Monday, May 28, 2012

கவுன்சிலிங் பண்ணலையோ கவுன்சிலிங்!!!





பழைய ஈயம் பித்தளைக்கு பேரீச்சம்பழம் என கூவி அழைப்பதை போல் பலர் கவுன்சிலிங் பண்ண வாங்க! என கூவி அழைக்கிறார்கள்.

""நானே தினமும் நாப்பது பேருக்கு கவுன்சிலிங் கொடுத்துக்கிட்டிருக்கேன். எனக்கே கவுன்சிலிங்கா?''
(திருப்பதிக்கே லட்டா மாதி)
"எவ்வளவோ பண்றோம் இதை பண்ணமாட்டமா?'' என்பது மாதி சிலர் கூறுவதுண்டு.


டாக்டர் இவனுக்கு நல்ல கவுன்சிலிங் பண்ணுங்க டாக்டர். சொன்ன பேச்சை கேட்க மாட்றான். இந்த காலத்துல படிக்கட்டி வாழ்க்கையே கிடையாது. நாங்கதான் படிக்கல புள்ளையாச்சும் படிக்கட்டுமேன்னு பார்த்தா (நீங்க படிக்காததாலதான் அவனுக்கும் அதே மூளை வந்திருக்குன்னு புஞ்சுக்குங்க ப்ளீஸ்)... என பல பெற்றோர்கள் புலம்புவதுண்டு.

உண்மை என்ன?


நீங்கள் குடியிருக்கும் தெருவில் கூட ஒரு கவுன்சிலர் இருப்பார் தெயுமா? வார்டு கவுன்சிலர். நீங்க பஞ்சாயத்து தேர்தல்ல ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தீங்களே அவர்தான். அவரும் கவுன்சிலர்தான். அவருடைய வேலையும் கவுன்சிலிங்தான். "ஏரியாவுல தெரு லைட்டெல்லாம் சரியா எயுதா?'' ""தண்ணி ஒழுங்கா வருதா?'' தெருவ சுத்தமா-,சுகாதாரமா வச்சுக்கணும் என பல கவுன்சிலிங் வேலைகள் அவருக்கு.

அரசுப்பணியில் காலியிடங்களை நிரப்ப, பிஇ. சேர்வதற்கு அண்ணா பல்கலைக்கழகம் போன்ற இடங்களில் கூட கவுன்சிலிங்கிற்கு கூப்பிடுவார்கள். இதுவும் கவுன்சிலிங்தான். ஆனால் உளவியல் கவுன்சிலிங் என்பது மட்டும் ஏதோ மந்திரவாதி, மாயாஜாலம் செய்வது போல நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். கலந்தாய்வு என்பதுதான் கவுன்சிலிங்.

அது சர்க்கரை வியாதிக்கு சிகிச்சையளிக்க கலந்தாய்வாக இருக்கலாம். கண்வன்-மனைவி பிரச்சினையை தீர்த்து வைக்கும் கலந்தாய்வாக இருக்கலாம். வார்டு கலந்தாய்வு, அணுசக்தி ஒப்பந்தம் குறித்து அனைத்துகட்சி கலந்தாய்வு என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். உளவியல் கலந்தாய்வு செய்ய பயிற்சி பெற்ற நிபுணர்களால் மட்டுமே முடியும். அது அறிவியல்பூர்வமானது. அறிவுரைகளும் ஆறுதல்களும் கவுன்சிலிங் கிடையாது.

No comments:

Post a Comment