Sunday, May 27, 2012

காதல் தம்பதியர் சேர்வதே… பிரிவதற்காகத்தானா?


“உன்னோடு வாழாத வாழ்வு என்ன‍ வாழ்வு
என் உள் நெஞ்சம் சொல்கிறதே!
என்ற பாடல் வரிகளை பாடி, பேசி, ஏங்கி ஏங்கித் தவித்துக் காதலித்து, பெற்றவர்களையும் உறவுகளையு ம் எதிர்த்து, சவால்களை தூசுகளாய் க் கடந்து… காதல் திருமணம் செய் துகொள்ளும் தம்பதிகள் பெருகி வருகிறார்கள். அதேசமயம், திரு மண வாழ்க்கையை பூரணமாக வா ழாமல், கைப்பிடித்த வேகத்திலே யே அந்த உறவிலிருந்து சட்டப்பூர் வமாக விலகுவதும் அதிகரித்து வருகிறது!
இந்தக் காலத்தில் கணவன் – மனைவி இருவரும் சம்பாதிக்கும் குடும்ப ங்களில் திருமண முறிவு என்பது வெகு இயல்பான விஷயமாகிப் போய் விட்டது என்கிற நிதர்சனம், நடுக்கத்தை ஏற்படுத்துகிறது.
ஏன் இந்த மன, மண முறிவுகள்?
இதைப்பற்றி அக்கறையுடன் நாம் நடத்திய ஆலோசனைகள் இங்கே …
சென்னை, குடும்பநல நீதிமன்றம். விவாகரத்துக்காகக் காத்திருக்கிறா ர்கள் பல பெண்கள். ”நானும் அவ ரும் மூணு வருஷமா லவ் பண்ணி, வீட்டை எதிர்த்து கல்யாணம் செய் துகிட்டோம். ஒரு நாலு மாசம்வரை க்கும் வாழ்க்கை நல்லாத்தான் போயிட்டு இருந்தது. என் வேலை சம்பந்தமா அடிக்கடி டூர் போக வே ண்டி இருக்கும். இதுதான் என்வொ ர்க் நேச்சர்னு தெரிஞ்சுதான் கல்யா ணம் செய்துகிட்டார். ஆனா, கல்யாணத்துக்கு அப்புறம், ‘டூர் போகக் கூடா து’னு தினம் தினம் சண்டை, டார்ச்சர். ஒரு லெவல் வரைக்கும் பொறு த்துப் பார்த்து முடியாமதான் இப்ப கோர்ட் டுக்கு வந்தேன்” என்று அதிக வலியின்றிப் பேசிய அந்தப் பெண்ணுக்கு வயது 25.
”நான் காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் படிச்சப்போ அவர் என்கூட பஸ்ல வருவார். பார்த்ததும் புடிச்சுப் போச்சு. செகண்ட் இயர் படிக்கும் போது எங்க வீட்ல மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. அதனால அவசரமா நானும் அவரும் கல்யாணம் பண்ணிக்கிட் டோம். ஆனா, பொருளாதாரப் பிரச்னை களை அவரால சந்திக்க முடியலை, என் னோட சின்ன தேவைகளைக்கூட நிறை வேத்த முடியலைங்கறது அப்புறம்தான் புரிஞ்சுது. இதனால தினம் சண்டை போட் டுக்கஷ்டப்படுறதைவிட, பிரிஞ்சு போயிடறதுனு முடிவு பண்ணிட்டேன் . இப்ப டைவர்ஸ் கேஸுக்கு ஆகற செல வைக்கூட என் அம்மா, அப்பா தான் பார்த்துக்குறாங்க” என்று அலட்டிக் கொள்ளாமல் சொல்லும் இந்தப் பெண்ணுக்கு வயது 22!
காதலைக் குலைக்கும் ‘ஈகோ’!
”நீதிமன்றத்துக்கு விவாகரத்துக் கேட்டு செல்வது தவறு என்கிற சிந்தனை, போன தலைமுறை யில் இருந்தது. விவாகரத்துக் கேட்பதில் என்ன தவறு இருக்கி றது என்கிற சிந்தனையுடன்தான் வாழ தலைப்பட்டிருக்கிறது இந் தத் தலைமுறை” என்று சுடும் உண்மையைச் சொல்லி ஆரம்பி த்த வழக்கறிஞர் சுதா ராமலிங் கம்,
”எல்லாவற்றிலும் வேகம், வேகம் என்று ஓடும் இந்தத் தலைமுறையி னர், பார்த்ததும் காதலிக்கிறார்கள். குடும்பம் நடத்த ஆரம்பித்ததும் ஒருவரின் ப்ளஸ், மைனஸ் தெரிய ஆரம்பிக்க, ‘நீயும் சம்பாதிக்கிறாய், நானும் சம்பாதிக்கிறேன். உன் தவறுகளை எதற்காக நான் சுமக்க வேண் டும், பொறுத்துக் கொள்ள வேண்டும்?’ என்கிற ஈகோ தலைக் குள் வந்தவுடன், நீதிமன்றத்துக்குள் நுழைந்து விடுகிறார்கள்” என்று எதார்த்தத்தை எடுத்து வைத்தார்.
அதிகம் படித்தவர்கள்தான் அதிகம்!
நீதிமன்றத்துக்கு இப்படி அவசரப்பட்டு வரும் தம்பதிகளுக்கு ஆலோசனை தருவதற்காக வே பிரத்யேகமாக கவுன்சலர்கள் நியமிக்கப்ப ட்டுள்ளனர். அவர்களில் சிலரிடம் பேசியபோ து… ”விவாகரத்துக்காக வரும் தம்பதிகளுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் மூன்று முறை கவுன்சலிங் கொடுக்கிறோம். 21-28 வயதுக் காரர்கள், ‘இதுதான் தீர்வு’ என்று தீர்மானித்து விட்டே இங்கே வருகிறார்கள். நாங்கள் என்ன ஆலோசனை சொன்னாலும், அவர்கள் பொறு மையுடன் கேட்பதில்லை என்பது வருத்த மான விஷயம்.
அதிகம் படித்த ஆண்களும், பெண்களும் மனம் முழுக்க ‘நான்’ என்கிற ஈகோவுடன்தான் எங்கள் முன் அமர்கிறார்கள். எங்களிடம் வரு கிற நூறு கேஸ்களில் ஒரு ஜோடிதான், மீண்டும் தம்பதியாக வீட்டுக்குத் திரும்பிப் போகிறார்கள். மற்ற 99 ஜோடிகளும் தனித்தனியாகவே பிரி ந்து நடை போடுவது துயரம்” என்று கனத்த மனதுடன் பகிர்ந்து கொண் டார்கள்.
‘அவன் என்னை டாமினேட் பண்றான்!’
”மறுகல்யாணம் வரை தீர்மானித்துவிட் டே… நீதிமன்றம் ஏறுகிற காதல் தம்பதிகளு ம் உண்டு. உண்மை, சிலசமயங்களில் கற்பனையைவிட பயங்கரமானதாக இருக் கும் என்பதை இம்மாதிரியான வழக்குகளி ல் இருந்துதான் தெரிந்து கொள்கிறோம்” என்று அதிரவைக்கிறார் மற்றொரு வழக்க றிஞரான சுதா.
”சாட்டிங்கில் பேசி, பழகி வீட்டுக்குத் தெரியா மல் கல்யாணம் செய்து கொண்டு, ஒரு வரு டம் முடிந்ததும் வீட்டுக்குத் தெரியாமலே யே விவாகரத்து வாங்கிப்போன வழக்குக ளையும் நீதிமன்றம் பார்த்திருக்கிறது.
ஆரம்பத்தில் ஏற்படுகிற ‘எதிர்பாலின ஈர்ப்பை’ காதல் என்று நம்பி கல் யாணம் செய்துகொண்டு, சில வருடங்கள் போன பின்பு, ‘இது காதல் அல்ல… எனக்கு ஏற்ற ஜோடி இது அல்ல’ என்று நீதிமன்றம் நாடுகிறவர் கள், ‘நானும் அவன் அள வுக்கு சம்பாதிக்கிறேன், அப்புறம் எதுக்கு என் னை டாமினேட் பண்றா ன்?’ என்று கேட்கும் வழக் குகள், மனைவி வேலை க்குப் போவது பிடிக்கவில்லை, அதனால் டைவர்ஸ் வேண்டும் என்று வரும் வழக்குகள், ‘அவனுக்கு நிறைய ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க’, ‘அவ எப்பவும் கம்ப்யூட்டர்ல சாட் பண் ணிட்டே இருக்கா’ என்று வரும் வழக்குகளில் எல்லாம் சம்பந்தப் பட்டவர்கள் காதலித்துத் திரு மணம்செய்து கொண்டவர்கள் தான்” என்று தான் சந்தித்த வழக் குகளை அடுக் குகிறார் சுதா.
ஏன் பெருகுகிறது விவாகரத்து?
காதல் தம்பதிகளிடம் ஏன் விவாக ரத்து பெருகிறது என்ற கேள்விக்கு, மன நல மருத்துவர் ஷாலினியின் பதில்…
”இன்றைய பெண்ணின் தேவை மாறி வருகிறது என்பதை ஓர் ஆண் புரிந்து கொள்ளாததுதான் எல்லா பிரச்னைகளுக்கும் காரணம். அவ ன் பார்த்து வளர்ந்த அவன் அம்மா வைப் போல்… வெறும் உணவும், உடையும், நகையும் பெண்ணின் தேவை அல்ல இன்று. அவள் எதி ர்பார்ப்பது சமத்துவம், சமமான மரியாதை. காரணம், பெண்ணும் இன்று ஆணுக்கு நிகராக சம்பாதிக் கிறாள், படித்து இருக்கிறாள், உல கம் தெரிந்து இருக்கிறது. அதனால் பெண் அட்வான்ஸ்டாக வளர்ந்துவிட்டாள். ஆனால்… ஒரு ஆண், ஒரு பெண்ணை நடத்தும் சிந்தனையில் இன்னும் பத்து வருடங்கள் பின் தங்கிதான் இருக்கிறான். வெறும் மல்லிகைப் பூவுக்கும் சினிமாவுக்கும் சமாதானமாகிப் போகிற பெண்தான் அவனுடைய சிந்தனையில் இருக் கிறாள். ஆனால், பெண்ணின் மன தில் இருப்பதோ… இந்தத் துணை ,  நம்மை சரிசமமாக நடத்துவான் என்கிற நம்பிக்கை தான். இந்த எதிர் பார்ப்புகள் எதிரெதிர் திசையில் செல்லும்போது, விவா கரத்துதான் வழி என்று தீர்மானிக்கிறார்கள்.
காரணம் தொழில்புரட்சி!
இது தவறு, சரி என்று சுட்டிக்காட்டுவதற்கு ம், வழிகாட்டுவதற்கும் அம்மா, அப்பா, அண்ணன், அக்கா, மாமா, அத்தை என்று உறவுகள் அவர்கள் அருகில் இல்லை. அல் லது அந்த உறவுகளுக்கு இவர்களின் பிரச் னை போய் சேருவதில்லை. இன்றைய தலைமுறையினர் மனதுக்குள் ஒவ்வொரு வரும் ஒரு தனித்தீவாகத்தான் வாழ்கிறார் கள். தொழில் புரட்சி ஏற்பட்ட நாடுகளில் எல்லாம் இந்தப் பிரச்னை எழுந்தது. உலக மயமாக்கலால் எழுந்துள்ள தொழிற்புரட் சியால் இன்று நாமும் அந்தப் பிரச்னையை எதிர்கொள்கிறோம்” என்றவரிடம், இதற்குத் தீர்வுதான் என்ன என்றோம் கவலையுடன்.
”மாறும் குடும்பச் சூழ்நிலையை, தொழில் அமைப்பை படித்த தம்பதிகள் உணர்ந்து, இந்தத் திருமண உறவை இறுதி வரை எடுத்துச் செல்வதற்கு மனதளவில் முயன்றால்தான் விவாகரத்துகள் குறையும். விவாகரத்து செய்வதால் குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை, சம்பந்தப்பட்ட அப்பாவும், அம்மாவும் உணர வேண்டும்!” என்றார் ஷாலி னி வேண்டுகோளாக!
சேர்வதே… பிரிவதற்காகத்தானா?
*
இனி, இங்கே… சிங்கிள் மதர்ஸ்!
சமூகவியல் பேராசிரியர் முனைவர் ஆனந்தி, ”மேலைநாட்டின் தொழில் நுட்ப ம், உணவு, உடை நம்மை ஆக்கிரமிக்கு ம்போது அவர்களது கலாசாரமும் நம்மி டம் வந்து ஒட்டிக் கொள்கிறது என்ப தைத்தான் இது காட்டுகிறது. மேலை நாடுகளைப் போல் இங்கும் இனி ‘சிங்கிள் மதர்ஸ்’ அதிகம் இருப்பார்கள். அதை நோக்கித்தான் நகர்த்துகிறது இந்த வேக மும் தொழில் புரட்சியும். 80-கள் வரை விவசாயம் சார்ந்த நம் வாழ்க்கை முறையில் உறவுகள், வாழ்க்கை மதிப் பீடுகள், திருமணம் எல்லாவற்றுக்கும் உணர்வுப்பூர்வமான முக்கியத்துவம் இருந்தது. இன்று நம் நாட்டில், குறி ப்பாக… தமிழ்நாட்டில் விவசாயம் கிட்டத்தட்ட அழிந்து விட்டதால் அத னுடன் தொடர்புடைய சமூக கலாசாரம், திருமணம் எல்லாமே கேள்வி க்குள்ளாகிக் கொண்டிருக்கிறது” என்று மாறிவரும் சூழ்நிலையைச் சொன்னார்.
விவாகரத்துகள்… சில உண்மைகள்!
சென்னை உயர் நீதிமன்றத்தில் மொத்தம் 4 குடும்ப நல நீதி மன் றங்கள் இருக்கின்றன. மதுரை உயர் நீதிமன்றத்தில் ஒரு குடும்ப நல நீதிமன்றம் இருக்கிறது. இவ ற்றுடன் ஒவ்வொரு மாவட்டத் தில் இருக்கும் சிவில் கோர்ட்டு களிலும் தினசரி விவாகரத்து வழ க்குகள் பதிவாகின்றன.
1980-களில் ஓராண்டுக்கே 20 – 30 விவாகரத்து வழக்குகள் வரைதான் ஒரு நீதிமன்றத்துக்கு வரும். இன்று தினமும் ஒவ்வொரு நீதிமன்றத்து க்கும் குறைந்தது 10 வழக்குகள் என்கிற அளவுக்கு நிலைமை கைமீறிப் போயிருக்கிறது.
 சென்னையில் கடந்த 3 ஆண்டு களில் விவாகரத்து வழக்குகளி ன் எண்ணிக்கை இரட்டிப்பாகியு ள்ளது. 2008-ல் 25 வயதுக்குள் விவாகரத்து பெற்ற ஆண்கள் 2%, 2011-ல் 4%. 2008-ல் பெண் கள் 3%, 2011-ல் 6%.
மும்பை, டெல்லி, லக்னோ, சென்னை போன்ற பெரு நகரங் களில் விவா கரத்து வழக்குகள் அநியாயத்துக்கும் பெருகிக் கொண்டிரு க்கின்றன. 1990-களில் வருடத்துக்கு 1,000 வழக்குகள் பதிவான நிலை யில், அடுத்த பத்தாண்டுகளில், அதாவது 2000 ஆண்டுகளில் வருடத் துக்கு 9,000 வழக்குகள் என உயர்ந்துள்ளது.
இதில் 25-35 வயதுக்கு உட்பட்டவர்கள் 75 சதவிகிதத்தினர். திருமணம் செய்துகொண்ட 3 ஆண்டுகளுக்குள் விவாகரத்துக்கு விண்ணப்பித்தவர் கள் 85 சதவிகிதத்தினர்.

மனநல மருத்துவர் வேதமாலிகா - நேர்காணல்



மனநல மருத்துவர் வேதமாலிகா - நேர்காணல்


நாம் பரபரப்பாக இயங்கும் பெரு நகர கலாச்சாரங்களில் வாழ்ந்து வருகிறோம், தினசரி வாழ்வு ஏற்படுத்தும் பிரச்சனைகளினாலும் நெருக்கடிகளாலும் இன்று, என்றுமில்லாத அளவிற்கு மன நோய்கள் அதிகமாகிவிட்டன, மேலும் மன நோய்க்கு மருந்து மாத்திரைகளும், முரட்டுத்தனமான சிகிச்சை முறையுமே சாசுவதம் என்று நம்பிக்கொண்டிருக்கிறோம், எந்த மருந்துகளுக்கும் கட்டுப்படாத சிக்கலான மன நோய்கள் சாதாரண மன சிக்கல்களிலிருந்து தோன்றுபவைகளே, இதற்கு புதிய புதிய மருத்துவ சிகிச்சை முறைகள் கண்டு பிடிக்கப்பட்டு வருகின்றன, அதில் ஹிப்னோ தெரபி மற்றும் பாரா ஹிப்னோ தெராபி முறைகள் மன நோய்களை தீர்க்கவல்லது என்று உலக சுகாதார அமைப்பு தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.

டாக்டர் வேதமாலிகா ஒரு மனநல ஹிப்னோ மருத்துவர். இவர் ஹிப்னோ தெரபி, Para Hypno Therapy, Past lite Therapy முறைகளை அமெரிக்காவில் கற்றுத் தேர்ந்து 20 ஆண்டுகளாக இத்துறையில் பணியாற்றி வருகிறார்.

மியாமி பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆராய்ச்சி செய்தவர். சைக்கோ-மியூசிக் தெரபி என்ற இசை மருத்துவ ஆய்விலும் ஈடுபட்டவர். ஹிப்னோ தெரபி அன்ட் மென்டல் ஹெல்த் என்ற மாத இதழின் ஆசிரியராக பணியாற்றியவர். பல்வேறு வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் வழங்கியவர்.

ஹிப்னோ தெரபி என்பது மருந்தின்றி மனநோய்களை குணப்படுத்தவல்லது என்று உலக சுகாதார அமைப்பு உறுதி செய்துள்ளது. அத்தகைய ஹிப்னோ சிகிச்சை பற்றியும், உடல், மன நோய்கள் பற்றியும் வெப்உலகத்திற்கு டாக்டர் வேதமாலிகா தந்த நேர்காணலின் முதல்பாகம் வருமாறு. அடுத்தடுத்த பாகங்களை வரும் வாரங்களில் பிரசுரிக்க உள்ளோம்.

வெப்உலகம் : ஹிப்னோ தெரபி பற்றி கூறுங்களேன்?

டாக்டர் வேதமாலிகா : ஹிப்னோ தெரபிக்கு மனம்தான் அடிப்படை. மனம் என்பதை 3 விதமாக பொதுவாக பிரிக்கலாம். வெளி மனம் அதாவது இப்ப நாம பேசிக்கிட்டு இருக்கற Concious mind. பிறகு உள் மனம்னு சொல்லப்படுகிற Sub-concious mind. இதைத் தவிர இன்னொன்று உள்ளது. இது புதை மனம்.

ஹிப்னோ தெரபிலே 2 மனசை டீல் செய்கிறோம். வெளி மனம் பற்றி முதலில் சொல்லிவிடுகிறேன். நம்முடைய வெளி மனது அலைபாயும் குணமுடையது. அதை முதலில் கட்டுப்படுத்த வேண்டும். கட்டுப்படுத்திய பிறகு Sub-concious mind -ங்கற உள் மனது நோக்கி கவனம் செலுத்துகிறோம். ஏனெனில் நம்முடைய அனைத்து குணாம்சங்களுக்கும், மனோநிலைக்கும் உள் மனம்தான் காரணம். வெளி மனதை கட்டுப்படுத்துவது என்பது ஹிப்னோ தெரபி முறைல ரிலாக்ஸ் செய்ய வைப்பது, சற்றே தளர்த்துவது. பிறகு உள் மனதை அணுகுகிறோம்., இதைத்தான் ஹிப்னாடிசம் என்கிறோம்.

வெப்உலகம் : ஹிப்னாடிசம் - ஹிப்னோ தெரபி வேறுபாடு உள்ளதா?

டாக்டர் வேதமாலிகா : ஹிப்னாடிசம் - ஹிப்னோ தெரபி வேறுபாடு பற்றி கூறவேண்டுமென்றால் வெளி மனதை அமைதிப்படுத்தி உள் மனதை அணுகுவது ஹிப்னாடிசம்னு சொல்றோம்.

ஹிப்னோ தெரபில உள் மனதுக்கு தகுந்த கட்டளைகளை அதாவது Suggestion கேளை கொடுத்து உதாரணத்துக்கு இப்ப ஒருத்தருக்கு mental disorder இருக்கு என்று கண்டுபிடிக்க வேண்டும், எப்படி கண்டுபிடிக்கிறோம், முதலில் Body relaxation பிறகு mind relaxation உடலை அமைதிப்படுத்தி பிறகு மனது அமைதிப்படுத்தி உள் மனதோட பேச தொடங்குகிறோம். உள் மனசோட பிரச்சினைகளை தெரிந்து கொண்டு அதற்கான கட்டளைகளை இட்டு நோய் தீர்க்கறதுதான் ஹிப்னோ தெரபி என்று கூறுகிறோம். இதை 3 ஆகச் சொல்லலாம்.

1. ரிலாக்சேஷன் என்றால் உங்களுக்கே தெரியும். மனம் மற்றும் உடலை அமைதிப்படுத்துவது.

2. Regression அதாவது ஒரு பிரச்சினைக்கான காரணம், லைஃப்ல எப்பவோ நடந்த ஒரு நிகழ்ச்சியா இருக்கும். இப்பொழுது நாம் என்ன செய்கிறோம் நினைவை பின்னோக்கி செலுத்துகிறோம். அதாவது கடந்த காலத்தை நோக்கிப் போதல். அதாவது Hypno-regression முறையில் என்ன பிரச்சினை என்பதை தெரிந்துக் கொள்கிறோம்.

3. Suggestion : பிரச்சினை என்னவென்று தெரிந்த பின்னால் அதற்குத் தகுந்த கட்டளைச் சொற்களைக் கொடுத்துக் கொடுத்து அந்த நோயை தீர்க்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்கிறோம். அதாவது கட்டளைச் சொற்களை வெளி மனதுக்குக் கொடுத்தால் அது தங்காது, எனவே ஹிப்னோ தெரபியில் உள் மனதிற்கு பதியும்படி கட்டளைச் சொற்களை கொடுக்கிறோம்.

வெப்உலகம் : ஹிப்னோ சிகிச்சை மூலம் எந்த மாதிரியான மனநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும்?

டாக்டர் வேதமாலிகா : இப்ப சாதாரண மக்கள்ங்கறவங்க நோயாளிகள் அல்ல. ஆனால் mental stress, மன இறுக்கம் தோன்றுகின்றன. ஆனால் மனநோயாளிகள் என்பவர்கள் உண்மையில் மனச்சிதைவு ஏற்பட்டவர்கள். முதலில் நாம் சாதாரண மக்களில் இருந்தே தொடங்குவோமே. ஒரு 4 வயசுக் குழந்தைக்குக் கூட சில பிரச்சினைகளை பெற்றோர்கள் கூறுவதைப் பார்க்கிறோம்.

அதாவது சொல்ற பேச்சை கேக்கறதில்ல, ஒழுங்கா படிக்கிறதில்ல, சாப்பிடறதில்ல அப்டீன்னு சொல்வாங்க. நீங்கள் கேட்கலாம். ஒரு சின்ன குழந்தைக்கு என்ன stress இருக்க முடியும் என்று கேட்கலாம். ஆனா இன்னிக்கு சின்னக்குழந்தைகளுக்கு ளவசநளள அதிகமாக இருக்கிறது. உதாணரமாக பள்ளிகள்ல புக்ஸ் தூக்குவது மட்டுமல்லாமல் பாடத்திட்டங்களும் அதிகமாக இருக்கிறது.

எக்கச்சக்கமா ஹோம் ஒர்க் கொடுக்கறாங்க. பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் படிக்க வேண்டும். முன்னுக்கு வர வேண்டும் என்று நினைக்கிறார்கள். குழந்தைகளுக்கும் இன்றைக்கு அமைதியான சூழல் தேவைப்படுது. பள்ளியிலிருந்து வந்தவுடன் ரிலாக்ஸ் செய்ய அவகாசம் கொடுத்துவிட்டு அடுத்த வேலை கொடுத்தால் சிறந்தது. வந்தவுடனேயே இதைச் செய் அதைச் செய் என்றால் வெறுப்புதான் ஏற்படும்.

எனவே நாம் குழந்தை மனோ நிலையை புரிந்து கொள்ள வேண்டும். விளையாடச் சொல்ல வேண்டும். பிறகு டிபன் கொடுத்துவிட்டு சற்று நேரம் கழித்து படிக்கலாமா? என்பதுபோல் கேட்டால் குழந்தைகளுக்கு படிப்பு மேல் வெறுப்பு ஏற்படாது. பெற்றோர்கள் இதைச் செய்வதேயில்லை. நல்லெண்ணம் இருக்கலாம். ஆனால், இதை விட குழந்தையின் மனநலம் தான் முக்கியம் என்பதை உணரவேண்டும். ஆனால், தற்பொழுது பெற்றோர்கள் என்ன புகார் கூறுகிறார்கள் என்றால், குழந்தைகள் டி.வி. பார்க்கின்றனர், படிப்பதில்லை, மக்காக இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

குழந்தைகள் டி.வி.ல பொதுவாக கார்ட்டூன்களை பார்க்கின்றன. ஏன் குழந்தைகள் கார்ட்டூன்களை ரசிக்கின்றன என்று பார்த்தோமானால், கார்ட்டூனில் நாய் பேசுகிறது, பூனை பேசுகிறது, மரம் பேசுகிறது. இதை குழந்தைகள் ரசிப்பது வெறும் ஆர்வத்தினால் மட்டுமல்ல, பெற்றோர்கள் வேலைக்குச் சென்றுவிடுகின்றனர். பள்ளி விட்டு திரும்பிய பிறகு தனிமையில் இருக்கும் குழந்தைகள் பேசக் கூட ஆளில்லாமல் தவிக்கும்போது பேசும் விலங்குகள், பேசும் தாவரங்கள் என்று வரும் கார்ட்டூன் நிகழ்ச்சிகளில் தனது இச்சையை பூர்த்தி செய்து கொள்கிறது. பேசாத மனிதர்களுக்கு நடுவே பேசும் பொருட்கள் விலங்குகளில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கின்றன.

என்னிடம் இது போன்ற ஒரு குழந்தையை அழைத்து வந்தார்கள். பரிசோதனை செய்துபார்த்த போது அந்த குழந்தையிடம் நல்ல புத்திக்கூர்மை இருந்தது. ஆனால், பள்ளிக்குச் சென்று படிக்க விருப்பமில்லை. ஏனென்று காரணம் கேட்டபோது, யாரோ டீச்சர் தன்னை அடித்துவிட்டதாக தெரிவித்தது. இது அந்தக் குழந்தையின் உள் மனதில் தீவிரமாக பதிந்திருக்கிறது. அதனால் பள்ளி என்றாலே ஒரு வெறுப்புணர்வு ஏற்பட்டுவிட்டது. ஹிப்னோ தெரபி மூலம் இத்தகைய குழந்தைகளின் உள் மனதில் கட்டளைகளை இட்டு மீண்டும் நார்மல் நிலைக்கு கொண்டு வர முடியும்.

கொஞ்சம் வளர்ந்த அதாவது +1, +2 படிக்கும் மாணவர்களை எடுத்துக் கொண்டால் அந்த வயதில் நிறைய attention தேவைப்படும். இப்போது பார்த்தீர்களானால் நிறைய பேர் Drug addictiony போய்விடுகிறார்கள். ஏனெனில் வீட்டில் அவர்களுக்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை. அடையாள நெருக்கடிகள் ஏற்படுகின்றன. தீவிரவாதிகள்னு நாம சொல்ற சிலர் உருவாவதற்கும் இதே போன்ற அங்கீகாரமில்லாமை காரணமாக இருக்கலாம். ஒரு சின்னக் குழந்தையை நாம் பாராட்டுகிறோம். இந்த பாராட்டு கிடைக்காதபோது இதற்கு பதிலாக வேறு ஒன்றை அவர்கள் வெளியில் தேடிக் கொள்கின்றனர்.

மாணவர்கள் ஏன் போதைக்கு அடிமையாகின்றனர் எனில் பல சமயங்களில் அவர்கள் எதிர்பார்க்கும் உற்சாகமும், பாராட்டும், தூண்டுதலும் பெற்றோர்களிடமிருந்து கிடைப்பதில்லை. இதை மறக்க மாணவர்கள் கெட்ட நண்பர்களுடன் சேருகின்றனர். போதைப் பழக்கம் ஏற்படுத்திக் கொள்கின்றனர். வீட்டில் அம்மா, அப்பா இருவரும் வேலைக்குச் செல்கின்றனர். வீட்டிற்கு வரும் குழந்தைகள் தங்கள் வேலையை தாங்களே செய்து கொள்ள வேண்டியுள்ளது. இப்ப இந்த குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு என்ன இருக்கிறது? எவ்வளவு நேரம் டி.வி. பார்த்துக் கொண்டிருக்கும். அதனால நண்பர்களை நோக்கி செல்கின்றன. இவர்கள் நல்ல நண்பர்கள், இவர்கள் கெட்ட நண்பர்கள் என்றெல்லாம் பார்க்க முடியாமல் கிடைத்தவர்களை பற்றிக் கொள்கின்றனர். இவர்கள் அவர்களை போதைக்கு பழக்கலாம். இதுபோன்று வளர்ந்த நிலையில் உள்ள மாணவர்களுக்கு ஹிப்னோதெரபி மூலம் நிலைக்கு கொண்டு வருகிறோம். அதாவது தவறான பாதைக்குச் சென்ற மனதை மீண்டும் பொருத்தமான கட்டளைகள் மூலம் நல்ல நிலைக்கு திருப்புவதில் ஹிப்னோ தெரபி பயன்படுகிறது.

அதேபோல் வேலைக்குச் செல்பவர்கள் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை என்கின்றனர். எங்களுக்கு பின்னாடி இருக்கிறவங்க பிரமோஷன் வாங்கிக் கொண்டு செல்கின்றனர் என்று கூறுகின்றனர். இதனால் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக நிம்மதியிழக்கின்றனர். அவர்களுக்கும் இந்த ஹிப்னோ தெரபி பயன்படுகிறது. குறிப்பா சாஃப்ட்வேர் துறையில் இருப்பவர்கள் இரவு அதிக நேரம் வேலை செய்கின்றனர். இதனால் தூக்கம் கெடுகிறது. இதனால் இரவு நேரத்தில் நம் உடலில் சுரக்கும் செரடோனா சுரப்பிகள் சுரப்பதில்லை. இதனால் உடல், மனப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே, தினசரி வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளால் உந்தப்படும் மன அமைதியின்மைக்கு ஹிப்னோ தெரபி பெரிதும் பயன்படுகிறது.

விளம்பரத் துறைகள்ல ஹிப்னாசிஸ் முறையைத்தான் கையாள்கிறார்கள். விளம்பரம் எப்படி செய்கிறார்கள் என்று பார்த்தால், ஒரு க்ஷசயனேஐ திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். இதனால் அதன் பெயர் நம் உள் மனதில் பதிகிறது. எனவே ஏதாவது ஒரு பொருள் வாங்க வேண்டுமென்றால் நமக்கு உடனே அந்த பிராண்ட் ஞாபகத்திற்கு வருவது ஒரு வகையில் பார்த்தால் ஹிப்னாடிச முறைகளிலேயே.

உளவியல்துறை


1277631288-psychology
சைக்காலஜிஸ்ட் எனப்படும் உளவியலாளர்கள் மனிதர்கள் நடந்து கொள்ளும் முறையையும் மனித வளம் தொடர்பான செயல்களையும் ஆராய்ந்து மனிதர்களின் யோசிக்கும், உணரும் மற்றும் நடந்து கொள்ளும் விதங்களையும் அறிகிறார்கள். ஒவ்வொரு மனிதரும் மற்றவரிடமிருந்து தோற்ற ரீதியாகவும் எண்ண ரீதியாகவும் உணர்வுபூர்வமாகவும் மாறுபடுகிறார்கள்.
ஒவ்வொரு மனிதனையும் தனிப்படுத்திக் காட்டுவது எது? ஏன் சிலர் எளிதில் கோமடைகிறார்கள்? ஏன் சில மாணவர்கள் மட்டும் படிப்பில் மிகுந்த கவனம் செலுத்துகிறார்கள்? ஏன் சிலர் மிகுந்த தன்னம்பிக்கையுடன் இருக்கிறார்கள்? ஒருவரின் மனதை எப்படி அறிவது? இந்த வித்தியாசங்களின் காரணங்களை அறிவதன் மூலமாக தேவையற்ற பழக்கங்களை நிறுத்துவது, எண்ண ஓட்டத்தை சீரமைப்பது, நடந்து கொள்ளும் தன்மையை நேராக்குவது, திறன்களை மேம்படுத்துவது போன்றவற்றை உளவியலின் உதவி கொண்டு செய்ய முடிகிறது.
பிறருக்கு உதவும் தன்மை, மனிதர்களுடன் இணைந்து பணியாற்றும் விருப்பம் போன்ற குணங்களைப் பெற்றிருப்பவருக்கு உளவியல் மிகவும் பொருந்தக் கூடிய துறையாக அமையும். மனித மனதைப் பற்றிய படிப்பு என்பதால் இது சவாலான தேடலாக அமைகிறது.
உளவியல் துறையில் நாம் எடுத்துப் படிக்கும் சிறப்புப் படிப்புகளுக்கேற்ப நாம் எதிர்கொள்ள வேண்டிய சவால்களும் பிரச்னைகளும் மாறுபடுகின்றன. உளவியல் துறையில் அடிப்படையான பணிகள் என இவற்றைக் கூறலாம்.
* உணர்வு பூர்வமாக சமூகரீதியான எண்ணம் தொடர்புடைய பிரச்னைகளைப் பெற்றிருப்பவருக்கு கலந்தாய்வு (கவுன்சலிங்) எனப்படும் ஆலோசனை தருவது
* சைக்கோமெட்ரிக் கருவிகள் மற்றும் கருவிகளின் உதவியோடு உள்ளார்ந்த மனப் பிரச்னைகளையும் அவற்றின் காரணங்களையும் ஆய்வு செய்வது
* அன்றாட வாழ்வின் பிரச்னைகளின் வெளிப்பாடாக சராசரி மனிதருக்கு ஏற்படும் பயம், பதட்டம், மனஅழுத்தம் போன்றவற்றை
களை வதற்கும் சக மனிதருடனான உளவியல் ரீதியலான பிரச்னைகளை நீக்குவதிலும் உதவி செய்வது
* சிலர் நடந்து கொள்ளும் முறையை நல்ல விதமாக மாற்றியமைப்பது
* தீவிர நோய்களான டயபடிஸ், இதய நோய்கள், கேன்சர் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் உதவுவது.
* போதைப் பொருட்களை உபயோகிப்பது, முற்றிய குடிப்பழக்கம் மற்றும் பிற மோசமான பழக்கங்களுக்கு அடிமையானவர்களுக்கு சமூக சீர்திருத்த மையங்களின் மூலமாக உதவி செய்து அவர்களை சாதாரண மனிதராக மாற்றுவது
* கணவன் மனைவி, பெற்றோர் குழந்தை போன்ற குடும்ப உறவுகளில் ஏற்படும் பிரச்னைகளை சரி செய்ய உதவுவது. ஒரு தனி மனிதனின் வாழ்வில் எண்ண ரீதியாக குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்த முடியும் உளவியலாளர்களே இத் துறையில் பெரிய சாதனைகளைச் செய்கிறார்கள்.
உளவியல் சிறப்புப் பிரிவுகள்
கிளினிகல் சைக்காலஜி மனரீதியான நோய்களைக் கண்டு பிடித்து, காரணங்களை அறிந்து குணப்படுத்துவதை இத்துறை மேற்கொள்கிறது. மன நோயாளிகளை குணப்படுத்தும் மருத்துவர்களுக்கு இத் துறையினர் உதவியாக இருக்கிறார்கள். 
கவுன்சலிங் சைக்காலஜி கவுன்சலிங் எனப்படும் ஆலோசனையை பயன்படுத்தி உணர்வு ரீதியான பிரச்னைகளையும் சமூக மற்றும் உளவியல் ரீதியிலான மன அழுத்தம், பயம் போன்ற பிரச்னைகளை சரி செய்வது இப் பிரிவினர் தான். இதில் சாதாரண மற்றும் அசாதாரண மனிதர்கள் அடங்குகிறார்கள்.
டெவலப்மென்ட் சைகாலஜி
மனிதன் பிறந்து, வளர்ந்து பல ஆண்டுகளை கடந்து முழு மனிதனாக மாறுவது வரை ஏற்படும் தோற்ற ரீதியிலான மற்றும் உணர்வு ரீதியிலான திறன்களை உருவாக்குவது, சமூக மாற்றங்களைப் பற்றிப் படிப்பது போன்றவற்றோடு இது தொடர்புடையது. அடிப்படையில் இது ஒரு ஆராய்ச்சிப் பிரிவு என்ற போதும் உளவியலின் பல பிரிவுகளில் இதன் உதவி முக்கியமானதாக அமைகிறது.
எஜூகேஷனல் சைக்காலஜி
மாணவர்களின் படிப்பு தொடர்புடைய உளவியல் ரீதியிலான அம்சங்களைப் படிக்கிறது இப் பிரிவு. மாணவர்கள் படிக்க தடையாக இருக்கும் டிஸ்லெக்சியா போன்ற குறைபாடுகளை வெற்றி கொள்வது, சிறப்பாகப் படிக்கும் திறன்களை வளர்ப்பது, குழந்தைகளின் எண்ண ரீதியிலான பிரச்னைகளை நீக்குவது, ஆசிரியர்களின் பயிற்றுவிக்கும் திறன்களை வளர்ப்பது போன்றவை இதன் கீழ் வருகிறது. சிறப்புப் படிப்புகளும், பள்ளிகளில் தரப்படும் ஆலோசனையும் இதன் முக்கியப் பணியாக உள்ளது.
மனிதவள/நிறுவன நடத்தை/தொழில் உளவியல் (Human Resources/ Organisational Behaviour/Industrial Psychology): இந்தியாவில் உளவியல் தொடர்புடைய புதிய துறைகளாக எச்.ஆர். மற்றும் ஓ.பி. துறைகள் உள்ளன. தனிமனிதனின் திறமையை முழுமாக வெளிக் கொண்டு வந்து, அவர் சார்ந்திருக்கும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அதை பயன்படுத்தி தொழில் ரீதியாக வெற்றி பெறுவதை பல்வேறு தொழில் நிறுவனங்களும் உணரத் தொடங்கியுள்ளன.

உளவியல் வார்த்தைகள் உங்கள் பார்வைக்கு .


edipus complex  - ஆண் குழந்தைக்கு தாயின் மேல் ஏற்படும் ஈர்ப்பு
electra complex - பெண் குழந்தைக்கு தந்தையின் மேல் ஏற்படும் ஈர்ப்பு.
schizophrenia  - மனச்சிதைவு பிறழ்வு நோய்
Bibiliomania - புத்தகங்கள் மீது கொள்ளும் அதீத ஈடுபாடு .
Trichotillomania - தலைமுடியை பியித்து கொள்ளும் மனநோய்.
frotteurism  -   பிற பாலினத்தை உரசி உரசி இன்பம் காண்பது
Transvestism - பிற  பாலினங்களின் உடைகளை அணிவதில் இன்பம் கொள்வது
Necrophilia  - பிணங்களோடு உறவு கொள்வது
Exhibitionism - தன் உறுப்புகளை பிற பாலினத்திற்கு காட்டி இன்பம் காண்பது
Kleptomania  - தொழில் முறை திருட்டு இல்லாமல் ,சும்மா ஜாலிக்காக  திருடி
இன்பம் காண்பது ( நினைத்தாலே இனிக்கும் படத்தில் ரஜினியும் ,
நிறம் மாறாத பூக்கள் படத்தில் சுதாகரும் இந்த மாதிரி கேரக்டரில்
நடித்திருப்பார்கள்)
voyeurism  -  பிறர் உடலுறவு கொள்வதை பார்த்து இன்பம் காண்பது
Narrotophilia - பிறர் பாலினத்தை திட்டுவது மூலம் இன்பம் காண்பது
Bulimia - அதீதமாக பசிக்கும் வியாதி
Somnambulisam -தூக்கத்தில் நடக்கும் வியாதி
Insomnia - பசிக்காத வியாதி  
Telephone scatologia - தொலைபேசியில் உரையாடுவதால் ஏற்படும் இன்பம்
Partialism - உடம்பில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் இன்பம் காண்பது
Zoophilia  - விலங்குகளோடு உறவு கொள்வது
pedophilia  - குழந்தைகளோடு உறவு கொள்வது
Homeovestism -  தன்பால் உடைகளை அணிந்து இன்பம் காண்பது.
Gerentophilia   -  மூத்த வயதினரோடு உறவு கொள்வது
Lactophilia  - மார்பில் பால்குடிப்பதன் மூலம் இன்பம் காண்பது
Mechanophilia - கார் அல்லது மெஷின்களோடு உறவாடுவது
Olfactophilia - வாசனை பிடித்து இன்பம் காண்பது
Pictophilia - படங்களைபார்த்து இன்பம் காண்பது
Somnophilia - தூங்குபவர்களோடு உறவு கொண்டு இன்பம் காண்பது
Maieisophilia - கர்ப்பிணி பெண்களோடு உறவு கொள்வது .

முதலிரவுக்கு எந்த டிரஸ் போடப் போறீங்க…?


முதல் இரவு… திருமணமான ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத சுகமான இரவு. எத்தனையோ இரவுகளைப் பார்த்தாலும் நெருக்கமான நிலையில் திருமணமான ஒரு ஆணும், பெண்ணும் மனதளவிலும், உடல் அளவிலும் இணையும் அந்த நாள், அந்த இரவு என்றென்றும் மறக்க முடியாத வசந்த நினைவாகவே அமையும். முதல் இரவுக்குள் நுழையும் ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும் ஏகப்பட்ட கனவுகள், எதிர்பார்ப்புகள் இருக்கும். ஆனால் முதல் இரவன்று எப்படி நடந்து கொள்வது என்பதில் பலருக்கும் சரியான புரிதல் இருப்பதில்லை. இதனால் தித்திப்பாக இருக்க வேண்டிய முதல் இரவு சிலருக்கு கசப்பான அனுபவமாக அமைந்து விடுவதுண்டு.
குறிப்பாக முதல் இரவன்று எப்படி உடை அணிந்து கொள்வது என்பதில் சில ‘இலக்கணங்கள்’ உள்ளன. அதைப் பின்பற்றுவது, அருமையான முதல் இரவுக்கு, இனிய உறவுக்கு உறுதுணையாக இருக்கும்.
முதல் இரவன்று ஒவ்வொரு பெண்ணும் (ஆணும் இருக்கலாம், தப்பில்லை) கவர்ச்சிகரமாக இருக்க வேண்டியது அவசியமாம். தன்னைத் தொட்டுத் தாலி கட்டிய ஆண் மகனை முதல் பார்வையிலேயே வசீகரிக்க அப்போதுதான் வசதியாக இருக்குமாம். அதற்கு என்ன செய்ய வேண்டும்… தொடர்ந்து படித்தால் உதவியாக இருக்கும்.
செக்ஸியான உள்ளாடை
மிகவும் செக்ஸியான உள்ளாடைகளை முதல் இரவுக்காகவே பிரத்யேகமாக இப்போது தயாரிக்கிறார்கள். மார்க்கெட்டில் ஏகப்பட்டது வந்திறங்கியுள்ளது. அதைத் தேர்வு செய்து அணியுங்கள். அந்த உள்ளாடைகளைப் பார்க்கும் உங்களவருக்கு செக்ஸ் உணர்வுகள் கிளர்ந்தெழும். முதல் இரவு கிளுகிளுப்பாக அமைய இந்த உள்ளாடைகள் பேருதவியாக இருக்கும்.
முதல் இரவுக்கு வெட்கம் பொங்கும் முகத்தை பொலிவுபடுத்துவதை விட உடல் வனப்பை எடுத்துக் காட்டும் வகையிலான மெனக்கெடலே அவசியம். அதற்கு இந்த உள்ளாடைகள் முக்கியம். பார்த்தவுடன் காமத் தீயை பற்றிக் கொள்ளும் வகையில் இந்த உள்ளாடைகள் அமையுமாறு பார்த்துக் கொள்ளவும்.
வெள்ளை அல்லது பிங்க் நிற உள்ளாடைகள் அதிக கவர்ச்சியைக் கொடுக்குமாம். எனவே அப்படிப்பட்டதை தேர்வு செய்யுங்கள். சில ஆண்களுக்கு சிவப்பு அல்லது கருப்பு நிற உள்ளாடைகள் பிடிக்கும். எனவே உங்கள் கணவருக்கு எந்தக் கலர் பிடிக்கும் என்பதை முன்கூட்டியே தெரிந்து வைத்துக் கொண்டு அதற்கேற்ற உள்ளாடையைத் தேர்வு செய்வது புத்திசாலித்தனம்.
வாசணையை பரப்புங்கள்
நறுமணம் … முதலிரவு அறைக்குள் புகுந்ததும் உங்கள் வாசனை, உங்களவரை ஈர்க்க வேண்டும். அதற்குத் அருமையான நறுமணம் கமழும் பெர்ப்யூம் உங்களுக்கு கை கொடுக்கும். நல்ல பெர்ப்யூமை தேர்வு செய்து, அதை உங்களது கழுத்தின் பின்பக்கம், தோள்பட்டை, அக்குள் போன்ற பகுதிகளில் தேவையான அளவு பயன்படுத்துங்கள்.
பெண்களுக்கு எப்படி ஆண்களின் உடல் வாசனை ரொம்பப் பிடிக்குமோ, அதேபோல ஆண்களுக்கும் பெண்களின் இயற்கையான உடல் வாசனை ரொம்பப் பிடிக்கும். எனவே அது கெட்டு விடாத வகையில் பெர்ப்யூமை அளவாக பயன்படுத்தவும்.
மஞ்சத்தில் தூவிக் கிடக்கும் மலர்களும், மங்கையின் மேனியிலிருந்து கிளம்பும் நறுமணமும் இணையும்போது உங்கள் கணவருக்கு நிச்சயம் உணர்வுகள் அருவி போல பீரிட்டெழும் என்பதில் சந்தேகமில்லை.
நைஸான நைட்டி பெஸ்ட்
முதலிரவுன்று புடவையுடன்தான் போக வேண்டும் என்பது கட்டாயமில்லை. சம்பிரதாயங்கள் என்று ஆயிரம் இருக்கலாம். ஆனால் சந்தோஷம் என்பது நமது கையில்தானே உள்ளது. எனவே முதலிரவு அறைக்குள் புகுந்ததும் சம்பிரதாய உடைகளைக் களைந்து விட்டு சந்தோஷ உடைக்கு மாறலாம். உங்கள் கணவருக்கு என்ன மாதிரியான உடையில் இரவில் தோன்றினால் பிடிக்கும் என்பதை முன்கூட்டியே தெரிந்து வைத்துக் கொண்டு அந்த உடைக்கு மாறுங்கள்.
உள்ளே இருப்பதை அப்படியே வெளிக்காட்டும் இரவு நேர நைட்டிகள் இப்போது ஏராளம் இருக்கின்றன. அதைத் தேர்வு செய்து அணிந்து கொள்ளலாம். கணவன் மனைவி இடையே ஈர்ப்பை அதிகரிக்க வசதியான உடைகள் இப்போது நிறைய உள்ளன. பட்டன் வைத்த நைட்டி கூட உள்ளது. ஜிப் வைத்த இரவு உடைகளும் இருக்கின்றன. இப்படிப்பட்ட உடைகளை உங்கள் கணவரை விட்டே கழற்றச் சொல்லுங்கள்., அப்படிச் செய்வதன் மூலம் அவர் மட்டுமல்ல நீங்களும் கூட வேகமாக கிளர்ந்தெழ முடியும்.
இதெல்லாம் சின்னச் சின்ன டிப்ஸ்தான். நீங்கதான் புத்திசாலியாச்சே.. இதை விட சூப்பரான ஐடியா உங்களிடம் இருக்கலாம். பிறகென்ன முதலிரவை ஜமாய்ங்க…!