Monday, July 30, 2012

அறியாத சில விசயங்களை தெரிந்து கொள்வோம் வாங்க!

 
 
 
 
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                

நதிகளே இல்லாத நாடு - சவூதி அரேபியா.
காகங்கள் இல்லாத நாடு - நியூஸிலாந்து.
... கொசுக்கள் இல்லாத நாடு -பிரான்ஸ்.
திரையரங்குகளே இல்லாத நாடு -பூட்டான்.
பிரதமரும் மந்திரிகளும் இல்லாத நாடு -சுவிட்ஸர்லாந்து.
வருமான வரி விதிப்பு இல்லாத நாடு -குவைத்
.
எழுதப் படிக்கத் தெரியாத முகலாய மன்னர் -அக்பர்.
ஆங்கிலம் தெரியாத இங்கிலாந்து மன்னர் -முதலாம் ஜார்ஜ்.
குதிக்கத் தெரியாத மிருகம் -யானை.
கண்களிருந்தும் பார்வை இல்லாத விலங்கு -வவ்வால்.
மீன்கள் இல்லாத நதி -ஜோர்டான்
ரயில்கள் இல்லாத நாடு - ஐஸ்லாந்து
தேசியக்கொடி இல்லாத நாடு - மாசிடோனியா
கடலில் கலக்காத நதி - யமுனை
எலும்புக் கூடு இல்லாத விலங்கு -ஜெல்லி மீன்.
பாலூட்டிகளில் நீந்தத் தெரியாத இரு விலங்குகள் -ஒட்டகம், பன்றி.
நீர் குடிக்காத விலங்கு - எலி, கங்காரு
.
கூடு கட்டாத பறவை -குயில்.
பாம்புகள் இல்லாத இடம் - ஹவாய் தீவு
விதை இல்லாத பழம் -அன்னாசி.
மனித உடல் சில விஷயங்கள்
மனித மூளையின் எடை 1.36 கிலோ
மனிதனுக்கு நாள்தோறும் 16 கிலோ காற்று சுவாசிக்கத் தேவைப்படுகிறது.
மனிதன் வாழ்நாளில் சராசரியாக சாப்பிடும் உணவின் மொத்த அளவு 30,000 கிலோ
.மனித உடலில் உள்ள மிகப் பெரிய சுரப்பி கல்லீரல்தான்.
மனிதனின் முதுகுத்தண்டு 33 முள் எலும்புகளால் ஆனது.
மனிதன் உடல் எடையில் 9 சதவிகிதம் இரத்தத்தினால் ஆனது.
இந்த ரத்தத்தில் 91 சதவிகிதம் நீர்தான்.
மனித உடல் முழுவதும் ரத்தம் ஒரு முறை சுற்ற 64 வினாடிகள் ஆகின்றன.
உடலில் பிட்யூட்டரி சுரப்பி குறைவாக இருந்தால் மனிதன் குள்ளமாக இருப்பான்.
மனிதனின் தசைகள் உண்டாக்கும் வெப்பம் ஒரு லிட்டர் நீரை ஒரு மணி நேரம் கொதிக்க வைக்கப் போதுமானது.
மனிதன் வெளியேற்றும் சிறுநீரில் நீரின் அளவு 96 சதவிகிதமும், யூரியா 2 சதவிகிதமும், கழிவுப் பொருட்கள் 2 சதவிகிதமும் உள்ளன.
மனித நுரையீரலில் உள்ள நுண் காற்றுப் பைகளின் எண்ணிக்கை 300 மில்லியன். ஒவ்வொரு நுண் காற்றுப்பையும் 0.2 மில்லி மீட்டர் விட்ட அளவு கொண்டது.
See More

Friday, July 27, 2012

ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் இந்தியருக்கு 5 கிலோ தங்கம் பரிசு-சகாரா நிறுவனம் அறிவிப்பு

 Sahara Announces 5 Kg Gold Indian Olympic Gold Medalist
Olympics: India hopes desert camp w...
 
Ads by Google
Location Maps  www.MapsGalaxy.com
Get Maps, Directions & Traffic Conditions From Your Browser Free!
லக்னோ: லண்டன் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்லும் இந்தியருக்கு, 5 கிலோ தங்கம் அளிக்க போவதாக சகாரா நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் வெள்ளிப்பதக்கம் பெறும் இந்தியருக்கு 3 கிலோ தங்கமும், வெண்கலப்பதக்கம் பெறும் இந்தியருக்கு 2 கிலோ தங்கமும் வழங்க சகாரா நிறுவனம் முன்வந்துள்ளது.
லண்டன் ஒலிம்பிக் போட்டி இன்று கோலாகல துவக்க விழாவுடன் துவங்க உள்ளது. இதில் 204 நாடுகளை சேர்ந்த மொத்தம் 10,500 வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிலையில் சுமார் 110 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் இருந்து 81 வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். இவர்கள் மொத்தம் 13 விளையாட்டுகளில் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்தியாவில் இருந்து அதிகளவிலான வீரர்கள், வீராங்கனைகள், லண்டன் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதால், இந்த முறை நாட்டிற்கு அதிக ஒலிம்பிக் பதக்கங்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள வீரர்கள், வீராங்கனைகள் உற்சாகமடையும் வகையில், சகாரா நிறுவனம் ஒரு ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள இந்தியர்களில் தங்கப்பதக்கம் வெல்லும் நபருக்கு 5 கிலோ தங்கம் வழங்கப்பட உள்ளது. வெள்ளிப் பதக்கம் வெல்லும் இந்தியருக்கு 3 கிலோ தங்கமும், வெண்கலம் பதக்கம் வெல்லும் இந்தியருக்கு 2 கிலோ தங்கமும் பரிசளிக்க உள்ளதாக சகாரா நிறுவனம் அறிவித்துள்ளது.
ஒலிம்பிக்கில் குழு விளையாட்டுகளில் பங்கேற்று பதக்கம் பெறும் அணியின் வீரர்களுக்கு, தங்கம் பகிர்ந்து அளிக்கப்படும். பரிசளிக்கப்படும் தங்கம் பதக்கம் வடிவில் வழங்கப்படும்.
இது குறித்து சகாரா இந்தியா பரிவார் நிறுவன தலைவர் சுப்ரதா ராய் கூறியதாவது,
ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெறுவதன் மூலம் ஒவ்வொரு இந்திய வீரர்களும் நமது தாய் நாட்டிற்கு பெருமை சேர்க்க உள்ளனர். ஒரு விளையாட்டு வீரரால் இதை விட நாட்டிற்கு வேறெந்த வகையிலும் பெருமை சேர்க்க முடியாது என்று நினைக்கிறேன்.
ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல இந்தியர்களை உற்சாகப்படுத்த இது ஒரு சிறிய அளவிலான பரிசு அறிவிப்பு ஆகும். ஆனால் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் விளையாட்டு வீரர் நாட்டின் ஒரு வெற்றி சின்னமாகவே கருதப்படுவார் என்றார்

ஒலிம்பிக் போட்டிகள் இன்று கோலாகல தொடக்கம்- லண்டனில் கண்கவர் விழா

லண்டன்: தமிழக இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் இளையராஜா ஆகியோரின் பாடல்கள் உள்ளிட்ட இசை நிகழ்ச்சியுடன் லண்டன் ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழா இன்று கோலாகலமாக நடைபெற உள்ளது.
லண்டன் ஒலிம்பிக் போட்டி கோலாகல துவக்க விழாவுடன் இன்று துவங்க உள்ளது. மொத்தம் 3 மணிநேரம் நடைபெற உள்ள துவக்க விழாவில் இசை விழா, நடனம், அணிகளின் அணிவகுப்பு ஆகியவை நடைபெற உள்ளது.
 london olympics opening ceremony starts with ar rahman

 



லண்டன் நேரப்படி இன்று இரவு 9.30 மணிக்கு (இந்திய,இலங்கை) நேரப்படி நாளை அதிகாலை 1.30 மணிக்கு) துவக்க விழா நடைபெறும். இந்த விழாவின் ஏற்பாடுகள் ஆஸ்கார் விருது பெற்ற ஸ்லம்டாக் மில்லினியர் படத்தின் இயக்குனர் டேனி போலே மேற்பார்வையில் நடைபெறுகிறது.லண்டன் ஒலிம்பிக் துவக்க விழாவில் தமிழகத்தை சேர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான், பஞ்சாபி இசையை தழுவிய இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளார். 'நிம்மா நிம்மா' என்று தொடங்கும் பாடலுக்கு, பின்னணி இசையுடன் பல பின்னணி பாடகர்களின் குரல்களுடன் இணைத்து இனிய இசை நிகழ்ச்சியை அளிக்க உள்ளார் ரஹ்மான்.
அதேபோல தமிழக இசை ஞானி இளையராஜா இசையமைத்து கடந்த 1980ம் ஆண்டு கமல்ஹாசன் நடித்து வெளியான 'ராம் லக்ஷ்மன்' படத்தில் வெளியான 'நான் தான் உங்க அப்பன்டா' என்ற பாடலும் இசைக்கப்பட உள்ளது.
துவக்க விழாவில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகளை இங்கிலாந்தை சேர்ந்த பல நடன குழுவினர் நடத்த உள்ளனர். மேலும் துவக்க விழாவில் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள உள்ள 204 நாடுகளை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் அணிவகுப்பு இடம் பெறும். இதில் ஒவ்வொரு நாடுகளும் கொடிகளை ஏந்தி வரிசையாக அணிவகுத்து வர உள்ளனர். இதில் இந்திய கொடியை மல்யுத்த வீரர் சுசில் குமார் ஏந்தி செல்ல உள்ளார்.
லண்டன் ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழாவிற்கு வந்துள்ள அனைவரையும், இங்கிலாந்து ராணி எலிசபெத் II வரவேற்க உள்ளார். துவக்க விழாவின் இறுதியாக வண்ண மையமான வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெறும். துவக்க விழாவை முன்னிட்டு லண்டன் நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

லண்டன் ஒலிம்பிக் போட்டிகளை கான சீனாவிலிருந்து ரிக்ஷாவில் வந்த விவசாயி…

சீனாவைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது கிராமத்தில் இருந்து லண்டன் வரை ரிக்ஷாவில் சென்றுள்ளார். அவர் 16 நாடுகளைக் கடந்து இங்கிலாந்தை அடைந்துள்ளார்.
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் சென் குவான்மிங்(57). விவசாயி. அவர் கடந்த 2008ம் ஆண்டு சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளைப் பார்த்துவிட்டு லண்டன் ஒலிம்பிக்ஸிற்கு செல்ல ஆசைப்பட்டார். இதையடுத்து அவர் கடந்த 2009ம் ஆண்டு முதல் விசா, பணம் உள்ளிட்டவற்றுக்கு ஏற்பாடு செய்தார். தொடர்ந்து கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது கிராமத்தில் இருந்து லண்டனுக்கு ரிக்ஷாவில் புறப்பட்டார். அவர் கடந்த 2 ஆண்டுகளாக வியட்நாம், தாய்லாந்து, பாகிஸ்தான், துருக்கி உள்ளிட்ட 16 நாடுகளைக் கடந்து 6ம் தேதி லண்டனை அடைந்துள்ளார்.
இது குறித்து நரைத்த குறுந்தாடியும், குடுமியுமாக இருக்கும் அவர் கூறுகையில்,
நான் இதுவரை சீனாவை விட்டு வெளியேறியதே இல்லை. ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கவும், அவர்களுக்கு ஆதரவளிக்கவும் தான் நான் சீனாவில் இருந்து லண்டன் வந்துள்ளேன். வரும் வழியில் தாய்லாந்து வெள்ளத்தையும், துருக்கியின் கடுங்குளிரையும் தாண்டி வந்துள்ளேன். நான் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க வந்துள்ளேன். விருதை எதிர்பார்த்து இவ்வாறு செய்யவில்லை.
பிரான்சில் இருந்து படகு மூலம் இங்கிலாந்து வந்து சேர்ந்தேன். இந்த பயணத்திற்கு நண்பர்கள், அன்பான மக்கள், வழி நெடுகிலும் உள்ள சீன மக்கள் பண உதவி செய்தனர் என்றார்.
அவரது ரிக்ஷாவில் பாரிசில் உள்ள ஈபில் கோபுரம், கோலாலம்பூரில் உள்ள பெட்ரோனாஸ் டவர்ஸ் உள்ளிட்ட பிரபலமான இடங்களில் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ஒட்டி வைத்துள்ளார். கடந்த 9ம் தேதி அவர் லண்டன் தெருக்களில் செய்வதறியாது சென்றதாக இங்கிலாந்தைச் சேர்ந்த காப்பீட்டு புரோக்கர் ஜான் பீஸ்டன் தெரிவித்தார்.
அவருக்கு ஒலிம்பிக் போட்டியைக் காண டிக்கெட் வாங்கிக் கொடுக்க தீவிர முயற்சி செய்து வருகிறோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ஒலிம்பிக் போட்டிகளைக் காண அனுமதி கிடைத்தாலும் சரி, கிடைக்காவிட்டாலும் அந்த வயதான விவசாயி தனது நீண்ட பயணம் பற்றி பெருமிதம் கொண்டுள்ளார்.

நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - கன்னியாஸ்திரி இரெனா ஹன்டோனோ


நான் ஆறு வயதாக இருக்கும் போது கிறிஸ்தவ தேவாலயத்தைச்
சேர்ந்த பள்ளி ஒன்றுக்கு கத்தோலிக்க கிறிஸ்தவத்தைப் பற்றி பயில்வதற்காக
அனுப்பப்பட்டேன். என்னுடைய படிப்பிற்கான முழு செலவுகளையும் அந்த தேவாலய நிர்வாகவே பொறுப்பு ஏற்றுக் கொணடிருந்தது. ஏனென்றால் என்னுடைய பெற்றோர்கள் இந்தோனேசியாவில் உள்ள மிகப்பெரிய சர்ச்சுகளில் ஒன்றின் அமைப்பாளர்கள் (Organisors) ஆவார்கள்.

பின்னர் பருவ வயதில் தேவாலயத்தைச் சேர்ந்த ''Liaision Maria'' என்ற கல்வி நிறுவனத்தில் சேர்ந்தேன். Maria என்பது ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தாயார் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைக் குறிக்கும்

இந்த நிறுவனத்தின் முக்கிய குறிக்கோள் என்னவெனில் ''Stray Sheeps'' என்று சொல்லப்படக் கூடிய ''காணாமல் போன ஆடுகளை'' தேடுவதாகும். ''காணாமல் போன ஆடுகள்'' என்று அவர்கள் குறிப்பிடுவது, நம்முடைய உணவுக்காகவும் ஈதுல்-அல்ஹா பெருநாள் குர்பானி கொடுப்பதற்காக அறுக்கிறோமே அந்த ஆடுகளை அல்ல. மாறாக ''காணாமல் போன ஆடுகள் என்று அவர்கள் குறிப்பிடுவது, ''கிறிஸ்தவர்களல்லாத மற்றவர்களை''. அதாவது இந்த பள்ளி வாசலில் குழுமியிருக்கும் நம்மைப் போன்ற முஸ்லிம்களை அவர்கள் ''காணாமல் போன ஆடுகள் என்று குறிப்பிடுகிறார்கள். நம்மையெல்லாம் கிறிஸ்தவர்களாக்கும் ஒரு மிகப்பெரும் செயல் திட்டம் அவர்களிடம் இருந்துக் கொண்டிருக்கிறது.

ஒரு வருடம் கழித்த பிறகு நான், இந்தோனேசியாவில் மிக அதிக அளவில் றுப்பினர்களையுடைய ஒரு கிறிஸ்தவ அமைப்பின் தலைவியானேன். பின்னர் கன்னியாஸ்திரி ஆவதற்காக ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் சேர்ந்தேன்.

சகோதர சகோதரிகளே! நான் ஒரு முஸ்லிம் ஆக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒரு போதும் இருந்ததில்லை. நான் கன்னியாஸ்திரியாக வேண்டுமென்ற என்ற என்னுடைய எண்ணம் நிறைவேறியது. கன்னியாஸ்திரியாக வேண்டுமென்ற என்னுடைய எண்ணம் நிறைவேறியதிலிருந்து, அல்லாஹ் அவனுடைய அடிமையாகிய எனக்கு நேர்வழி காட்டத் துவங்கினான்.

பின்னர் கிறிஸ்தவ பாதிரியார்கள் படிக்கும் மேற்படிப்பாகிய மதங்கள் மற்றும் தத்துவங்களைப் பற்றிய (Theology & Philosophy) உயர்ந்த படிப்பைப் படிப்பதற்காக நான் அனுப்பப்பட்டேன். அங்கு நான் மதங்களைப் பற்றிய ஒப்பாய்வு (Comparative Religion) பாடங்களைப் படித்தேன். இஸ்லாத்தைப் பற்றி பயிற்றுவிக்கப்பட்டேன். ஆனால் உண்மையான இஸ்லாத்தைப் பற்றி அல்ல! இஸ்லாம் என்பது மிக மோசமான மதம் என்று பயிற்றுவிக்கப்பட்டேன்.

''இஸ்லாத்தைப் பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டுமானால் இந்தோனேசியாவிலுள்ள முஸ்லிம்களைப் பாருங்கள்'' என்று எங்களுக்கு விளக்கினார்கள்.

இந்தோனேசியாவில்,

o ஏழைகளாக இருக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? - இஸ்லாம்

o முட்டாள்களாக இருக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? - இஸ்லாம்

o வெள்ளிக் கிழமை தொழுகையின் போது தங்களின் காலனிகளை தொலைக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? - இஸ்லாம்

o ஒற்றுமையாக இருப்பதற்கு மறுக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? - இஸ்லாம்

o தீவிரவாதிகளாக இருக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? - இஸ்லாம்

இவர்களுடைய இத்தகைய தவறான போதனையினால் என்னுடைய நன்பர்கள் அனைவரும் ''இஸ்லாம் என்பது ஒரு மிக மோசமான மதம்'' என்ற தீர்மானத்திற்கு வந்தார்கள். ஆனால் அதே சமயத்தில் நான் அவர்கள் எடுத்திருக்கின்ற முடிவு உண்மைக்கு புறம்பானது என்றும் தவறானது என்றும் அவர்களிடம் கூறினேன். நான் அவர்களிடம், ''நாம் இந்தோனேசியாவை மட்டும் பார்க்கக் கூடாது, மற்ற நாடுகளில் உள்ள நிலவரங்களையும் நாம் பார்க்க வேண்டும்'' என்று கூறினேன்.

உதாரணமாக,

பிலிப்பைன்ஸ் நாட்டில், ஏழைகளாகவும், படிப்பறிவில்லாதவர்களாகவும் இருக்கிறார்களே! அவர்களுடைய மதம் இஸ்லாம் அல்ல!.அவர்களெல்லாம் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்.

மெக்ஸிகோ ஒரு ஏழை நாடு. அந்நாட்டில், குற்றவாளிகளாகவும், திருடர்களாகவும், குடிகாரர்களாகவும், கற்பழிப்பு செய்பவர்களாகவும், சூதாட்டக்காரர்களாகவும் இருக்கிறார்களே! அவர்களில் ஒருவர் கூட இஸ்லாமியர் அல்லர். அவர்கள் அனைவரும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்!

அயர்லாந்து குடியரசு நாடு. இந்த நாடு வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளுக்கிடையே தீர்க்க இயலாத உள் நாட்டு பிரச்சனையில், சச்சரவில் சக்கித் தவிக்கும் ஒரு நாடு. இந்தப் சச்சரவில் ஒரு முஸ்லிம் கூட இல்லை. இந்தப் சச்சரவு நடப்பது கத்தோலிக்க மற்றும் புரோட்டஸ்டன்ட் கிறிஸ்தவர்களுக்கிடையில் தான். அவர்கள் தமக்குள்ளாகவே சன்டையிட்டுக் கொண்டு கொலை செய்கின்றார்கள். ஐரோப்பிய சமூகம் அவர்களை ''அயர்லாந்தின் தீவிரவாதிகள்'' என்று கருதுகிறது. அவர்கள் ''ஐரோப்பிய தீவிரவாதிகள்'' என்றும் வகைப்படுத்தப்படுகிறார்கள்.

இத்தாலியைப் பாருங்கள்! போதைப் பொருள் கடத்துபவர்கள், சூதாட்டக்காரர்கள் - இவர்களில் ஒருவர் கூட இஸ்லாமியர் அல்லர். அனைத்து மாஃபிய்யாக் கும்பல்களும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்.

அப்போது நான் என்னுடைய மேலதிகாரியான பாதிரியாரிடம், ''இஸ்லாம் ஒரு மோசமான மதம் என்று நிரூபிக்கப்படவில்லையே'' கூறினேன். அப்போது நான், இஸ்லாத்தை, இஸ்லாமியர்களிடமிருந்தே படிக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை முன் வைத்தேன். அதற்கு, ''நான் இஸ்லாத்தின் பலவீனங்களைப் பற்றி மட்டும் படிக்க வேண்டும்'' என்ற கட்டுப்பாட்டுடன் அனுமதியளிக்கப்பட்டென்.

நான் குர்ஆனைப் படித்த போது, அது குறிப்பாக ''இறைவன் ஒருவனே! ஒரே ஒருவன் தான்'' என்று வலியுறுத்தியது. அது நான் கிறிஸ்தவ தேவாலயங்களில் பயின்ற ''திரித்துவக் கடவுள் கொள்கைக்கு'' (Trinity of God) முற்றிலும் மாற்றமானதாக இருந்தது. ஆனால் இரவில் நான் குர்ஆனைப் படித்தபோது (சூரா இக்லாஸ்), இறைவன் ஒருவனே! என்றிருக்கிறது. ஆனால் அன்று காலையிலோ தேவாலயத்தில் மதங்களைப் பற்றிய பாடத்தை ரெவ. பாதிரியார் அவர்கள் போதித்த போது ''கடவுள் ஒருவரே! ஆனால் மூவரில் இருக்கிறார் (திரித்துவம் - Trinity) என்று போதித்தார். அதனால் அந்த இரவில் ஒரு சக்தி என்னை மேலும் குர்ஆனைப் படிக்க உந்தியது. என் ஆழமான உள் மனது ''இறைவன் ஒருவனே! என்றும் மேலும் இது (குர்ஆன்) உண்மையானது தான்'' என்றும் கூறிற்று.

மறு நாள் காலையில் தேவாலயத்தில் நான் என்னுடைய பாதிரியாரிடம், விவாதித்தேன்.

''கடவுளின் திரித்துவக் கொள்கை'' (Trinity of God) என்பது பற்றி எனக்கு சரியாக விளங்கவில்லை என்று அவரிடம் நான் கூறினேன்.

கிறிஸ்தவ கன்னியாஸ்திரியாகிய நான்
இதுவரைக்கும் கடவுளின் திரித்துவக் கொள்கையைப் பற்றி எப்படி விளக்கம்
பெறாமல் இருக்கமுடியும் என்பதைப் பற்றி அந்த பாதிரியார் மிகவும்
ஆச்சரியமடைந்தார்.

அந்தப் பாதிரியார் முன் வந்து ஒரு முக்கோனத்தை வரைந்தார். பின்னர் அவர், ஒரு முக்கோனத்திற்கு மூன்று மூலைகள் (three corners) இருப்பதைப் போல, ஒரு கடவுள் மூன்று பேரில் இருக்கிறார் என்று கூறினார்.

அதற்கு நான், உலகம் வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும். எனவே கடவுள் மூவரை வைத்து சமாளிப்பது என்பது கடினம். எனவே கடவுள் மற்றொருவருக்கு தேவையுடைவராக இருக்க சாத்தியக்கூறு இருக்கிறதல்லவா? இது சாத்தியம் தானே? என்று கேட்டேன்

அதற்கு நன்கு கற்றறிந்த என்னுடைய பாதிரியார் ''இதற்கு சாத்தியமே இல்லை'' என்று கூறினார். அதற்கு நான், இது சாத்தியமானதே! கூறி முன்னாள் வந்து, ஒரு சதுரத்தை வரைந்தேன். முக்கோனத்திற்கு மூன்று கோணங்கள் இருப்பதைப் போன்று சதுரத்திற்கு நான்கு மூலைகள் (Four corners) இருக்கின்றனவே என்று கூறினேன்.

அதற்கு நன்கு கற்றறிந்த என்னுடைய பாதிரியார், ''முடியாது'' என்று கூறினார். முன்பு ''இதற்கு சாத்தியமே இல்லை'' என்று கூறிய அவர், தற்போது ''முடியாது'' என்று மட்டும் கூறினார்.

நான் கேட்டேன், ''ஏன்?''

அதற்கு பாதியார், ''இது நம்பிக்கை''. நீ புரிந்துக் கொண்டாயோ இல்லையோ அப்படியே ஏற்றுக்கொள், அப்படியே இதை விழுங்கிவிடு. இதைப் பற்றி கேள்விகள் எதுவும் கேட்காதே! கடவுளின் திரித்துவக் கொள்கையைப் பற்றி கேள்விகள் எதுவும் கேட்காதே! இதைப் பற்றி சந்தேகப்பட்டு கேள்வி கேட்டால் நீ பாவம் செய்தவளாகி விடுவாய்! என்று கூறினார்.

இந்த மாதிரியான பதில் எனக்கு கிடைக்கப்
பெற்றும் அன்று இரவு குர்ஆனை தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற உறுதியான
ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. ஏகத்துவம் குறித்த கடவுள் கொள்கையைக் குறித்து கற்றறிந்த என்னுடைய பாதிரியாருடன் விவாதம் செய்ய விரும்பினேன்.

ஒரு சமயம் நான் என்னுடைய பாதிரியாரிடம், ''இந்த மேசைகளை உருவாக்கியது யார்?'' என்று கேட்டேன். அதற்கு பாதிரியார் பதிலளிக்க விரும்பாமல் என்னையே பதிலளிக்குமாறு கூறினார்.

அதற்கு நான் ''இந்த மேசைகளை உருவாக்கியது 'தச்சர்கள்' (Carpenters)'' என்றேன்.

''ஏன்?'' பாதிரியார் கேட்டார்.

அதற்கு நான் இந்த மேசைகள் ஒரு வருடத்திற்கு முன்பாகவோ அல்லது நூறு வருடத்திற்கு முன்பாகவோ உருவாக்கப்பட்டவைகள். இவைகள் இன்னமும் மேசைகளாகவே இருக்கின்றன. இந்த மேசைகள் எப்போதும் ''தச்சார்களாக'' (Carpenters) மாறமுடியாது. மேலும் ஒரே ஒரு மேசை கூட தச்சராக (Carpenter) மாறுவதற்கு ஒருபோதும் முடியாது.

''நீ என்ன சொல்ல வருகிறாய்?'' பாதிரியார் கேட்டார்.

அதற்கு நான், இந்த பிரபஞ்சத்திலே உள்ள மனிதன் உட்பட உயிருள்ள மற்றும் உயிரற்ற ஒவ்வொன்றையும் கடவுளே படைத்தார். ஒரு வருடத்திற்கு முன்னாள் ஒரு மனிதன் பிறந்தால் அடுத்து வரக் கூடிய நூறு வருடங்களாயினும் அவன் மனிதனாகவே இருப்பான். உலக முடிவு நாள் வரைக்கும் கூட அவன் மனிதனாகவே தான் இருப்பான். ஒரே ஒரு மனிதன் கூட கடவுளாக அவதாரம் எடுக்க முடியாது! மேலும் கடவுளை மனிதனோடு ஒப்பிட முடியாது.

அதற்கு நான் ஒரு உதாரணமும் கூறினேன். ஒரு இராணுவத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களில் ஒருவரை தேர்தெடுத்து அவரை தங்களின் ''ஜெனரலாக'' தேர்தெடுத்தால் அந்த தேர்வு செல்லாததாகிவிடும். ஏன் அவர்களில் 99 சதவிகிதத்தினர் அவரை தேர்வு செய்திருப்பினும் சரியே!

''நீ என்ன சொல்ல வருகியாய்?'' பாதிரியார்

அதற்கு நான், ''மனிதன் உட்பட இந்த பிரபஞ்சத்திலுள்ள அனைத்தையும் கடவுள் படைத்தார். மனிதர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவரை கடவுளாக ஆக்கினால் அந்த தேர்வு செல்லாதது'' என்று நான் அந்த பாதிரியாரிடம் விளக்கினேன்.

பின்னர் நான் தொடர்ந்து படித்து வந்தேன். ஒருநாள் நான் என்னுடைய பாதிரியாரிடம், ''என்னுடைய ஆராய்ச்சிகளின் படியும், மதங்களைப் பற்றிப் வகுப்புகளில் படித்ததிலிருந்தும் கி.பி. 325 ஆம் ஆண்டில் தான் முதன் முதலாக இயேசு கடவுளாக கருதப்பட்டார்'' என்று கூறினேன்.

இவ்வாறு இந்த கன்னிகாஸ்திரி அவர்கள் பலவிதங்களில் அந்த பாதிரியாரிடம் விவாதம் புரிந்ததாகக் கூறினார்கள்.

பலவித ஆராய்ச்சிகளுக்குப் பிறகு தாம் இஸ்லாமே
ஏகத்துவத்தை வலியுத்தும் உண்மையான மார்க்கம் என்றறிந்து இஸ்லாத்தை தழுவிய
இந்த முன்னாள் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த
கன்னிகாஸ்திரி Irena Handono அவர்கள் தற்போது இந்தோனேசியாவில் இருக்கும் Central Muslim Women Movement என்ற அமைப்பின் தலைவியாக இருந்துக் கொண்டு இஸ்லாமிய அழைப்புப் பணியைச் செய்து கொண்டுவருகிறார்.

IELTS: அனைத்துலக ஆங்கில மொழிக்கான திறனாய்வுத் தேர்வு


IELTS உலகில் முதன்மையான ஆங்கில மொழிக்கான திறனாய்வு தேர்வாகும். இத்தேர்வில் கிடைக்கப்பெறும் ஒருங்கு கூட்டு மதிப்பெண்களின் அடிப்படையில், ஆங்கில மொழி பேசும் நாடுகளில் உயர் கல்வி, குடிபுகல் போன்ற காரணங்களுக்காக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. 2009 ஆம் ஆண்டு சராசரி கணிப்பின் படி 1.4 மில்லியனுக்கும் அதிகமானோர் 135 க்கும் அதிகமான நாடுகளில் இருந்து இத்தேர்வுக்கு தோற்றியுள்ளனர். இவ்வெண்ணிக்கை துரிதகதி வேகத்தில் அதிகரித்துச் செல்கிறது. உலகெங்கும் 6,000 க்கு மேற்பட்ட பல்கலைக் கழகங்கள், அரச நிறுவனங்கள், கல்விசார் அமைப்புகள் அயெல்ஸ் ஒருங்கு கூட்டு மதிப்பெண்களின் அடிப்படையில் நுழைவு அனுமதி வழங்குகின்றன. இதனால் உலகெங்கும் ஆங்கில மொழி திறனாய்வு தேர்வு முறைக்கு கற்போரின் எண்ணிக்கையும், பயிற்சி மையங்களும் பெருகி வருகின்றன. அயெல்ஸை உலகில் பிரசித்திப் பெற்றதும் நம்பகமுமான: கேம்பிரிஜ் பல்கலைக்கழகம் (University of Cambridge ESOL Examination), பிரிட்டிஸ் கவுன்சில் (British Council), ஐடிபி அவுஸ்திரேலியா (IELTS: IDP Australia) ஆகிய மூன்றும் இணைந்து நிர்வகித்து வருகின்றன. இவை இன்று உலெகெங்கும் 500 க்கும் அதிகமான தேர்வு மையங்களை கொண்டு, ஒவ்வொரு மாதமும் நான்குக்கும் மேற்பட்ட தேர்வுகளை நடாத்தி வருகின்றன. தேர்வுக்கு தோற்றுபவர்கள் தாம் வாழும் நாட்டில், தமக்கு அன்மித்த நகரத்தில் தோற்ற முடியும்.

IELTS என்பதன் முழுச்சொற்றொடர் International English Language Testing System என்பதாகும். தமிழில் “அனைத்துலக ஆங்கில மொழிக்கான திறனாய்வுத் தேர்வு" அல்லது "அனைத்துலக ஆங்கில மொழிக்கான தேர்வு முறை” எனப்படும். இதனை ஐஈஎல்டிஎஸ் என்று எழுதினாலும், உச்சரிக்கும் போது “அயெல்ஸ்” என்றே உச்சரிக்கவேண்டும். ஏனெனில் “அயெல்ஸ்” என்பது ஒரு சுருக்கப்பெயர் (Acronym) ஆகும்.

இந்த அனைத்துலக ஆங்கில மொழிக்கான திறனாய்வுத் தேர்வுமுறையில் இரண்டு வடிவங்கள் உள்ளன.

கல்விசார் வடிவம் (Academic Training)
பொது பயிற்சி வடிவம் (General Training)

இவற்றில் உங்களுக்கு பொருத்தமான தேர்வு வடிவத்தை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

கல்விசார் வடிவம்(Academic Test)

கல்விசார் வடிவம் ஆங்கில மொழியின் ஊடாக இளங்கலை, முதுநிலை பட்டப்படிப்புக்கான பல்கலைக் கழகங்களின் நுழைவு அனுமதி, உயர்கல்விக்கான பயிற்சி நெறிகள், கல்வி நிறுவனங்களின் நுழைவு அனுமதி, மருத்துவத்துறைப் போன்ற உயர்பணிகள் போன்றவற்றிற்கானது. அதற்கு பரிட்சையாளர்கள் குறிப்பிட்ட பல்கலைக்கழகம், அல்லது குறிப்பிட்ட நிறுவனம் கோரும் ஒருங்கு கூட்டு மதிபெண் பெற்றிருக்க வேண்டும்.

தற்போது அமெரிக்காவில் சில பல்கலைக்கழங்களும் அயெல்ஸ் தேர்வு ஒருங்கு கூட்டு மதிப்பெண் அடிப்படையில் ஏற்றுக்கொள்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொது பயிற்சி வடிவம் (General Training Test)

பொது பயிற்சி வடிவம் ஆங்கிலம் பேசும் நாடுகளில் பொதுவான பணிப் பயிற்சிகள் பெறுவதற்கு, சாதாரணப் பணிகள் போன்றவற்றிற்கு, பாடசாலை அல்லது கல்லூரி போன்றவற்றில் கல்வியை தொடர்வதற்கு, மற்றும் ஐக்கிய இராச்சியம், அவுஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கான குடிபுகல் போன்ற காரணங்களுக்காக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. இதுவும் பெறப்படும் ஒருங்கு கூட்டு மதிப்பெண் அடிப்படையிலேயே அனுமதி கிடைக்கும்.

இந்த அயெல்ஸ் தேர்வு நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

கேட்டல் (Listening)
வாசித்தல் (Reading)
எழுதுதல் (Writing)
பேசுதல் (Speaking)

தேர்வுக்கு தயாராகும் பரீட்சையாளர்கள் இந்த நான்கு பிரிவு குறித்தும் அறிந்து வைத்துக்கொள்ளல் அவசியம். அநேகமாக பரிட்சைக்கு தோற்றுவோரின் மனதில் எழும் எண்ணங்கள்: "ஒவ்வொரு பிரிவுக்கும் எவ்வெவ்வளவு நேரம் வழங்கப்படும்? ஒவ்வொரு பிரிவுகளினதும் உற்பிரிவுகள் எத்தனை? உற்பிரிவுகளுக்கு வழங்கப்படும் நேரம் எவ்வளவு? தேர்வுகள் எப்படி நடைப்பெறும்? அவற்றில் என்னென்ன உற்பட்டிருக்கும்?" போன்றவைகளாகவே இருக்கும். உண்மையில் இவற்றை அறிந்துவைத்துக் கொண்டால் பரீட்சைக்கு தோற்றுபவர்கள் தம்மை தயார்படுத்திக்கொள்ள எளிதாக இருக்கும். இதனை கருத்தில் கொண்டே இந்த ஆக்கம் வழங்கப்படுகிறது.

முழுமையான விபரம் கீழே வங்கப்பட்டுள்ளன.

தேர்வுக்கு தோற்றும் பரீட்சையாளர்கள் அனைவருக்கும் “கேட்டல்” மற்றும் “பேசுதல்” ஆகிய இரண்டு பிரிவுகளும் பொதுவானதாகவே இருக்கும்.

ஆனால் “வாசித்தல்” மற்றும் “எழுத்துதல்” ஆகிய இரண்டு பிரிவுகளும் கல்விசார் வடிவத்திற்கும் பொது பயிற்சி வடிவத்திற்கும் இடையில் வேறுப்பட்டதாக இருக்கும். அதாவது வாசித்தல், எழுதுதல் ஆகிய இரண்டு பிரிவுகளும் கல்விசார் வடிவத்தில் கடுமையானதாகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலதிக விபரங்களை கீழே பார்க்கவும்.

கேட்டல் (Listening)

கேட்டல் பிரிவுக்கு வழங்கப்படும் நேரம் 30 நிமிடங்களாகும். இதில் நான்கு பகுதிகளும், அவற்றில் இருந்து 40 கேள்விகளும் உள்ளன. ஒலிப்பதிவு செய்யப்பட்ட உரையாடல்கள் ஒலிபரப்பப்படும். அவற்றை கவனமாகக் கேட்டு விடையை குறித்துக்கொள்ள வேண்டும். நான்கு கேட்டல் பகுதிகளினதும் முடிவில் “கேட்டல் தேர்வுக்கான விடை தாள்” (Listening Test Answer Sheet) இல் விடையை குறிக்க மேலதிகமாக 10 நிமிடங்கள் வழங்கப்படும்.

ஒலிப்பதிவு ஒருமுறை மட்டுமே ஒலிக்கப்படும் என்பதை நினைவில் இருத்திக் கொள்ளவும்.

வாசித்தல் (Reading)

வாசித்தல் பிரிவுக்கு வழங்கப்படும் நேரம் 60 நிமிடங்கள். இது மூன்று ஏட்டுரை வாசித்தல் பகுதிகளை கொண்டுள்ளது. ஒவ்வொரு பகுதியும் தோராயமாக 700 - 800 சொற்களைக் கொண்டவைகளாக இருக்கும். மூன்று வாசித்தல் பகுதிகளிலும் இருந்து 40 கேள்விகள் வரும். விடையை, “வாசித்தல் தேர்வுக்கான விடை தாள்” (Reading Test Answer Sheet) இல் குறிக்க வேண்டும். வாசித்தல் தேர்வு பிரிவில் விடையளிப்பதற்கு என்று மேலதிக நேரம் வழங்கப்படுவதில்லை என்பதை கவனத்தில் கொள்ளவும். கல்விசார் வடிவத்தில் ஏட்டுரை வாசித்தல் பகுதி கல்விசார் நூல்கள், சஞ்சிகைகள், செய்தித்தாள்கள் போன்றவற்றில் இருந்து பெறப்பட்டவைகளாக இருக்கும். வாசிப்பவர் தான் வாசித்ததை முழுமையாகப் புரிந்துக்கொண்டவராக இருந்தால் தான் கேள்விகளுக்கு சரியான பதிலளிக்க முடியும். பொது பயிற்சி வடிவம் பல்வேறு விளம்பரம், விபரக்கோவை, துண்டுப்பிரசுரங்கள் மற்றும் செய்தித்தாள் போன்றவற்றில் இருந்து வரும்.

எழுதுதல் (Writing)

எழுதுதல் பிரிவுக்கு வழங்கப்படும் நேரம் 60 நிமிடங்கள். இதில் இரண்டு பகுதிகளை கொண்டுள்ளது. முதல் பகுதிக்கு 20 நிமிடங்களும், இரண்டாவது பகுதிக்கு 40 நிமிடங்களும் வழங்கப்படும். கல்விசார் வடிவத்தில் முதல் பிரிவாக 150 சொற்கள் கொண்ட ஒரு அறிக்கை எழுத வேண்டும். அறிக்கை தொடர்பான வரைப்படம், அட்டவணை போன்றவற்றின் ஊடாக விவரிக்கப்பட வேண்டும். பொது பயிற்சி வடிவத்தில் கடிதம் எழுதவேண்டும். இரண்டாவது பகுதி 250 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரை எழுத வேண்டும்.

பேசுதல் (Speaking)

பேசுதல் பிரிவு தோராயமாக 11 முதல் 14 நிமிடங்கள் வரை நடைப்பெறும். இது பரீட்சையாளருக்கும் அயெல்ஸ் தேர்வாளருக்கும் இடையிலான நேர்முகத் தேர்வாக நடைப்பெறும். இதுவும் மூன்று பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதி அறிமுகப் பகுதியாகும். பரீட்சையாளர் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டும். தொடர்ந்து தேர்வாளர் தன்னை அறிமுகப் படுத்திக்கொள்வதுடன் 4-5 நிமிடங்கள் சில பொதுவான கேள்விகளை கேட்பார். இவை உங்கள் (கல்வி, தொழில், பொழுதுப்போக்கு போன்ற) தனிப்பட்ட விவரங்கள் தொடர்பானதாக இருக்கும். நீங்கள் சுருக்கப் பதில்களாக பதிலளிக்கலாம். அடுத்து ஏதாவது ஒரு பொது நிகழ்வு தொடர்பான ஒரு தலைப்பு அட்டை கொடுக்கப்படும். தயார்படுத்தலுக்கு 1 நிமிடம் அவகாசம் கொடுக்கப்படும். பின் அத்தலைப்பு தொடர்பில் 2 நிமிடங்கள் பேசவேண்டும். கடைசியாக 4-5 நிமிடங்கள் ஒரு கலந்துரையாடல் இடம் பெறும்.

பேசுதல் தேர்வின் போது ஒலிப்பதிவு செய்யப்படும். இந்த ஒலிப்பதிவு தேர்வாளரின் கண்காணிப்பிற்காகவும், சிலவேளை பரிட்சையாளர் தமக்கு கிடைக்கப்பெற்ற ஒருங்கு கூட்டு மதிப்பெண்ணை எதிர்த்து மனுதாக்கல் செய்கையில் அதனை மறுப்பரீசீலனைச் செய்யவும் எடுத்துக்கொள்ளப்படும்.

நான்கு பிரிவுகளும் மொத்தம் 2:44 நிமிடங்களில் முடிவடையும். முதல் மூன்று பிரிவுகளான கேட்டல், வாசித்தல், எழுதுதல் போன்ற மூன்று பிரிவுகளும் ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து இடைவெளி இன்றி நடைப்பெறும். பேசுதல் பிரிவு மட்டும் இடைவெளி விட்டு நடத்தப்படும். அநேகமாக குறிபிட்ட அதே நாளிலேயும் நடைப்பெறலாம். அல்லது ஏழு நாட்களுக்கு முன்பாக அல்லது பின்பாகவும் நடைப்பெறலாம். தேர்வு முடிவடைந்து 13 நாட்களின் பின்னர் தேர்வின் பெறுபேறுகளை நீங்கள் பெறக்கூடியதாக இருக்கும்.

ஒருங்கு கூட்டு மதிப்பீடு
-------------------------------------------------------------------------------------
இந்தத் தேர்வில் வெற்றி (pass) தோழ்வி (fail) இல்லை. 1 முதல் 9 வரையான ஒருங்கு கூட்டு மதிப்பெண்களின் அடிப்படையில் ஒருவரின் ஆங்கில மொழிக்கான திறனை மதிப்பீடு செய்யப்படுகின்றது. ஆகக்கூடிய ஒருங்கு கூட்டு மதிப்பெண்ணாக 9 வழங்கப்படுகின்றது. 9 மதிப்பெண்களைப் பெற்றவர், முழுமையான ஆங்கில மொழி ஆளுமை மிக்கவர் (தேர்ந்த பயனர்/வல்லுநர்) என்றும், 1 எடுத்தவர் ஒருசில சொற்களை தவிர ஆங்கில மொழியை பயன்படுத்தும் திறன் முற்றிலும் அற்றவர் என்றும் மதிப்பிடப்படுகின்றது. மேலும் அட்டவணையில் பார்க்கவும்.


ஒருங்கு கூட்டு மதிப்பெண்களின் அடிப்படையில் ஒருவரின் ஆங்கில மொழிக்கானத் திறனை எவ்வாறு மதிப்பீடு செய்யப்படுகின்றது என்பதனை கீழே பார்க்கவும்.

9 = Expert User (தேர்ந்த பயனர்/வல்லுநர்)
இவர் ஆங்கில மொழியில் முழுமையான ஆளுமைப் பெற்றவர். ஆங்கில மொழியில் எதனையும் எளிதாகவும் துல்லியமாகவும் விளங்கிக்கொள்ளும், பயன்படுத்தும் முழுமைத் திறன் பெற்றவராவார்.

8 = Very Good User (மிகச் சிறந்த பயனர்)
ஆங்கில மொழியில் ஆளுமை உள்ளவர். ஆனால் மிகத்துல்லியாமான ஆளுமை இல்லை. சிற்சிறு தவறுகள் ஏற்படுகின்றன. தமக்கு பரீட்சையம் இல்லாத விடயங்களில் தவறுதலாக புரிந்துக்கொள்வதற்கான வாய்ப்பு உண்டு. ஆனால் ஆங்கில மொழியில் சிக்கலான விவாதங்களை புரிந்து கையாளும் திறன் பெற்றவர்.

7 = Good User (சிறந்த பயனர்)
ஆங்கில மொழியில் ஆளுமை உண்டு. ஆனால் அவ்வப்போது துல்லியமல்லாத, பொருத்தமற்ற பயன்பாடுகள் மற்றும் சில சந்தர்ப்பங்களில் தவறாகப் புரிந்து கொள்ளுதல் போன்றவை ஏற்படுகின்றன. இருப்பினும் பொதுவாக சிக்கலான மொழிப் பயன்பாட்டை கையாளக்கூடியவர். விவாதங்களைப் புரிந்து கொள்ளக் கூடியவர்.

6 = Competent User (திறனான பயனர்)
ஆங்கில மொழியில் பொதுவான ஒரு ஆளுமை உண்டு. இருப்பினும் சில துல்லியமற்ற பயன்பாடுகள், பொருத்தமற்ற பயன்பாடுகள், தவறாக புரிந்துக்கொள்ளல் போன்றன உள்ளன. தமக்கு பரீட்சையாமான சூழல்களில் சிக்கலான மொழிப்பயன்பாட்டை புரிந்துக்கொள்ளும், பயன்படுத்தும் திறன் உண்டு.

5 = Modest User (அளவான பயனர்)
ஆங்கில மொழி ஆளுமை ஓரளவு உண்டு. தவறுகள் பல ஏற்படுகின்றன. ஆனால் பல சந்தர்ப்பங்களில் பொருளை மேலோட்டாமாக புரிந்துக்கொள்ளும் திறன் உண்டு. தமது துறையில் அடிப்படையான தொடர்புகளை கையாளக்கூடியவர்.

4 = Limited User (குறைந்த அளவான பயனர்)
பழக்கமான சூழல்களுக்கான அடிப்படை மொழி திறன் உண்டு. புரிந்துக்கொள்வதிலும், தமது கருத்தை வெளிப்படுத்துவதிலும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. சிக்கலான மொழியமைப்பை பயன்படுத்த முடியாதவர்.

3 = Extremely Limited User (மிகக் குறைந்த அளவிளான பயனர்)
மிகவும் பரீட்சையமான சூழல்களில் மட்டும் பொதுவான பொருளை புரிந்துக்கொள்ளக் கூடியவர். தொடர்பாடல்களின் போது அடிக்கடி இடைமுறிவு ஏற்படுகின்றது.

2 = Intermittent User (அவ்வப்போது பயன்படுத்தும் பயனர்)
மிகவும் அடிப்படையான ஒரு சில சொற்களை தமக்கு பழக்கப்பட்ட சூழல்களில் பயன்படுத்துவதைத் தவிர, ஆங்கில மொழியில் தொடர்பாடல்கள் எதனையும் மேற்கொள்ளல் இவருக்கு சாத்தியமில்லை. ஆங்கில மொழியில் பேசுதல், எழுதுதல், புரிந்துக்கொள்ளல் போன்றவற்றில் மிகவும் கடினப்படுபவர்.

1 = Non-User (பயன்படுத்தாதவர்)
அடிப்படையில் ஆங்கில மொழியை பயன்படுத்தும் திறன் அற்றவர். ஒருசில ஒற்றைச் சொற்கள் மட்டும் தெரியும்.

0 = No Attempt (பரீட்சையை மேற்கொள்ளவில்லை)
மதிப்பீடு செய்யும் அளவில் தகவல்கள் அளிக்கப்படவில்லை.

TOEFL – டோபல் தேர்வை தெரிந்து கொள்ளுங்கள்


ஆங்கில திறனை மதிப்பிடுவதற்கான சர்வதேச தேர்வுகளில் டோபல் தேர்வு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
சர்வதேச பல்கலைக்கழகங்களில் இடம்பெறுவதற்கு நமக்கு உதவும் காரணிகளில் டோபல் தேர்வு மதிப்பெண்ணும் முக்கியமான ஒன்று. ஆங்கில பிரியர்களிடையே அத்தேர்வைப் பற்றிய ஆர்வம் எப்போதும் குறையாமல் இருக்கும். எனவே தற்போது அத்தேர்வை பற்றி இங்கே விரிவாக அலசலாம்.
டோபல் தேர்வு  (TOEFL)
கடந்த 1965 -ஆம் ஆண்டு முதல் இந்த தேர்வானது, கல்வி தேர்வு சேவை என்ற தனியார் லாபநோக்கமற்ற அமைப்பாலும், கல்லூரி வாரியத்தலும் நிர்வகிக்கப்படுகிறது.  இந்தத் தேர்வைப் பற்றி நீங்கள் முந்தைய தலைமுறையினரிடம் விசாரித்தால் அந்த தேர்வில் முன்பு இருந்த நிலையைவிட, தற்போது அபரிமிதமான மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதை தெரிந்து கொள்ளலாம்.
தாளில் எழுதும் தேர்வாக இருந்த இது, 1998 -இல் கணினி மயமாக்கப்பட்டதாகவும், 2005 -இல் இணைய மயமாக்கப்பட்டதாகவும் ஆனது. ஆனால் ஈரான், ஈராக், கென்யா, மியான்மர், நார்வே, ரஷ்யா, தென்ஆப்ரிக்கா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் சில குறிப்பிட்ட நிலையங்களில் தாள்வழி தேர்வு குறிப்பிட்ட தேதிகளில் இன்றும் நடைபெற்று வருகிறது.
தேர்வு எழுதும் முறை
தேர்வுக்கு முன்னதாக முதலில் இடத்தை முக்கியமாக தேர்வுசெய்து கொள்ள வேண்டும். ஏனெனில் இடத்தை வைத்து தாள்வழி தேர்வா? அல்லது இணையவழி தேர்வா? என்பதை முடிவுசெய்து கொள்ளலாம். இணையவழி தேர்வானது, படித்தல், கவனித்தல், பேசுதல் மற்றும் எழுதுதல் போன்ற தேர்வின் அனைத்து பிரிவுகளையும் முக்கியமாக எடுத்துக்கொண்டு மதிப்பிடுகிறது. இணையவழி தேர்வானது ஒருங்கிணைந்த திறன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.
தேர்வின் மொத்த நேரம் 4 மணிகள் மற்றும் ஒரே நாளில் எழுதப்பட வேண்டும். கணினிவழி தேர்வு எழுத நீங்கள் கணினியின் சில அம்சங்களைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும். தேர்வு எழுதுகையில் நேரம் பார்த்தல், அடுத்தப் பக்கத்திற்கு செல்லுதல், கேட்புமுறை கேள்விகளுக்கு ஒலியை சரிசெய்தல், பத்திகளை விரிவாக படித்தல், பேசுமுறை தேர்வில் ஒலிப்பானை பயன்படுத்தல் போன்ற பல விஷயங்களுக்கு கணினி அறிவு அவசியம்.
பேச்சு தேர்வில் உங்கள் பதில்கள் ஆன்லைன் மூலமாக மதிப்பீட்டு மையத்திற்கு சென்றுவிடும். எழுதுதல் பிரிவு இரு பிரிவுகளைக் கொண்டுள்ளது. முதல் பிரிவில் நீங்கள் படித்த மற்றும் கேட்டவற்றுக்கு பதிலை தட்டச்சு செய்ய வேண்டும். இரண்டாம் பிரிவில் உங்கள் கருத்தை மையமாக வைத்து ஒரு கட்டுரை எழுத வேண்டும். மேற்கூறிய பிரிவுகள் இரண்டு, மூன்று அல்லது மொத்தமாக நான்கு பிரிவுகளின் கேள்விகளையும் கொண்டிருக்கும்.  இது எதை உணர்த்துகிறது என்றால், பத்தியை நீங்கள் படிக்க வேண்டும், தலைப்பை பற்றிய சிறிய விரிவுரையை நீங்கள் கேட்க வேண்டும்.
பின்னர் உங்கள் பதிலை வாயால் சொல்லவோ அல்லது எழுதவோ வேண்டும். இணையவழி தேர்வுக்காக பதிவு செய்பவர்கள், அதை முடித்தப்பின்னர், தேர்வின் நான்கு பிரிவுகளுடைய அணுகலையும் பெற முடியும். இத்தகைய மாதிரி முறையில், படித்தல் மற்றும் கவனித்தல் பிரிவுகளுக்கு நாமே பதில் கூறலாம், எழுதுதல் மற்றும் பேசுதல் பிரிவுகளுக்கு மாதிரி பதில்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
தாள்வழி தேர்வுக்கு 2.30 மணிகள் கொடுக்கப்படும். பிரிவுவாரியாக இந்த நேரம் பிரிக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் உள்ள கேள்விகளை தேர்ந்தெடுத்து எழுதலாம். தாள்வழி தேர்வில் ஆங்கில எழுத்து தேர்வு தேவை.

தேர்வு மற்றும் உங்கள் மதிப்பெண்ணை கணக்கிடுதல்:

டோபல் தேர்வுக்கான மதிப்பெண் வெளிப்படையானது மற்றும் நம்பகமானது. எப்படியெனில், தேர்வெழுதியவரின் ஆங்கில பேச்சுத்திறன் பதியப்பட்டு, தேர்வு நிலையத்தில் இருக்கும் ஒரே நிபுணருக்கு பதிலாக, ஆறு நிபுணர்களால் மதிப்பாய்வு செய்யப்படுகிறது. இந்த தேர்வின் நம்பகத்தன்மை, வெளிப்படைத் தன்மை மற்றும் தனிச்சிறப்புகளுக்காகவே இதை பலர் தேர்வு செய்வதாக, கல்வி தேர்வு சேவை அமைப்பு
கூறுகிறது. உலகெங்கிலும் கிட்டத்தட்ட 7500 கல்வி நிறுவனங்கள் இந்த தேர்வு மதிப்பெண்களை, மாணவர்களை சேர்ப்பதற்கான அளவுகோலாக எடுத்துக்கொள்கின்றன.
இவற்றில் உலகின் முதன்மையான 100 பல்கலைக்கழகங்களும் அடங்கும்.
மதிப்பீட்டு முறையில், கல்வி தேர்வு சேவை அமைப்பானது, மனித திருத்துனர்களையும் மற்றும் தானியங்கு திருத்து முறைகளையும் பயன்படுத்துகிறது. தேர்வில் பலதரப்பட்ட அம்சங்கள், சிந்தனைத் திறன் மதிப்பீடு மற்றும் ஒழுங்குமுறைகளை மதிப்பிட்டு வரையறுக்க மனித திருத்துநர்கள் முக்கியம் என்று கல்வி தேர்வு சேவை அமைப்பு நிர்வாகிகள் கூறுகிறார்கள்.
கல்வி தேர்வு சேவை அமைப்பின் திருத்துநர்கள் சிறப்பாக பயிற்சியளிக்கப்பட்டவர்கள், சான்றிதழ் தேர்வு தேறியவர்கள். தேர்வை முடித்தவுடன், தேர்வு எழுதியவர் தனது மதிப்பெண்களை ரத்துசெய்ய முடியும். ஆனால் குறிப்பிட்ட ஒரு பிரிவுக்கான மதிப்பெண்களை மட்டும் ரத்துசெய்ய முடியாது. மதிப்பெண்ணை
ரத்துசெய்வதன் மூலம் உங்களுக்கும் அல்லது எந்த கல்வி நிறுவனங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்படாது. அதேசமயம் ரத்துசெய்த மதிப்பெண்களை மீண்டும் பெறலாம். ஒருவர் தேர்வு முடித்த 14 மணி நேரங்களுக்குள் முடிவுகளை ஆன்லைனில் பெறலாம்.
தேர்வுக்கான உதவிக்குறிப்புகள்
பல தரப்பு செய்திகளைக் கொண்ட உபகரணங்கள், பாடப்புத்தகங்கள் மற்றும் செய்தித்தாள்களை தொடர்ந்துப் படிக்க வேண்டும். உங்கள் ஆங்கில வார்த்தை வளத்தை அதிகரித்து கொள்ளவும். மேலும் ஆங்கில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், படங்கள் பார்ப்பதன் மூலமும், ஆங்கில வானொலி நிகழ்ச்சிகளை கேட்பதன்

பெண்களின் பாலியல் பிரச்சனைகளும் தீர்வுகளும் (3)


Print E-mail
  பெண்களின் பாலியல் பிரச்சனைகளும் தீர்வுகளும் (3)  
26.. குடும்பத்தின் சுமுகம் கெடாத வகையில் எனது தவிப்பை, எதிர்பார்ப்பை அவருக்குப் புரியவைப்பது எப்படி? அல்லது எனது எதிர்பார்ப்புகளைத் தவிர்ப்பது எப்படி?"
27. உணவில் புளி சேர்த்தால், உடலின் சூடு அதிகமாகி, விந்தணுக்கள் இறந்துவிடும் என்பது உண்மையா?
28. வயது 30. எடை 65 கிலோ. மார்பு வளர்ச்சி இல்லை. சிகிச்சை ஏதாவது உள்ளதா?
29. குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்துகொண்ட பிறகு அடிக்கடி கழிப்பறைக்கு செல்ல வேண்டியிருக்கிறது. தீர்வு என்ன?
30. கரப்பப்பையை எடுத்த பிறகு எடை கூடி விட்டது. குறைக்க வழி என்ன?
31. ‘முதல்முறை கருக்கலைப்பு செய்தால், அதன்பிறகு குழந்தை பிறக்கவே வாய்ப்பில்லாமல் போகும் அபாயம் உண்டு’ என்கிறார்கள். உண்மையா?
32. குடும்பக் கட்டுப்பாடு செய்தால் அது தாம்பத்ய உறவைப் பாதிக்குமா?
33. கர்ப்பப் பையை எடுத்தபோது ஓவரீஸையும் சேர்ந்து எடுப்பது தவறா?
34. கருத்தரிக்காமல் போவதற்கு கனத்த சரீரமும் காரணமாகுமா?
35. பாவாடை கட்டும் இடத்திலும் மற்றும் வயிற்றுக்குக் கீழ்ப் பகுதியிலும் மிகவும் அரிப்பு எடுக்கிறது. இந்த அவஸ்தையிலிருந்து விடைபெற வழி என்ன?
  பெண்களின் பாலியல் பிரச்சனைகளும் தீர்வுகளும் (3) 

கேள்வி 26 : பெற்றோர் நிச்சயித்த திருமணம் எங்களுடையது. கணவரின் படிப்பு, உத்யோகம், குடும்பம் என எல்லாவற்றிலும் திருப்தியடைந்த பின்னரே திருமணத்துக்கு சம்மதம் சொன்னேன். ஆனால், மணமான இந்த எட்டு மாதங்களில் அவருக்கும் எனக்கும் கேரக்டர், ரசனை அனைத்துமே நேர்மாறானதாக இருப்பதாக உணர்கிறேன். குடும்பத்தின் சுமுகம் கெடாத வகையில் எனது தவிப்பை, எதிர்பார்ப்பை அவருக்குப் புரியவைப்பது எப்படி? அல்லது எனது எதிர்பார்ப்புகளைத் தவிர்ப்பது எப்படி?"
பதில் : "பெற்றோர் நிச்சயித்த திருமணங்கள் மட்டுமல்ல, காதல் திருமணங்களிலும் மணமான சில வருடங்களுக்கு கணவன் – மனைவி இருவரின் எதிர்பார்ப்புகளும் பரஸ்பரம் ஏமாற்றம் அடைவது இயல்புதான். இதை முதலில் நீங்கள் புரிந்து கொண்டால், சமூகத்தின் பொதுத்தன்மையில் உங்களது தனிப்பட்ட குடைச்சலாக நீங்கள் பதற்றப்படுவது சற்றே மட்டுப்படும்.

இப்பிரச்னையைப் பொறுத்தவரை, சொல்வதற்கு எளிதானதும் நடைமுறையில் சற்றுக் கடினமானதுமான தீர்வுஸ அட்ஜஸ்ட் செய்து போவதுதான். விட்டுக் கொடுக்கும்போது இழப்பதைவிட பெறுவதே அதிகமாக இருக்கும் என்பதை அனுபவப்பூர்வமாக உணர முயலுங்கள். காலக்கெடுவை நெருக்காது, உங்களவரை புரிந்து கொள்வதையும், அதன் பின்னணி சுவாரஸ்யங்களை அறிவதையும் ஒரு புதிர் அவிழ்க்கும் ஆர்வத்தோடு மேற்கொண்டு பாருங்கள்.
அதேபோல, ‘உங்கள் கணவரின் ஆர்வங்கள், ரசனைகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் நீங்கள் இருக்கிறீர்களா?’ என்ற கேள்விக்கு நேர்மையாக விடை காண முயலுங்கள். அவரது எதிர்பார்ப்புகளை நீங்கள் அறிய முற்படும்போது, தானாக அவரும் உங்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய விழைவார். இது ஒரு ரேடியோ ட்யூன் செய்யப்படுவதுபோல இல்லறத்தில் இயல்பாக மலரும்.
எல்லாவற்றையும்விட, நீங்கள் இருவரும் மனம் விட்டுப் பேசுவது முழுமையாகக் கைகொடுக்கும். ஒருவேளை உங்களின் இந்த எல்லா முயற்சிகளும் பலன் தரத் தவறினால், குடும்ப நல ஆலோசகர் ஒருவரின் உதவியுடன் உங்கள் எதிர்பார்ப்புகளை, சங்கடங்களை எல்லாம் உங்களுடைய வாழ்க்கைத் துணைக்கு பக்குவத்துடன் அடையாளம் காட்டலாம்.
‘எல்லா விஷயங்கள்லயும் அவரும் நானும் நேரெதிர்’ என்று கவலைப்படும் பெண்கள், இறுதியாக இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். ‘ஐடியல் பார்ட்னர்கள்’ சினிமாவில், சீரியலில் மட்டுமே அமைவார்கள். நடைமுறையில், ஒருமித்த ரசனை உள்ள தம்பதியரைவிட வெவ்வேறு தளங்களில் ரசனை உள்ளவர்களின் தாம்பத்யமே வெகுகாலத்துக்கு சுவாரஸ்யமளிக்கும். ஆம்ஸ ஒருமித்த ரசனைகள் நாள்போக்கில் புதுமையின்றி போரடித்துப் போகலாம். எனவே, புலம்பலை விட்டுவிட்டு ஒருவருக்கொருவர் புரிதலை துரிதமாக்குவதன் மூலம் உங்களை செம்மையான வாழ்க்கைத் துணையாக மேம்படுத்திக் கொள்ளுங்கள்!"
(பதிலளித்தவர் : டாக்டர் எஸ்.ஹர்ஷவர்தன், மனநல மருத்துவர், வேலூர்)


கேள்வி 27 : ‘‘எங்களுக்குத் திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆகிறது. இன்னும் கரு உண்டாகவில்லை. என் உறவினர் ஒருவர் ‘உடலின் அதிக சூடு காரணமாக விந்தணுக்கள் இறக்கக்கூடும். சூட்டை அதிகரிக்கிற புளியே உணவில் சேர்க்கக் கூடாது’ என்கிறார். என் வீட்டிலோ புளியோதரை, புளிக்குழம்பு போன்றவற்றை அடிக்கடி செய்கிறார்கள். எங்களைப் பொறுத்தவரை தாம்பத்ய உறவில் எந்தப் பிரச்னையும் இல்லை. மாதவிலக்கான நாளில் இருந்து சரியாக 14\வது நாள் உறவு கொண்டும் பலன் இல்லை.

என் கேள்விகள் இதுதான்...
1. உணவில் புளி சேர்த்தால், உடலின் சூடு அதிகமாகி, விந்தணுக்கள் இறந்துவிடும் என்பது உண்மையா?
2. நாள் கணக்கு பார்த்து உறவுகொண்டும் ஏன் எனக்கு இன்னும் கருத்தரிக்கவில்லை?
3. நாங்கள் மகப்பேறு மருத்துவரை இப்போதே அணுகலாமா? அல்லது இன்னும் சில நாட்கள் காத்திருக்கலாமா?’’
பதில் : ‘‘உங்கள் வயது என்னவென்று நீங்கள் குறிப்பிடவில்லை. 24 வயதுக்குள்தான் என்றால் நீங்கள் தாராளமாக இன்னும் 2 வருடங்கள் காத்திருக்கலாம். மற்றவர்கள், ஸ்பெர்ம் அனலைசஸ் அதாவது விந்தணு, முட்டை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

30-ஐ நெருங்கியவர்களாகவோ, 30-க்கு மேற்பட்டவர்களாகவோ இருந்தால் இனியும் தாமதிக்காமல் உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும்.
சாப்பாட்டில் புளி அதிகம் சேர்ப்பதால் எல்லாம் தாம்பத்ய உறவிலோ, விந்தணுக்கள் உற்பத்தியிலோ எந்த பாதிப்பும் இருக்காது. கவலை வேண்டாம்.
ஆண்களுக்கு, உடம்பில் சூடு அதிகமானால் விந்தணுக்கள் இறந்துவிடும் என்பது உண்மைதான். தொழிற்சாலைகளில், இயந்திரங்களின் அருகில் பணிபுரிகிறவர்களுக்கு உடம்பில் நேரடியாக சூடுபடுவதால், விந்தணுக்களின் எண்ணிக்கை ஓரளவு குறைய வாய்ப்பு இருக்கிறது. சிலருக்கு, ரத்த நாளங்களில் ஏற்படுகிற சில மாற்றங்களால் உடம்புக்குள் சூடு அதிகரித்து, அதனாலும் விந்தணுக்கள் குறையலாம்.
மற்றபடி, பொதுவாக, திருமணம் முடிந்து 5 அல்லது 10 வருடங்களாகியும் குழந்தை இல்லாததால், மருத்துவ சிகிச்சை எடுக்கிறவர்கள் மட்டுமே, மருத்துவரின் அறிவுரைப்படி, நாட்களை கணக்கிட்டு தாம்பத்யத்தில் ஈடுபட வேண்டியிருக்கும். இப்போதுதான் திருமணம் முடிந்திருக்கிறது என்கிறீர்கள். தாம்பத்ய உறவிலும் பிரச்னை இல்லை என்பதால், கருத்தரிக்க இன்னும் கொஞ்ச காலம் காத்திருப்பதில் தப்பே இல்லை!’’
(பதிலளித்தவர் : டாக்டர் ஸ்ரீகலா பிரசாத், மகப்பேறு மருத்துவர், சென்னை)


கேள்வி 28 : ‘‘என் வயது 30. எடை 65 கிலோ. இன்னும் திருமணம் ஆகவில்லை. என் உடம்பிற்கு தகுந்த மார்பகங்கள் உள்ளன. ஆனால், அவற்றில் காம்புகளின் வளர்ச்சி இல்லை. தடவிப் பார்த்தால் மட்டுமே தெரியும். அதுவும் சில நேரங்களில் உள்ளே அமிழ்ந்து விடுகிறது. அப்படியே வெளியே வந்தாலும் ஒரு துளியூண்டுதான் வருகிறது. தினமும் காலையில் இழுத்துவிட்டுப் பார்த்தும், எந்த முன்னேற்றமும் இல்லை.

இதேபோன்ற ஒரு பிரச்னைக்கு ஒரு பதிலில் சிரின்ஜ் மூலம் இழுத்துவிடச் சொல்லியிருந்தார்கள். அது பாலூட்டும் ஒரு தாய்க்கு அளிக்கப்பட்ட பதில். நான் அப்படிச் செய்யலாமா? நான் வீட்டிலேயே செய்யக்கூடிய சிகிச்சை ஏதாவது உள்ளதா?
என்னுடைய தோழி பார்த்துவிட்டு, ‘இப்படி இருக்காதே.. நீளமாகத்தானே இருக்கும்’ என்கிறாள். இதனால் எனக்கு கல்யாணம் செய்துகொள்ள மிகவும் பயமாக இருக்கிறது. என்னுடைய இந்த வயதிலாவது எனக்கு திருமணம் நடக்க வேண்டும். உங்கள் பதிலில்தான் என்னுடைய வாழ்க்கையே உள்ளது. டாக்டரிடம் சென்று கேட்கவும் கூச்சமாக இருக்கிறது. என்னுடைய நிலைமையை உணர்ந்து, பதில் தாருங்களேன்..’’
பதில் : ‘‘உங்களுக்கு உள்ளிழுக்கப்பட்ட மார்பு காம்பு (Retract-d-Nipple) என்கிற பிரச்னை உள்ளது.

நீங்கள் கேட்டிருந்ததுபோல உங்கள் மார்புக் காம்பை வெளியில் இழுத்து விடுவதுதான் இதற்கு சிறந்த சிகிச்சை. 20 சிசி ப்ளாஸ்டிக் சிரிஞ்சின் (20cc Plastic Syringe) முனையை வெட்டிவிட்டு, பின்னர் சிரிஞ்சின் உள்பகுதியைத் திருப்பிப் போட்டு மார்பில் நன்றாகப் பொருத்தி இழுத்தால் ஏற்படும் நெகடிவ் அழுத்தத்தில் காம்புகள் நன்றாக வெளியில் வரும் (எப்படிச் செய்வது என்கிற சந்தேகம் இருந்தால் மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசியுங்கள்). இதைத் தொடர்ந்து செய்யுங்கள்.
நீங்கள் தாராளமாக திருமணம் செய்துகொள்ளலாம். பிரசவத்திற்குப் பின் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க சிரமமிருந்தால் நிப்பிள் ஷீல்டு எனப்படுகிற நிப்பிள் உறை உபயோகிக்கலாம். அல்லது பாலை எடுத்து பாலாடை அல்லது ஸ்பூனில் ஊற்றிக் கொடுக்கலாம்..’’
(பதிலளித்தவர் : டாக்டர். ஆர். கலைச்செல்வி, மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவ நிபுணர், சேலம்)


கேள்வி 29 : ‘‘என் வயது 31. எடை 86 கிலோ. திருமணமாகி 12 வருடங்கள் ஆகிறது. ஏழு மற்றும் பதினோரு வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள். ஒரு வருடத்துக்கு முன்பு குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்துகொண்டேன்.

என் இரண்டாவது பையன் பிறந்த பிறகு அடிக்கடி கழிப்பறைக்கு போக ஆரம்பித்தேன். டாக்டரிடம் விசாரித்தபோது, காரம் அதிகம் இல்லாமல் சாப்பிடச் சொன்னார். நானும் அப்படித்தான் சாப்பிட்டு வருகிறேன். இருந்தாலும் இந்தத் தொந்தரவு நீங்கவில்லை.
காலையில் எழுந்தவுடன் நான்கு முறையாவது போகிறேன். மதியம், இரவு, சாப்பிட்டவுடன் போகிறேன். இதனால் என்னால் வெளியில் விசேஷங்களுக்கு எங்கும் போக முடியவில்லை. இதற்கு நீங்கள்தான் ஒரு நல்ல தீர்வு சொல்ல வேண்டும்..’’
பதில் : ‘‘உங்களுடைய பிரச்னைக்கும் குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்துகொண்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ‘ஒரு நாளைக்கு காலையில் நான்கு தடவை போகுது’ என்று சொல்வதைப் பார்க்கும்போது உங்களுக்கு உடல் ஒவ்வாமை நோய் இருக்கலாம். அல்லது பெருங்குடலில் ஏதாவது கிருமிகள் ஒட்டிக் கொண்டிருந்தாலும் இப்படி ஆகலாம். உணவில் புரோட்டின் அதிகம் இருந்தாலும் இந்தப் பிரச்னை வரும். இது தவிர, டென்ஷனும் காரணமாக இருக்கலாம்.

இதை நீங்கள் உடனே கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம். குடல் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட மருத்துவரை அணுகி, ரத்தப் பரிசோதனை, என்டாஸ்கோப்பி, க்ளானாஸ்கோப்பி பரிசோதனைளை செய்து, இதற்கு என்ன காரணம் என்பதைக் கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொண்டால் ஒரே வாரத்தில் இதற்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம்.
உங்கள் எடை அதிகம் இருப்பதால் சர்க்கரை நோய் இருக்கிறதா என்பதையும் பரிசோதனை செய்து தெரிந்து கொள்ளுங்கள்..’’
(பதிலளித்தவர் : டாக்டர். கே.ஆர்.பிரகாசம், வயிறு மற்றும் குடல்நோய் மருத்துவ நிபுணர், சேலம்)


கேள்வி 30 : ‘‘என் வயது 48. பத்து வருடங்களுக்கு முன் கர்ப்பப் பையை எடுத்துவிட்டேன். அதன்பிறகு எனது எடை கூடிவிட்டது. இப்போது 70 கிலோ. தினமும் காலையில் ஒரு மணிநேரம் வாக் போகிறேன். எனது உடம்பைவிட என் கைகள்.. குறிப்பாக வலது கை, முழங்கைக்கு மேல் அதிக சதையுடன் தடியாக உள்ளது. என்னால் எடை எதுவும் தூக்க முடிவதில்லை. தூக்கினால் கை வீங்கிவிடுகிறது. முழங்கைக்கு கீழே கை மெலிதாக உள்ளது. இதைச் சரிப்படுத்த நான் என்ன செய்ய வேண்டும்?

எனது மகளுக்கும் இதே பிரச்னைகள் இருக்கின்றன. அவளுக்கு வயது 22. ஏன் இப்படி?’’
பதில் : ‘‘உங்களுடைய பிரச்னைக்கு ‘லைப்போடிஸ்ப்ரோஃபி என்று பெயர். குறிப்பிட்ட ஒரு இடத்தில் அளவுக்கு அதிகமாகக் கொழுப்பு சேர்வதை இப்படிக் குறிப்பிடுவோம். பொதுவாக, பெண்களுக்கு தொடையிலும் ஆண்களுக்கு வயிற்றுப் பகுதியிலும் இப்படி கொழுப்பு சேர்வதுண்டு. மிக அரிதாக சிலருக்கு உங்களுக்கு இருப்பது போல் ஆகும்.

ஒரு முக்கியமான விஷயம்.. ‘கர்ப்பப் பையை எடுப்பதால் உடல் பருமன் ஆகும்’ என்பது காலங்காலமாக நம்பப்படுகிற பொய். கர்ப்பப் பையை எடுத்ததும் பெண்களின் செயல்பாடு குறைந்துவிடுகிறது. சும்மா உட்கார்ந்து டி.வி. பார்ப்பது, நொறுக்குத்தீனி சாப்பிட்டபடியே இருப்பது போன்றவற்றால்தான் எடையும் கொழுப்பும் கூடுகிறது.
நீங்கள் தைராய்டு சுரப்பி, சர்க்கரை, கொலஸ்டிரால் ஆகிய பரிசோதனைகளை செய்து, ஹார்மோன் சிறப்பு மருத்துவர் ஆலோசனையுடன் மாத்திரைகள் எடுக்க வேண்டும். நீங்கள் மெனோபாஸ்க்கு முன்னாலேயே கர்ப்பப் பையை எடுத்திருப்பதால் எலும்பின் அடர்த்தியை பரிசோதிக்கும் ‘டெக்ஸா’ என்கிற பரிசோதனையை மேற்கொள்வது நல்லது.
உங்கள் மகளுக்கும் தைராய்டு பரிசோதனை செய்ய வேண்டும். அவரது தினசரி செயல்பாடு மற்றும் உணவுப் பழக்கங்களிலும் கவனம் தேவை. உணவில் கால்சியம் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்..’’
(பதிலளித்தவர் : டாக்டர். கிருஷ்ணா சேஷாத்ரி, ஹார்மோன் சிறப்பு நிபுணர், சென்னை)


கேள்வி 31 : ‘‘எனக்கு வயது 27. என் கணவருக்கு வயது 28. திருமணமாகி நான்கு மாதங்களாகிறது. நாங்கள் என் கணவரின் பெற்றோருடன் வசித்து வருகிறோம். எங்கள் குடும்ப சூழ்நிலை, பொருளாதார சூழ்நிலை காரணமாக குழந்தைப் பிறப்பைத் தள்ளிப் போடலாம் என்று முடிவெடுத்து இருந்தோம். ஆனால், தற்போது கருத்தரித்து உள்ளேன். கருக்கலைப்பு செய்யலாம் என்றால் உறவினர்களும் தோழிகளும் ‘முதல்முறை கருக்கலைப்பு செய்தால், அதன்பிறகு குழந்தை பிறக்கவே வாய்ப்பில்லாமல் போகும் அபாயம் உண்டு’ என்கிறார்கள். எனக்குக் குழப்பமாக உள்ளது. உங்களது ஆலோசனைக்காகக் காத்திருக்கிறேன்.’’
பதில் : ‘‘உங்கள் தோழிகளும் உறவினர்களும் சொல்வதே சரி. ஏனென்றால் கருக்கலைப்பு ஆபரேஷன் செய்யும்போது கர்ப்பப்பையின் இரண்டு புறமும் உள்ள ஃபெலோபியன் ட்யூபில் அடைப்பு ஏற்படும். அதன் காரணமாக மலட்டுத் தன்மை ஏற்படும் வாய்ப்பு அதிகம். எனவே, முதல் குழந்தைக்கு தாயாகும் முன்னரே கருக்கலைப்பு செய்வது வரவேற்கக் கூடிய விஷயமல்ல.

அதோடு, குழந்தை பெற்றுக்கொள்ள உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் இதுதான் சரியான வயது. குழந்தை பிறப்பைத் தள்ளிப் போடவேண்டாம். செலவுகளை சுருக்கி, குழந்தைப் பிறப்பைத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள்!’’
(பதிலளித்தவர் : டாக்டர் ரஜினி குமார், மகப்பேறு மருத்துவர், கோவை)


கேள்வி 32 : ‘‘எனக்குத் திருமணமாகி ஆறு வருடங்களாகிறது. இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. தற்போது என் உடல்நலனை உத்தேசித்து, என் கணவர் குடும்பக் கட்டுப்பாடு அறுவைசிகிச்சை செய்துகொள்ள தீர்மானித்து இருக்கிறார். ஆனால், அதில் அவருக்கு சில சந்தேகங்கள்...
குடும்பக் கட்டுப்பாடு செய்தால் அது தாம்பத்ய உறவைப் பாதிக்குமா? சிகிச்சைக்குப் பிறகு ஆண் உறுப்பிலிருந்து விந்து வெளியேறாதே... பிறகு எப்படி திருப்தியான வாழ்க்கை இருக்க முடியும்? ஆண்களுக்கு அறுவைசிகிச்சை எளிமையானதா? எத்தனை நாட்கள் மருத்துவமனையில் தங்கவேண்டும்? எந்தெந்த முறைகளில் இந்த சர்ஜரி செய்யப்படுகிறது? எது சிறந்ததது? சற்று விரிவாகவே பதில் சொல்ல வேண்டுகிறேன்.’’

பதில் : ‘‘உங்கள் கணவர் ‘வாசக்டமி’ என்கிற அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம். அறுவை சிகிச்சைக்குப் பின் ‘கர்ப்பம் தரிக்குமே’ என்ற பயம் இருக்காது என்பதால் செக்ஸ் உணர்வு கூடுமே தவிர, குறையாது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு விந்து வெளியேறாது என்பதிலும் உண்மையில்லை. அந்த திரவத்தில் கரு உருவாக்கும் உயிரணுக்கள் இருக்காது, அவ்வளவுதான்!
இந்த அறுவைசிகிச்சை எளிமையானதுதான். இதற்காக மருத்துவமனையில் ஒரே ஒரு நாள்தான் தங்கவேண்டியிருக்கும். வாசக்டமி தவிர, வேறு எந்த குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை முறையும் ஆண்களுக்குக் கிடையாது.’’
(பதிலளித்தவர் : டாக்டர். சபிதா ஸ்ரீதரன், மகப்பேறு சிறப்பு மருத்துவர், மதுரை)


கேள்வி 33 :‘என் வயது 47. எனக்கு 22 வயதில் திருமணம் ஆனது. 23 வயதில் 3 மாத அபார்ஷன். 50 நாட்கள் தொடர் ரத்தப்போக்கு இருந்தது. சுத்தப்படுத்திய பிறகு பொறுக்கமுடியாமல் டாக்டரிடம் போக, ‘ஏன் உடனே வரவில்லை?’ என்று திட்டினார். பின் உடல் குணம் அடைந்ததும் பத்து மாதத்தில் குழந்தை பிறந்தது.

பிறகு 10 வருடம் கழித்து மீண்டும் அபார்ஷன். பின் 20 நாளுக்கு ஒரு முறை மாதவிலக்கு. அதீத ரத்தப்போக்கு என்று தொடர்ந்தது. அப்படியே கஷ்டத்துடன் பல வருடங்கள் கழிந்தபிறகு சமீபத்தில் ஐந்து மாதங்களுக்கு முன் கர்ப்பப் பையை நீக்கினார்கள். அதனுடன் ஓவரீஸையும் எடுத்து விட்டார்கள். அதை எடுத்திருக்கக் கூடாதோ என்று என் மனதில் ஒரு எண்ணம்.
ஏனெனில், இந்த 5 மாதத்தில் என் முகத்தில் ஆங்காங்கே வரிகள் தெரிகின்றன. 5 மாதம் முன்பு இப்படியெல்லாம் இல்லை. இதைச் சரிசெய்ய க்ரீம் தடவலாமா? வேறு ஏதாவது டானிக் மாத்திரை உண்டா?’’
பதில் : ‘‘47 வயதான உங்களுக்கு கர்ப்பப் பையை எடுத்தபோது ஓவரீஸையும் சேர்ந்து எடுத்ததில் எந்தத் தவறும் இல்லை. அவற்றை எடுக்காமல் விட்டால், அதனால் பிற்காலத்தில் பிரச்னை ஏற்பட்டு மீண்டும் ஆபரேஷன் செய்யக்கூட நேரிடலாம். ஓவரீஸ் எடுத்ததால் ஏற்படும் பக்கவிளைவுகளை தவிர்க்க, நீங்கள் எடுத்துக் கொள்கிற மாத்திரைகளே போதுமானவை.

முகத்தில் ஏற்படும் கருப்பு கோடுகள், கண் களைச் சுற்றி கருவளையம் போன்றவை மெனோபாஸின் விளைவுகளாகும். அதைக் குறைப்பதற்கு ‘ஆலோவேரா’ என்கிற பொருள் அடங்கிய பல இயற்கைப் பொருட்கள் கிடைக்கின் றன. இவற்றைத் தடவுவதால் அந்தப் பிரச்னைகள் குறைய வாய்ப்பிருக்கிறது.
மேலும், புரதம் சேர்ந்த உணவு வகைகளை உட்கொள்வது நல்லது. தினமும் யோகாவும் தியானமும் செய்வதால் சோர்வு, எலும்பு பலவீனம் போன்றவற்றை பெருமளவிற்குக் குறைக்கலாம். தேவையற்ற மன உளைச்சலைத் தவிர்த்து சந்தோஷமாக இருங்கள்.’’
(பதிலளித்தவர் : டாக்டர். புஷ்பா ராஜூ, மகப்பேறு நிபுணர், நெல்லை)


கேள்வி 34 : "எனக்குத் திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகின்றன. முதல் தடவை கருத்தரித்தபோது, மூன்றாம் மாதத்தில் எதிர்பாராதவிதமாக கலைந்து போனது. உடனடியாக டாக்டரிடம் சென்று டி.என்.சி. செய்து கொண்டேன். அதற்குப் பின் கருத்தரிக்கவே இல்லை. 150 செ.மீ. உயரம், 77 கிலோ எடை என்று இருக்கிறேன். இப்படி கனத்த சரீரத்துடன் இருப்பதுதான் கருத்தரிக்காமல் இருப்பதற்கு காரணமாக இருக்குமோ என்று தோணுகிறது. தெளிவுபடுத்துங்களேன்."
பதில் : "உங்களின் பிரச்னைக்கு, அதிகப்படியான பருமனே காரணமாக இருக்கலாம் என்பது உண்மைதான். ஓவர் வெயிட்டின் காரணமாக ‘அவ்யலேஷன்’ (Ovulation) எனப்படும் சினைமுட்டை சீராக உருவாகும் சுழற்சி, தடைபட வாய்ப்புள்ளது. உங்கள் உயரத்துக்கு, நீங்கள் அதிகபட்சமாக இருக்க வேண்டிய எடை 50 கிலோதான். எனவே, டயட் மற்றும் உடற்பயிற்சிகளின் மூலம் உங்கள் எடையைக் குறைக்கும் முயற்சிகளில் இறங்குங்கள். முன்னதாக, ஒரு மகப்பேறு மருத்துவரிடம் சென்று, நீங்கள் கருவுறாமல் இருப்பதற்கான காரணம் இதுதானா என்பதை உறுதி செய்தபின், அவர் வழிகாட்டுதல்களின் கீழ் இந்தப் பயிற்சிகளில் ஈடுபடுங்கள்.

கருத்தரிக்காமல் இருப்பதற்குஸ ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள், பி.சி.ஓ. என்று வேறு காரணங்கள் கண்டறியப்பட்டால் அதற்கான முறையான சிகிச்சையை மருத்துவர் பரிந்துரைப்பார்.
குறிப்பிடப்பட வேண்டிய விஷயம். கருவுறாததற்கு நீங்கள் மட்டுமே காரணம் என்று நினைத்துக் கொண்டு உங்களுக்கு மட்டுமே சோதனைகளை செய்து கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை. உங்கள் கணவருக்கும் தேவையான பரிசோதனைகள் செய்து, அவரிடம் ஏதேனும் குறைபாடுள்ளதா என்பதையும் கண்டறிந்து, தேவையெனில் அவரை சிகிச்சை எடுத்துக் கொள்ளச் செய்யுங்கள்."
(பதிலளித்தவர் : டாக்டர் மாயா மோகன், மகப்பேறு சிறப்பு மருத்துவர், சென்னை)


கேள்வி 35 : ‘‘எனக்கு 21 வயதாகிறது. திருமணம் ஆகி நான்கு வருடங்கள் ஆகின்றன. பாவாடை கட்டும் இடத்திலும் மற்றும் வயிற்றுக்குக் கீழ்ப் பகுதியிலும் மிகவும் அரிப்பு எடுக்கிறது. அந்த இடமும் மிகவும் கறுப்பாக உள்ளது. ஐந்தரை வருடங்களாக இந்தப் பிரச்னை இருக்கிறது.

அரிப்பு எடுக்கும் இடம் புண் போல் ஆகி, மருந்து போட்டவுடன் காய்ந்து போகிறது. நான்கைந்து நாட்களில் மறுபடியும் இதே அவஸ்தை! கிரீம், மாத்திரை, மருந்து, ஆயுர்வேதம் என அனைத்தும் உபயோகப்படுத்தினேன். ஒன்றும் சரியாகவில்லை (மருத்துவரிடமும் காண்பித்தேன். ஆனால், தோல் டாக்டர் இல்லை!).
நான் வசிக்கும் இடம் கிராமப்பகுதி. தயவுசெய்து எனக்கு இந்த அவஸ்தையிலிருந்து விடைபெற வழி சொல்வீர்களா?’’
பதில் : நீங்கள் குறிப்பிட்டுள்ள இடங்களில் சருமம் கறுப்பு நிறமாக மாறப் பொதுவான காரணங்கள் மூன்று:

ஒன்று | உராய்வு. பாவாடையை மிகவும் இறுக்கமாகக் கட்டுவதால், அந்த இடத்தில் அதிகப்படியான உராய்வு ஏற்பட்டு, அதனால் கறுப்பு நிறமாக மாறுவதுடன் அரிப்பும் ஏற்படும்.
இரண்டு | படர்தாமரை போன்ற நுண்ணுயிர் தொற்று. காற்றுப் புகாத மற்றும் எப்போதும் ஈரப்பதமாகவே இருக்கும் இடங்களில் இது ஏற்படும்.
மூன்று | வியர்வை. அதிகப்படியான வியர்வையினால் கிருமிகள் உருவாகி, சின்னச் சின்னக் கொப்பளங்கள் தோன்றி, பின் அந்த இடத்தையே கறுப்பாக மாற்றிவிடும்.
இந்தக் காரணங்களில் ஏதேனும் ஒன்றுதான் உங்கள் பிரச்னைக்குக் காரணமாக இருக்கும். அது, எது என்று கண்டு பிடித்து, அதை நிவர்த்தி செய்யுங்கள். மேலும், இந்த மூன்றில் உங்கள் பிரச்னைக்கு எது காரணமாக அமைந்தாலும், அதற்கு ‘Lobate-GM’ என்ற கிரீமை, ஒரு நல்ல தோல் மருத்துவரைக் கலந்தாலோசித்தபின், மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குத் தொடர்ந்து காலை வேளையிலும், இரவிலும் பயன்படுத்தி வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
இதனால் எந்தப் பக்கவிளைவுகளும் ஏற்படாது என்பதோடு, அரிப்பும் அடங்கி, உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் கறுப்பு நிறமும் மறைந்துவிடும்!
(பதிலளித்தவர் : டாக்டர் ரத்னவேல்,தோல் சிறப்பு மருத்துவர், மதுரை)

பிரபஞ்சம் விரிவடைகிறது என்பது உண்மையே! Print E-mail
  பிரபஞ்சம் விரிவடைகிறது என்பது உண்மையே!  

"இதன் பின்னர் பூமியை விரித்தான்." (குர்ஆன் 79:30)
"வானத்தை நாம் ஆற்றலைக் கொண்டு படைத்தோம்: நிச்சயமாக நாம் அதை விரிவாக்கம் செய்பவராவோம்." (குர்ஆன் 51:47)
"பூமியை நாம் விரித்தோம்: நாம் அழகுற விரிப்பவர்கள்." (குர்ஆன் 51:48)
"பூமியை நாம் விரித்து அதில் உறுதியான, மலைகளை நிலைப் படுத்தினோம்; ஒவ்வொரு பொருளையும் அதற்குரிய அளவின்படி அதில் நாம் முளைப்பித்தோம்." (குர்ஆன் 15:19)
"மேலும், அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து. அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும் உண்டாக்கினான்; இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான்; அவனே இரவைப் பகலால் மூடுகிறான் - நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன." (குர்ஆன் 13:3)
"இன்னும், பூமியை - படைப்பினங்களுக்காக அவனே விரித்தமைத்தான்." (குர்ஆன் 55:10)
'பூமியை விரித்தான்' என்ற குர்ஆனின் வசனத்தில் வரும் 'தஹாஹா' என்ற சொல் 'தஹ்வு' என்ற சொல்லின் மூலத்திலிருந்து வந்தது. இங்கு தஹ்வு என்ற சொல்லுக்கு விரித்தல் என்ற பொருள் வரும்.

நாம் அமரும் பாயை சுருட்டுங்கள் என்கிறோம். பாயை விரியுங்கள் என்கிறோம். இங்கு சுருக்கப்பட்ட பொருள் விரிவடையும்போது என்ன வார்த்தையை பயன்படுத்துகிறோமோ அதே வார்த்தையை கொண்டு பூமியையும் இறைவன் கையாள்கிறான்.
பல காலமாகவே இந்த பிரபஞ்சம் நிலையான ஒன்று என்றுதான் அறிவியலார் கூறி வந்தனர். 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்தான் ரஷ்ய இயற்பியல் விஞ்ஞானி அலெக்சாண்டர் ஃபிரைட்மேனும் பெல்ஜிய விஞ்ஞானி லேமைட்ரீயும் பிரபஞ்சத்தின் விரிவடைதலை கண்டறிந்தனர். இந்த உண்மை 1929ல் தொலைநோக்கி சோதனை மூலம் விஞ்ஞானி எட்வின் ஹப்பிளால் நிரூபிக்கப்பட்டது. மேலும் நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன் திரள்கள் ஒன்றை யொன்று விலகிச் செல்வதையும் தனது சோதனையில் கண்டறிந்தார் ஹப்பிள்.
பிரபஞ்சம் விரிவடைவது சம்பந்தமாக நோபல் பரிசை பகிர்ந்து கொண்ட மூன்று அமெரிக்கர்கள்

பிரபஞ்சம் விரிவடைவது சம்பந்தமாக மூன்று அமெரிக்கர்கள் நோபல் பரிசை பகிர்ந்து கொண்டனர். அதன் காணொளியைப் பார்ப்போம்.
உப்பி விரிகிறது. அதாவது பிரபஞ்சம் நிலையாக முடங்கிக் கிடக்கும் ஒரு பொருள் என்று கருதக் கூடாது. அது சோப்புக் குமிழி போல உப்பிக் கொண்டே போகும் ஒரு கோளம்' -விஞ்ஞானி ஹப்பிள்.
இதைத்தான் இறைவனும் 'பூமியை விரித்தான்' அதாவது பூமியை விரிவாக்கம் செய்தான் என்று குர்ஆனில் கூறுகிறான். விஞ்ஞானி ஹப்பிளின் கருத்தை அப்படியே பிரதிபலிப்பதை பார்க்கவில்லையா!
'பிரபஞ்சம் இருவித முடிவுகளில் சிதைந்து போகலாம்! ஒன்று குமிழிபோல் உப்பிக் கொண்டு அது தொடர்ந்து விரியலாம்! அல்லது பெரும் வெடிப்பில் [Big Bang] தோன்றிய பிரபஞ்சம், ஒரு பெரும் நெருக்கலில் [Big Crunch] மறுபடியும் நொறுங்கி முடிந்து போகலாம்! எனது யூகம், பிரபஞ்சம் பெரும் நெருக்கலில் ஒரு சமயம் அழிந்து போய்விடும் என்பது! பிரபஞ்சத்தின் பிரளய முடிவுகளை முன்னறிவித்த முனிவர்களை விட எனக்கு ஓர் பெரிய சலுகை உள்ளது! இப்போதிருந்து பத்து பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு எது நிகழ்ந்தாலும், என் கருத்து பிழையான தென்று நிரூபிக்கப்பட நான் உயிரோடு இருக்கப் போவதில்லை ' என்று புன்னகை புரிகிறார், ஸ்டாஃபென் ஹாக்கிங்!
முன்பு பூமியில் இருந்த நிலப்பரப்பு அனைத்தும் ஒன்றாகவே இருந்தன. பூமியானது விரியத் தொடங்கியவுடன் ஒன்றாக இருந்த நிலப்பரப்புகள் கண்டங்களாகவும், நாடுகளாகவும், தீவுக் கூட்டங்களாகவும் பிரிகின்றன.
ஹாக்கிங் கூறுகிறார்:
'இருபதாம் நூற்றாண்டிற்கு முன்னர் ஒருவர் கூட பேரண்டம் விரிந்து செல்கிறது அல்லது சுருங்கி வருகிறது எனும் கருத்தைத் தெரிவிக்கவில்லை. பேரண்டம் மாற்றமே இன்றி நாம் காண்பது போலவே எக்காலமும் இருந்திருக்கிறது என்றே பலரும் நம்பி வந்தனர். பெரும்பாலான மக்களின் மன நிலையும் இதை ஒட்டியே அமைந்திருந்ததும் காரணமாக இருக்கலாம்.' -எ ஃப்ரீ ஹிஸ்டரி ஆஃப் டைம் (பக்கம் 6)

"The discovery that the universe is expanding was one of the great intellectual revolutions of the 20th century.
(பேரண்டம் விரிவடைகிறது எனும் இக்கண்டுபிடிப்பு இருபதாம் நூற்றாண்டின் பெரும் அறிவுப் புரட்சிகளில் ஒன்றாகும்)
(அதே புத்தகம் பக்கம் 42)
உலகின் தலை சிறந்த விஞ்ஞானிகளான ஐசக் நியூட்டன் மற்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போன்ற அறிஞர்கள் கூட பிரபஞ்சம் விரிவடைகிறது என்ற செய்தியை அறிந்திருக்கவில்லை. அது பற்றிய சிந்தனையும் அவர்களுக்கு எழவில்லை. இது போன்ற ஒரு வார்த்தைப் பிரயோகத்தை முகமது நபி என்ற ஒரு மனிதரால் சொல்லியிருக்க முடியுமா? என்று சிந்திக்க கடமைப் பட்டுள்ளோம். படிப்பறிவற்ற அந்த சமூகத்தையும் தனது தாய் மொழியையே எழுத படிக்க தெரியாத முகமது நபியையும் இங்கு நாம் நினைவில் நிறுத்தி பார்க்க வேண்டும். இந்த உண்மைகளை ஆராய்ந்தால் குர்ஆனின் வார்த்தைகள் நம்மைப் படைத்த இறைவனின் வார்த்தைகள் என்ற முடிவுக்கே வருவோம்.
"நீ யாரை நேசித்தாயோ, அவருடன் இருப்பாய்" Print E-mail
ஹளரத் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்: "ஒரு மனிதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டார், "யா ரசூலல்லாஹ் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)! கியாமத் தீர்ப்பு நாள் எப்போது?" நபிமணி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள், "வாஹ் (கியாம நாள் நிகழும் காலம், குறிப்பாக அதன் நேரம் பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறாய்) சரி. அதற்காக நீ என்ன தயாரித்துக் கொண்டிருக்கிறாய்?"
அம்மனிதர் சொன்னார, "(தங்களிடம் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க நம்பிக்கைக்குரிய) எதையும் நான் செய்யவில்லை. ஆனால், அல்லாஹுதஆலாவின் அருளால் ஒன்று எனக்குக் கிடைத்திருக்கிறது. எனக்கு அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர் மீதும் அன்பு இருக்கிறது."
நபிமணி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்,
"நீ யார் மீது அன்பு கொண்டிருக்கிறாயோ, அவர்களுடன் இருப்பாய்".ஹதீஸ் அறிவிப்பாளர் ஹளரத் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள், "நபிமணி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய இந்த செய்தியைக் கேட்டு முஸ்லிம்கள் மகிழ்ச்சியடைந்தது போல், அவர்கள் இஸ்லாத்தில் சேர்ந்த பிறகு வேறு எதனாலும் பூரிப்படைந்து நான் பார்த்ததில்லை." (புகாரி, முஸ்லிம்)
இதே ஹதீஸின் இறுதியில் மற்றொரு அறிவிப்பில், ஹளரத் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு மேலும் கூறி இருக்கின்றார்கள்: "அன்த மஅ மன் அஹ்பப்த "நீ யாரை நேசித்தாயோ, அவருடன் இருப்பாய்" என்ற நபிமணி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இந்த பேச்சைக் கேட்டு புளகாங்கிதம் அடைந்தது போல், ஸஹாபாக்கள் வேறு எந்த பேச்சைக் கேட்டும் மகிழ்ந்ததில்லை. அல்லாஹ்வின் அருளால் நான் நபிமணி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், ஹளரத் அபூபக்கர் சித்தீக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மீதும், ஹளரத் உமர் ஃபாரூக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மீதும் பாசம் கொண்டிருக்கிறேன். அம்மாமனிதர்கள் போல்நான் காரியங்கள் ஆற்றவில்லை என்றாலும், அவர்கள் மீது நான் கொண்டுள்ள அன்பின் அடிப்படையில் அவர்களுடன் இருப்பதை ஆசித்து நிற்கிறேன்
'' என்று உள்ளது.

ரமளான் மாதத்திற்கான சட்டங்களின் தொகுப்பு


அல்லாஹ் கூறுகிறான்...
''விசுவாசிகளே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (நோன்பு) விதிக்கப்பட்டுள்ளது, (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.'' (அல்குர்ஆன் 2:183)
(இவ்வாறு விதிக்கப்பெற்ற நோன்பு) சில குறிப்பிட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால்,
(அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும், எனினும் (கடுமையான நோய் முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்கு பரிகாரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும், எனினும் எவரேனும் தாமாக அதிகமாகக் கொடுக்கிறாறோ அது அவருக்கு நல்லது, ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறிவீர்களானால்) நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும், (என்பதை உணர்வீர்கள்- அல்குர்ஆன் 2:184) ரமளான் மாதம் எத்தகையதென்றால்அதில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும், (நன்மை தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது, ஆகவே உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும், எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ, (அவர் அக்குறிப்பிட்ட நாடகளின் நோன்பைப்) பின் வரும் நாட்களில் நோற்க வேண்டும், அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதையே நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை, குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும் உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே. (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்- அல்குர்ஆன் 2:185)
நோன்பு கால இரவுகளில் நீங்கள் உங்கள் மனைவியுடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது, அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள், நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொணடிருந்ததை அல்லாஹ் நன்கறிவான், அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை மன்னித்தான். எனவே இனி (நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததைத் தேடிக்கொள்ளுங்கள், இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை) நேரம் என்ற வெள்ளை நூல் (இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள், பின்னர் இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள், இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள், இவையே அல்லாஹ் விதித்த வரும்புகளாகும், அந்த வரம்புகளை (த் தாண்ட) முற்படாதீர்கள், இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக் காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகிறான். (அல்குர்ஆன் 2:187)
பிறை பார்த்து நோன்பு...நீங்கள் பிறை பார்த்தால் நோன்பு வையுங்கள், அடுத்த பிறையைப் பார்த்தால் நோன்பை விட்டு விடுங்கள், மேகம் (பிறையை) உங்களுக்கு மறைத்து விடுமானால் (ரமளானையும் ஷாஃபானையும்) முப்பது நாட்களாகப் பூர்த்தி செய்து கொள்ளுங்கள், என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு உமர் (ரலி) நூல்கள்- புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ, இப்னுமாஜா, திர்மிதீ, தாரகுத்னீ, இப்னுஹிப்பான், இப்னுகுஸைமா, ஹாகீம்.தகவலறிந்து நோன்பு...மக்கள் எல்லாம் பிறை பார்க்க முயன்றார்கள், நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் 'நான் பிறையைப் பார்த்தேன்' என்று கூறினேன், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தானும் நோன்பு நோற்றுதுடன் மக்களையும் நோன்பு நோற்கக் கட்டளையிட்டார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்- அபூதாவூத், தாரமி, இப்னுஹிப்பான், ஹாகீம், பைஹகீ, தாரகுத்னீ. ரமளானின் கடைசி நாள் பற்றி மக்கள் முடிவெடுக்கக் குழம்பினார்கள், (பிறை தென்படாததால் நோன்பும் நோற்றனர்) இரண்டு கிராம வாசிகள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து நேற்று இரவு நாங்கள் பிறைப் பார்த்தோம் என்று சாட்சி கூறினார்கள், உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களை நோன்பை விட்டு விடுமாறு கட்டளையிட்டார்கள், பெருநாள் தொழுகைக்காக மறுநாள் தொழுமிடம் வருமாறு கட்டளையிட்டார்கள். அறிவிக்கும் நபித்தோழர், ரிப்யீ இப்னு கிராஷ் நூல்கள்- அபூதாவூத், அஹ்மத்.நோன்பு வைக்கும் எண்ணம் வேண்டும்...ஃபஜ்ருக்கு முன்பே நோன்பு வைக்க எவர் எண்ணவில்லையோ அவருக்கு நோன்பு இல்லை, என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்- அஹ்மத், நஸயீ, இப்னுமாஜா, திர்மிதீ, தாரகுத்னீ, இப்னுஹிப்பான், இப்னுகுஸைமா.ஸஹ்ர் செய்வதில் பரகத் உண்டு...நீங்கள் ஸஹ்ர் செய்யுங்கள் ஏனெனில் ஸஹ்ரில் பரகத் உண்டு, என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அனஸ் இப்னு மாலிக் ரளியல்லாஹு அன்ஹு, புகாரி, முஸ்லிம், நஸயீ, அஹ்மத், திர்மிதீ, இப்னுமாஜா.வேண்டுமென்றே நோன்பு திறப்பதைத் தாமதித்தல் கூடாது...என் அடியார்களில் எனக்கு மிகவம் விருப்பமானவர் (சூரியன் மறைந்தவுடன்) விரைந்து நோன்பு துறப்பவர்களாவர், என்று அல்லாஹ் கூறுவதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், அறிவிக்கும் நபித்தோழர், அபூஹூரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்- திர்மிதீ, அஹ்மத். இரவு முன்னோக்கி பகல் பின் சென்று சூரியன் மறைந்தால் நோன்பாளி நோன்பு துறப்பார், என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்- புகாரி, முஸ்லிம், அஹ்மத். நோன்பு துறத்தலை (தாமதமின்றி) விரைந்து செய்யும் வரை மக்கள் நன்மையைச் செய்தவர்களாகிறார்கள், என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், ஸஹ்ல் இப்னு ஸஹ்து ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்- புகாரி, முஸ்லிம், அஹ்மத்.பிரயாணத்தில், மற்றும் கர்ப்பிணி, தாய்மார்களின் நோன்பு...அல்லாஹ்வின் தூதரே! பிரயாணத்தின் போதும் நோன்பு நோற்க எனக்கு சக்தி உள்ளது, அப்போது நோன்பு நோற்பது குற்றமாகுமா? என்று நான் கேட்ட போது ''இது அல்லாஹ் வழங்கிய சலுகை இதை யார் பயன் படுத்திக் கொள்கிறாரோ அது நல்லது, யார் நோற்க விரும்புகிறாரோ, அவர் மீது குற்றமில்லை'' என்ற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், ஹம்ஸா இப்னு அம்ரு அல் அஸ்லமீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்- முஸ்லிம், நஸயீ.(நான்கு ரக்ஆத் தொழுகைகளில்) பாதியைக் குறைத்துக் கொள்ளவும், நோன்பை தள்ளி வைக்கவும் அல்லாஹ் பிரயாணிகளுக்கு சலுகை வழங்கியுள்ளான், கர்ப்பிணி, பால் கொடுக்கும் தாய், ஆகியோரும் நோன்பிலிருந்து விலக்களித்துள்ளான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அனஸ் இப்னு மாலிக் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்- அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா.
சக்தி பெற்றவருக்கே நோன்பு...யார் சக்தி பெறுகிறார்களோ அவர்கள் ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும், என்ற வசனம் பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) குறிப்பிடும் போது இந்த வசனம் மாற்றப் படவில்லை, நோன்பு நோற்க சக்தியற்ற முதியவர்கள் விஷயத்தில் இந்தச் சட்டம் இன்னும் உள்ளது, என்றார்கள் அதாவது அவர்கள் ஒவ்வொரு நோன்புக்கும் பதிலாக ஒரு ஏழைக்கு உணவளிப்பார்கள், என்றார்கள். அறிவிப்பாளர், அதாவு, நூல்- புகாரி.நோன்பாளி மறந்து விட்டால்...நோன்பாளி மறந்து விட்டு உண்ணவோ, பருகவோ செய்தால் (நினைவு வந்ததும்) தன் நோன்பை தொடரட்டும், அவரை அல்லாஹ்தான் உண்ணவும், பருகவும் செய்திருக்கிறான், என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹூரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்- புகாரி, அஹ்மத், திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா.நோன்பாளி என்று கூறி விட வேண்டும்...உங்களில் ஒருவர் நோன்பு வைத்திருக்கும் போது தீய பேச்சுக்கள் பேசலாகாது, வீண் சண்டைகளில் ஈடுபடலாகாது, எவரேனும் அவரை ஏசினால் அல்லது சண்டைக்கு அழைத்தால், நான் நோன்பாளி என்று கூறிவிட வேண்டும், என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹூரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்- புகாரி, முஸ்லிம், அஹ்மத்.பொய் சொல்லலாகாது...(நோன்பு வைத்திருக்கும் போது) பொய் சொல்வதையும், பொய்யான அடிப்படையில் செயல் படுவதையும் எவர் விடவில்லையோ அவர் தனது உணவையும் பானத்தையும் விட்டிருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையும் இல்லை, என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹூரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்- புகாரி, அஹ்மத், திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா.தண்ணீர் தூய்மைப் படுத்தும்...உங்களில் ஒருவர் நோன்பு துறக்கும் போது பேரீத்தம் பழத்தின் மூலம் நோன்பு துறக்கவும், அது கிடைக்கா விட்டால் தண்ணீர் மூலம் நோன்பு துறக்கவும், ஏனெனில் தண்ணீர் தூய்மைப் படுத்தக் கூடியதாகும், என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், ஸல்மான் இப்னு ஆமிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்- புகாரி, அஹ்மத், திர்மிதீ, அபூதாவூத்.உணவிற்கே முதலிடம்...இரவு உணவு வைக்கப்பட்டால், மஃக்ரிப் தொழுவதற்கு முன் சாப்பாட்டிற்கு முதலிடம் கொடுங்கள், உணவு உட்கொள்வதைத் தாமதிக்க வேண்டாம், என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அனஸ் இப்னு மாலிக் ரளியல்லாஹு அன்ஹு, நூல்- புகாரி. இமாம் தொழுகையைத் துவங்கி குர்ஆன் ஓதிக் கொண்டிருப்பதை செவியுற்றாலும் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு சாப்பாட்டை முடித்து விட்டே தொழுகையில் கலந்து கொள்வார்கள். நூல்- புகாரி.விடுபட்ட நோன்புகள்...ரமளானில் சில நோன்புகள் (மாதவிடாய் போன்ற காரணங்களால்) எனக்கு விடுபட்டு (களாவாகி) விடும், (11 மாதங்கள் கழித்து) ஷாஃபானில் தவிர அதை என்னால் நோற்க இயலாது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளே இதன் காரணம். அறிவிக்கும் முஸ்லிம்களின் அன்னை, ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்கள்- புகாரி, முஸ்லிம், அஹ்மத். திர்மிதீ, இப்னுமாஜா.நோன்பாளி தன் மனைவியிடத்தில்...நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோன்பு வைத்திருக்கும் போது தம் மனைவியரை முத்தமிடுபவர்களாகவும், கட்டி அணைப்பவர்களாகவும் இருந்தனர், எனினும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உங்களையெல்லாம் விட தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்பவர்களாக இருந்தனர். அறிவிக்கும் முஸ்லிம்களின் அன்னை, ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்கள்- புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, அஹ்மத், இப்னுமாஜா. ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நோன்பாளி மனைவிகளைக் கட்டி அணைப்பது பற்றிக் கேட்டார், அவருக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனுமதி வழங்கினார்கள், பின்பு மற்றெருவரும் வந்து கேட்ட போது, அவருக்குத் தடை விதித்தார்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் அனுமதி வழங்கப்பட்டவர் முதியவராகவும், தடுக்கப்பட்டவர் இளைஞராகவும் இருந்தார். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹூரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்- அபூதாவூத்.(இளைஞர்- இள மனைவி இருவருமே சுலபத்தில் உணர்ச்சி வசப்பட்டு இறை வரம்பை மீறி விடுவார்கள் என்பதால் அனுமதி மறுக்கப் படுகிறது)
நோன்பாளி தன் மனைவியுடன் கூடிவிட்டால்...?ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து 'அல்லாஹ்வின் தூதரே! நான் நாசமாகி விட்டேன்' என்றார்,''என்ன நாசமாகி விட்டீர்?'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டபோது, 'ரமளானில் (பகல் பொழுதில்) என் மனைவியுடன் சேர்ந்து விட்டேன்' என்றார்,
''ஒரு அடிமையை விடுதலை செய்யும் அளவிற்கு உம்மிடம் செல்வம் இருக்கிறதா?'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்க, அவர் 'இல்லை' என்றார்,''தொடர்ந்து இரு மாதங்கள் நோன்பு நோற்க உமக்கு சக்தி இருக்கிறதா?'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் கேட்க, அவர் 'இல்லை' என்றார், அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உமக்கு இயலுமா? என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்க, அவர் 'இயலாது' என்றார், பின்பு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சற்று நேரம் (அமைதியாக) உடகார்ந்திருந்தார்கள் பதினைந்து ஸாவு கொள்ளவுள்ள பாத்திரத்தில் பேரீத்தம் பழம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கொண்டு வரப்பட்டது, (அதை அவரிடம் வழங்கி) ''இதை தர்மம் செய்வீராக'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்,
அதற்கு அவர் 'என்னை விட ஏழைக்கா தர்மம் செய்யச் சொல்கிறீர்கள்..? இந்த மதீனா முழுவதும் எங்களை விட ஏழைகள் எவருமில்லை..' என்று அவர் கூறியதும், தனது கடைவாய் பற்கள் தெரியும் அளவுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிரித்தார்கள்,
பின்பு ''இதைக் கொண்டு சென்று உமது குடும்பத்தினருக்கு வழங்குவீராக'' என்று கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹூரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்- புகார், முஸ்லிம், அஹ்மத், நஸயீ, அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா.
அப்படியானால் நீர் முறித்த நோன்பிற்குப் பதிலாக ஒரு நோன்பு நோற்று விடுவீராக'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், என்று மேலதிக விளக்கமாக இப்னுமாஜா, அபூதாவூத் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.
குளிப்புக் கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா...?நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடலுறவு கொண்ட பின் அதிகாலையில் குளிப்புக் கடமையானவர்களாக ரமளான் நோன்பை நோற்பார்கள். அறிவிக்கும் முஸ்லிம்களின் அன்னைகள், ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, உம்மு ஸல்மா ரளியல்லாஹு அன்ஹா, நூல்கள்- புகாரி, முஸ்லிம், அஹ்மத்.