கூட தெரியாமல் அவர்கள் படும் கவலைக்கு அளவே இருக்காது. ஆகவே அவ்வாறு குழந்தையானது அழுவதற்கு முக்கிய காரணம், அதற்கு சரியான இடமானது இல்லாததாலே ஆகும்.
ஏனெனில் குழந்தை கருவில் இருக்கும் போது தாயின் கருவரைக்குள் ஒரு அரவணைப்போடு இருந்திருக்கும். ஆனால் அந்த குழந்தை உலகைப் பார்த்ததும், அதற்கு ஏற்ற ஒரு நல்ல அரவணைப்பானது இல்லாமல் இருக்கும். ஆகவே குழந்தையானது எங்கு, எப்போது நன்கு தூங்கும் என்று குழந்தை நல மருத்துவர்கள் கூறுகின்றனர் என்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்…
தாயானவள் குழந்தையுடன் நன்கு நெருங்கி படுத்தால், அந்த குழந்தை தாயுடன் நல்ல ஒரு பழக்கத்தைக் கொள்ளும். ஏனெனில் பிறந்த குழந்தைக்கு மிகவும் முக்கியமானது அரவணைப்பு ஆகும். அதிலும் தாயானவள் நெருங்கிப் படுத்தால், குழந்தை கருவில் இருப்பது போன்று உணரும்.
குழந்தையின் தேவையை எந்த நேரத்திலும் சரி செய்யுமாறு இருக்க வேண்டும். அதற்காக ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை குழந்தையை பார்த்தால் மட்டும் அதன் தேவையை உணர முடியாது. ஆகவே குழந்தை தாயின் பக்கத்தில் இருக்கும் போதே, அந்த குழந்தைக்கு தாளாட்டுப் பாடி பழக வேண்டும். ஏனெனில் குழந்தை தாய் பக்கத்தில் இல்லையென்றால் கூட சில சமயம் அழும். ஆகவே அவ்வாறு அழும் போது தாயானவள் தாளாட்டைப் பாடினால், குழந்தையும் தாய் பக்கத்தில் இருக்கிறாள் என்று அழுகையை நிறுத்தி தூங்கிவிடும்.
குழந்தையை தூங்கும் போது ஏதேனும் ஒடுக்கமான இடத்தில் தூங்க வைக்கலாம். அதுவும் குழந்தை கை மற்றும் கால்களை நீட்டுவதற்கு வசதியாக இருக்க வேண்டும். அதற்கு தொட்டில் தான் சிறந்தது. ஏனெனில் அதில் தான் குழந்தைக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாப்பாக இருக்கும். மேலும் குழந்தை தவள ஆரம்பித்துவிட்டால், உடனே தொட்டிலில் இருந்து கட்டிலில் போட வேண்டாம். பின் குழந்தைக்கு தான் பாதிப்பு.
வேண்டுமென்றால் தந்தையும் குழந்தையின் பக்கத்தில் தங்கள் கைகளின் இடுக்கங்களில் வைத்து தூங்க வைக்கலாம். அதனால் குழந்தை தந்தையிடமுங்ம நன்கு பழகும் வாய்ப்பு இருக்கிறது. மேலும் முக்கியமான ஒன்று, குழந்தை தூங்காமல் பக்கத்தில் இருக்கும் போது, பெற்றோர்கள் எந்த ஒரு சந்தோஷமான செயல்களிலும் ஈடுபட வேண்டாம்.
ஆகவே குழந்தை நன்கு தூங்கினால், பெற்றோர்கள் எந்த கவலையும் படாமல், சந்தோஷமாக இருப்பதோடு, குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும். எனவே மேற்கூறியவாறு செய்தால் குழந்தை நன்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் தூங்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பெண்ணுக்குள் புதைந்திருப்பது 50 அல்ல, 366 வகை செக்ஸ் உணர்வுகள்…!!!


 இங்கிலாந்தில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே பரவலாக இன்று பேசப்படும் முக்கிய விஷயமாக மாறியுள்ளது இந்த நூல். பெண்களின் செக்ஸ் உணர்வுகள், வேட்கை குறித்து எல் ஜேம்ஸ் எழுதியுள்ள இந்த நூல் இதுவரை 31 மில்லியன் காப்பி விற்று பெரும் சாதனை படைத்துள்ளது.

இதுவரை இல்லாத அளவுக்கு பெண்களின் செக்ஸ் தாகம், வேட்கை, உணர்வுகள் குறித்து மிக வெளிப்படையாக பேசிய நூல் இதுதான் என்கிறார்கள். ஆனால் இதில் கூறப்பட்டுள்ளதைப் போல பெண்களுக்கு 50 விதமான செக்ஸ் உணர்வுகள் மட்டும் இருக்கவில்லை, மாறாக அவர்களுக்கு இருப்பது 366 வகை செக்ஸ் உணர்வுகள் என்று ஒரு கட்டுரை நாளிதழ் ஒன்றில் வெளியாகியுள்ளது.
டெல்லி டைம்ஸ் இதழ்தான் இப்படி ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது. எப்படி….அதை இப்படிக் கூறுகிறது அந்தக் கட்டுரை..
பெண்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் ஒரு வகை உணர்வை அவர்கள் வெளிப்படுத்தத்தான் செய்கிறார்கள். ஒவ்வொரு நாளும் புத்தம் புதிய உணர்வுகளை அவர்கள் பெறுகிறார்கள். புத்தம் புது ஆசைகளை மனதுக்குள் விதைத்துக் கொள்கிறார்கள். புத்தம் புது கற்பனைகளை எடுத்துக் கொள்கிறார்கள். அப்படிப் பார்த்தால், லீப் ஆண்டையும் சேர்த்தால், அவர்களுக்கு 366 வகையான செக்ஸ் உணர்வுகள் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
பெண்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு அனுபவம் கிடைக்கிறது. சில பெண்கள் தங்களுக்குள் தோன்றும் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் இருக்கலாம். தங்களுக்குள் செக்ஸ் உணர்வுகள் குறித்து பேசிக் கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் பெரும்பாலான பெண்கள் தங்களுக்குள் உதிக்கும் உணர்வுகளை ஏதாவது ஒரு வகையில் உணர்த்தி விடுகிறார்கள்.
கிராமப்புறங்கள் கூட இன்று மாறிப் போயுள்ளன. தனது கணவனுடன் சந்தோஷணாக இருக்க வேண்டும் என்பதை தனது மாமியாரிடம் குறிப்பால் உணர்த்தும் கிராமத்து மருமகள்கள் நிறையப் பேர் உள்ளனர். கிராமத்து மாமியார்களும் முன்பு போல இல்லை. மருமகள் சொல்ல வருவதை புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல நடந்து கொள்கிறார்கள்.
முன்பெல்லாம் கிராமப்புறங்களில் கணவருடன் சேருவதை ஒரு பெரும் ரகசியமாக கருதி வந்த பெண்கள் இன்று அப்படி இல்லை. வாய்ப்பு கிடைக்கும்போது கணவனின் ஆதரவுக் கரங்களில் விழுந்து கிடக்கத் தவறுவதில்லை.
நான்கு ஆண்கள் சேர்ந்தால் கண்டிப்பாக செக்ஸ் பற்றிப் பேசாமல் இருக்க மாட்டார்கள். ஆனால் பெண்களிடம் இது பெரிய அளவில் முன்பு இருந்ததில்லை. ஆனால் இப்போது அவர்களும் விரிவாக உரையாட ஆரம்பித்து விட்டார்கள். ஏன், தங்களது ஆண் நண்பர்களிடமும் கூட செக்ஸ் பற்றிப் பேசும் பெண்கள் நிறையவே உள்ளனர். தங்களது சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளும் பெண்களும் நிறைய உள்ளனர்.
அந்த வகையில் ஆண்களைப் போலவே, பெண்களும் செக்ஸ் குறித்து வெளிப்படையாக பேச ஆரம்பித்து விட்டனர். எனவே இனியும் செக்ஸ் குறித்த பேச்சுக்கள் ஆண்களுக்கு மட்டுமே சொந்தம் என்று நிச்சயம் யாரும் கூற முடியாது என்பதே நிதர்சனம்.

கற்ற கல்வி எனக்கு கைகொடுக்கும்..காதலித்து மணந்த கனவன் தேவையில்லை…துர்காதேவியின் துணிச்சல்…

குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, சந்தேக பார்வையால் துன்புறுத்திய கணவனை, கற்ற கல்வியை நம்பி உதறினாள் காதல் மனைவி. கோவை, சித்தாபுதூர் சின்னசாமி நாயுடு வீதியைச் சேர்ந்தவர் வினோத்குமார். கோவை, உடையாம்பாளையத்தை சேர்ந்த கருப்பையாவின் மகள் துர்காதேவி, 21. இருவரும், மூன்று ஆண்டுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின், அவர்களின் வாழ்க்கை, கணவன் வீட்டில் சந்தோஷமாக நகர்ந்தது. ஒர்க்ஷாப் வேலைக்கு சென்ற வினோத்குமார், பின்னாளில் வேலைக்கு செல்வதைத் தவிர்த்து, வீட்டிலேயே மது குடிக்க துவங்கினார். கணவன் திருந்தி விடுவார் என, காத்திருந்த துர்காதேவிக்கு, ஏமாற்றமே மிஞ்சியது. நாளடைவில் அவர், வேலைக்கு செல்லாமல், தினமும் போதையில் மிதக்க துவங்கினார். காதல் கணவனின் செயலால் மனம் நொந்த துர்காதேவி, பி.பி.ஏ., படித்திருந்ததால், தனியார் கம்பெனிக்கு வேலைக்கு சென்றாள். வேலைக்கு சென்ற மனைவி மீது, வினோத்குமாரின் சந்தேக பார்வை படர்ந்தது. “யாரை பார்க்க வேலைக்கு போகிறாய்… என்னுடன் வாழ்வது பிடிக்கவில்லையா…’ என, திட்டத் துவங்கினார். விரக்தி அடைந்த துர்காதேவி, யாரிடமும் தகவல் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறினார்.
காதல் மனைவி காணாமல் போனதால், அதிர்ச்சி அடைந்த வினோத்குமார், கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில், கடந்த மாதம், 20ம் தேதி, புகார் கொடுத்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவண தேவேந்திரன் தலைமையிலான போலீசார், தேடி வந்தனர். ஒரு மாதத்திற்கு பின், கடந்த 20ம் தேதி, கோவை சரவணம்பட்டியிலுள்ள, பெண்கள் தங்கும் விடுதியில், துர்காதேவி தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசாருக்கு, துர்காதேவி அளித்த விளக்கம் அதிர்ச்சி ஏற்படுத்தியது. “காதலித்து திருமணம் செய்து கொண்டதால், சகித்துக் கொண்டு வாழ்ந்தேன். கணவனுக்கு பதிலாக நான் வேலைக்கு சென்றபோது, சந்தேகப்பட்டு பேசியதால், மனமுடைந்தேன். ரோட்டோரத்தில் பஜ்ஜி கடை வைத்து வாழும் பெற்றோர் வீட்டிற்கு சென்று, அவர்களை சிரமப்படுத்த விரும்பவில்லை. விரும்பி ஏற்றுக் கொண்ட வாழ்க்கையில், கசப்பான அனுபவம் கிடைத்தது. இந்த நேரத்தில் நான் கற்ற கல்வி எனக்கு கைகொடுக்கிறது. தனியார் நிறுவனத்தில் வேலை, விடுதியில் மனஅமைதியான வாழ்க்கை. என்னை இப்படியே விட்டு விடுங்கள்’ என, போலீசாரிடம் மன்றாடினார். வழக்குப்பதிவு செய்துள்ளதால், போலீசார், “என்ன சொல்வதாக இருந்தாலும், கோர்ட்டில் மாஜிஸ்திரேட் முன்னிலையில் சொல்ல வேண்டும்” என்றனர். கடந்த, 21ம் தேதி, கோவை ஜே.எம்., எண் 3 கோர்ட்டில், துர்காதேவியை போலீசார் ஆஜர்படுத்தினர். துர்காதேவி, தன் மனநிலையை, மாஜிஸ்திரேட்டிடம் விளக்கினார். “அவர் விருப்பப்படி வாழ, முழு உரிமையுள்ளது. அதனால், அவர் எங்கு வாழ விரும்புகிறாரோ அங்கு விட்டு விடுங்கள்” என போலீசுக்கு, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

    
Abdur Rahman xIbrahim
    

    
Type any name to tag:




அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு

‘ஹாஸிம் முகம்மட் அம்லா’ வைப்பற்றிய ஒரு செய்தி .................

புனித ரமழான் நோன்பை நோற்றபடியே இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முச்சதம் (311 ரன்கள் ) அடித்த ஹஷிம் ஆம்லா.

தென் ஆபிரிக்கா கிரிக்கட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும் நம்பிக்கை நட்சத்திரமுமான ‘ஹாஸிம் முகம்மட் அம்லா’ இன்று உலக கிரிக்கட்டில் பேசப்படும் ஓர் வீரர். 29 வயதுடைய ஹாஸிம் அம்லா, தென் ஆபிரிக்காவில் டேர்பன் (Durban) நகரில் 1983 மார்ச் மாதம் 31ம் திகதி பிறந்தார்.

குஜராத்தைப் பிறப்பிடமாகக் கொன்ட இவரது பெற்றோர், தென் ஆபிரிக்காவிற்கு குடிபெயர்ந்திருந்தனர். வலக்கை துடுப்பாட்ட வீரரான ஹாஸிம் அம்லா, தனது முதலாவது டெஸ்ட் போட்டியை 2004, நவம்பர் 24ல் இந்தியாவுக்கு எதிராக விளையாடினார். முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியை 2008, மார்ச் 9ம் திகதி பங்களாதேஷ் இற்கு எதிராக விளையாடியிருந்தார்.

இதுவரை 60 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஹாஸிம் அம்லா, 4600 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இவற்றுள் 16 சதங்கள் உள்ளடங்கும். அவற்றுள் 2 இரட்டைச் சதங்களும் 23 அரைச் சதங்களும் உள்ளடக்கம்.

அதி கூடிய டெஸ்ட் ஓட்ட எண்ணிக்கையாக ஆட்டமிழக்காத 311 ஓட்டங்களைப் பெற்றிருக்கின்றார். இந்த ஓட்ட இலக்கை நேற்று, இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 4ம் நாள் ஆட்டத்தில் பெற்றிருந்தார். இந்த ஓட்ட எண்ணிக்கையின் மூலம் தென் ஆபிரிக்காவின் எந்தத் துடுப்பாட்ட வீரரும் பெற்றிருக்காத அதிகூடிய 311* ஓட்டங்களைப் பெற்று, தென் ஆபிரிக்கா கிரிக்கட்டில் ஓர் சரித்திரம் படைத்திருக்கின்றார். இவர் இந்த 300 ஓட்டங்களைப் பெற்றபோது லண்டன் ஓவல் மைதானத்தில் போட்டியைப் பாரத்திருந்த சுமார் 23,000 உள்ளங்கள் எழுந்து நின்று கரகோசித்து இவரது இச் சாதனைக்கு உற்சாகமளித்தனர்.

ஐம்பத்தி ஏழு ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஹாஸிம் அம்லா விளையாடியுள்ளார். இவற்றுள் 9 சதங்களும் 18 அரைச் சதங்களும் உள்ளடக்கம்.

தனது நாட்டு விளையாட்டு ஆடையில் பொறிக்கப்பட்ட மதுபான (Castle) விளம்பரத்திற்காக அவ் ஆடையினை அணிவதைத் தடுத்தார். இதனால் தென் ஆபிரிக்கா கிரிக்கட்டிற்கும் அம்லாவிற்கும் வருத்தம் இருந்தது.

‘என்னால் சிறப்பாக ஆட முடியும். விரும்பினால் இந்நாட்டிற்காக ஆடுவதற்கு வாய்ப்புத் தாருங்கள். இல்லாவிட்டால் நான் அணியில் இருந்த நின்றுவிடுகிறேன். அதற்காக இஸ்லாத்தில் தடுக்கப்பட்டிருக்கும் மதுபான விளம்பரம் பொறிக்கப்பட்ட ஆடையை அணிய முடியாது’

என உறுதியுடன் கூறி இருந்தார்.

‘ குறித்த விளம்பரம் பொறிக்கப்பட்ட ஆடையை அணிவதற்கு நாங்கள் கூடுதல் ‘ஸ்பொன்சர்’ தருகிறோம்’

என்றது குறித்த நிறுவனம். எனினும்

‘எனக்கு எனது மார்க்கமே முக்கியம்’

எனக்கூறி மதுபான ஆடையை அணிவதில் இருந்து தவிர்ந்தார்.

இதனால் ஏனைய வீரர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தைப் பார்க்கிலும் குறைந்த தொகையே இவருக்கு கிடைக்கின்றது. இவருக்காக ‘காஸ்டில்’ மதுபான விளம்பரமில்லாத ஆடைகளை தென் ஆபிரிக்கா கிரிக்கட் தற்பொழுது வழங்கி வருகின்றது. இவற்றையே இவர் தற்பொழுது அணிந்து விளையாடி வருகின்றார்.

இலங்கைக்கும் தென் ஆபிரிக்காவிற்கும் இடையில் இலங்கையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் (2006, ஓகஸ்ட் 7ல்) ‘டென் ஸ்போர்ட்ஸ்’ (Ten Sports) யின் நேரடி வர்ணனையாளராக இருந்த ‘டீன் ஜோன்ஸ்’, அம்லாவை ஓர் ‘தீவிரவாதி’ என தனது வர்ணணையில் குறிப்பிட்டிருந்தார். முழுமையான தாடி வைத்து ஓர் உண்மை முஸ்லிம் வீரராகக் காட்சி தந்த அம்லாவின் எளிமையும் திறமையும் டீன் ஜோன்ஸ் இற்குப் பிடிக்கவில்லை. அல்லது ஓர் காழ்ப்புணர்வில் அவ்வாறு கூறியிருந்தார்.

அம்லா ஓரு பிடியைப் பெற்ற போதே இவ்வாறு கூறி இருந்தார். வர்த்தக விளம்பரத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு பிடியை அம்லா பெற்றிருந்தார். இதற்கும் ‘தீவிரவாதி மற்றுமொரு பிடியைப் பெற்றுள்ளார்’ என கூறியிருந்தார். உலக பிரசித்தி பெற்ற குறித்த தொலைக்காட்சியில் ஓர் நேரடி வர்ணனையாளரின் இச்செயலை போட்டியைப் பார்த்துக் கொன்டிருந்த அனைவரும் கண்டித்தனர். எனைய ஊடகங்களும் விமர்சித்திருந்தன. பின்னர் குறித்த தவறுக்காக டீன் ஜோன்ஸ் மன்னிப்புக் கோரி இருந்ததும் பின்னர் குறித்த தொலைக்காட்சி நிறுவனம் இவரை விலக்கியதும் குறிப்பிடத்தக்கது.

‘தான் உண்டு-தன்பாடு என்று’ ஆடம்பரமில்லாமல் எளிமையாக களத்தில் ஆடும் இவர், தென்ஆபிரிக்கா அணியை டெஸ்ட் போட்டிகளிலும் ஓருநாள் போட்டிகளிலும் அண்மைக்காலமாக பிரகாசிக்கச் செய்து வருவது அம்லாவுக்கான ஓர் தனிச்சிறப்பைப் பெற்றுக் கொடுத்துள்ளது. ஆம், இன்றும்கூட இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் போட்டி நாயகனாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்

ஈரான் நாட்டு தலைவரை பற்றி நமக்கு தெரியாத உண்மைகள் .....





1 . அவருடைய மாத வருமானம் 1200 டாலர் இது ஒரு வளர்ச்சியடைந்த நாட்டு தனிநபருடைய வருமானத்தை காட்டிலும் குறைவானது

2 அவர் இன்னமும் வாழ்வது அவரது அப்பா கட்டிய 40 வருடம் பழமையான வீட்டில் தான்

3 இவரது விருப்ப உணவு தன் மனைவியின் கையால் சமைத்தவை மட்டுமே..

4 படிப்பு : அறிவியல் , தொழில்நுட்ப போக்குவரத்து பொறியியல் மற்றும் திட்டமிடல் PHD
PhD in Transportation Engineering and Planning from Iran University of Science and Technology

5 இவரது வங்கி நிலுவை 0

6 இவரிடம் இருந்த ஒரே ஒரு வண்டி ஈரானிய உற்பத்தியாகும் தற்போது அதையும் விற்று தன் நாட்டு மக்களுக்கு பங்கிட்டுள்ளார் .

7 அவர் ஜனாதிபதி ஆகிய பின் தன் சொந்த ஜெட் விமானத்தையும் ஈரானிய விமானப்படைக்கு அன்பளிப்பு செய்துள்ளார்.

8 பிரார்த்தனையில் ஈடுபடும் போது விஷேடமாக இடம் அமைத்து இருந்தாலும் சாதாரண மக்கள் தொழும் இடத்திலேயே பிரார்த்தனைகளில் ஈடுபடுவார்..

9 பெட்ரோல் உற்பத்தி செய்தாலும் அதனை சேமிக்க வேண்டி எந்தவொரு படைபட்டாளம் இன்றியே தனியொரு வாகனத்தில் பயணம் செய்வார்.

10 தன் காரியலதிலும் வீட்டிலும் உள்ள விலை அதிகமான திரைசீளைகளை ஈரானிலுள்ள ஒரு மசூதிக்கு அன்பளிப்பு செய்துவிட்டார்

11 நிலத்தில் உறங்க நாட்டமுள்ள இவர் ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கினாலும் நிலத்திலேயே உறங்குவாரம் ..

இதுக்கும் இருக்காங்களே
இனி எதிர்காலத்திலாவது இது போன்ற நல்ல தலைவர்கள் வர பிராத்திப்போமாக !!! இந்த நல்ல கருத்துக்களை நம் நண்பர்கள் மத்தியில் பரப்புங்கள்..