பேஸ்புக் தொடர்ச்சியாக பயன்படுத்துபவரா நீங்கள்? அப்படிஎன்றால் இந்தச் செய்தி உங்களுக்கானதே.
பேஸ்புக்கில் உள்ள உங்களின் சுயவிவரப்
படத்தைப் பார்த்தே உங்களின் நண்பர்கள் உங்களைக் கணிப்பதாக புதிய ஆய்வு
ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது. முகப்பில் நீங்கள் போடுகின்ற சுயவிவரப்
படத்தை அடிப்படையாக வைத்து தான் நீங்கள் எவ்வாறானவர்கள்? என்று கணிப்பதாக
அந்த சுவாரஷ்யமான ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவின் ஓஹியோ பல்கலைக் கழகத்தைச்
சேர்ந்த ஆய்வாளர்களே மேற்படி முடிவை அறிவித்துள்ளனர். நீங்கள் போடுகின்ற
நிலைத்தகவல்கள், மற்றும் உங்களின் புகைப்பட அல்பங்களை அவர்கள் பார்த்து
உங்களை ஒரு போதும் மதிப்பிடுவதில்லை என்று அடித்துச் சொல்கின்றார்கள்
ஆய்வாளர்கள்.
No comments:
Post a Comment