சென்னையில் கோடைகால விடுமுறையை கொண்டாடும் வகையில் குழந்தைகளை கவர பி.சி.சர்க்கார் மேஜிக் ஷோ தொடங்கியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் சி.எம்.கே. ரெட்டி,
சுந்தர்ராஜன், பி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, வி.ஜெயச்சந்திரன் ஆகியோர்
பங்கேற்றனர். இந்த மேஜிக் ஷோவில் பி.சி. சர்க்கார் தந்தை மகன் இருவரும்
பல்வேறு சாகசங்களை நடத்திக் காட்டி குழந்தைகளையும் பெரியவர்களையும்
அதிசயிக்க வைக்கிறார்கள்.
குடும்ப புகைப்பட பெட்டியில் இருந்து
மாயாஜாலமாக பி.சி.சர்க்கார் தோன்றுவதுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது.
பி.சி.சர்க்கார் தனது முக பாவனையால் அனைவரையும் ஈர்க்கிறார். காலி
உருளையில் இருந்து தோரணங்கள், கம்பி கூடைகளை வரவழைப்பது, பெண்ணை பெட்டியில்
அடைத்து கத்தியால் சொருவது வாட்டர் ஆப் இந்தியா என்ற பெயரில் காலியான
சொம்பில் இருந்து அடிக்கடி தண்ணீரை வரவழைப்பது, வயிற்றை கிழித்துக் கொண்டு
பெண்ணை வெளியே எடுப்பது என அதிரடி சாகசங்களை செய்கிறார்.
ஒரு இளம் பெண்ணை 2 துண்டாக அறுத்து
மீண்டும் ஒட்ட வைத்து உயிர்ப்பிக்கும் அதிசயம் பார்வையாளர்களை வெகுவாக
கவர்கிறது. தந்தை பி.சி.சர்க்கார் கண்ணை கட்டிக் கொண்டு செய்யும் சாகசம்
ஆச்சரியப்பட வைக்கிறது. பார்வையாளர்கள் 7 பேரை அழைத்து கரும் பலகையில்
எழுதும் நம்பர்கள், ஆங்கில வார்த்தைகள் போன்றவற்றை கண்ணை கட்டிக் கொண்டு
கண்டுபிடிக்கிறார்.
பார்வையாளர்கள் வரையும் குறியீடுகளை
வைத்து முழு படத்தையும் கண்ணை கட்டிக் கொண்டு வரைந்து முடித்து ஆச்சரியப்பட
வைக்கிறார். வருகிற ஜூன் மாதம் 3-ந் தேதி வரை இந்த மேஜிக் ஷோ நடக்கிறது.
ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4.15, இரவு 7.15 என 2 காட்சிகளும், இதர
நாட்களில் இரவு 7.15 மணி காட்சியும் இடம் பெறுகிறது. பிரியா கல்சுரல்
அகாடமி சார்பில் மூர்த்தி, கார்த்திக் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்து
வருகிறார்கள்.
No comments:
Post a Comment