Monday, February 4, 2013

எனக்கு எந்த செலவும் இல்லை -பில் கேட்ஸ்


FILE
அமெரிக்க செல்வந்தரான பில் கேட்ஸ் தன்னிடம் இருக்கும் பணத்தை செலவழிக்கும் அளவிற்கு தனக்கு எந்த தேவையும் இல்லை என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கு சாப்பிட உணவும், உடுத்த உடையும் இருக்கிறது. இந்த அத்தியாவசிய தேவையை மீறி என்னிடம் இருக்கும் பணத்தை செலவு செய்யும் அளவிற்கு வேறு எந்த தேவையும் இல்லை என்றார்.

இதுவரையில் பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா சேர்ந்து கிட்டத்தட்ட 28 பில்லியன் டாலர்களை அவர்களின் அறக்கட்டளைகள் மூலமாக ஆதரவற்ற மக்களுக்கு அளித்துள்ளனர்.

உலக செல்வந்தர்களின் பட்டியலில் நிரந்த இடம்பிடித்த அமெரிக்க தொழிலதிபரும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவருமான வில்லியம் ஹென்றி பில் கேட்ஸ், உலகளவில் போலியோவை அடியோடு ஒழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

நைஜீரியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இன்னும் போலியோ நோய் பரவலாக இருப்பதாகவும், இதனை முற்றிலுமாக களையவே இந்த முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறிய பில் கேட்ஸ், ஒரு அளவிற்கு மேல் செல்வம் இருந்தால் அதனை ஆதரவற்ற ஏழை எளியோர்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் பயன்படுத்த வேண்டுமென்றார்.

65 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள சொத்துகளுக்கு அதிபதியான பில் கேட்ஸ் ஏற்கனவே எய்ட்ஸ், காசநோய், மலேரியா போன்ற நோய்களை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

Saturday, February 2, 2013

கடற்கரையில் நடந்து சென்றவருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்




இங்கிலாந்து நாட்டை சேர்ந்த நபருக்கு கடற்கரையில் ஒதிங்கிய திமிங்கலத்தின் "வாமிட்" முலம் ஜாக்பாட் அடித்துள்ளது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் கென் வில் மென். 

வழக்கம் போல் தனது நாயுடன் கடற்கரையில் வாக்கிங் சென்றுகொண்டு இருத்தபோது, கரை ஓரம் ஒதுங்கி கிடந்த தேங்காய் பருமன் கொண்ட ஒரு பொருளை நாய் மோப்பம் பிடித்தவாறே நின்றது. முதலில் கல் போன்று தோன்றியதால் அதை பொருட்படுத்தாமல் சிறிது தூரம் நடக்க தொடங்கினார். 

ஆனால் நாய் அதை விட்ட பாடில்லை. அதனால் அந்த பொருள் என்ன என்று பார்க்க நினைத்த கென் வில் மென், அதை கையில் எடுத்து மோந்து பார்த்த பொழுது, துர்நாற்றம் மற்றும் நறுமணம் கலந்து வீசவே, அதை தனது வீட்டிற்கு எடுத்து சென்றார். பின்னர்தான் அது திமிங்கலத்தின் "வாமிட்" என தெரியவந்தது. 

சில நேரங்களில் திமிங்கலம் தான் உட்கொண்ட உணவை வயிற்று கோளாறு காரணமாக கக்கிவிடுகுறது. அந்த குளுகுளு "வாமிட்" பல மாதங்கள் கடல் நீரில் மிதந்தவாறு இருக்கும். மேலும் அதன் மீது வெயில் பட பட பறை போன்று இறுகி பின்பு கடற்கரையில் ஒதுங்குகிறது. இது தான் சென்ட் ("வாசனை திரவம்") தயாரிக்க பயன்படும் மிக முக்கியமான மூலப்பொருள். மிக அபூர்வமாக அதுவும் இயற்கையாக கிடைக்கும் இதன் விலை மிக மிக அதிகம். இவரிடம் உள்ள இந்த திமிங்கல வாமிட்டை ஏற்கனவே 50,000 ஈரோவுக்கு (36 லட்சத்து 31 ஆயிரத்து 20 இந்திய ரூபாய்) விலை தர முன்வந்துள்ளார். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஒருவர். ஆனால் திமிங்கலத்தின் "வாமிட்டை பரிசோதனை செய்து அதன் உண்மை விலையை கண்டு அறிந்த பின்னர் விலைக்கு விற்க முடிவு செய்துள்ளார். கென் வில் மென். திமிங்கலத்தின் "வாமிட்" மூலம் இவருக்கு அடித்த லக்கை பாருங்களேன்!

Sunday, January 27, 2013

உங்களிடம் இருந்து Facebook எவ்வளவு சம்பாதிக்கிறது தெரியுமா?



நம்மில் சிலர் காலை முதல் இரவு வரை (மறுநாள் காலை வரை ) பேஸ்புக்கிலேயே மூழ்கி கிடக்கிறோம்.
கடந்த மாதம் பங்கு சந்தையில் கால் பதித்த பேஸ்புக் தனது வருமானத்தில் சில ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அத்தோடு Privacy விசயங்களிலும் கொஞ்சம் மாற்றங்கள் செய்துள்ளது.
இந்த நிலையில் பேஸ்புக் பயனரிடம் இருந்து எவ்வளவு சம்பாதிக்கிறது என்று அறிவோம் வாருங்கள்.
1. முதலில் https://goprivate.abine.com/ என்ற இந்த தளத்திற்கு செல்லவும்.
2. கீழே உள்ளது போல சில கேள்விகள் இருக்கும் அவற்றுக்கு பதிலளிக்கவும்.
3. இப்போது உங்கள் மூலம் பேஸ்புக் எவ்வளவு சம்பாதிக்கிறது என்று வரும்.
இதில் 116 $ என்பது என் கணக்கின் மூலம் பேஸ்புக் சம்பாதிப்பது. இது பேஸ்புக்கின் சந்தை மதிப்பை பொறுத்து மாறும்.
அருகில் உள்ள 31.54 $ என்பது கடந்த வார சந்தை மதிப்பு.

Wednesday, January 23, 2013

உங்கள் கம்ப்யூட்டரை வேகப்படுத்த சில எளிய வழிகள்




நம் வீடு அல்லது அலுவலகங்களில் கம்ப்யூட்டரை பயன்படுத்துகிறோம். பெரும்பாலான நேரங்களில் கம்ப்யூட்ரானது வேலை செய்யாது. அப்படியே நின்றுவிடும். இது எதனால் தெரியுமா?

கம்ப்யூட்டருக்கு அதிகப்படியான வேலை தருவதாலோ அல்லது கேம்கள் விளையாடுவதாலோ கூட ஏற்படலாம். வைரஸ்கள் கூட உங்கள் கணினியின் வேகத்தை குறைத்திருக்கலாம்.

கணினியானது வேகமாக இல்லையென்றாலே நம்மால் வேலைகளை எளிதில் முடிக்கவே முடியாது. அல்லது ‘கேம்கள்’ கூட நிம்மதியாகவே விளையாட முடியாது. இதற்கு என்னதான் வழி?!

உங்கள் கம்ப்யூட்டரை வேகமாக்கவேண்டும். அதற்கு எளிதான பல வழிகள் உள்ளன. எப்படி உங்கள் கணினியை வேகமாக்க அடுத்தடுத்த பக்கங்களில் தகவல்கள்.
தொடங்குவதை வேகமாக்குங்கள்:

கம்ப்யூட்டரை ஆன் செய்தால் சிறிது நேரத்திற்குப்பிறகு தான் கணினியானது தொடங்கப்படும். இதை ‘ஸ்டார்ட்-அப்’ என சொல்கிறார்கள். இந்த  ‘ஸ்டார்ட்-அப்பானது’ விண்டோஸ் 8 இயங்குதளத்தில் இல்லை என்பதை நினைவில்கொள்க.

இந்த  ‘ஸ்டார்ட்-அப்’களில்  உள்ள தானாக இயங்கும் சில அப்ளிகேசன்களை நீக்குங்கள். இதை செய்வதற்கு “msconfig” என ரன்னில் தட்டச்சு செய்து, வரும் திரையில் ‘ஸ்டார்ட்-அப்’ என்பதை தெரிவுசெய்யுங்கள்.

இதில் எந்தெந்த அப்ளிகேசன்கள் இருக்கவேண்டும், எவற்றையெல்லாம் நீக்கவேண்டும் என்பதை முடிவு செய்யுங்கள். இதை சரிசெய்தாலே உங்கள் கணினியானது சற்றே வேகமாகும்.

கணினியை ‘சுத்தம்’ செய்யுங்கள்:

கணினியை சுத்தம் செய்வதும் வீட்டை சுத்தம் செய்வதைப்போன்றதே. அதாவது தேவையில்லாத குப்பைகளை நீக்குவோமல்லவா? அதேபோல கணினியில் உள்ள தேவையற்ற குப்பை தரவுகளையும் நீக்கவேண்டும்.

இங்கே குப்பைகள் எனப்படுவது,
  1. டெம்பரரி தரவுகள்,
  2. சேமிக்கப்பட்ட இணைய பக்கங்கள்,
  3. கணினியில் படியும் இன்டர்நெட் தரவுகள்,
  4. கடைசியாக உபயோகித்த கணினியின் இடங்கள்,

இவைகளை நீக்கினாலே உங்கள் கணினியானது மேலும் அதிகமான வேகத்தில் செயல்படும். இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக நீக்குவது சற்றே கடினம்.

மேற்ச்சொன்னவற்றை ஒரே அழுததில் நீக்கவேண்டுமா? அப்படியானால் சிசிகிளீனர் http://www.piriform.com/ccleanerஎன்ற அப்ளிகேசன் பயன்படுகிறது.


அளவை குறையுங்கள்:

நமது கணினியில் பயன்படுத்தும் சாதாரண அப்ளிகேசன்களின் எண்ணிக்கையையும், ‘சைசையும்’ குறைக்கவேண்டும். உதாரணமாக திரைப்படங்கள் பார்க்க நீங்கள் ‘விண்டோஸ் மீடியா பிளேயர்’ பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதற்கு மாற்றாக VLC  மீடியா பிளேயர் பயன்படுத்திப்பாருங்கள்.

ஏனினில் விண்டோஸ் மீடியா பிளேயரானது அதிக அளவு ரேம் பகுதியை பயன்படுத்தும். இதனால் கணினியின் வேகம் குறையும்.

அதேபோல நீங்கள் டாகுமென்ட்களை படிப்பதற்காக ‘மைக்ரோசாப்ட் ஆபீஸ்’ பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதற்கு மாற்றாக ‘ஓபன் சோர்ஸ்’ அப்ளிகேசன்கள் சிலவற்றை பயன்படுத்தினால் கண்டிப்பாக உங்கள் கணினியானது வேகம்பெரும்.

இதற்கான ஓபன் சோர்ஸ் அப்ளிகேசன்கள் சில,
ஃபாக்ஸ் இட் ரீடர்,
அபிவோர்ட்,
ஓபன் ஆபீஸ்,


ஆட்டோமேட்டிக் அப்டேட்ஸ்:

நமது கணினி அவ்வப்போது அதை அப்டேட் செய்யவா? இதை அப்டேட் செய்யவா? என கேட்டுக்கொண்டே இருக்கும். நாமும் அதை ‘நாளை’தள்ளிவைத்து விடுவோம். இது பெரிய வேலைகூட இல்லை. நாம் இப்படிச்செய்வதால் கணினியின் பாதுகாப்பு கேள்விக்குறியாவதுடன் இதன் வேகமும் குறையும்.

எனவே my computer -> properties -> Automatic updates என்றவரிசையில் தேர்வுசெய்து உடனுக்குடன் உங்கள் கணினியை அப்டேட் செய்யுங்கள். அல்லது அப்டேட் செக்கர் என்ற அப்ளிகேஷனை உங்கள் கணினியில் நிறுவினால் அதுவே அப்டேட் செய்துகொள்ளும்.

கண்டிப்பாக இந்த வழிமுறைகள் அனைத்தையும் பின்பற்றினால் உங்களது கணினியானது வேகமாக செயல்பட ஆரம்பிக்கும். வித்யாசத்தை நீங்களே உணருங்கள் நண்பர்களே!

Tuesday, January 22, 2013

டெங்கு காய்ச்சல்: தகவலும் எச்சரிக்கையும்!




 டெங்கு காய்ச்சல் (Dengue fever) அல்லது எலும்பு முறிவுக் காய்ச்சல் மனிதர்களிடையே டெங்கு வைரசால்ஏற்படும் ஒரு அயனமண்டலத் தொற்றுநோய் ஆகும், இது கொசுக்களால் பரவுகிறது. இந்நோய் வந்தால் கடும்காய்ச்சலுடன் கடுமையான மூட்டு வலி, தசை வலி, தலைவலி, தோல் நமைச்சல் போன்ற உணர்குறிகள்ஏற்படும். 

தொற்றுநோய் தீவிரமடைந்த நிலையில் உயிருக்குத் தீங்கு விளைவிக்கும் டெங்குகுருதிப்போக்குக் காய்ச்சல் (கடுமையான குருதிப்போக்கை ஏற்படுத்தும்) மற்றும் டெங்கு அதிர்ச்சிக் கூட்டறிகுறி என்பன உண்டாகும். இந்நோய் 200 ஆண்டுகளுக்கு முன்பே கண்டறியப்பட்டுள்ளது. Aedes எனப்படும் பேரினத்தைச் சேர்ந்த பல இனங்கள் இந்த நோயின் நோய்க்காவியாகும். தீ நுண்மத்தால் பாதிக்கப்பட்ட ஏடிசு (Aedes) வகைக் கொசுக்களால் குறிப்பாக ஏடிசு எகிப்தியால், இந்நோய் பரவுகிறது, ஆனால் இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு நேரடித்தொடுகை மூலம் பரவுவதில்லை. 

நோய் பாதித்தவரைக் கடித்த (குத்திய) கொசு மற்றொருவரை கடிப்பதன் மூலம் இந்நோய் பரவுகிறது, சில சந்தர்ப்பங்களில் குருதி மாற்றீடு மூலமும் பரவலாம். இக்கொசுக்கள் பொதுவாக பகலிலேயே மனிதர்களைக் கடிக்கின்றன. பொதுவாக விடியற்காலையிலும் பிற்பகலிலும் இக்கொசு கடிக்கின்றது. 

இது உயிர் ஆபத்துகளை விளைவிக்க கூடிய ஒரு கொடிய நோயாகும். இது உடலை மிகவும் வருத்தும் நோயாகையால் என்பை முறிக்கும் காய்ச்சல் (breakbone fever) எனவும் அழைக்கப்படும். இந்த நோய் பெரும்பாலும் வறண்ட, உலர் வெப்ப வலயங்களில் பெருகும்.

நோயின் அறிகுறிகள் 

தீவிர கண்வலி (கண்ணிற்குப் பின்) கடும் தலைவலி
கடுமையான மூட்டு மற்றும் தசை வலிவாந்திதோல் சிவத்தல் (rash)வெள்ளை அணுக்கள்,
இரத்தவட்டுகள் குறைதல்மிதமான இரத்தப்போக்கு வெளிப்பாடு (மூக்கில் இரத்தப்போக்கு,
இரத்தப்புள்ளிகள்அடி முட்டிகளில் பொதுவாகவும்,
சிலருக்கு உடல் முழுதுமே அரிப்பு ஏற்படலாம்
அறிகுறிகள் இல்லாத காய்ச்சல் நிலைஆரம்ப நிலை டெங்கிக் காய்ச்சல் நிலை
இரத்தப் பெருக்குடன் கூடிய டெங்கிக் காய்ச்சல் நிலை 
வீட்டு மருத்துவம் கை கொடுக்கும்! 

டெங்கு காய்ச்சல் எம்மாத்திரம் என்று எகத்தாளமாய் நினைப்பவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி இந்த காய்ச்சலுக்கு தடுப்பு ஊசியோ தடுப்பு மருந்தோ கிடையாது என்பதுதான். அதிர்ச்சியாகிவிட்டீர்களா? வந்த பின் தவிப்பதை விட டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பதே புத்திசாலித்தனம் என்கின்றனர் மருத்துவர்கள். 

தண்ணீர் தேங்க விடாதீங்க 
மழைக்காலங்களில்தான் டெங்கு காய்ச்சல் வரும் என்ற நிலை மாறி கோடையிலும் வந்து மக்களை வாட்டி வதைக்கிறது டெங்கு காய்ச்சல். இதற்கு காரணம் கோடையிலும் நல்ல மழை பெய்து ஆங்காங்கே தண்ணீர் தேங்குவதுதான். வீட்டை சுற்றி தேங்கியிருக்கும் தண்ணீரில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் இந்த கொசு பகல்நேரத்தில்தான் கடிக்கும். உடல்வலி, முதுகுவலி, காய்ச்சல், திடீர் குளிருடன் காய்ச்சல், உடலில் சிவப்பு புள்ளிகள் போன்றவை இந்த காய்ச்சலுக்கான அறிகுறிகளாகும். 
கொசு உற்பத்தியாவதை தடுக்க வீட்டைச்சுற்றி தண்ணீர் தேங்காமல் தடுக்க வேண்டும் என்கின்றனர் சுகாதாரத்துறையினர். கொசு கடிக்காதவகையில் நன்கு மூடப்பட்ட பருத்தி ஆடைகளை அணியுங்கள். குடிநீரை நன்கு கொதிக்க வைத்து ஆறவைத்து குடிக்கவேண்டும் என்பதும் மருத்துவர்களின் அறிவுரையாகும். 

நீர்ச்சத்து தேவை 
டெங்கு காய்ச்சல் தாக்கியதற்கான அறிகுறி தென்பட்டால் தாமதமின்றி மருத்துவரை அணுகி ரத்தப் பரிசோதனை செய்து கொள்ளவும். டெங்கு தாக்கினால் உடலின் நீர்ச்சத்தை குறைத்து விடும். ரத்தத்தட்டுகளில் (பிளேட்லெட்ஸ்) எண்ணிக்கை குறையும். தொடக்கத்திலேயே காய்ச்சலை கவனிக்காமல் விட்டால் நுரையீரல், வயிறு, சிறுநீர்ப்பாதை என பல இடங்களில் ரத்தக்கசிவு ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாகிவிடும் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். 

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் எந்த நோய்க்கும் குட் பை சொல்லி விடலாம். டெங்கு தாக்கியதனால் உடலில் நீர் இழப்பு குறையாமல் இருக்க இளநீர், கஞ்சி, உப்பு கரைசல் போன்ற நீர்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதும் மருத்துவர்களின் அறிவுரையாகும். காய்ச்சல் அறிகுறி தென்பட்ட உடன் சுயமாக மாத்திரைகளை வாங்கி உட்கொள்ளக்கூடாது என்கின்றனர் மருத்துவர்கள். 

ஆரஞ்சு ஜூஸ் 


பன்றிக்காய்ச்சலைப் போல இருமல், தும்மல் மூலம் பரவாது என்பதுதான் ஒரே ஆறுதலான விசயம். டெங்கு காய்ச்சல் தாக்கியவர்கள் ஆரஞ்சு ஜூஸ் குடிக்கலாம். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடல் சோர்வடையாமல் தடுக்கும். 

பப்பாளி இலையை அரைத்து நன்கு சாறு எடுத்து தினசரி இரண்டு டீ ஸ்பூன் வீதம் பருகலாம். அதேபோல் மூலிகை டீ சாப்பிடலாம். பசிக்கும் போது துளசி, இஞ்சி, கொத்தமல்லி, கருப்பட்டி கலந்த மூலிகை டீ தயாரித்து அதில் ப்ரெட், அல்லது பிஸ்கட் தொட்டு சாப்பிடலாம். பசி அடங்கும் டெங்கு காய்ச்சலும் கட்டுப்படும். 

டெங்கு காய்ச்சல் என்றால் என்ன? (Dengue Fever) 
அறிகுறிகள் 


டெங்கு காய்ச்சல் வைரஸ் கிருமியினால் உண்டாகும் நோயாகும். சில சமயங்களில் நோயின் போக்கு தீவிரமாகும் போது மூக்கு, பல்ஈறு மற்றும் தோலிலிருந்து இரத்தம் வடிதல் உண்டாகும். காபி கொட்டை நிறத்தில் வாந்தியோ அல்லது கறுப்பு நிறத்தில் மலமோ வெளியேறும். இதிலிருந்து வயிற்றுக்குடலினுள் இரத்தம் வடிகிறது எனக் கண்டு கொள்ளலாம். 
டெங்கு காய்ச்சல் மற்றும் இரத்தம் வடிதல் இரண்டுமிருப்பதை டெங்கு இரத்தக்கசிவு காய்ச்சல் என்கிறோம். சில சமயம் நோயாளிக்கு டெங்கு ஷாக் வரலாம். 

நான் எப்போது டெங்கு காய்ச்சல்தானா என சந்தேகிக்க வேண்டும்? 
திடீரென்று காய்ச்சல் வரும்போது (103f-105f) காய்ச்சலுடன் தலைவலி, கண்களில் பின்புறம் வலி, உடம்பு வலி, தோல் சினைப்பு மற்றும் வாந்தி வருதல், வயிறு வலி, சிறு குழந்தைகளுக்கு வலிப்பும் வரலாம். காய்ச்சல் 5 நாட்களுக்கு மேல் இருத்தல் திடீர் திடீரென்று காய்ச்சல் வருதல். காய்ச்சல் வந்தபின் மிகவும் அசதியாக இருத்தல் காய்ச்சலில் நிறைய வகைகள் உள்ளன. எப்போது டெங்கு காய்ச்சல் என சந்தேகிக்க வேண்டும்? 
அறிகுறிகள் 
கண்களில் பின்புறம் வலி 
தசை வலி 
மூட்டு வலி 
தோலில் சினைப்பு 
வயிறு வலி, வாந்தி 
டெங்கு காய்ச்சல் மூட்டுகளையும் பாதிக்கின்ற காரணத்தால் அதனை எலும்பு முறிவு காய்ச்சல் எனவும் கூறலாம். 
டெங்கு காய்ச்சல் நேரிடக் கூடிய நோயாளிக்கும் டெங்கு காய்ச்சல் என சந்தேகிக்கிற நோயாளிக்கும் உள்ள வேறுபாடு என்ன? 
இரத்த அடர்த்தியின் அளவு டெங்கு காய்ச்சல் உள்ள நோயாளிக்கு குறைவாகவே இருக்கும். நோயாளிக்கு இரத்த சோகை இருந்தால் அவை வேறுபடும். 

டெங்கு காய்ச்சல் வந்த நோயாளிக்கு மீண்டும் அந்த நோய் வர வாய்ப்புகள் உள்ளதா? 


வர வாய்ப்புகள் உள்ளது. ஏனெனில் அந்த வைரஸ் கிருமியை சார்ந்த 4 வகை நோய்க்கிருமிகள் உள்ளன. எனவே ஒரு வகை நோய்க்கிருமியினால் உண்டாகக் கூடிய டெங்கு காய்ச்சல் மறுமுறை வேறு வகை நோய்க்கிருமியினால் உண்டாகும். எனவே ஒரு மனிதனுக்கு வாழ்நாளில் ஒருமுறைக்கும் மேல் டெங்கு காய்ச்சல் வரலாம். 

டெங்கு காய்ச்சலை உறுதிப்படுத்த ஏதாவது சோதனைகள் உள்ளதா? 


நேரிடையாகவோ (அ) மறைமுகமாகவோ ஆய்வுக் கூடங்களில் டெங்கு காய்ச்சலை உறுதிப்படுத்த முடியும். இந்த ஆய்வுகள் டெங்கு தொற்று நோயை உறுதிப்படுத்துகின்றன. மேலும் சில ஆய்வுகளை உபயோகப்படுத்தியும் டெங்கு காய்ச்சலை உறுதி செய்யலாம். ஆனால் அந்த ஆய்வுக்கூடங்கள் முறையான அனுமதி பெற்ற ஆய்வுக் கூடங்களாக இருக்க வேண்டும். 

டெங்கு காய்ச்சல் எவ்வாறு உண்டாகிறது. 
அறிகுறிகள் 


கொசுக்கடியின் மூலம் டெங்கு காய்ச்சல் பரவுகின்றது. எடீஸ் எஜிப்டி வகை கொசுக்கள் இந்த வகை கொசுக்கள் ஒருவித வெள்ளைநிற உடம்பு மற்றும் கால்களுடன் இருக்கும். இதனை ஒரு பாமரன் கூட கண்டுபிடிக்க இயலும். இந்த வகை கொசுக்கள் நீரில் வசிப்பவை. மற்றும் 100-200 மீ வரை, பறக்கும் தன்மை கொண்டவை. இந்த கொசு, டெங்கு காய்ச்சல் உள்ள நோயாளியின் இரத்தம் உறிஞ்சும்போது டெங்கு வைரஸ் கிருமியினையும் பெற்றுவிடுகிறது. 

டெங்கு காய்ச்சல் ஒரு மனிதரிடமிருந்து மற்றொரு மனிதனுக்கு பரவுமா? 


இல்லை. கொசுக்கடியின் மூலமாக மட்டுமே டெங்கு நோய்க்கிருமி பரவுகின்றது. 

நோய் தொற்றியபின் டெங்கு காய்ச்சல் எவ்வாறு உண்டாகிறது? நோய்க்கிருமி தொற்றியவுடன் அவை நிணநீர் நாளங்களில் பெருக்கம் அடைகின்றன. போதிய எண்ணிக்கையில் பெருக்கம் அடைந்தவுடன் அறிகுறிகளை தோற்றுவிக்கின்றன. இது 4 முதல் 6 நாட்களில் அறிகுறிகள் உண்டாகின்றன. 

டெங்கு காய்ச்சல் உள்ள ஒருவர் நோயாளிபோல் தோற்றமளிக்காமல் இருப்பாரா? 


ஆம். சிலருக்கு இது எவ்வித அறிகுறியையும் உண்டாக்குவதில்லை. எல்லோருக்கும் அல்லாமல் 4 முதல் 5 பேருக்கு அறிகுறிகள் இருப்பதில்லை. மேலும் சிலருக்கு சில அறிகுறிகள் மட்டுமே இருக்கும். 

டெங்கு காய்ச்சலை வீட்டிலேயே குணப்படுத்த முடியுமா? 


முடியும். மருத்துவரிடம் ஆலோசித்து வீட்டிலேயே நன்கு ஓய்வெடுத்து நீராகாரங்களும், சுத்தமான உணவுகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். நீராகாரங்கள் நிறைய எடுப்பதன் மூலம் டெங்கு இரத்தக்கசிவு நோயையும் தவிர்க்க இயலும். மேலும் அபாய அறிகுறிகளை கண்டவுடன் மருத்துவரிடம் கொண்டு போக வேண்டும். 

டெங்கு காய்ச்சலுக்கான மருத்துவ ஆலோசனை என்ன? இதனை குணப்படுத்த முடியுமா? 

டெங்கு காய்ச்சலுக்கென தனியாக மருத்துவ சிகிச்சை இல்லை. தொற்று நோய் எதிர்ப்பு மருந்துகள் இதற்கு உதவாது. பாரசிட்டமால் மருந்து காய்ச்சலுக்கும், மூட்டுவலிக்கும் மட்டுமே பயன்படுத்த முடியும். ஆஸ்பிரின், பூரூபென் போன்ற மருந்துகளை தவிர்ப்பதன் மூலம் இரத்தக்கசிவினை தடுக்க இயலும். எனவே மருத்துவர்கள் நோயாளிக்கு மருந்துகளை கொடுக்கும்போது கவனமாக இருத்தல் வேண்டும். 

டெங்கு காய்ச்சலினால் அபாயங்கள் உண்டா? 


அறிகுறிகள் டெங்கு காய்ச்சலினால் இரத்த குழாய்களுக்கு தீங்கு ஏற்படும். இரத்தக்கசிவு. இரத்த அடர்த்தி குறைதல் முக்கியமான உறுப்புகளில் இரத்தம் வடிதல் ஏற்படும். 

டெங்கு காய்ச்சலினால் இறப்பு உண்டாகுமா? 


டெங்கு காய்ச்சலினை சரியான சிகிச்சையின் மூலம் குணப்படுத்த முடியும். ஆனால் முறையான சிகிச்சை கொடுக்கவில்லையென்றால் இரத்தக்கசிவு நோய் மற்றும் டெங்கு ஷாக் ஏற்படுவதை தடுக்க இயலாது. சிலர் இறக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே டெங்கு காய்ச்சலினை முறையான சிகிச்சையின் மூலம் ஒரு உயிரினை காப்பாற்ற இயலும்.


டெங்கு நோயாளி எப்போது மருத்துவ உதவிக்கு அணுக வேண்டும்? 


டெங்கு இரத்தக்கசிவு நோய் உண்டாகும்போது (அ) டெங்கு ஷாக் இருந்தாலும் காய்ச்சல் வந்து 3 முதல் 5 நாட்களுக்குள் மருத்துவரை அணுக வேண்டும். சிலசமயம் காய்ச்சல் இருக்காமல் உடலின் வெப்பநிலை சாதாரண நிலைக்கு வந்துவிடும். இதனால்தான் காய்ச்சல் சரியாகிவிட்டதாக நாம் தவறாக நினைக்கிறோம். எனவே இந்த சமயம்தான் மிகவும் அபாயகரமானது. மிகவும் வயிற்றுவலி, வாந்தி எடுத்துக் கொண்டே இருத்தல், சிறு சிறு சிவப்பு (அ) ஊதா நிறத்தில் கொப்பளங்கள் மூக்கில் இரத்தம் வடிதல், ஈறுகளில் மற்றும் கழிவுகளில் இரத்தம் வருதல் இவையெல்லாம் அபாய அறிகுறிகள் ஆகும். எனவே மிகவும் வயிற்றுவலி இருந்தாலோ, வாந்தி தொடர்ந்து எடுத்துக் கொண்டிருந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இரத்தக்கசிவு உறுப்புகளில் வரும்வரை பொருத்திருந்தால் அபாயகரமானதாகும். 

டெங்குவிற்கு ஏதாவது தடுப்பூசி இருக்கின்றதா? 

ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அறிவியல் ஆய்வுகள் டெங்கு காய்ச்சலை தடுப்பதற்காக தடுப்பூசியினை கண்டுபிடிக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு சிலகாலம் பிடிக்கும். 

டெங்கு காய்ச்சினால் நீண்டகால பாதிப்புகள் உண்டா? 

1-2 வாரங்களில் முழுமையான குணம் அடைந்து வருவார்கள். சிலருக்கு பல வாரங்களுக்கு அசதிகள் இருக்கும். 

டெங்கு வைரஸை பரப்பும் கொசு எங்கு வாழ்கிறது

இந்த கொசு, எடீஸ் எஜிப்டி இருட்டு இடங்களிலும் வீட்டை சுற்றிலும் வாழ்கிறது. பெண் கொசு தேங்கி கிடக்கும் நீரின் மேற்பரப்பிலும் வீட்டைச் சுற்றிலும் முட்டையிடுகிறது. இந்த முட்டை 10 நாளில் வளர்ச்சியடைந்து லார்வாக்களை உண்டு செய்யும்.


இந்த கொசு உற்பத்தியாவதை எவ்வாறு தவிர்க்கலாம்? 


டெங்கு கொசுக்கள் பகல் நேரங்களில் கடிக்கும். அதிகப்படியாக சூரிய உதயத்தில் இருந்து 2 மணி நேரம் வரையிலும், சூரியன் மறையக் கூடிய மாலை வேளைகளிலும் கடிக்கும். முழுக்கை ஆடைகளையும் நீண்ட ஆடைகளை அணிந்து உடலினை நன்றாக மூடுவதன் மூலம் கொசுக்கடியின தவிர்க்க இயலும். கொசுவலை, கொசுக்களை கொல்லும் காயில் முதலியவற்றை உபயோகிக்கலாம். குழந்தை மற்றும் முதியவர்க்கு உபயோகப் படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும். கொசுவர்த்தி மற்றும் மின்சார ஆவியாகக் கூடிய மேட்டுகள் உபயோகப்படுத்தலாம். கொசு வலை பகலில் தடுக்க மிகவும் நல்லது. தற்போது மருந்து உபயோகப்படுத்திய கொசுவலைகள் மலேரியா காய்ச்சல் தடுப்பில் பெரும் பங்கு வகிக்கின்றன. டெங்கு நோயாளிக்கு அவற்றைப் பரவச் செய்யாமல் தடுக்க ஏதேனும் அறிவுரை உள்ளதா? டெங்கு காய்ச்சல் அடுத்தவருக்கு பரவுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இந்த காய்ச்சல் உள்ள நோயாளி கொசுக்களில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ளவேண்டும். எனவே கொசு விரட்டியை உபயோகிக்கவேண்டும். கொசுவர்த்தி, காயில்கள் போன்றவைகளையும் உபயோகப்படுத்தலாம். இதன் மூலம் டெங்கு காய்ச்சலை தவிர்க்க முடியும்.

 டெங்கு பரவியுள்ள பகுதிக்கு பயணம் செய்பவற்கு ஆலோசனை உண்டா?


பயணத்தை கட்டுப்படுத்த வேண்டியதில்லை. போதிய தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.


டெங்கு காய்ச்சல் நோய் உள்ளவர்களுக்கு மருத்துவர்களின் சிகிச்சை என்ன?


டெங்கு நோய் இருப்பதாக இருந்தால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும். 

நோயின் தன்மையை தொடர்ந்து கவனிக்க வேண்டும். 

இரத்த அடர்த்தி குறைந்தால் இரத்தம் கொடுக்க வேண்டும். இரத்த அடர்த்தியின் அளவு முன் இருந்ததை விட 20% அதிகரித்தால் இரத்தக் குழாய்களின் மூலம் நீர் சத்தை அதிகரிக்க வேண்டும். 

சிகிச்சையின் போது நோயாளிகள் தவிர்க்க வேண்டியன எவை? 

ஆஸ்பிரின் புரூபென், மருந்துகளை சாப்பிடக்கூடாது. இது இரத்தத்திட்டுகளை குறைவு செய்யும். மற்றும் இரத்தக்சிவு உண்டாகும். 

டெங்கு காய்ச்சல் இருப்பதை அறிவிப்பதில் உங்கள் அறிவுரை என்ன? 

டெங்கு காய்ச்சல உள்ள நோயாளிகளையும், இருப்பதாக சந்தேகப்படுபவர்களையும் உடனடியாக சுகாதார துறைக்கு அனுப்ப வேண்டும். இரத்தம் சேகரிக்கும்போது, அதனை வேறு இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை சுகாதார ஆலோசகரின் ஆலோசனை பெற்றபின் செய்ய வேண்டும். 

டெங்கு காய்ச்சலை தடுப்பதில் பொது மக்களின் பங்கு என்ன? 

பொது மக்கள்தான் இதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை தவிர்க்க முதலில் கொசு உற்பத்தியினை தடுக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் தேங்கியிருக்கும் நீரை வெளியேற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். 

எனவே கொசுக்கள் பறக்கும் வேகம் மிக குறைவாக இருப்பதினால் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து சுற்றியிருக்கும் இடங்களை சுத்தம் செய்வதின் மூலம் கொசுக்கள் நீரில் தேங்குவதை தவிர்க்கலாம். 

மிகவும் முக்கியம் – கொசுக்கள் முட்டையிடும் நீர் தேங்குவதை தடுத்தல் 

டெங்கு காய்ச்சல் பெருவாரியாக பரவினால் என்ன செய்ய வேண்டும்? 

வீட்டைச் சுற்றியுள்ள நீர் தேங்குவதை தவிர்த்தலே மிகவும் முக்கியமான பணியாகும். கொசு மருந்தை தெளிக்க வேண்டும். 

டெங்கு பொது சுகாதாரத்த்தின் பெரிய பிரச்சினையாக உள்ளதா? 

ஆம். கடந்த 1999 மற்றும் 2003 ஆண்டுகளில், டெங்கு காய்ச்சலின் பரிசோதனையில் இரத்தம 1gm அதிகமாகியுள்ளது.