"காதலிக்க மாட்டேன்"
"காதலிக்க மாட்டேன்"
போங்கடா.... பொழப்பத்தவனுங்ககளா..!
போங்கடி... போக்கிரி குட்டிங்களா...!
வேற வேலையே இல்லையா.........?
வேதனைய தவிர வேற
என்ன இருக்கு காதல்ல..?
கால்வயிறு சோத்துக்கு வழியில்ல
காதல்ல சொகங்காண போரானாம்..?
"காதல் ஒரு பள்ளதாக்கு"
ஒழுங்கா புரிஞ்சுக்க அர்த்தத்த..
விழுந்தவன் எழுந்ததும் இல்லை;
உயிரோடு இருந்ததும் இல்லை;
நீ எக்கேடாவது கெட்டுபோ....!
எனக்கென்ன வந்தது
நான் காதலிக்கவே மாட்டேன்
காட்டுக்குள்ளே சிறு தீவு வரலாம்
கடலுக்குள்ளே கட்டிடம் வரலாம்
மலைகுள்ளேயும் மனசு வரலாம்
காகத்துக்கும் வெளுப்பு வரலாம்
கற்பாறைக்கு நோவு வரலாம்
ஆனால்.....,
எனக்குள்ளே காதல் வராது....
இந்த மண்ணாங்கட்டி காதலை
இப்பொழுதே விட்டுவிட்டு வா...
மறுபடியும் வருமென்றால்
மண்ணோடு மண்ணாக்கிவிட்டு வா....
வாழ உன்னை வரவேற்கிறது
வசந்த காலம்.....
நாளையிலிருந்து உன்னக்கு
நல்லகாலம்....
No comments:
Post a Comment