Friday, June 1, 2012

ஐ.பி.எல். போட்டியில் ரூ.180 கோடிக்கு டிக்கெட் விற்பனை



வீரகேசரி இணையம்  5/31/2012 2:58:20 PM -நடந்து முடிந்த ஐ.பி.எல். இருபது ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடரில் ஆட்டத்தை நேரில் பார்க்கச் சென்றவகையில் டிக்கெட் விற்பனை மட்டும் ரூ.180 கோடியாகும். 16 கோடி பேர் தொலைக்காட்சியில் பார்த்ததாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

5-வது ஐ.பி.எல். போட்டி பல்வேறு சர்ச்சைகள் நிகழ்ந்தாலும் இந்தப் போட்டி எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை. ஸ்பொட் பிக்சிங், பாலியல் விவகாரம், ஷாருக்கான் விவகாரம், போதை விருந்தில் ஐ.பி.எல். வீரர்கள் 2 பேர் பங்கேற்று கைதானது ஆகியவற்றால் இந்த ஐ.பி.எல். போட்டியில் மிகுந்த சர்ச்சை ஏற்பட்டது.

ஆனால் எந்தவித சர்ச்சையாலும் ஐ.பி.எல். ஆட்டத்துக்கு பாதிப்பு ஏற்படவில்லை. இந்தப் போட்டியை தொலைக்காட்சி மூலம் ரூ.16 கோடி பேர் பார்த்ததாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. மொத்தம் 20 லட்சம் டிக்கெட்டுகள் விற்றுள்ளன. விற்பனையான டிக்கெட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.180 கோடியாகும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அதிகரித்து உள்ளது.

No comments:

Post a Comment