Sunday, March 25, 2012

எச்சரிக்கை: இலங்கை மீது வரலாம் அமெரிக்காவின் பொருளாதார தடை!


இலங்கை மீது அமெரிக்காவின் பொருளாதார தடை விதிக்கப்படலாம் என்று வெளிப்படுத்தி உள்ளது ரஷியா ருடே பத்திரிகை.

ஈரானிடம் இருந்து எரிபொருள் இறக்குமதியை நிறுத்த தவறி இருக்கின்ற 11 நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்க அமெரிக்க வெளியுறவு அமைச்சு தீர்மானித்து உள்ளது.

இந்நிலையில் சீனா, இந்தியா, தென்கொரியா, தென்னாபிரிக்கா, இந்தோனேசியா, மலேசியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், ஸ்ரீலங்கா, தாய்வான், துருக்கி ஆகியனவே  இந்நாடுகள் என்று இப்பத்திரிகை வெளியிட்டு உள்ளது.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பை முன்னிறுத்தி இந்நாடுகள் மீது பொருளாதார தடையை ஜனாதிபதி பராக் ஒபாமா கொண்டு வர கூடும் என்று பத்திரிகை சுட்டிக் காட்டி உள்ளது.

No comments:

Post a Comment