உளவியல் பல்வேறு வகைப்படுகின்றன.அதன் தேவைக்கு ஏற்ப கத்தான் எல்லைகள் விரிவடைகின்றன.
மனித நடத்தையின் இயல்புகளை இது விளக்கும்.
நடத்தையின் சமனற்ற நிலை,மனவெழுச்சிப் பிரச்சினைகள்,அசாதரண நடத்தை,என்பவை பற்றி இது ஆராயும்.
- உயிரணுக்கள் பற்றிய உளவியல்....
ஒரு
கரு உற்பத்தியில் இருந்து குழந்தைப் பருவம்,பிள்ளைப் பருவம்,கட்டிளமைப்
பருவம்,வளர்ந்த பருவம்வரை நடத்தை எவ்வாறு வளர்ச்சி அடைகிறது என்பது பற்றி
இது விளக்கும்.
குழந்தை வளர்ச்சியில் செல்வாக்கு
செலுத்தும்
பரம்பரைச் சூழல், முதிர்ச்சி,கற்றல் ,பரம்பரைத் தொடர்புகள், என்பன இதில்
ஆராயப் படுகின்றன.பிள்ளைப் பருவத்தில் நிகழும் புலன் வளர்ச்சி,விவேக
வளர்ச்சி ,சமுக வளர்ச்சி என்பன பற்றி இங்கு ஆராயப்படுகின்றன.
ஒருவருடைய
நடத்தை ஏனையவர்களின் நடத்தையால் எவ்வாறு பாதிப்படைகிறது? குழுக்களுக்கு
இடையே உள்ள பரஸ்பரத் தொடர்புகள் யாவை?என்பன பற்றி சமுக உளவியல்
விளக்குகிறது.
உளவியல்
மூலம் பெற்ற அறிவை பல்வேறு துறைகளுக்கு பயன்படுத்த முடியும்.கல்வித் துறை
எனின் கல்வி உளவியல் எனவும் மருத்துவத் துறை எனின் மருத்துவ உளவியல் எனவும்
சட்டத் துறை எனின் சட்ட உளவியல் எனவும் இராணுவத் துறை எனின் இராணுவ
உளவியல் எனவும் அமையும்.
No comments:
Post a Comment