Saturday, March 31, 2012

தனுஷின் ’3′ படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய ரஜினி: மகள் ஐஸ்வர்யா


தனுஷ், ஸ்ருதியை ஜோடியாக வைத்து ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கிய ’3′ படம் இன்று ரிலீசானது. இது ஐஸ்வர்யா இயக்கிய முதல் படம் என்பதால் திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஐஸ்வர்யா நண்பர்கள் வட்டாரமும் படத்தை பார்க்க ஆர்வப்பட்டனர்.
’3′ படத்தை ரஜினி பார்த்து பாராட்டியதாக ஐஸ்வர்யா கூறினார். கோச்சடையான் படப்பிடிப்புக்காக ரஜினி லண்டன் புறப்பட்டுச் சென்றுள்ளார். ரிலீசின்போது அவர் ஊரில் இருக்கமாட்டார் என்பதற்காக முன் கூட்டியே படத்தை பிரத்யேகமாக ரஜினிக்கு திரையிட்டனர்.
இதுகுறித்து ஐஸ்வர்யா கூறும்போது, ”படத்தை முழுமையாக முடிக்கும் முன்பே என் தந்தை ரஜினிக்கு திரையிட்டு காட்டினோம். நிஜமாகவே படம் அவருக்கு பிடித்து போனது. எனக்கு அது பெருமையாக இருந்தது” என்றார்.

No comments:

Post a Comment