Wednesday, March 7, 2012

cricket

யுவராஜுக்கு நிதியுதவி வழங்குகிறார் காலிஸ்

தென் ஆப்ரிக்க கிரிக்கட் அணியின் பன்முக ஆட்டக்காரர் ஜாக்யூஸ் காலிஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள யுவராஜ் சிங்குக்கு நிதியுதவி வழங்குவதாக தெரிவித்துள்ளார்.இந்திய கிரிக்கட் அணியும், தென் ஆப்ரிக்க கிரிக்கட் அணியும் இணைந்து விளையாட உள்ள டி20 கிரிக்கட் போட்டியில் 17 வருடத்திற்கு மேல் அணியில் உள்ள தென் ஆப்ரிக்க வீரர் காலிஸுக்கு பாராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து காலிஸ் கூறுகையில், இந்த பாராட்டு தனக்கு கிடைத்த மிகப் பெரிய கவுரவம் என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள யுவராஜ்சிங் கடினமான நிலையில் உள்ளார் என்று எல்லோருக்குமே தெரியும்.
இந்த மோசமான அனுபவம் எனக்கும் உண்டு. எனது தந்தை சிறு வயதிலேயே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். எனவே யுவராஜ்சிங் அறக்கட்டளைக்கு தனிப்பட்ட முறையில் நான் நிதியுதவி அளிக்க உள்ளேன்.
தென் ஆப்ரிக்க வீரர்களும், யுவராஜ்சிங் விரைவில் குணமடைய என்னுடன் இணைந்து வாழ்த்துவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

No comments:

Post a Comment