உண்மையில் இது ஒரு மருத்துவ அதிசயம் தான்.
மெக்சிக்கோ நாட்டைச் சேர்ந்த பெண்ணின்
வயிற்றில் ஒன்பது குழந்தைகள் வளர்ந்து வருவதாக பிரித்தானியப் பத்திரிக்கை
ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
குறித்த பெண் டெக்ஸாஸ் அருகில் உள்ள
கோகுலியா வைத் சேர்ந்த கர்லா வனீஸ்ஸா பரீஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் தற்போது மாநிலத் தலைநகர் சால்டில்லோவில் உள்ள ஒரு மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கு மே 20-ம் தேதி அளவில் குழந்தைகள்
பிறக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக் கின்றன. 6 பெண்குழந்தைகளும், 3 ஆண்
குழந்தைகளும் பரீஸின் வயிற்றில் வளர்ந்து வருவதாக தெரிவிக் கப்பட்டுள்ளது.
ஏற்கனவே Nadya Suleman என்ற தம்பதியினர் 2009 ஆம் ஆண்டு எட்டுக் குழந்தைகளைப் பிர்சவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment