பில்லா வைப் போலவே பில்லா 2 படத்தின் இசைக்கும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
பில்லா 2 பாடல்கள் தயாராகிக் கொண்டிருந்த
போதே, அது குறித்த தகவல்கள் வெளிவந்தவண்ணம் இருந்தன. அஜீத் ரசிகர்கள் மிக
ஆவலாக பில்லா 2 பாடல்களை கேட்க காத்துக் கொண்டிருக்கிறார்கள். யுவன்
இசையில் அஜீத் நடித்த பில்லாவின் பாடல்கள் வரவேற்பைப் பெற்றது.
படத்தயாரிப்பு தரப்பில், மார்ச் மாத
இறுதியில் படத்தின் இசை வெளியீடு நடைபெறும் என தீர்மானிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அது இன்னும் தள்ளிப் போகக் கூடும் எனத் தெரிகிறது.
அஜீத்தின் பில்லா படத்தினைத் துவக்கி
வைத்த ரஜினிகாந்த் இப்படத்தின் இசை வெளியீட்டில் கலந்து கொண்டால் நன்றாக
இருக்கும் என நினைக்கிறார்களாம். ஆனால், ரஜினி தன் கோச்சடையான் படத்திற்காக
லண்டன் செல்ல இருக்கிறார்.
அவர் படப்பிடிப்பு முடித்து, சென்னைக்கு
அடுத்த மாதம் தான் வருகிறார். எனவே, இசை வெளியீட்டை அவர் வந்த பிறகு,
ஏப்ரல் மாதத்திலேயே வைத்துக் கொள்ளலாம் என திட்டமிடப்படுகிறதாம்.
No comments:
Post a Comment