Tuesday, May 8, 2012

மக்டொனால்டின் மிகப்பெரிய உணவகம் ஒன்று லண்டன் ஒலிம்பிக் போட்டிக்காக திறப்பு!



உலகின் மிகப் பெரிய மக்டொனால்ட் உணவகம் எதிர்வரும் லண்டன் ஒலிம்பிக் போட்டிக்காக திறக்கப்படுகின்றது.
ஒலிம்பிக் பார்க்கில் திறக்கப்படுகின்ற இவ்வுணவகம் 3000 மீற்றர் பரப்பை கொண்டு இருக்கின்றது இரண்டுக்கும் அதிகமான மாடிகள் இதில் காணப்படுகின்றன. இந்த உணவகம் அமெரிக்காவின் கால் பந்து மைதானத்தின் அரைவாசி நீளத்தை கொண்டு உள்ளது.
இங்கு ஒரே நேரத்தில் 1500 பேர் அமர்ந்து இருந்து சாப்பிட முடியும். 470 இற்கும் அதிகமான ஊழியர்கள் இங்கு கடமை ஆற்ற உள்ளனர்.


மேலாடை மட்டும் அணிந்து கவர்ச்சியில் புரட்சி செய்த கொரிய நடிகை! (படங்கள் இணைப்பு)



கிளாமர் கூடிய விடயம் தான் இது. கண்கொட்டாமல் பாருங்கள் அப்போது தான் தெரியும் அதன் அருமை…
நடிகைகள் கவர்ச்சி காட்டுகின்றமை வழக்கமான விடயமே. ஆயினும் கொரிய நாட்டு நடிகை ஒருவர் இதில் புரட்சி ஒன்றை நடத்தி இருக்கின்றார். நடிகையின் பெயர் Choi-Yeo-Jin.
இவர் கடந்த 30 ஆம் திகதி விசேட ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடத்தி இருந்தார். இந்த மாநாட்டில் பங்கேற்று இருந்த அனைத்து ஊடகவியலாளர்களின் கண்களும் இவர் மீதுதான் மொய்த்துக் கிடந்தன.
இவர் மிகவும் நேர்த்தியான வகையில் மேலாடை அணிந்து இருந்தார். ஆனால் கீழ்ப் பகுதியில் உள்ளாடை மாத்திரம் உடுத்தி இருந்தார். இவரது இக்கோலத்தை காட்டுகின்ற போட்டோக்கள் இணைய உலகத்தை ஒரு கலக்கு கலக்கி வருகின்றன.


இஸ்லாமிய வரலாற்றில் முதன் முறையாக கடலுக்கு அடியில் பள்ளிவாசல்! (படங்கள் இணைப்பு)


இஸ்லாமிய உலகின் வரலாற்று அதிசயங்களே இவையாகும்.
உலகின் கடலுக்கு அடியிலான முதலாவது பள்ளிவாசலை நிர்மாணித்து உள்ளார்கள் என்று சவூதி அரேபிய நாட்டின் தனிப்பட்ட சுழியோடிகள் சிலர் உரிமை கோரி உள்ளார்கள்.
இப்பள்ளிவாசல் நிர்மாணிக்கப்பட்டமையை தொடர்ந்து அங்கு மாலைத் தொழுகையையும் மேற்கொண்டார்கள் என்றும் தெரிவித்து உள்ளார்கள்.
மணல் அடைக்கப்பட்ட பாரிய பிளாஸ்ரிக் குழாய்களை பயன்படுத்தி ஜோர்தான் நாட்டு எல்லைக்கு அருகில் இந்த அடையாள பள்ளிவாசல் கட்டப்பட்டு உள்ளது.
சுழியோடிகளில் ஒருவர் கடலுக்கு அடியில் பள்ளிவாசல் கட்டுகின்ற யோசனையை கடந்த கோடை காலத்தின்போது சகபாடிகளுக்கு முன்வைத்து இருந்தார்.
இந்த யோசனைக்கு உயிர் கொடுக்க சகபாடிகள் தீர்மானித்தார்கள். நிர்மாண பணிகளை பூர்த்தி செய்தபோது மாலை நேர தொழுகைக்கான நேரம் வந்தது.
எனவே அப்பள்ளிவாசலுக்கு உள்ளேயே தொழுகையை மேற்கொண்டார்கள்.

சுய இன்பத்தில் 92 வீதமான பெண்களுக்கு நாட்டம் அதிகம்!


ஆண்கள் மட்டும்தானா சுய இன்பம்… இல்லையில்லை பெண்களும் அதில் ஆண்களை மிஞ்சும் வகையில் முன்னணியில் இருப்பதாக இங்கிலாந்தின் சன் இதழ் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 92 சதவீத பெண்கள் சுய இன்பத்தில் ஆர்வம் காட்டுகின்றனராம்.1953ல் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில் சுய இன்பப் பழக்கம் கொண்ட பெண்களின் எண்ணிக்கை 62 சதவீதமாகவும், 1979ல் எடுக்கப்பட்ட ஆய்வில் அது 74 சதவீதமாகவும் இருந்ததாக கூறும் சன், தற்போது கிட்டத்தட்ட அத்தனை பெண்களுமே சுய இன்பப் பழக்கம் கொண்டவர்களாக இருக்கின்றனர் என்று கூறுகிறது.
சுய இன்பம் நல்லதா கெட்டதா என்பதில் இன்னும் கூட நிறையப் பேருக்கு குழப்பமும், சந்தேகமும், பயமும் இருக்கத்தான் செய்கிறது. அதேசமயம், பலருக்கு இது விட முடியாத பழக்கமாக மாறிப் போய் விடுகிறது. பலர் திருமணமான பிறகும் கூட சுய இன்பப் பழக்கத்தை தொடருகின்றனர். கேட்டால், விட முடியவில்லை என்கின்றனர். ஆனால் அவர்களால் விட முடியாமல் போவதற்கு அதில் ஏற்படும் பிடிப்பு மட்டும் காரணமல்ல, அவர்களின் திருமணத்திற்குப் பிந்தைய செக்ஸ் வாழ்க்கையில் திருப்தி இல்லாமல் போவதும் கூட ஒரு முக்கியக் காரணம் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.
சரி சுய இன்பப் பழக்கம் நல்லதா, கெட்டதா … இதுகுறித்து உளவியலாளர்கள் சொல்வதைக் கேளுங்கள்..
சுய இன்பப் பழக்கம் என்பதை கெட்டது என்றோ நல்லது என்றோ கூற முடியாது. இயற்கையான வாய்ப்புக்கு வழியில்லாத போதுதான் சுய இன்பப் பழக்கத்தை நாடுகின்றனர். அதில் அவர்களுக்கு மன திருப்தியும், சந்தோஷமும் ஏற்படுகிறது. அதேசமயம், இந்தப் பழக்கம் தொடர்கதையானால் அது மன ரீதியான பல பிரச்சினைகளுக்கு வித்திடலாம். தன்னம்பிக்கை குறையும். நம்மால் இயற்கையாக செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள முடியாது என்ற சந்தேகம் வந்து விடும். எப்போதும் ஒரு விதமான குற்ற உணர்ச்சியுடன் இருக்க நேரிடும் என்கிறார்கள் அவர்கள்.
ஆனால் சுய இன்பப் பழக்கத்தில் ஈடுபட்டிருப்போரோ அதை நிராகரிக்கின்றனர். நிச்சயம், குற்ற உணர்ச்சி எங்களுக்கு ஏற்படுவதில்லை. மாறாக, மன பாரம் குறைகிறது, உற்சாகத்துடன் அடுத்த வேலையைப் பார்க்க முடிகிறது என்கிறார்கள் அவர்கள்.
பெண்களைப் பொறுத்தவரை செக்ஸ் உறவின்போது பலமுறை உச்ச நிலை ஏற்படுவது இயல்பானது. ஆனால் ஆணோ, உறவை சுருக்க முடித்துக் கொள்வதில் நம்பர் ஒன். எனவே பெரும்பாலான பெண்களுக்கு உறவில் பெரும்பாலும் திருப்தி ஏற்படுவதில்லை. இதனால் அவர்களுக்கு சுய இன்பம்தான் உற்ற துணையாக இருக்கிறது என்கிறார்கள் மன நல மருத்துவர்கள்.
சுய இன்பப் பழக்கத்தால் சில உடல் ரீதியான நன்மைகளும் கூட ஏற்படுகின்றன என்கிறார்கள் டாக்டர்கள். அதாவது தொடர்ச்சியாக சுய இன்பம் அனுபவிக்கும் பழக்கம் உள்ள ஆண்களுக்கு புராஸ்டேட் கேன்சர் வரும் வாய்ப்பு குறைவாக இருக்கிறதாம்.
செக்ஸ் ரீதியாக உடல் கிளர்ச்சி அடையும் பெண்களுக்கு, அதற்கான வாய்ப்பு கிடைக்காத போது பெரும் மன உளைச்சல் ஏற்படுகிறது. அதற்காக தூக்க மாத்திரை உள்ளிட்டவற்றை நாடுவதை விட சுய இன்பப் பழக்கம் அவர்களை நிம்மதிப்படுத்த உதவுகிறது. எனவே அதை தவறு என்று கூற முடியாது என்கிறார்கள் மன நல நிபுணர்கள்.
சுய இன்பப் பழக்கம் கொண்ட பெண்கள் செக்ஸ் உறவின்போது சிறப்பாக செயல்படுவார்கள் என்று ஒரு புள்ளிவிவரத் தகவல் கூறுகிறது. இவர்களுக்கு தங்களது உறுப்புகள் குறித்த விழிப்புணர்வும், அனுபவமும் அதிகமாக இருக்கும். இதனால் இயற்கையான செக்ஸ் உறவின்போது இவர்கள் சிறப்பாக செயல்பட்டு தங்களது பார்ட்னர்களை மகிழ்விப்பார்கள் என்கிறது அந்த புள்ளிவிவரம். மேலும் தங்களுக்கு எத்தகைய தொடுதல், உணர்ச்சியைத் தூண்டும் என்பதையும் இவர்கள் அறிந்து வைத்திருப்பதால் அதை பார்ட்னர்களிடம் கேட்டுப் பெறுவது இவர்களுக்கு எளிதாகிறதாம்.
மருத்துவ நிபுணர்களும் சரி, உளவியலாளர்களும், சுய இன்பம் குறித்து பொதுவாக கூறும் ஒரு ஆறுதலான விஷயம் – சுய இன்பப் பழக்கத்தால் பால்வினை நோய்கள் வராது, விந்தனு உற்பத்தி பாதிக்காது, பெண் பிறப்புறுப்பில் பாதிப்பு ஏற்படாது என்பதே.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள்… அதை மனதில் வைத்துக் கொண்டு எதைச் செய்தாலும் சரிதான்!

அக்குளுக்குள் உரோமம் வளர்ப்பதன் மூலம் பிரபலமான பெண்! (, பட இணைப்பு)

இந்தப் பெண்ணின் வித்தியாசமான செய்கைகளைப் பாருங்கள்.
அக்குள்கள், கால்கள் ஆகியவற்றில் வளர்ந்து இருக்கின்ற அடர்ந்த உரோமங்களை கடந்த 18 மாதங்களாக சிரைக்காமல் வைத்திருக்கின்றமை மூலம் பிரபலம் ஆகி உள்ளார் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஊடகவியலாளர் Emer O’Toole.
இவருக்கு வயது 28. உடலில் வளர்கின்ற உரோமங்களை சிரைக்கின்றமை மூலமே பெண்கள் அழகாகவும், எடுப்பாகவும், கவர்ச்சியாகவும் காட்சி கொடுப்பார்கள் என்பது சமுதாயத்தின் கண்ணோட்டமாக உள்ளது.
இதை உடைத்து எறிகின்றமைக்காக அக்குள்கள், கால்கள் ஆகியவற்றில் உரோமங்கள் வளர்வதை அனுமதித்து உள்ளார். பெண்களின் உடலில் வளர்கின்ற உரோமங்கள் கட்டாயம் சிரைக்கப்பட்டே ஆக வேண்டும் என்கிற சமுதாயத்தின் எதிர்பார்ப்புக்கு எதிராக கிளம்பி இருக்கின்றார்.
இந்த உலகத்தில் அக்குள்கள், கால்கள் ஆகியவற்றில் உரோமங்களை சிரைக்காமல் இருக்கின்ற பெண் இவர் ஒருவர் மாத்திரமே என்று கூறி விடவே முடியாது. ஆனால் நவீன சமூகத்தில் பெண் ஒருவர் உடலில் உள்ள உரோமங்களை சிரைக்காமல் இருக்கின்றார் என்பது மிகவும் அசாதாரண செயல்.
இவர் முதன்முதல் 14 ஆவது வயதில் உடல் உரோமங்களை சிரைத்து இருக்கின்றார். சமுதாயத்தின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கின்றமைக்காகவே இச்சிரைப்பை மேற்கொள்ள வேண்டி இருந்திருக்கின்றது.
இந்நிலையில் பெண்களின் உடலில் உள்ள உரோமங்களுக்கும் அழகுக்கும் என்ன சம்பந்தம்? என்று ஆராய தொடங்கினார். சமுதாயத்தின் எதிர்பார்ப்பை சவாலாக்கி கடந்த 18 மாதங்களாக அக்குள்கள், கால்கள் ஆகியவற்றில் உள்ள உரோமங்களை சிரைக்காமல் இருந்து வருகின்றார்.
இதனால் இவர் ஆரம்பத்தில் தர்ம சங்கடங்களுக்கு உள்ளான சந்தர்ப்பங்கள் ஏராளம். இவர் பொது இடங்களில் கைகளை உயர்த்த நேர்கின்றபோது ஆட்கள் பலரும் இவரின் அக்குள்களை வைத்த கண் வாங்காமல் வெறித்துப் பார்ப்பார்கள். ஆயினும் இவ்வாறான சந்தர்ப்பங்களை எதிர்கொள்கின்றமைக்கான தைரியம், ஆளுமை, துணிவு ஆகியவற்றை காலப் போக்கில் வளர்த்துக் கொண்டார்.

அக்குள்கள், கால்கள் போன்றவற்றில் வளர்ந்து இருக்கின்ற உரோமங்கள் தற்போது இவருக்கு எந்த அசௌகரியத்தையும் கொடுக்கவில்லை. இவருடைய உரோமங்கள் நிறைந்த அக்குள்கள், கால்கள் பெரும்பாலான ஆண்களுக்கு ஒரு பொருட்டே அல்ல என்றும் ஏனென்றால் அநேக ஆண்கள் உடல் பாகங்களில் உரோமங்களை கொண்டிருக்கின்றார்கள் என்றும் பெண்கள்தான் வித்தியாசமாக பார்க்கின்றனர் என்றும் சொல்கின்றார்.
எப்பவோ ஒரு நாள் இந்த உரோமங்களை சிரைக்க வேண்டி இருக்கும் என்பதை ஒப்புக் கொள்கின்ற இவர் எவருடைய நிர்ப்பந்தத்துக்காகவும் இச்சிரைப்பை ஒருபோதும் மேற்கொள்ள மாட்டார் என்று திட்டவட்டமாக கூறுகின்றார். இவர் Itv இன் மோர்னிங் ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்று பேட்டி வழங்கியபோதே இவற்றை எல்லாம் தெரிவித்தார்.
அத்துடன் அக்குள்கள், கால்கள் ஆகியவற்றின் உரோமங்களை சிறிதும் சங்கடப்படாமல் தொலைக்காட்சி நேயர்களுக்கு காண்பித்தார். ஆயினும் இவர் உரோமங்களை சிரைத்தே ஆக வேண்டும் என்று நேயர்களில் 80 சதவீதமானவர்கள் அபிப்பிராயம் தெரிவித்து உள்ளார்கள்.