Saturday, April 28, 2012

என்னைவிட அவர்களே சிறந்தவர்கள்: அஜீத்!


அஜீத் நடித்துவரும் பில்லா படத்தின் பாகம் இரண்டின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து ரிலீசுக்கு தயாராகிக்கொண்டு இருக்கிறது. இப்படத்தின் உரிமையை ஆஸ்கார் ரவிசந்திரன் 28 கோடி ரூபாய் கொடுத்து வாஙியுள்ளார் என்று கூறப்படுகிறது.
இதன் பாடல் வெளியீடும் ரஜினி வீட்டில் வரும் 1ம் தேதி நடைபெற இருக்கிறது. இப்படத்தில் ஆபத்தான சண்டைக்காட்சிகள் இருப்பது எல்லோருக்கும் தெரிந்ததே. அதிலும் மிகவும் உயிருக்கு ஆபத்தான ஹெலிகாப்டர் சண்டைக்காட்சி பற்றிதான் எல்லோரும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்த சண்டைக்காட்சி பற்றி அஜீத் தெரிவித்ததாவது:
ஹெலிகாப்டர் சண்டை காட்சியில் நான் உயிரை பணயம் வைத்து சண்டை போட்டது பெரிதாக பேசப்படுகிறது. இதற்கான பெருமை மொத்த படக் குழுவினரையும் சேரும். இந்த சண்டைக்காட்சியை படமாக்கிய ஜெர்மன் ஸ்டன்ட் மாஸ்டர் ஸ்டிபன் ரிச்டருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
வாங்குகிற சம்பளத்துக்கு வேலை செய்கிறேன். எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன ராணுவ வீரர்களை விட பெரிதாக சாதித்து விடவில்லை. ராணுவ வீரர்கள் தான் நிஜ ஹீரோக்கள். என் படங்கள் பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.
படம் எப்படிப்பட்டது என்று ரசிகர்கள் தான் தீர்ப்பு சொல்ல வேண்டும். நான் தேர்வு செய்யும் கதைகள் இயக்குனர், தயாரிப்பாளருக்கும் பிடித்து இருக்க வேண்டும். மூவரையும் கதை கவர்ந்தால் தான் படம் சிறப்பாக வரும் நல்ல கதை சொல்பவர்கள் எல்லோரும் சிறந்த இயக்குனர்கள் என்று கூறிவிட முடியாது.
அது போல் கதை சொல்ல தெரியாதவர்கள் கூட சிறந்த இயக்குனர்களாக இருப்பார்கள் என் அனுபவம் மூலம் இதை உணர்ந்துள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment