Sunday, April 1, 2012

33 வயதில் தான் சந்தோசம்! ஆய்வில் நிரூபணம்

இல்லை, குழந்தைப் பருவத்தில் நிச்சயமாக இல்லை. 33 வயதில் தான் தாங்கள் சந்தோசமாக இருப்பதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
புதிய ஆய்வு ஒன்றில் இருந்து தான் மேற்படி சுவாரஷ்யத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரித்தானியாவில் தான் இந்த சுவாரஷ்யமான ஆய்வு மேற்கொள்ளப்படுள்ளது.
தற்போது நாற்பது வயதைக் கடந்த பிரித்தானியர்களில் பத்தில் ஏழு பேர் 33 வயதில் தான் தாங்கள் அதிக சந்தோசத்துடன் இருந்ததாகக் கூறியுள்ளனர்.
53 வீதமானோ வாழ்க்கை ரொம்பவே சுவாரஷ்யமானது எனவும் 42 வீதமானோர் எதிர்காலத்தை நினைத்து ஏங்குவதாகவும் கூறியுள்ளனர்.
ஆறு வீதமானோர் பல்கலைகழகத்தில் சந்தோசமாக இருப்பதாகவும் 16 வீதமானோர் குழந்தைப் பருவத்தில் சந்தோசத்தை அனுபவித்ததாகவும் கூறியுள்ளனர்.
வேலையில் வெற்றியை நிலைநாட்டும் போது ஐந்தில் ஒருவர் சந்தோசத்தை அனுபவிப்பதாகவும் அறிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment