Tuesday, July 10, 2012

செக்ஸ் உறவால் எடை அதிகரிகுமா?

செக்ஸ் உறவால் எடை அதிகரிக்குமா?

செக்ஸ் வைத்துக் கொள்ள ஆரம்பித்த பின்னர் பெண்களுக்கு உடம்பில் கொழுப்பு சத்து சேரும், மார்பகங்கள், இடுப்புகள் பெருத்து விடும் என்று கூறப்படுவது சுத்தமான மூட நம்பிக்கைதான் என்கிறார்கள் மகப்பேறு மருத்துவர்கள்.
ஒரு பெண் ரெகுலராக செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டால், அவரது உடல் பெருத்து விடும். மார்புகள் பெரிதாகி விடும், இடுப்புகள் பெருத்து விடும் என்ற நம்பிக்கை பெண்களிடையே உள்ளது.
ஆனால் இதெல்லாம் ஒரு விதமான மூட நம்பிக்கைதான் என்கிறார்கள் மகப்பேறு மருத்துவர்கள்.
அதேசமயம், செக்ஸ் உறவை வைத்துக் கொள்ள ஆரம்பித்த பின்னர் பெண்களுக்கு மார்புகள், இடுப்புகள் பெருப்பது உண்மைதான். ஆனால் இதற்கும், செக்ஸ் உறவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதே உண்மை.
அதேபோல கல்யாணத்திற்குப் பின்னர் ஆண்களும், பெண்களும் குண்டாகி விடுகிறார்கள். இப்படிக் குண்டாவதற்கும், செக்ஸ் உறவுக்கும் கூட சம்பந்தம் இல்லை.
செக்ஸ் காரணமாக உடல் பெருக்கம் ஏற்படுவதில்லை. செக்ஸ் உறவின்போது ஏற்படும் திருப்தி, அதனால் ஏற்படும் உடல் பூரிப்பு, மன ரீதியான நிம்மதி, கல்யாணம்தான் ஆகி விட்டதே என்ற ரிலாக்ஸ் மனப்பான்மை, அதுவரை கடைப்பிடித்து வந்த உணவு, உடற்பயிற்சிக் கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை தளரும்போது இப்படி உடல் பெருக்கம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
சிங்கிளாக இருப்பவர்களை விட கல்யாணம் செய்து கொண்டவர்கள் மற்றும் செக்ஸ் உறவில் ஈடுபடுபவர்கள் கூடுதலாக சாப்பிடுவார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. எனவே உடல் பெருக்கத்திற்கு இதுவும் கூட ஒரு காரணமாக அமைகிறது.
கல்யாணத்திற்குப் பிறகும், செக்ஸ் உறவைத் தொடங்கிய பிறகும் உடல் பருமன் அதிகரிக்கக் கூடாது என யாராவது விரும்பினால், நிச்சயம் அவர்கள் தொடர்ந்து உடற்பயிற்சிகளையும், உணவுக் கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்தாக வேண்டும். அப்போதுதான் பருமனாவதைக் குறைக்க முடியும் என்கிறார்கள் டாக்டர்கள்.
மார்பகங்கள் அழகாக
பெண்மையின் இலக்கணமான இதில்தான் எத்தனை பெண்களுக்கு எத்தனை விதமான பிரச்சனைகள். பெரும்பாலான பிரச்சனைகளுக்கு அழகு சிகிச்சையில் தீர்வுகள் வந்துவிட்டன இன்று. மார்பக அழகைப் பராமரிக்க சில யோசனைகள்…
இயற்கை முறை ஆலோசனைகள் :
மார்பகங்களை மசாஜ் செய்வதற்கென்று இப்போது ஆயுர்வேத மருந்துக் கடைகளில் மசாஜ் எண்ணெய்கள் கிடைக்கின்றன. அதை வாங்கி மார்பகங்களை மசாஜ் செய்யலாம். அதே மாதிரி வெண்ணெய், தேங்காய் எண்ணெய், நெய் போன்றவற்றில் ஒன்றைக் கொண்டு மார்பகங்களைக் கீழிருந்து மேலாக, வட்ட வடிவத்தில் மசாஜ் செய்தால் மார்பகங்கள் பெருக்கும்.
மார்பகங்கள் பெருக்க வேண்டுமானால் உணவில் கொழுப்பு அதிகமுள்ள வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். பாதாம், முந்திரி, அக்ரூட், பிஸ்தா, பால் போன்றவற்றை நிறைய சாப்பிட வேண்டும். உடல் பெருத்தால் மார்பகங்களும் பெருக்கும்.
வாரம் ஒரு முறை தலை முதல் பாதம் வரை எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து, ஊறிக் குளிக்க வேண்டும். மார்பகங்களுக்கும் மசாஜ் செய்ய வேண்டும்.

மாதுளம் பழம் நிறைய சாப்பிடலாம்.
மாதுளம் பழத் தோலைக் காய வைத்து இடித்து, அத்துடன் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் குழைத்து மார்கங்களின் மேல் தடவி, ஊறிக் குளிக்கலாம். தொடர்ந்து செய்து வர சிறுத்த, தளர்ந்து போன மார்பகங்கள் ஓரளவுக்குப் பெரிதாகும்.
கர்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் குறிப்பிட்ட மாதத்திலிருந்தே வைட்டமின் ஈ எண்ணெயை மார்பகங்களில் தடவி வரலாம். இதனால் பிரசவத்திற்குப் பிறகு மார்பகங்களில் ஏற்படும் தழும்புகளும், வெள்ளைக் கோடுகளும் தவிர்க்கப்படும்

ஆணும் பெண்ணும் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது?


ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்க முடியாது என்று சொல்வதற்கு ஒரு சில காரணங்கள் இருக்கின்றன. ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருந்தால் கூட, அவர்கள் தனியாக இருக்கும் போது அந்த சூழ்நிலை அவர்களது நட்புறவை மாற்றிவிடும். இந்த நட்புறவு கெடுவதற்கு, அவர்களிடம் தோன்றும் காதல் உணர்வு அல்லது காம உணர்வே பெரும்பாலும் காரணமாக அமையும். எப்போது ஒரு ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கும் போது, ஒருவரை ஒருவர் ஈர்க்க பல காரணங்களுள் ஒரு சிலவற்றை அனுபவசாலிகள் கூறுகின்றனர். அவை என்னவென்று படித்துப் பாருங்கள்!!!
1. இருவருக்கும் உள்ள நட்புறவு மாறுவதற்கு முதற்காரணம் பாலினம். ஒரே பாலினத்தில் இருக்கும் நட்பானது கெடுவது சாத்தியமே இல்லை. ஆனால் வேறு வேறு பாலினத்தில் இருவருக்கு உண்டாகும் நட்பானது, இருவருக்கும் இடையில் உண்டாகும், அன்பால் ஏற்படும் ஈர்ப்பை நிறுத்த முடியாது. எப்படியோ, நட்பாக இருக்கும் இரு பாலினத்தவருக்கு உண்டாகும் நட்பானது, மனதில் நட்பையும் மீறி வேறு உலகத்திற்கு சென்றுவிடும்.
2. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் உண்டாகும் நட்புறவு பெரிதும் கெடுவதற்கு உடல் அளவில் உண்டாகும் அன்பும் காரணம். இத்தகைய எண்ணம் வந்த பின்னர் அவர்களால் நீண்ட நாட்கள் கட்டுப்படுத்தி, அதனை மறந்து வாழ வேண்டும் என்று நினைத்தாலும், இருக்க முடியாது. அதிலும் அந்த எண்ணம் வந்துவிட்டால், அவர்கள் தனியாக இருந்தால் அந்த நட்புறவு போய்விடும்.

 3. நட்பாக இருக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும், காதல் என்ற எண்ணம் மனதில் தோன்றி விட்டாலும் போய்விடும். இப்போது பெரும்பாலானோரில் நண்பர்களாக இருந்தவர்களே வாழ்க்கைத்துணை ஆகிறார்கள். ஏனெனில் இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொள்வதால், காதலானது தோன்றுகிறது.
4. நண்பர்களாக இருப்பவர்கள் சில சமயம் விளையாடுவார்கள். அப்படி விளையாட்டுக்காக ‘காதல் செய்கிறேன்’ என்று சொல்லி விளையாடினாலும், அந்த நட்புறவு கெடும். ஏனெனில் அப்போது அவர்களுக்கு மனதில் ஆசை ஏற்படும். பின் அதை மாற்ற நினைத்தாலும் முடியாது, மனதின் ஒரு ஓரத்தில் இருந்து கொண்டு தான் இருக்கும்.
5. நண்பர்களாக இருப்பவர்கள் கண்டிபாக ஒருவர் மீது ஒருவர் பாசம் வைத்திருப்பர். ஆனால் அந்த பாசம் சில நாட்களில் அதிகமாகி, ஒருவர் மீது ஒருவர் ஒரு புரியாத அன்பாகத் தோன்றும். ஆனால் அவர்களில் ஒருவர் மற்றொருவரை, வேறு எவரோடும் நின்று பேசுவதை பார்த்தால் தாங்க முடியாது. இவ்வாறான உணர்வு வந்துவிட்டாலே அது நட்புறவு காதலாக மாறிவிடும்.
மேற்கூறிய இத்தகைய காரணங்களாலே, ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருப்பது கடினம் என்று கூறுகின்றனர் அனுபவசாலிகள்.