விஜய் டிவியில் நடிகர் சூர்யா தொகுத்து வழங்கும் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியைப் பற்றி அனைவருக்கும் தெரியும்.
இந்த நிகழ்ச்சியில் சூர்யா கேட்கும்
கேள்விகளுக்கு சரியான விடையளிப்பதன் மூலம் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்
ஒரு கோடியை வெல்வார். இந்நிகழ்ச்சியில் (03.04.12) நடிகை ஸ்ருதிஹாஸன்
கலந்து கொள்ள இருக்கிறார்.
எனக்கு பிடித்த நடிகரான சூர்யாவின் அறிவுப்பூர்வமான(!) கேள்விகளுக்கு அரட்டையடித்துக் கொண்டு பதிலளிக்கப் போகிறேன்.
மறக்காமல் பாருங்கள்� என்று கூறியுள்ளார். சூர்யாவும் ஸ்ருதிஹாஸனும் இதற்கு முன்னர் ஏழாம் அறிவு படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
ஸ்ருதிஹாஸன் கூறியுள்ளவாறு சூர்யா
கேட்கப்போகும் அறிவுப்பூர்வமான கஷ்டமான(!) கேள்விகளுக்கு ஸ்ருதி எவ்வாறு
பதிலளிக்கப் போகிறார்? என்பது தான் வியப்பாக உள்ளது. பொருத்திருந்து
பார்ப்போம்.
No comments:
Post a Comment