Tuesday, May 8, 2012

இஸ்லாமிய வரலாற்றில் முதன் முறையாக கடலுக்கு அடியில் பள்ளிவாசல்! (படங்கள் இணைப்பு)


இஸ்லாமிய உலகின் வரலாற்று அதிசயங்களே இவையாகும்.
உலகின் கடலுக்கு அடியிலான முதலாவது பள்ளிவாசலை நிர்மாணித்து உள்ளார்கள் என்று சவூதி அரேபிய நாட்டின் தனிப்பட்ட சுழியோடிகள் சிலர் உரிமை கோரி உள்ளார்கள்.
இப்பள்ளிவாசல் நிர்மாணிக்கப்பட்டமையை தொடர்ந்து அங்கு மாலைத் தொழுகையையும் மேற்கொண்டார்கள் என்றும் தெரிவித்து உள்ளார்கள்.
மணல் அடைக்கப்பட்ட பாரிய பிளாஸ்ரிக் குழாய்களை பயன்படுத்தி ஜோர்தான் நாட்டு எல்லைக்கு அருகில் இந்த அடையாள பள்ளிவாசல் கட்டப்பட்டு உள்ளது.
சுழியோடிகளில் ஒருவர் கடலுக்கு அடியில் பள்ளிவாசல் கட்டுகின்ற யோசனையை கடந்த கோடை காலத்தின்போது சகபாடிகளுக்கு முன்வைத்து இருந்தார்.
இந்த யோசனைக்கு உயிர் கொடுக்க சகபாடிகள் தீர்மானித்தார்கள். நிர்மாண பணிகளை பூர்த்தி செய்தபோது மாலை நேர தொழுகைக்கான நேரம் வந்தது.
எனவே அப்பள்ளிவாசலுக்கு உள்ளேயே தொழுகையை மேற்கொண்டார்கள்.

No comments:

Post a Comment