Tuesday, March 20, 2012

அம்மா

அம்மா

கருவிற்கு உயிர் தந்து
உன் வயிற்றிலே இடம் தந்து
பத்து திங்கள் எம் உடல்
நீ சும்மந்தாய்...
சுமை நிறைந்த வாழ்வினிலே
எம் சுமை நீ சுமந்தாய்
உதிரத்தை பாலாக்கி
அன்பினை உணவாக்கி
ஆயுள்தனை வளமாக்க
வழி செய்தாய்...
எம் உறக்கம் தனை வளர்க்க
உன் உறக்கம்தனை தொலைத்தாய்
இரவு பகல் அயராது எம்முடன்
நீ இருந்தாய்...
தந்தை அற்ற வாழ்விலே
தந்தை தாயாய் நீ இருந்து - உலகினிலே
இருகரம் தனை பற்றி வழிநடத்தி
நீ சென்றாய்.....
உற்றம் சுற்றம் தனை துறந்து
உன் வாழ்வு தனை மறந்து
என் வாழ்வை உரமாக்க
வழி சமைத்தாய்....
பலநுறு மைல் கடந்து
எண்ணற்ற சோகம்தனை
மனம் சுமந்து வாழ்கின்றேன்...

உன்குரல் கேட்கும் நொடிதனிலே
சோகம் தனை நான் மறப்பேன்
வாழ்கின்ற காலமது கொஞ்சமம்மா...
வையம்தனை மிஞ்சுமம்மா - நீ 
உயிர் சொரிய தான் தந்த
முதல் முத்தமம்மா..
வருகின்ற ஜென்மமது
வரம் ஒன்று வாங்கிவந்து
உன்னை கருவாக்கி
உன் அன்பை உருவாக்கி
வாழ்வொன்று வாழ்ந்திடுவேன்
வையம் தனை வென்றிடுவேன் ...

No comments:

Post a Comment