“உன்னோடு வாழாத வாழ்வு என்ன வாழ்வு
என் உள் நெஞ்சம் சொல்கிறதே!“
என் உள் நெஞ்சம் சொல்கிறதே!“
இந்தக்
காலத்தில் கணவன் – மனைவி இருவரும் சம்பாதிக்கும் குடும்ப ங்களில் திருமண
முறிவு என்பது வெகு இயல்பான விஷயமாகிப் போய் விட்டது என்கிற நிதர்சனம்,
நடுக்கத்தை ஏற்படுத்துகிறது.
ஏன் இந்த மன, மண முறிவுகள்?
இதைப்பற்றி அக்கறையுடன் நாம் நடத்திய ஆலோசனைகள் இங்கே …
”நான்
காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் படிச்சப்போ அவர் என்கூட பஸ்ல வருவார். பார்த்ததும்
புடிச்சுப் போச்சு. செகண்ட் இயர் படிக்கும் போது எங்க வீட்ல மாப்பிள்ளை
பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. அதனால அவசரமா நானும் அவரும் கல்யாணம்
பண்ணிக்கிட் டோம். ஆனா, பொருளாதாரப் பிரச்னை களை அவரால சந்திக்க முடியலை,
என் னோட சின்ன தேவைகளைக்கூட நிறை வேத்த முடியலைங்கறது அப்புறம்தான்
புரிஞ்சுது. இதனால தினம் சண்டை போட் டுக்கஷ்டப்படுறதைவிட, பிரிஞ்சு
போயிடறதுனு முடிவு பண்ணிட்டேன் . இப்ப டைவர்ஸ் கேஸுக்கு ஆகற செல வைக்கூட
என் அம்மா, அப்பா தான் பார்த்துக்குறாங்க” என்று அலட்டிக் கொள்ளாமல்
சொல்லும் இந்தப் பெண்ணுக்கு வயது 22!
காதலைக் குலைக்கும் ‘ஈகோ’!
”எல்லாவற்றிலும்
வேகம், வேகம் என்று ஓடும் இந்தத் தலைமுறையி னர், பார்த்ததும்
காதலிக்கிறார்கள். குடும்பம் நடத்த ஆரம்பித்ததும் ஒருவரின் ப்ளஸ், மைனஸ்
தெரிய ஆரம்பிக்க, ‘நீயும் சம்பாதிக்கிறாய்,
நானும்
சம்பாதிக்கிறேன். உன் தவறுகளை எதற்காக நான் சுமக்க வேண் டும், பொறுத்துக்
கொள்ள வேண்டும்?’ என்கிற ஈகோ தலைக் குள் வந்தவுடன், நீதிமன்றத்துக்குள்
நுழைந்து விடுகிறார்கள்” என்று எதார்த்தத்தை எடுத்து வைத்தார்.
அதிகம் படித்தவர்கள்தான் அதிகம்!
நீதிமன்றத்துக்கு
இப்படி அவசரப்பட்டு வரும் தம்பதிகளுக்கு ஆலோசனை தருவதற்காக வே பிரத்யேகமாக
கவுன்சலர்கள் நியமிக்கப்ப ட்டுள்ளனர். அவர்களில் சிலரிடம் பேசியபோ து…
”விவாகரத்துக்காக வரும் தம்பதிகளுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் மூன்று முறை
கவுன்சலிங் கொடுக்கிறோம். 21-28 வயதுக் காரர்கள், ‘இதுதான் தீர்வு’ என்று
தீர்மானித்து விட்டே இங்கே வருகிறார்கள். நாங்கள் என்ன ஆலோசனை சொன்னாலும்,
அவர்கள் பொறு மையுடன் கேட்பதில்லை என்பது வருத்த மான விஷயம்.
அதிகம்
படித்த ஆண்களும், பெண்களும் மனம் முழுக்க ‘நான்’ என்கிற ஈகோவுடன்தான்
எங்கள் முன் அமர்கிறார்கள். எங்களிடம் வரு கிற நூறு கேஸ்களில் ஒரு
ஜோடிதான், மீண்டும் தம்பதியாக வீட்டுக்குத் திரும்பிப் போகிறார்கள். மற்ற
99 ஜோடிகளும் தனித்தனியாகவே பிரி ந்து நடை போடுவது துயரம்” என்று கனத்த
மனதுடன் பகிர்ந்து கொண் டார்கள்.
‘அவன் என்னை டாமினேட் பண்றான்!’
”சாட்டிங்கில்
பேசி, பழகி வீட்டுக்குத் தெரியா மல் கல்யாணம் செய்து கொண்டு, ஒரு வரு டம்
முடிந்ததும் வீட்டுக்குத் தெரியாமலே யே விவாகரத்து வாங்கிப்போன வழக்குக
ளையும் நீதிமன்றம் பார்த்திருக்கிறது.
ஆரம்பத்தில் ஏற்படுகிற ‘எதிர்பாலின ஈர்ப்பை’ காதல் என்று நம்பி கல் யாணம் செய்துகொண்டு, சில வருடங்கள் போன பின்பு, ‘இது காதல்
அல்ல…
எனக்கு ஏற்ற ஜோடி இது அல்ல’ என்று நீதிமன்றம் நாடுகிறவர் கள், ‘நானும்
அவன் அள வுக்கு சம்பாதிக்கிறேன், அப்புறம் எதுக்கு என் னை டாமினேட் பண்றா
ன்?’ என்று கேட்கும் வழக் குகள், மனைவி வேலை க்குப் போவது பிடிக்கவில்லை,
அதனால் டைவர்ஸ் வேண்டும் என்று வரும் வழக்குகள், ‘அவனுக்கு நிறைய
ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க’, ‘அவ
எப்பவும்
கம்ப்யூட்டர்ல சாட் பண் ணிட்டே இருக்கா’ என்று வரும் வழக்குகளில் எல்லாம்
சம்பந்தப் பட்டவர்கள் காதலித்துத் திரு மணம்செய்து கொண்டவர்கள் தான்” என்று
தான் சந்தித்த வழக் குகளை அடுக் குகிறார் சுதா.
ஏன் பெருகுகிறது விவாகரத்து?
காதல் தம்பதிகளிடம் ஏன் விவாக ரத்து பெருகிறது என்ற கேள்விக்கு, மன நல மருத்துவர் ஷாலினியின் பதில்…
”இன்றைய பெண்ணின் தேவை மாறி வருகிறது என்பதை ஓர் ஆண்
புரிந்து
கொள்ளாததுதான் எல்லா பிரச்னைகளுக்கும் காரணம். அவ ன் பார்த்து வளர்ந்த
அவன் அம்மா வைப் போல்… வெறும் உணவும், உடையும், நகையும் பெண்ணின் தேவை அல்ல
இன்று. அவள் எதி ர்பார்ப்பது சமத்துவம், சமமான மரியாதை. காரணம், பெண்ணும்
இன்று ஆணுக்கு நிகராக சம்பாதிக் கிறாள், படித்து இருக்கிறாள், உல கம்
தெரிந்து இருக்கிறது. அதனால் பெண் அட்வான்ஸ்டாக வளர்ந்துவிட்டாள். ஆனால்…
ஒரு ஆண், ஒரு பெண்ணை நடத்தும் சிந்தனையில் இன்னும் பத்து வருடங்கள் பின்
தங்கிதான் இருக்கிறான். வெறும் மல்லிகைப் பூவுக்கும் சினிமாவுக்கும்
சமாதானமாகிப் போகிற பெண்தான் அவனுடைய சிந்தனையில் இருக்
கிறாள்.
ஆனால், பெண்ணின் மன தில் இருப்பதோ… இந்தத் துணை , நம்மை சரிசமமாக
நடத்துவான் என்கிற நம்பிக்கை தான். இந்த எதிர் பார்ப்புகள் எதிரெதிர்
திசையில் செல்லும்போது, விவா கரத்துதான் வழி என்று தீர்மானிக்கிறார்கள்.
காரணம் தொழில்புரட்சி!
”மாறும்
குடும்பச் சூழ்நிலையை, தொழில் அமைப்பை படித்த தம்பதிகள் உணர்ந்து, இந்தத்
திருமண உறவை இறுதி வரை எடுத்துச் செல்வதற்கு மனதளவில் முயன்றால்தான்
விவாகரத்துகள் குறையும். விவாகரத்து செய்வதால் குழந்தைகள்தான் அதிகம்
பாதிக்கப்படுகிறார்கள் என்பதை, சம்பந்தப்பட்ட அப்பாவும், அம்மாவும் உணர
வேண்டும்!” என்றார் ஷாலி னி வேண்டுகோளாக!
சேர்வதே… பிரிவதற்காகத்தானா?
*
இனி, இங்கே… சிங்கிள் மதர்ஸ்!
விவாகரத்துகள்… சில உண்மைகள்!
1980-களில்
ஓராண்டுக்கே 20 – 30 விவாகரத்து வழக்குகள் வரைதான் ஒரு நீதிமன்றத்துக்கு
வரும். இன்று தினமும் ஒவ்வொரு நீதிமன்றத்து க்கும் குறைந்தது 10 வழக்குகள்
என்கிற அளவுக்கு நிலைமை கைமீறிப் போயிருக்கிறது.
மும்பை,
டெல்லி, லக்னோ, சென்னை போன்ற பெரு நகரங் களில் விவா கரத்து வழக்குகள்
அநியாயத்துக்கும் பெருகிக் கொண்டிரு க்கின்றன. 1990-களில் வருடத்துக்கு
1,000 வழக்குகள் பதிவான நிலை யில், அடுத்த பத்தாண்டுகளில், அதாவது 2000
ஆண்டுகளில் வருடத் துக்கு 9,000 வழக்குகள் என உயர்ந்துள்ளது.
இதில்
25-35 வயதுக்கு உட்பட்டவர்கள் 75 சதவிகிதத்தினர். திருமணம் செய்துகொண்ட 3
ஆண்டுகளுக்குள் விவாகரத்துக்கு விண்ணப்பித்தவர் கள் 85 சதவிகிதத்தினர்.
No comments:
Post a Comment